வியாழன் கிரகமானது நமது சூரிய குடும்பத்தின் ஒரு மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான ஒரு கிரகம். இந்த கிரகமானது நமது சூரியன் உருவான நேரத்தில் தோன்றியிருக்கலாம் என ஒரு சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். Juno Space Craft Info in Tamil
பொதுவான விடயம்
கிரகத்தின் பெயர் : வியாழன் (Jupiter)
இடம் : நமது சூரிய குடும்பத்தில் 5ஆவது கிரகம்
தூரம் : 484 மில்லியன் மைல் (778 மில்லியன் கி.மி) சூரியனிடமிருந்து
AU : 5.2 AU (Astronomical Units; 1 AU = 150 Million KM)
இந்த கிரகமானது மிகவும் பெரியது. எவ்வளவு பெரியது எனில். அதனும் 1300 பூமியை வைத்தாலும் அது தனக்குள் அடைத்து வைத்துக் கொள்ளும்.
ஆனால் இந்த கிரகமானது ஒரு காற்றுக்கிரகம் என அறிவியல் அறிஞர்களால் அறியப்படுகிறது. அதாவது. அந்த கிரகத்தில் உள்ள காற்று மேகங்கள் முழுவதுமாக அந்த கிரகத்தினை மூடியுள்ளது.
ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களை நாம் அந்த கிரகத்தில் கான முடியும்
வளையங்கள்
இந்த கிரத்தினை சுற்றி சனிக் கிரகத்தில் இருப்பது போல் வளையங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் அளவு சிறியதாக இருப்பதால் அவை பெரும்பாலான ஸ்பேஸ் டெலஸ்கோபிற்கு தெரிவதில்லை இந்த செய்தியானது 1979ல் வாயேஜர் எனும் செயற்கைகோல் மூலம் நமக்கு தெரிய வந்தது. அதுமட்டுமல்ல.. மற்ற கிரகங்களான சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய மூன்றிற்கும் வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்கள் மற்றும் நேரங்கள்
வியாழன் கிரகமானது ஒரு முறை தன்னைதானே சுற்றிவர (பகல் இரவு வர) பூமியின் கனக்குபடி 10 மணி நேரங்களையே அது எடுத்துக்கொள்ளும்.
ஆனால்
அது ஒரு முறை சூரியனை சுற்றிவர 4333 நாட்கள் பூமியின் கணக்குபடி எடுத்துக்கொள்ளும். அதாவது கிட்டத்தட்ட 12 வருடங்கள் எடுத்துக்கொள்ளும்
துனைகோள்கள்.
இதற்கு மொத்தம் 67 துனைகோள்கள் உள்ளன அதில் 50 (பெயரிடப்பட்ட) உறுதிசெய்யப்பட்டது ,
இன்று நாம் பார்க்க இருக்கும் ஒரு விடயம் தான். வியாழன் கிரகம் அல்ல அதனை ஆராய சென்றிருக்கும் “ஜுனோ என்ற ஒரு செயற்கை கோளை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம். இந்த செயற்கைகோளானது ‘நாசா’ 2011 ஆகஸ்ட் 5ம் தேதி இந்திய நேரப்படி 9:55 மனிக்கு இரவு அனுப்பப்பட்டது
இந்த செயற்கைகோளானது முக்கியமாக வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தினை ஆராய அனுப்பப்பட்டுள்ளது
இதன் முக்கிய பணிகளாவன
வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஈரப்பதம் மற்றும் அதன் தண்ணீர் பற்றிய முக்கிய விடயங்களை ஆராயும்
இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள் என்னென்ன? என்பதை பற்றி ஆராயவும்
வியாழனின் வெப்பநிலை மேக ஓட்டங்கள்
மற்றும் இறுதியாக அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசை , மற்றும் காந்தபுலம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றியும் ஆராய இது அனுப்பப்பட்டுள்ளது.
இதர பணிகள்:
மேலும் இந்த செயற்கைகோள் இதை மற்றும் இல்லாமல் வேறு சில பணிகளையும் இது செய்ய இருக்கிறது.
அவையாவன
“ஜுனோ” An Artistic Image by NASA
இந்த கிரத்தின் ஆரம்பம் என்ன ? என்பது பற்றி இது ஆராயும் [ஏனெனில் இந்த கிரகம் பற்றிய சில செய்திகள் ஆச்சரியம் மக்கதாக உள்ளது. இது நமது சூரியன் தோன்றிய காலத்திலிருந்தே உருவாகி இருக்கலாம் என சில கருத்துகள் உள்ளன)
மேலும் இந்த கிரகம் ஏதேனும் பரினாம வளர்சி அடைந்துள்ளதா? என்னென்ன வளர்ச்சி அடைந்துள்ளது? என அறியவும்
இந்த கிரகத்தின் வளையங்கள் பற்றி ஆராயவும் [சனி கிரத்திற்கு இருப்பதை போன்ற வளையங்கள் இந்த கிரகத்திற்கும் உள்ளன ஆனால் அவை மிகவும் மெல்லியவை என்பதால் அவை தொலைநோக்கியின் கண்களுக்கு தெரிவதில்லை]
மேலும்:
இந்த கிரத்தினை பற்றி ‘நாசா’ அறிவிக்கும் போது இந்த கிரத்தில் மனிதர்களால் நிற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்தகிரகமானது முற்றிலும் காற்றினால் சூழப்பட்டுள்ளது. இதன் உண்மையான் பருப்பொருளானது ஒரு பூமியின் அளவு மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Mission Timeline
Launch – August 5 2011
Deep Space Maneuvers – Aug/Sep 2012
Earth Flyby Gravity assist – Oct 2013
Jupiter Arrival – July 2016
Space Craft Will orbit Jupiter for 20 Months (37 Orbits)
End of the Mission (Deorbit into Jupiter)
ஜுனோ கடைசியாக வியாழன் கிரகத்தின் மேல் விழுந்து அழியும்
நாம் எவ்வளவு விடைகளை தெரிந்து கொள்ள போகிறோம் என்பது முக்கியமல்ல. ஏனெனில் கேள்விகள் எப்போது வந்து கொண்டே இருக்கும்
நமது சூரிய குடும்பத்தில் 4 வதாக இருக்கும் கிரகம் இது தான் (செவ்வாய்) சிகப்பு கிரகம் எனவும் வர்னிக்கப்படுகிறது
சூரியனிடமிருந்து 228 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ளது (142 மில்லியன் மைல் தொலைவு என்றும் கூறலாம்)
செவ்வாய் கிரகமானது நமது பூமியிலிருந்து உள்ள தொலைவானது 54.6 மில்லியன் கிமீ ஆகும்
இது தன்னைத்தானே சுற்று சூரியனையும் சுற்றிவரும் இயல்புடையது. இந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது. (பூமியைப்போலவே) சரியாக சொல்ல வேண்டும் என்றால் 24 மணி 40 நிமிடங்களில் ஒரு சுழற்சியை முடித்துவிடும்
இந்த கிரகத்தில் வருடங்கள் எப்படி இருக்கு என்றால்? மிகவும் நீண்டு இருக்கும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடமானது 687 நாட்கள் ஆகும் (பூமியின் கனக்கு படி)
இதன் அளவானது பூமியை சரிபாதியாக கொண்டது இது 3389.5 கிமி ஆரம் கொண்டது
வளிமண்டலமானது மிகவும் மெல்லியது , மேலும் இதில் கார்பன்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன், ஆர்கன்
இந்த கிரகம் இரண்டு துணைகோள்களை கொண்டது . முறையே போபோஸ் & டீமோஸ் (Phobos & Deimos)
Information about Planet Mars Tamil Video
அதிகமான செவ்வாய் கிரகத்தினை ஆராய செய்ற்கை கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக 1965 ஆம் வருடம் அனுப்பப்பட்ட மரைர்4 என்ற செயற்கைகோள் தான் முதன் முதலில் வெற்றியடைந்த செயற்கைகோள் ஆகும்
இதன் ஈர்ப்பு விசை மிகவும் குறைவு அதனால் புவியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பொருள். செவ்வாயில் 38 பவுண்டு மட்டுமே இருக்கும்
இந்த கிரகத்தின் சிகப்பு தன்மையானது அதன் துரு கலந்து மணலினாலும். இருப்பு கனிமங்கள் நிறைந்த மனலினாலும் மேலும். அதன் அழுக்கடந்த மற்றும். மோசமான வளிமண்டலமும் காரனம்
2019ல் தகவல்கள் செவ்வாய் பற்றி
பொபோஸ் எனும் செவ்வாயின் ஒரு துனை கோள் நாளடைவில் அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையால் அழிக்கப்பட்டு தூசி துகள்கலாக மாற்றப்படும்
அப்படி மாற்றப்படும் தூசித்துகள்கள் , சனி கிரகத்திற்கு இருப்பதை போன்ற , ஒரு வளையங்களை இந்த கிரகத்திற்கு ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது,
இந்தியா மங்கள்யான் 2 விண்கலத்தினை 2024 அனுப்ப திட்டமிட்டுள்ளது, இதே நேரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் 2024 ல் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களையும் அனுப்ப திட்ட மிட்டுள்ளது
செவ்வாய் கிரகத்திற்கு 2 நிலவுகள், ஒன்றின் பெயர் ஃப்போபொஸ் (Phobos) அதன் அர்த்தம் பயம், மற்றொன்றின் பெயர் “டீமோஸ்” அதன் அர்த்தம் “பதற்றம்
பொபோஸ் மற்றும் டீமோஸ் பெயர்காரணம்??
கிரேக்க போர் கடவுளான “ஏரீஸ்” ன் குதிரை ரதத்தின் கட்டப்பட்ட இரண்டு குதிரைகளின் பெயர்தான் “பொபோஸ் மற்றும் டீமோஸ்” ஆனால் “மார்ஸ்” என்பது ரோமானிய போர் கடவுளின் பெயர்
How many moons for MARS?
Actually 2, Phobos & Deimos
Meaning of Phobos & Deimos ???
The Meaning is Actually Interesting, Phobos Means“Fear” and Deimos Means “Panic”
What is Phobos & Deimos actually Mean?
Phobos & Deimos are two Horse that Pulls the chariot of Greek War God “Ares”. Actually MARS is the Roman War God Name
செவ்வாய் கிரகத்திற்கு எத்தனை நிலவுகள்?
2 நிலவுகள், ஒன்றின் பெயர் ஃப்போபொஸ் (Phobos) அதன் அர்த்தம் பயம், மற்றொன்றின் பெயர் “டீமோஸ்” அதன் அர்த்தம் “பதற்றம்”
பொபோஸ் மற்றும் டீமோஸ் பெயர்காரணம்??
கிரேக்க போர் கடவுளான “ஏரீஸ்” ன் குதிரை ரதத்தின் கட்டப்பட்ட இரண்டு குதிரைகளின் பெயர்தான் “பொபோஸ் மற்றும் டீமோஸ்” ஆனால் “மார்ஸ்” என்பது ரோமானிய போர் கடவுளின் பெயர்
Does mars going to have Rings?
It’s a proposed Theory, one of the Moon’s of Mars Phobos will be destroyed because of Tidal force of Mars and become the Rings of that Planet, but it takes thousands of years
சந்திரன் தான் நம் புவியின் இயற்கையான துனைக்கோள் என அழைக்கப்படுகிறது
இது 384,400 கிமி தொலைவில் உள்ள ஒரு துனைக்கோள் ஆகும் (239 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது
நிலாவின் ஒரே பகுதியை தான் நாம் இதுவரை பார்த்து வருகிறோம். நிலவின் பின் புறத்தினை நாம் இதுவரை பார்த்ததே இல்லை. [இதற்கு காரனம்: நிலவானது 27 நாட்களில் பூமியை சுற்றி வருகிறது இந்த வேகமும் நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகமும் கிட்டத்தட்ட ஒரே அளவு என்பதால் தான் நாம் நிலவின் மற்றொறு பக்கத்தினை பார்க்கமுடியவில்லை]
மனிதர்கள் நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு மலைப்பாங்கான (surface ) உள்ளது
நிலவின் வளிமண்டலம் மிகவும் மெல்லிய அளவுள்ளது (Very Thin Atmosphere) இதனால் இதனை Exosphere என அழைக்கின்றனர்
இதற்கு எந்த ஒரு வளையங்களும் இல்லை (சனி கிரகத்திற்கு இருப்பது போல்)
Information about Our Moon in Tamil Video
இதுவரை 100 க்கும் மேற்பட்ட விண்வெளி ஓடங்கள் இதனை பார்த்துள்ள்து
இது வரை 12 மனிதர்கள் நிலவின் மேற்பரப்பில் காலடி பதித்துள்ளனர்
இதுவர 6 நாடுகளை சார்ந்த தேசிய கொடிகள் நிலவில் ஊன்றியுள்ளனர்( 4 வது நாடாக இந்திய கொடி நிலவில் பதிக்கப்பட்டுள்ளது)
இந்தியாவின் “சந்திராயன் 1” என்ற வின்வெளி செயற்கைகோளதான் முதன் முதலாக சந்திரனில் உறைந்தநிலையில் நீர் ஆதாரம் உள்ளது என கண்டுபிடித்தது) (Link)
சந்திரன் தான் இரவு வானத்தில் பிரகாசமாக இருக்கும் ஒரே பொருள்
வீனஸ் – வெள்ளி கிரகம். Venus Planet in Tamil , Latest News about Venus Planet in Tamil, venus is the second planet from Sun, வெள்ளி கிரகம் பற்றிய செய்திகள் உங்களுக்காக
வெள்ளி கிரகம்:
Facts about Venus in Tamil
இந்த கிரகம்தான் சூரியனுக்கு அருகில் இருக்கும் இரண்டாவது கிரகம்.
இது பூமியின் அளவுக்கு (கிட்ட தட்ட) உள்ள கிரகம் அதாவது அதன் அளவானது புவி = 6371 கிமீ ஆரம் கொண்டது ; வெள்ளி கிரகம் = 6051 கிமீ ஆரம் கொண்ட ஒரு கிரகம்
இது சூரியனிடமிருந்து 108 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிரகம் ஆகும் அதாவது 67 மில்லியன் மைல் அல்லது 0.73 AU (Astronautical Units)
இந்த கிரகமானது ஒரு முறை தன்னை தானே சுற்றிக்கொள்ள பூமியின் கணக்குப்படி 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும் ஆனால் ஒரு முறை சூரியனை சுற்றிவர வெறும் 225 நாட்களே எடுத்துக்கொள்ளும், (அதாவது ஒரு வருடம் வந்தாலும். ஒரு நாள் முடிந்திருக்காது ஹ ஹா ஹா)
இந்த கிரகமானது ஒரு மலைப்பாங்கான கிரகம் (அதாவது நமது சூரிய குடும்பத்தில் முதல் நான்கு கிரகங்களில் மட்டுமே நம்மால் நிற்க முடியும்) இதை பற்றி பிறகு கேளுங்கள் (கமென்ட் செக்ஸனில்)
Atmosphere இந்த கிரகத்தில் வளிமண்டலமானது ஒரு அடர்த்தியான மேக கூட்டத்தினை போல் இருக்கும். மேலும் இதில் கார்பன் டை ஆக்ஸைட( ); நைட்ரஜன்( ); மற்றும் சல்பியூரிக் அமிலம் ( ); உள்ளது
இந்த கிரகத்திற்கு எந்த துனை கிரகமும் இல்லை
40க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இந்த கிரகத்தினை ஆராய இதுவறை அனுப்பப்பட்டுள்ளன
இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்ஸியஸ் வரையில் இருக்கும். (புதன் கிரகத்தினை விட அதிக வெப்பநிலை இருக்கும்)
இது பெரும்பாலான மற்ற கிரகங்கள் சுற்றும் திசைய காட்டிலும் எதிர் புரமான சுற்றும் அதாவது நமக்கு கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைந்தால் , வெள்ளி கிரகத்தில் மட்டும் மேற்கே உதித்து கிழக்கே மறையும். ஹ ஹா
இது தான் வெள்ளி கிரகத்தினை பற்றிய நான் அறிந்த செய்திகள்.
கேள்விபதில்
வெள்ளி கிரகம் எதனால் எதிர்பக்கமாக சுற்றுகிறது?
இதன் உண்மையான விடை தெரியவில்லை.
வெள்ளி கிரகம் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?
சுமார் 108 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் (0.73 வானியல் அலகுகள்)
வானியல் அலகு (AU) என்றால் என்ன?
Astronomical Unit என்பதன் சுருக்கமே AU என்பது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் ஒரு நேர் கோட்டு தூரத்தினை குறிக்கும். அதாவது சரியாக 150 மில்லியன் கிலோ மீட்டர்கள்
வெள்ளி கிரகத்தின் அளவு என்ன?
நமது பூமிக்கு ஒத்த அளவினை உடையது வெள்ளி கிரகம். நமது பூமி 6371 கி.மீ ஆரம் உடையது. வெள்ளி 6051 கி.மீ ஆரம் உடையது.
வெள்ளி பற்றிய வேடிக்கையான தகவல் 1
வெள்ளி தன்னை தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் சூரியனை சுற்றி வர 225 நாட்களே எடுக்கும். அதாவது . வருடத்தினை விட நாள் மிக அதிகம்