October 31, 2016

Details About Pluto in Tamil | புளூட்டோ சிறிய கிரகம் | Space News Tamil

முதலில் இந்த புளூட்டோ கிரகத்தினை கண்டறிந்தவர் கிளைட் டாம்போக் (Clyde Tombaugh) கண்டு பிடிக்கப்பட்ட வருடம் 1930

 

PLUTO DWARF PLANET
PLUTO DWARF PLANET

 

சிறிய கிரகம்( Dwarf Planet)

என்ற வகையில் இந்த கிரகம் மற்றும் ஒரு சில கிரகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (புளூட்டோ வை தவிர 4 கிரகங்கள் உள்ளன)
இவைகளின் தண்மைகளாவன கிரகங்கள் என வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு உட்படவில்லை (ஒரே ஒரு விதி) . அதனால். இது கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துள்ளது.( 2006 ஆம் ஆண்டு இது தன் அந்தஸ்தை இழந்தது)

இந்த சிறிய கிரகமானது

பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் சிறியது. எவ்வளவு என தெரிய வேண்டும் என்றால்,,,,,, நம்முடைய துனை கிரகத்தின் அளவு தெரியுமா?  [( 1737 KM) Radius] புளூட்டோவானது நமது சந்திரனை விட சிறியது. (1185 Km Radius)

PLUTO SIZE
SIZE COMPARE

 

தொலைவு

இந்த கிரகம் (புளூட்டோ) ஆனது சூரியனிடமிருந்து 3.7 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது (அதாவது) 5.9 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது [கிலோ மீட்டர் , மைல் வித்தியாசம் தெரிகிரதா] வா. அ கணக்கு உங்களுக்கு தெரியுமா. (வானியல் அலகு) இதனை AU (Astronomical Unit ) என்று அழைப்பார்கள். இந்த கிரகம் 39.5 வா.அ தூரமுடையது.

இதன் சுற்று வட்ட பாதையானது சற்று வித்தியாசமானது. ஆகையால் இது ஒரு சில காலங்களில் நெப்டியூனின் சுற்றுவட்ட பாதையை தொட நேரிடும். அதாவது 39.5 AU விலிருந்து 30.7 AU வரை இது சூரியனுக்கு அருகில் வரக்கூடும்.

காலங்கள்

இந்த கிரகத்தில் நாள் என்பது பூமியின் கணக்கு படி 153 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது (6 நாள் 9 மனி நேரத்திற்கு) ஒரு முறை தண்ணை தானே சுற்றிவர இது 153 மணி நேரங்களை எடுத்துக்கொள்ளும்.
ஆனால் அங்கு ஒரு வருடம் எப்படி இருக்கும் என தெரியுமா? அதாவது ஒரு முறை அது சூரியனை முழுமையாக சுற்றிவர எவ்வளவு காலம் எடுக்கும்?
248 வருடங்கள் எடுக்கும் 🙁 (பூமியின் கணக்கு படி)
இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த கிரகமானது கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் (1930 ம் ஆண்டு) இன்று வரை இது ஒரு முறை கூட முழுமையாக சுற்றிவர வில்லை. ( புளூட்டோவில் இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை)
துணைகிரகம்

CHARON PLUTO’S MOON 

புளூட்டோவிற்று 5 துணைகிரகங்கள் உள்ளன
Charon, Styx, Nix, Kerberos and Hydra. இதன் 5 துணை கிரங்களில் சரோன் (charon ) ஆனது புளூட்டோவை விட சற்று பெரியது. மேலும் சரோன் ஒரு சிறிய கிரகம் பட்டியலில் வரலாம் (Dwarf Planet) என கூறப்படுகிறது

THE NEW HORIZON(நியூ ஹுரைசோன் )

எனும் ஒரேயொரு விண்வெளி கலன் மட்டுமே இதனை ஆராய அனுப்பப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அனுப்ப்பட்டது. இது 2015 ஜூன் மாத வாக்கில் புளூட்டோ விற்கு அருகில் சென்றுள்ளது. மேலும் இந்த விண்கலமானது. கியூப்பர்ஸ் பெல்ட் எனும் ஒரு ஆஸ்ட்ராய்டு பகுதியை ஆராயும் எனவும் கருதப்படுகிறது.
வளிமண்டலம்
இந்த கிரகத்தில் மிக மிக மெல்லிய அதாவது (நுட்பமான) ஒரு வளிமண்டலம் உள்ளது. இதன் வளிமண்டலமானது சூரியனுக்கு அருகில் வரும்போது விரிவடையவும். சூரியனிடமிருந்து விலகும் போது சுருங்கவும் செய்கிறது. (வால் நட்சத்திரங்களுக்கு இருக்கும் ) ஒரு பண்புதான் இது.
சுழற்சி வரலாறு படைத்தது நியூ ஹரைசோன் செய்தி

இந்த கிரகம் பின்னோக்கிய சுழற்சி கொண்டது. அதாவது. வீனஸ் கிரகம் சுற்றுவது போல் சுற்றுகிறது. அதாவது. நமக்கு கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைந்தால் புளூட்டோ மற்றும் வீணஸ்(வெள்ளி) யில் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். இதனை ரெற்றோ கிரேட்(RETROGRADE) ROTATION

இவையே சிறிய கிரகம் புளூட்டோ பற்றிய ஒரு சில செய்திகள்
மேலும் விவரங்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள். நன்றி

October 29, 2016

Facts About Neptune | நெப்டியூன் கிரகம் | தமிழ் விண்வெளி செய்திகள்


நெப்டியூன் கிரகமானது கண்டுபிடிக்கப்பட்டது 1846 செப்டம்பர் மாதம் 13ம் தேதி கண்டு பிடிக்கப்பட்டது.

 

கண்டு பிடித்தவர்கள் யார் யார் என் பார்த்தால்

  1. உர்பைன் லி வெரியர் (Urbain Le Verrier)
  2. ஜொஹன் காலி (Johann Galle)
  3. ஜான் கொஷ் ஆதம் (John Cosh Adams)
நெப்டியூன் 
 
இந்த கிரகமானது இறுதி கிரகமாக கருதப்படுகிரது.
அதாவது நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கிரகங்கள் தான் 9 ஆவதாக கருதப்பட்ட புளூட்டோ 2006 ம் ஆண்டு முதல் கிரகம் என்ற ஒரு அந்தஸ்தை இழந்துள்ளது. அதை பற்றி பிறகு பார்ப்போம்.
 
இந்த கிரகம் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என பார்த்தால் : இது சூரியனிடமிருந்து8 4.5 பில்லியன் கி,மீ தொலைவு 
அதாவது 2.8 பில்லியன் மைல் அதாவது 30.07 AU (Astronomical Units)
 

*1 AU Equals 150 Million KM ( 1 வானியல் அலகு என்பது 150 மில்லியன் கி.மீ)

நெப்டியூன் கிரகத்தில் ஒரு நாள் என்பது புவியின் கனக்கு படி 16 மணி நேரங்கள் ஆகும் அதாவது அந்த கிரகம் ஒரு முறை முழுமையாக தண்ணைத்தானே சுற்றி வர 16 மணி நெரங்களே எடுத்துக்கொள்ளும். (Super ba)

டிரைடன் (நெடியூனின் துனைகிரகம்)

இதே அந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது எப்படி இருக்கும் என கேட்டீர்களேயானால். (ஆஆ..)  சற்று தலை சுற்றும் அவ்வளவு தான்
அதாவது அங்கு ஒரு வருடம் என்பது 165 பூமியின் வருடங்கள் ( அதாவது நெப்டியூன் ஒரு முறை முழுமையாக சூரியனை சுற்றிவர 165 ஆண்டூகள் ஆகும் புவியின் கணக்குபடி)

இந்த கிரகம் 2011 ஆண்டு தான் ஒரு முறை சூரியனை சுற்றி வந்துள்ளது என கணக்கிட்டுள்ளனர்.(இதனை கண்டு பிடித்த 1846ம் ஆண்டு முதல் 2011 வரை )

இந்த கிரகத்தினை ராட்சத கிரகம் என அழைக்கப்படுகிறது. (giant Planet)
இது காற்று கிரகமாகவும் மற்றும் பனிக்கிரகமாகவும் இருக்கிறது ( Gas Giant and Ice Giant)

நெப்டியூன் (வாயேஜர் II)

இந்த கிரகத்தில் உள்ள நிலப்பகுதிகளில் கானப்படும் தனிமங்கள் பொருட்களாவன

  1. தண்ணீர் (h2O)
  2. மீத்தேன் (CH3)
  3. அம்மோனியா(NH4) 
கிரகத்தின் மேற்பகுதிகளில் உறந்த நிலையில் பனி மூலக்கூறுகள் உள்ளன என கூறப்படுகிறது.
 

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் , இந்த இரு கிரகங்களும்  சகோதர கிரகங்கள் என கூறப்படுகின்றன.(Both are Sister Planets)

நெப்டியூனின் வளிமண்டலமானது யுரேனஸ் கிரகத்தில் இருப்பது போலவே தான் உள்ளது. ஹைட்ரஜன் , ஹீலியம் , மற்றும் மீத்தேன்

*நம் சூரிய குடும்பத்தில் அனைத்து கிரகங்களும் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகம் வளையங்கள் கொண்ட கிரகம் (கடைசி நாண்கு கிரகங்களுக்கும் வளையங்கள் உள்ளன)
இதில் 6 விதமான வளையங்களால் ஆனது

இந்த கிரகத்திற்கு 13 துனை கிரகங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து பெயர்களும் கிரேக்க புரானங்களை கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தினை வாயேஜர் II என்ற ஒரே ஒரு விண்கலம் மட்டுமே பார்த்துள்ளது.

இவையே நெப்டியூன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்.
மேலும் விவரங்களுக்கு Subscribe பன்னுங்க

Download Our App

More Posts to Read



October 18, 2016

யுரேனஸ் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள் | Space News Tamil about Uranus





இன்று நாம் யுரேனஸ் கிரகம் எனும் ஒரு பனிக் கிரகத்தினை பற்றிய ஒரு சில செய்திகளை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

 Uranus Planet கண்டுபிடித்தது

இந்த கிரகமானது நமது சூரியகுடும்பத்தில் தான் உள்ளது என நாம் கண்டறிந்தது  மார்ச் மாதம் 13 ம் நாள் 1781ல் தான். கண்டுபிடித்தவரின் பெயர் வில்லியம் ஹெர்ஷெல் (William Herschel) 

 

 பொதுவான கணக்குகள்

1. சூரியனை சுற்றும் வட்டபாதையின் அளவு (Orbit Size around the Sun)
=2,870,658,186 KM (கிலோ மீட்டர்)
 
2. சுற்றுப்பாதையின் சராசரி திசைவேகம் (Mean Orbit Velocity)
= 24,277 km/h (மணிக்கு)
 
3. பூமத்திய சாய்வு (Equatorial Inclination)
= 97.8 degrees (பிற்போக்கு சுழற்சி) Retrograde rotation

சூரியனிடமிருந்து தொலைவு

இந்த கிரகமானது 2.9 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது அதாவது 1.8 பில்லியன் மைல் அல்லது 19.19 AU (Astronomical Units) ஒரு AU என்பது 150 மில்லியன் கி.மீ குறிக்கும்.

நாட்கள் மற்றும் நேரங்கள்

இந்த கிரகத்தில் ஒரு நாள் என்பது அதாவது ஒருமுறை தன்னைதானே சுற்றிவர புவியின் கனக்குபடி 17 மணி நேரங்களே எடுத்துக்கொள்ளும்.

 

ஆனால் ஒரு வருடம் அதாவது ஒரு முறை முழுமையாக சூரியனை சுற்றிவர புவியின் கணக்குப்படி 84 வருடங்களை எடுத்துக்கொள்ளும். [ஒரு வேளை நான் யுரேனஸில் பிறந்திருந்தால் எனக்கு 1/4 வயது தான் ஆகியிருக்கும்]

அதாவது 30,687 பூமியின் நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

கிரகத்தில் உள்ள பொருட்கள்

இந்த கிரகத்தில் அதாவது இதை ஏற்கனவே ஒரு பனிக்கிரகம் என அறிவியலாலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் . அப்படியானால் இந்த கிரகம் முழுவது பனியால் ஆனது என அர்த்தம். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த கிரகத்தில் உள்ள மேற்பரப்பில் 90% அதற்கும் அதிகமான பனிப்பொருட்கள் உள்ளன (Icy Materials ) அதன் மேற்பரப்பில் உள்ள பொருட்களாவன.
  1. H2O (Water)தண்ணீர் மூலக்கூறு
  2. CH3 (Methane) மீத்தேன்
  3. NH4 (Ammonia) அம்மோனியா
இவைதான் அந்த கிரகத்தில் மேற்பரப்புகளைல் அதிகமாக காணப்படுகிறது

வளிமண்டலத்தில் உள்ள பொருட்கள்

நமது சூரியகுடும்பத்தில் உள்ள பெரும்பாலானா கிரகங்களின் வளிமண்டல மூலக்கூறுகள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் . அதே போல் இந்த கிரகத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மூலக்கூறுகள் காணப்படுகின்றன மேலும் மீத்தேன் மூலக்கூறு கானப்படுகிறது

வளையங்கள்

யுரேனஸ் கிரகமானது 13 வளையங்களை கொண்டுள்ளது. இவைகள் கிரகத்தில் அருகில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அதாவது கிரகத்தின் அருகில் இருக்கும் வளையங்கள் மிகவும் மெல்லியதாகவும் கருமையான அடர்ந்த வண்னமுடையவை ஆகையால் இவை சரியாக கண்ணுக்கு புலப்படுவதில்லை ஆனால் வெளிப்புறம் உள்ள வளையங்கள்

 

வண்ணமயமான நிறத்திலும் பளிச்சென தெரியம் படியும் உள்ளது. ஆகையால் பார்ப்பதற்கு. கிரகத்தினை விட்டு சற்று தொலைவில் வளையங்கள் இருப்பது போல் தோன்றும் ஆனால் அப்படியல்ல. 

துணைக்கிரகங்கள்

இந்த கிரகத்திற்கு 27 துணைகோள்கள் உள்ளன இவை அணைத்தும் பெயரிடப்பட்டும் உள்ளன இந்த அனைத்து துனைக்கிரகங்களும் வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்ஸாண்டர் போப் இவர்களின் கதைகளில் உள்ள காதாபாத்திரங்களின் பெயர்களை கொண்டுள்ளன. வில்லியம் ஷேக்ஸ்பியர் பற்றி உங்களுக்கே தெரியும் ஆங்கில கவிதைகள் மற்றும் கதைகள் இயற்றுபவர். இவரின் கதை மாந்தர்கள் பெயர்களையே யுரேனஸ் கிரக துணைகோள்களுக்கு வைத்திருக்கின்றனர். 
 
[ஒரு வேளை இந்தியர்களாகிய நாம் ஏதேனும் ஒரு கிரகத்தினை கண்டறிந்தால் அதற்கு “அப்துல் கலாம்” கிரகம் என பெயரிட எனக்கு ஆசை. ஏனெனில் என்னுடைய பெயர் இதில் பாதி இருக்கு  🙂 ]

உருளும் கிரகம் (Ref) Wiki

சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கிரகம் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. 

அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். (REFERENCE) WIKI PEDIA 

Video

 
இந்த கிரகத்தினை இதுவரை பார்த்த  ஒரே விண்கலம் வாயேஜர் 2 எனும் செயற்கைகோல் மட்டுமே. .

 

இந்த Blog உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்யுங்கள்
மீண்டும் ஒரு space செய்திகளோடு சந்திப்போம்.
நன்றி.

 

 

 

 

யுரேனஸ் கிரகம் யாரால் எப்போது கண்டறியப்பட்டது?

வில்லியம் ஹர்சேல் 1781 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

யுரேனசுக்கு ஒரு வருடம் பூமியின் கணக்கு படி எவ்வளவு?

யுரேனஸ் ஒரு முறை சூரியனை சுற்ற 84 ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும்.

யுரேனஸ் அரக்க கிரகமா?

ஆம், யுரேனஸ் பனி அரக்க கிரகம் (ICE Giant)

யுரேனஸ் பற்றிய் 5 சுவாரசியமான தகவல்கள்.

1.யுரேனசின் வளிமண்டலத்தில் பணியால் ஆக்கப்பட்டுள்ளது.
2. யுரேனஸ் பார்ப்பதற்கு சுழலுவது போல் தெரியாது இது உருளுவது போல் தெரியும்
3.யுரேனசுக்கு வளையங்கள் உண்டு.
4.யுரேனசுக்கு 27 நிலவுகள் உள்ளன.

October 09, 2016

Facts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்


இன்று நாம் பார்க்க இருக்கும் கிரகமானது சனி கிரகம் (Saturn) என்ற ஒரு கிரகத்தினை பற்றிய ஒரு சில செய்திகளை தெரிந்து கொள்வோம்…இந்த கிரகமானது ஒரு பெரிய வாயு கிரகம்  (Gas Giant) இதில் அதிகமாக இருக்கும் காற்று மூலக்கூறு : ஹீலியல் மற்றும் ஹைட்ரஜன்

பொதுவானவை:

   இந்த கிரகமானது அனைவருக்கும் தெரிந்தது போலவே. வியாழன் கிரகத்திற்கு அடுத்தபடியாக ஒரு மிகப்பெரிய கிரகம். அது மட்டுமல்லாது
நமது சூரிய குடும்பத்தில் ஆறாவது (6) கிரகமாக உள்ளது.


Hexagon Shape

  • இது சூரியனிடமிருந்து 1.4 பில்லியன் கி.மீ (Or) 886 மில்லியன் மைல் (or) 9.5 AU தொலைவில் உள்ளது.  [Astronomical Units] 1 AU என்பது 150 மில்லியல் கிலோ மீட்டர்களை குறிக்கும்
  • சுற்றுப்பாதையின் சராரசி வேகம் (அ) திசைவேகம் :(mean orbital velocity) ஆனது 34,701 கி.மீ / வினாடி ( kmph) [என்ற வேகத்தில் இது சூரியனை சுற்றிவருகிரது
  • Equatorial radius (அந்த கிரகத்தின் மத்திய ரேகையிலிருந்து அதன் ஆரமானது 58,232 கி.மீ
  • இந்த கிரகத்தின் பரப்பு இழுவிசையானது (Surface Gravity) 10.4*m/sஅதாவது நீங்கள் புவியில் 100 (Pound) பவுண்ட் எடை இருப்பின் சனிகிரகத்தில் நீங்கள் 107 பவுண்ட் இருப்பீர்கள். ( * சில மாறுதல்கள் இருக்கலாம் இந்த கணக்கானது. சனிகிரகத்தின் மத்திய ரேகை பகுதியில் எடுக்கப்பட்டது.. விண்வெளி அறிஞர்கள் இதன் கணக்கு மாறலாம் என கருதுகின்றனர்.
     
  • விடுபடும் வேகம் (Escape Velocity) (Or ) தப்பிக்கும் வேகமானது129,924 கி.மீ / மணி [ 129,924 KMPH] . அதாவது, சனிகிரகத்திலிருந்து மனிக்கு 129,924 கி.மீ எனும் வேகத்தில் புறப்படும் ஒரு பொருள் மிக எளிதாக சனிகிரகத்தின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பி விண்வெளிக்கு சென்றுவிடும்.
சனி கிரகம் அதன் வளையங்களோடு
 

நாட்கள் & வருடம்

சனிகிரகத்தில் ஒரு நாளானது அதாவது ஒரு முறை அந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலமானது பூமியின் கணக்குப்படி 10.7 மணி நேரங்களாகும். 10 மணி 40 நிமிடங்களில் அந்த கிரகம் ஒரு முறை சுற்றிவிடும். 

ஆனால் அந்த கிரகத்தில் ஒரு வருடமானது மிகவும் அதிகமாக [பூமியின் கணக்குப் படி 10,756 நாட்கள்] எடுத்துக்கொள்ளும். புரியும் படி சொல்வதென்றால் 29 வருடங்கள். ஆமாம் சனி கிரகத்தில் ஒரு வருடமானது பூமியின் கணக்கு படி 29 வருடங்களுக்கு சமமானது.

வளையங்கள்

இந்த கிரகத்தில் அழகான வளையங்கள் காணப்படுகின்றன. மேலும் இது ஏழு (7) பிரிவுகளாகவுள்ளது. அதோடு இல்லாமல் இந்த ஏழு வளையங்களுக்கு இடையே சீரானா இடை வெளிகளும் காணப்படுகின்றன. சனிகிரகத்தின் மத்திய ரேகையிலிருந்து. 6630 கிமீ முதல் 1,20,700 கிமீ வரை இந்த வளையங்கள் நீண்டு உள்ளன. இந்த வளையங்களில் அப்படி எதுவும் இல்லை வெறும் உறைந்த தண்ணீர் மூலக்கூறுகள் அல்லது பனி என அறியப்படுகிறது மேலும் அதில் தூசி தும்புகள் அதிகமாக உள்ளது
   இந்த வளையங்களின் தடிமன் 10 மீட்டர்கள் எனவும் கண்டறிந்துள்ளனர் இது 1980 களில் நாசாவால் செலுத்தப்பட்ட வாயேஜன் 1 & 2 விண்கலம் மூலம் அறியப்பட்டது

துனைக்கோள்கள்

 
இந்த கிரகத்திற்கு துனைக்கிரகங்கள் உள்ளன இதுவரை 53 துனைகோள்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன். மேலும் 9 துனைகோள்கள் உறுதி செய்யப்படவில்லை .
டைட்டன் 
 
 மெலும் அவை சனிகிரகத்தினை தான் சுற்றி வருகின்றன என உறுதி செய்யப்படுமாய்யின். இதற்கு மொத்தம் 62 துணைக்கோள்கள் . இதன் ஒரு துணைக்கோளான டைட்டனில் வாழ்க்கைக்கான சாத்திய கூறுகள் இருக்கலாம் என பிரபலமான கூற்று உள்ளது. இது தான் நமது சூரிய குடும்பத்தில்  இரண்டாவது பெரிய துணைகோளாகும். ( முதலாவது வியாழனின் துணைக்கோள் கேனிமிடி (Ganymede) ஆகும்

விண்கலம்

இந்த கிரகத்தினை சந்தித்த விண்கலம்கள் மிகவும் சொற்பமே அதில் குறிப்பிட்டு சொல்லப்படுபவை 
1. பயனீர் 11 [Pioneer 11]
2. வாயேஜர் 1 & 2 (Voyager I & II) Voyager Enter Interstellar Space News Latest
3. காசினி – ஹுஜன்ஸ் (Cassini –  Huygens)
 
Cassini
 
இதில் காசினி-ஹுஜன்ஸ் எனும் இரண்டு விண்கலங்களும் ஒன்றாக அக்டோபர் 15 1997ல்  அனுப்பப்பட்டவை இதில் காசினி எனும் விண்கலமானது சனிகிரகத்தின் மேற்பரப்பு, வளிமண்டலம், வளையங்கள் மற்றும் ஒரு சில துணைகோள்களை ஆராய்ச்சி செய்வதற்காக டிசம்பர் 2004 முதல் அதன் வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.
ஹுஜன்ஸ் விண்கலமானது ஜனவரி 2005 ஆம் ஆண்டு  சனியின் துனைகிரகமான டைட்டனில் தரையிரக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கிரகத்தில் வாழ்க்கைக்கான எந்த ஆதாரமும் இல்லை என அறிவியலாலார்கல் கருதுகின்றனர். ஆனால் சனிகிரகத்தின் துணைகோலான டைட்டனில் அதற்கான சாத்திய கூறுகள் இருக்கலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. 

 

எதுவாக இருந்தாலும் நாம் இருப்பது நமது கிரகம் புவியில்.  நாம் தான் புவியின் பாதுகாவலர்கள். இதனை நாம். விண்வெளி கற்களிலிருந்து பாதுகாப்பது முடியாத காரியம். ஆனால் இந்த கிரகத்தினை பசுமையாக வைத்திருக்க நாம் நம்மால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும், ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நட முயற்சிக்க வேண்டும்

 
இப்படிக்கு