December 25, 2016

ஐரோப்பாவின் இரவுக்காட்சி விண்னிலிருந்து

நீங்கள் கானும் இந்த இரவுக்காட்சியானது சர்வதேச விமான நிலையத்தில் ஒரு குழுவினரால் இது எடுக்கப்பட்டது. இந்த படத்தினை நீங்கள் உற்று கவனித்தால் வலது புறத்தில் மேலே இங்கிலாந்து இருப்பது தெரியும், பிறகு  மிகவும் பிரகாசமான பகுதியாக இருப்பது தான் பாரிஸ் நகரம், அதன் பின் இந்த புகைப்படத்தில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தும் இடம் பிடிந்துள்ளது.

 

Shop on Amazon

    
 
 

Download Our App

More Posts to Read



December 23, 2016

சூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்

சூரியனை கடக்கும் இந்த நிகழ்வானது ஒரு நிழல் படம் மூலம் நமக்கு தெரியவருகிறது. மேலும் நாம் இதுவரை மற்ற கிரகங்கள் சூரியனை கடந்ததை பார்த்திருப்போம். இப்போது உலக சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனை கடந்ததை நாசாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ல் வெளியிடப்பட்டுள்ளது. கீழ் கானும் படம் தான் அது

 

 

இந்த படமானது ஒரு நிழல்  தான் .இது 10  பிரேம்கள் மூலம் (Frames) எடுக்கப்பட்டு ஒரு படமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்வெளி நிலையமானது நாம்மால் கற்பனை செய்யமுடியாத அளவு வேகமாக சூரியனை கடந்துள்ளது. அதாவது 5 மைல் / வினாடி என்ற வேகத்தில்.
ஒரு வினாடிக்கு 5 மைல் தொலைவா???? அடேங்கப்பா…..

Shop on Amazon
    
 

Download Our App

More Posts to Read

December 22, 2016

This Week in NASA History | வரலாற்றில் இன்று: அப்போல்லோ

உலக வரலாற்றில் முதல் முறையாக 1968 டிசம்பர் 21ம் தேதி தான் அப்போலோ 8 விண்வெளி விமானமானது. சாட்டர்ன் 8 ராகெட் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது.

அப்போலோ 8 விண்வெளி விமானத்தின் குழுவினர்கள் பட்டியல் கீழே உள்ளது

Apollo 8 Crew Source https://en.wikipedia.org/wiki/Apollo_8#Backup_crew

 

   

Crew

PositionAstronaut
CommanderFrank F. Borman, II
Second and last spaceflight
Command Module PilotJames A. Lovell, Jr.
Third spaceflight
Lunar Module PilotWilliam A. Anders
Only spaceflight

Backup crew

PositionAstronaut
CommanderNeil A. Armstrong
Command Module PilotEdwin E. Aldrin, Jr.
Lunar Module PilotFred W. Haise, Jr.

 

 

Download Our App

More Posts to Read

December 21, 2016

விண்வெளியில் குளிர் காலமா? Cosmos Winter Wonderland Explained in Tamil

நாம் அனைவருக்கும் தெரிந்தது போல் , காலங்கள் (Seasons) என்பது கிரகங்களுக்கு சொந்தமானது, (பூமிக்கு மட்டுமல்ல செவ்வாயிலும் காலங்கள் உள்ளது) அது போல் விண்வெளியில் குளிர் காலம் என்று கீழ்வரும் புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. அதன் உண்மையினை இப்பொழுது பார்ப்போம்
 
குளிர் காலமாக உள்ள NGC 6357

இது தான் ஒரு சிறிய பகுதி இதனை Cluster என்று கூறுவர். பெயர் என். ஜி. சி 6357 என்று வைத்துள்ளனர். இது நமது பால்வெளி அண்டத்தில் தான் உள்ளது இது நமது பூமியிலிருந்து 5500 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது, இது கதிரியக்கத்திற்கு புகழ் பெற்றது அது மட்டுமல்லாது. பல இளம் சூரியன் கள் உள்ள பகுதி தான் NGC 6357

 
இப்போது இந்த புகைப்படத்தினை பற்றி பார்ப்போம். இது கணிணி உதவியுடன் சித்தரிக்கப்பட்ட ஒரு புகைப்படம். அதாவது
இந்த படத்தில் Purple , Blue மற்றும் Orange நிறத்தில் இருப்பது நம்மால் காணமுடியும். . 
 
சந்திரா X ரெ தொலைநோக்கியினால் மற்றும் ROSAT  தொலைநோக்கியினால் எடுக்கப்பட்ட படம் ( purple) ஊதா நிறத்தில் தெரியும்.
 
நாசாவின் ஸ்பிலிட்சர் தொலைநோக்கியினால் எடுக்கப்பட்ட Data வானது ஆரஞ்சி நிறத்தில் தெரியும்.
 
மற்றும் சூப்பர் காஸ்மோஸ் ஸ்கை சர்வே (Super Cosmos Sky Survey By UK Infrared Telescope)
இவை அனைத்தையும் கலந்து ஒரு கலவையாக இந்த புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. புரிகிறதா. இது பல தொலைநோக்கிகளால் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு ஆர்டிஸ்டிக் Image மட்டுமே.
  

Source: https://space-stuffin.blogspot.sg/2016/12/cosmic-wonderland.html

Download Our App

More Posts to Read



December 20, 2016

சனி கிரகத்தின் வளையங்களோடு துணைகிரகம்!!!! மோதுகிரதா?

சனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் நீண்டு காணப்படுவதால் அது மனித கண்களுக்கு தெரியும், ஆம் , நாம் ஒரு நல்ல தொலை நோக்கி கொண்டு பார்க்கும் போது சனிகிரகத்தின் வளையங்கள் நம் கண்களுக்கு தெரியும்,
   

இந்த சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான் கீழே நீங்கள் பார்ப்பது. இதனை ஆராய்சியாளர்கள் கூறுகையில். Crash Course என்று கூறுகின்றனர், விளையாட்டாக….

 
இந்த படத்தில் காணப்படும் கிரகமானது , சனி கிரகத்தின் துனை கிரங்களில் ஒன்றான மைமாஸ் (அ) மிமாஸ் (Mimas). மிமாஸ் எனப்படு இந்த பனியால் ஆன துனை கிரகமானது சனி கிரகத்தின் வளையங்களில் மோதுவது போல் தோன்றினாலும், அது உண்மையில் 28,000 மைல் தொலைவில் உள்ளது (45,000 கிமீ) சனியின் வளையங்களில் இருந்து.
 
இந்த படமானது காசினி விண்கலத்தில் இருந்து 114,000 மைல் தொலைவில் (தோராயமாக) இருந்து எடுக்கப்பட்டது.
 

The view was acquired at a distance of approximately 114,000 miles (183,000 kilometers) from Mimas and at a Sun-Mimas-spacecraft, or phase, angle of 29 degrees. Image scale is 3,300 feet (1 kilometer) per pixel.

 
இந்த படமானது. காசினி விண்கலத்தின் குறுகிய கோண காமிராவால் அக்டோபர் 23 2016 அன்று எடுக்கப்பட்டது.
 
      

Download Our App

More Posts to Read

November 28, 2016

The Tallest Cliff in the Solar System Verona Rupes | சூரிய குடும்பத்தின் உயரமான குன்றின் மீதிருந்து குதித்தால் உயிர் தப்பிக்க முடியுமா?

ஆம் நன்பர்களே!. மேலே காணப்படும் இடம் தான் யுரேனஸ் கிரகத்தின் துனைக்கிரகமான. மிரண்டா(Miranda) . இந்த இடத்தின் பெயர் வெரொனா ருபெச் (Verona Rupes) . இது புவியின் மிக உயரமான மலைக்குன்றான கிராண் கென்யன் னை ( Grand canyon) விட 10 மடங்கு அதிக உயரமானது. என கண்டறியப்பட்டுள்ளது. Mount Thor (in Nunavut, Canada) has the tallest cliff face on Earth. ஆனால்.
இங்கு நம்முடைய சவால் என்ன வெண்றால். கிராண் கென்யன் னை ( Grand canyon) லிருந்து குதித்தால் எலும்பு தேராது. ஆனால் இந்த மிரண்டா துனை கிரகத்தின் இந்த “வெரொனா ருபெச்” லிருந்து குதித்தால் அதன் ஈர்ப்பு விசை காரனமாக நீங்கள் தரைப்பகுதியை அடைய . 12 நிமிடங்கள் எடுத்திக்கொள்ளும். ……… திரிள் வேண்டும் என்றால் இதன் மேலிருந்து குதித்து தப்பித்துக்கொள்ளுங்கள்……

Download Our App

More Posts to Read

November 09, 2016

Planet X | ஒன்பதாம் கிரகம் | Space News Tamil (Not Discovered)

Read about “Farout” Most Distance Plant Ever Discoverd

பிலானெட் X என்று சொல்லக்கூடிய ஒரு வித கிரகம் இருப்பதற்கான  அனுமானங்கள் இருப்பதாக அறிவிப்பு (Not Officially) செய்யப்பட்டுள்ளது. இது 2015 ஆன்டு ஜனவரி மாதம். சொல்லப்பட்டது. Caltech கால்டெக் என்று சொல்லக்கூடிய ( கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) ஒரு அமைப்பை சேர்ந்த இரு வானியல் அறிஞ்சர்கள். இதை அறிவிப்பு செய்துள்ளனர்.( உறுதி செய்யப்படவில்லை)

Planet x Hypothetical
Planet x Hypothetical

கான்ஸ்டண்டைன் பாடிஜின் மற்றும் மைக் ப்ரொன் எனும் இரு வானியல் அறிஞ்சர்கள் இதனை அறிவித்துள்ளனர். இதற்கான கனித  மற்றும் இதற்கான கணினி வரைகளை மாதிரிகள் மற்றும், ஒரு சில செய்திகளை தந்துள்ளனர். அதன் படி நெப்டியூன் கிரகத்திற்கு அடுத்த படியாக கைப்பர் பெல்ட் பகுதியில் உள்ள புளூட்டோ விற்கு அடுத்த படியாக நமது சூரியனை சுற்றும் ஒரு அனுமானமான கிரகம் இருக்கலாம் என அறிவித்துள்ளனர்.
அந்த கிரகமானது ” பிலானெட் 9″ Nick named as ” Planet 9″ (Not Official)

 

Caltech (கால்டெக் வானியல் அறிஞ்சர்களால் பின்வரும் செய்திகள் நம்பப்படுகிறது.)

  இந்த கிரகமானது புவியை போன்று 10 மடங்கு பெரிதாக இருக்கலாம் என கருத்ப்படுகிறது.
அதேபோன்று நெப்டியூனை விட சற்று சிறியதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது,
அதே போன்று அதன் சுற்றுவட்ட காலமும் அனுமானிக்கப்பட்டுள்ளது. நமது புவியானது 365 நாட்கள் அதாவது ஒரு வருடகாலத்தில் சூரியனை சுற்றிவரும் , மிக பெரிய கிரகமான வியாழன் 12 வருடங்களில் சூரியனை சுற்றிவரும் . எட்டாவது கிரகமான நெப்டியூனானது 165 வருடங்களில் சூரியனை சுற்றிவரும். ஆனால் இந்த பிலானெட் 9 ன் சுற்று வட்ட காலமானது 10,000 முதல் 20,000 வருடங்கள் இருக்கலாம் என கணக்கிட்டுள்ளனர்.(தேராயமாக)

இது முழுக்க முழுக்க கனித ரீதியான கனிப்புகளால் கணக்கிடப்பட்டுள்லது,

 . நாசா வின் கிரக அறிவியல் பிரிவின் தலைவர், ஜிம் கிரீன் கூறுகையில்.
கால்டெக் ஆராய்சியாளர்கலின். கனித தரவுகளை பயன் படுத்தி நாசாவும் இந்த அனுமானிக்கப்பட்ட கிரகத்தினை தேடும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் அந்த இரு ஆராய்சியாளர்களும், இது பற்றி கூரும் போது. உலகில் உள்ள அனைத்து ஆராய்சியாளர்களையும், விண்வெளியாலர்கலையும், இந்த கிரகத்தினை, தேடும்படி வேண்டியுள்ளனர். Read about Farout Plant Discovery 

Source : http://solarsystem.nasa.gov/planets/planetx/indepth

Download Our App

More Posts to Read



October 31, 2016

Details About Pluto in Tamil | புளூட்டோ சிறிய கிரகம் | Space News Tamil

முதலில் இந்த புளூட்டோ கிரகத்தினை கண்டறிந்தவர் கிளைட் டாம்போக் (Clyde Tombaugh) கண்டு பிடிக்கப்பட்ட வருடம் 1930

 

PLUTO DWARF PLANET
PLUTO DWARF PLANET

 

சிறிய கிரகம்( Dwarf Planet)

என்ற வகையில் இந்த கிரகம் மற்றும் ஒரு சில கிரகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (புளூட்டோ வை தவிர 4 கிரகங்கள் உள்ளன)
இவைகளின் தண்மைகளாவன கிரகங்கள் என வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு உட்படவில்லை (ஒரே ஒரு விதி) . அதனால். இது கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துள்ளது.( 2006 ஆம் ஆண்டு இது தன் அந்தஸ்தை இழந்தது)

இந்த சிறிய கிரகமானது

பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் சிறியது. எவ்வளவு என தெரிய வேண்டும் என்றால்,,,,,, நம்முடைய துனை கிரகத்தின் அளவு தெரியுமா?  [( 1737 KM) Radius] புளூட்டோவானது நமது சந்திரனை விட சிறியது. (1185 Km Radius)

PLUTO SIZE
SIZE COMPARE

 

தொலைவு

இந்த கிரகம் (புளூட்டோ) ஆனது சூரியனிடமிருந்து 3.7 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது (அதாவது) 5.9 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது [கிலோ மீட்டர் , மைல் வித்தியாசம் தெரிகிரதா] வா. அ கணக்கு உங்களுக்கு தெரியுமா. (வானியல் அலகு) இதனை AU (Astronomical Unit ) என்று அழைப்பார்கள். இந்த கிரகம் 39.5 வா.அ தூரமுடையது.

இதன் சுற்று வட்ட பாதையானது சற்று வித்தியாசமானது. ஆகையால் இது ஒரு சில காலங்களில் நெப்டியூனின் சுற்றுவட்ட பாதையை தொட நேரிடும். அதாவது 39.5 AU விலிருந்து 30.7 AU வரை இது சூரியனுக்கு அருகில் வரக்கூடும்.

காலங்கள்

இந்த கிரகத்தில் நாள் என்பது பூமியின் கணக்கு படி 153 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது (6 நாள் 9 மனி நேரத்திற்கு) ஒரு முறை தண்ணை தானே சுற்றிவர இது 153 மணி நேரங்களை எடுத்துக்கொள்ளும்.
ஆனால் அங்கு ஒரு வருடம் எப்படி இருக்கும் என தெரியுமா? அதாவது ஒரு முறை அது சூரியனை முழுமையாக சுற்றிவர எவ்வளவு காலம் எடுக்கும்?
248 வருடங்கள் எடுக்கும் 🙁 (பூமியின் கணக்கு படி)
இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த கிரகமானது கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் (1930 ம் ஆண்டு) இன்று வரை இது ஒரு முறை கூட முழுமையாக சுற்றிவர வில்லை. ( புளூட்டோவில் இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை)
துணைகிரகம்

CHARON PLUTO’S MOON 

புளூட்டோவிற்று 5 துணைகிரகங்கள் உள்ளன
Charon, Styx, Nix, Kerberos and Hydra. இதன் 5 துணை கிரங்களில் சரோன் (charon ) ஆனது புளூட்டோவை விட சற்று பெரியது. மேலும் சரோன் ஒரு சிறிய கிரகம் பட்டியலில் வரலாம் (Dwarf Planet) என கூறப்படுகிறது

THE NEW HORIZON(நியூ ஹுரைசோன் )

எனும் ஒரேயொரு விண்வெளி கலன் மட்டுமே இதனை ஆராய அனுப்பப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அனுப்ப்பட்டது. இது 2015 ஜூன் மாத வாக்கில் புளூட்டோ விற்கு அருகில் சென்றுள்ளது. மேலும் இந்த விண்கலமானது. கியூப்பர்ஸ் பெல்ட் எனும் ஒரு ஆஸ்ட்ராய்டு பகுதியை ஆராயும் எனவும் கருதப்படுகிறது.
வளிமண்டலம்
இந்த கிரகத்தில் மிக மிக மெல்லிய அதாவது (நுட்பமான) ஒரு வளிமண்டலம் உள்ளது. இதன் வளிமண்டலமானது சூரியனுக்கு அருகில் வரும்போது விரிவடையவும். சூரியனிடமிருந்து விலகும் போது சுருங்கவும் செய்கிறது. (வால் நட்சத்திரங்களுக்கு இருக்கும் ) ஒரு பண்புதான் இது.
சுழற்சி வரலாறு படைத்தது நியூ ஹரைசோன் செய்தி

இந்த கிரகம் பின்னோக்கிய சுழற்சி கொண்டது. அதாவது. வீனஸ் கிரகம் சுற்றுவது போல் சுற்றுகிறது. அதாவது. நமக்கு கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைந்தால் புளூட்டோ மற்றும் வீணஸ்(வெள்ளி) யில் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். இதனை ரெற்றோ கிரேட்(RETROGRADE) ROTATION

இவையே சிறிய கிரகம் புளூட்டோ பற்றிய ஒரு சில செய்திகள்
மேலும் விவரங்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள். நன்றி

October 29, 2016

Facts About Neptune | நெப்டியூன் கிரகம் | தமிழ் விண்வெளி செய்திகள்


நெப்டியூன் கிரகமானது கண்டுபிடிக்கப்பட்டது 1846 செப்டம்பர் மாதம் 13ம் தேதி கண்டு பிடிக்கப்பட்டது.

 

கண்டு பிடித்தவர்கள் யார் யார் என் பார்த்தால்

  1. உர்பைன் லி வெரியர் (Urbain Le Verrier)
  2. ஜொஹன் காலி (Johann Galle)
  3. ஜான் கொஷ் ஆதம் (John Cosh Adams)
நெப்டியூன் 
 
இந்த கிரகமானது இறுதி கிரகமாக கருதப்படுகிரது.
அதாவது நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கிரகங்கள் தான் 9 ஆவதாக கருதப்பட்ட புளூட்டோ 2006 ம் ஆண்டு முதல் கிரகம் என்ற ஒரு அந்தஸ்தை இழந்துள்ளது. அதை பற்றி பிறகு பார்ப்போம்.
 
இந்த கிரகம் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என பார்த்தால் : இது சூரியனிடமிருந்து8 4.5 பில்லியன் கி,மீ தொலைவு 
அதாவது 2.8 பில்லியன் மைல் அதாவது 30.07 AU (Astronomical Units)
 

*1 AU Equals 150 Million KM ( 1 வானியல் அலகு என்பது 150 மில்லியன் கி.மீ)

நெப்டியூன் கிரகத்தில் ஒரு நாள் என்பது புவியின் கனக்கு படி 16 மணி நேரங்கள் ஆகும் அதாவது அந்த கிரகம் ஒரு முறை முழுமையாக தண்ணைத்தானே சுற்றி வர 16 மணி நெரங்களே எடுத்துக்கொள்ளும். (Super ba)

டிரைடன் (நெடியூனின் துனைகிரகம்)

இதே அந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது எப்படி இருக்கும் என கேட்டீர்களேயானால். (ஆஆ..)  சற்று தலை சுற்றும் அவ்வளவு தான்
அதாவது அங்கு ஒரு வருடம் என்பது 165 பூமியின் வருடங்கள் ( அதாவது நெப்டியூன் ஒரு முறை முழுமையாக சூரியனை சுற்றிவர 165 ஆண்டூகள் ஆகும் புவியின் கணக்குபடி)

இந்த கிரகம் 2011 ஆண்டு தான் ஒரு முறை சூரியனை சுற்றி வந்துள்ளது என கணக்கிட்டுள்ளனர்.(இதனை கண்டு பிடித்த 1846ம் ஆண்டு முதல் 2011 வரை )

இந்த கிரகத்தினை ராட்சத கிரகம் என அழைக்கப்படுகிறது. (giant Planet)
இது காற்று கிரகமாகவும் மற்றும் பனிக்கிரகமாகவும் இருக்கிறது ( Gas Giant and Ice Giant)

நெப்டியூன் (வாயேஜர் II)

இந்த கிரகத்தில் உள்ள நிலப்பகுதிகளில் கானப்படும் தனிமங்கள் பொருட்களாவன

  1. தண்ணீர் (h2O)
  2. மீத்தேன் (CH3)
  3. அம்மோனியா(NH4) 
கிரகத்தின் மேற்பகுதிகளில் உறந்த நிலையில் பனி மூலக்கூறுகள் உள்ளன என கூறப்படுகிறது.
 

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் , இந்த இரு கிரகங்களும்  சகோதர கிரகங்கள் என கூறப்படுகின்றன.(Both are Sister Planets)

நெப்டியூனின் வளிமண்டலமானது யுரேனஸ் கிரகத்தில் இருப்பது போலவே தான் உள்ளது. ஹைட்ரஜன் , ஹீலியம் , மற்றும் மீத்தேன்

*நம் சூரிய குடும்பத்தில் அனைத்து கிரகங்களும் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகம் வளையங்கள் கொண்ட கிரகம் (கடைசி நாண்கு கிரகங்களுக்கும் வளையங்கள் உள்ளன)
இதில் 6 விதமான வளையங்களால் ஆனது

இந்த கிரகத்திற்கு 13 துனை கிரகங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து பெயர்களும் கிரேக்க புரானங்களை கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தினை வாயேஜர் II என்ற ஒரே ஒரு விண்கலம் மட்டுமே பார்த்துள்ளது.

இவையே நெப்டியூன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்.
மேலும் விவரங்களுக்கு Subscribe பன்னுங்க

Download Our App

More Posts to Read



October 18, 2016

யுரேனஸ் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள் | Space News Tamil about Uranus





இன்று நாம் யுரேனஸ் கிரகம் எனும் ஒரு பனிக் கிரகத்தினை பற்றிய ஒரு சில செய்திகளை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

 Uranus Planet கண்டுபிடித்தது

இந்த கிரகமானது நமது சூரியகுடும்பத்தில் தான் உள்ளது என நாம் கண்டறிந்தது  மார்ச் மாதம் 13 ம் நாள் 1781ல் தான். கண்டுபிடித்தவரின் பெயர் வில்லியம் ஹெர்ஷெல் (William Herschel) 

 

 பொதுவான கணக்குகள்

1. சூரியனை சுற்றும் வட்டபாதையின் அளவு (Orbit Size around the Sun)
=2,870,658,186 KM (கிலோ மீட்டர்)
 
2. சுற்றுப்பாதையின் சராசரி திசைவேகம் (Mean Orbit Velocity)
= 24,277 km/h (மணிக்கு)
 
3. பூமத்திய சாய்வு (Equatorial Inclination)
= 97.8 degrees (பிற்போக்கு சுழற்சி) Retrograde rotation

சூரியனிடமிருந்து தொலைவு

இந்த கிரகமானது 2.9 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது அதாவது 1.8 பில்லியன் மைல் அல்லது 19.19 AU (Astronomical Units) ஒரு AU என்பது 150 மில்லியன் கி.மீ குறிக்கும்.

நாட்கள் மற்றும் நேரங்கள்

இந்த கிரகத்தில் ஒரு நாள் என்பது அதாவது ஒருமுறை தன்னைதானே சுற்றிவர புவியின் கனக்குபடி 17 மணி நேரங்களே எடுத்துக்கொள்ளும்.

 

ஆனால் ஒரு வருடம் அதாவது ஒரு முறை முழுமையாக சூரியனை சுற்றிவர புவியின் கணக்குப்படி 84 வருடங்களை எடுத்துக்கொள்ளும். [ஒரு வேளை நான் யுரேனஸில் பிறந்திருந்தால் எனக்கு 1/4 வயது தான் ஆகியிருக்கும்]

அதாவது 30,687 பூமியின் நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

கிரகத்தில் உள்ள பொருட்கள்

இந்த கிரகத்தில் அதாவது இதை ஏற்கனவே ஒரு பனிக்கிரகம் என அறிவியலாலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் . அப்படியானால் இந்த கிரகம் முழுவது பனியால் ஆனது என அர்த்தம். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த கிரகத்தில் உள்ள மேற்பரப்பில் 90% அதற்கும் அதிகமான பனிப்பொருட்கள் உள்ளன (Icy Materials ) அதன் மேற்பரப்பில் உள்ள பொருட்களாவன.
  1. H2O (Water)தண்ணீர் மூலக்கூறு
  2. CH3 (Methane) மீத்தேன்
  3. NH4 (Ammonia) அம்மோனியா
இவைதான் அந்த கிரகத்தில் மேற்பரப்புகளைல் அதிகமாக காணப்படுகிறது

வளிமண்டலத்தில் உள்ள பொருட்கள்

நமது சூரியகுடும்பத்தில் உள்ள பெரும்பாலானா கிரகங்களின் வளிமண்டல மூலக்கூறுகள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் . அதே போல் இந்த கிரகத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மூலக்கூறுகள் காணப்படுகின்றன மேலும் மீத்தேன் மூலக்கூறு கானப்படுகிறது

வளையங்கள்

யுரேனஸ் கிரகமானது 13 வளையங்களை கொண்டுள்ளது. இவைகள் கிரகத்தில் அருகில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அதாவது கிரகத்தின் அருகில் இருக்கும் வளையங்கள் மிகவும் மெல்லியதாகவும் கருமையான அடர்ந்த வண்னமுடையவை ஆகையால் இவை சரியாக கண்ணுக்கு புலப்படுவதில்லை ஆனால் வெளிப்புறம் உள்ள வளையங்கள்

 

வண்ணமயமான நிறத்திலும் பளிச்சென தெரியம் படியும் உள்ளது. ஆகையால் பார்ப்பதற்கு. கிரகத்தினை விட்டு சற்று தொலைவில் வளையங்கள் இருப்பது போல் தோன்றும் ஆனால் அப்படியல்ல. 

துணைக்கிரகங்கள்

இந்த கிரகத்திற்கு 27 துணைகோள்கள் உள்ளன இவை அணைத்தும் பெயரிடப்பட்டும் உள்ளன இந்த அனைத்து துனைக்கிரகங்களும் வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்ஸாண்டர் போப் இவர்களின் கதைகளில் உள்ள காதாபாத்திரங்களின் பெயர்களை கொண்டுள்ளன. வில்லியம் ஷேக்ஸ்பியர் பற்றி உங்களுக்கே தெரியும் ஆங்கில கவிதைகள் மற்றும் கதைகள் இயற்றுபவர். இவரின் கதை மாந்தர்கள் பெயர்களையே யுரேனஸ் கிரக துணைகோள்களுக்கு வைத்திருக்கின்றனர். 
 
[ஒரு வேளை இந்தியர்களாகிய நாம் ஏதேனும் ஒரு கிரகத்தினை கண்டறிந்தால் அதற்கு “அப்துல் கலாம்” கிரகம் என பெயரிட எனக்கு ஆசை. ஏனெனில் என்னுடைய பெயர் இதில் பாதி இருக்கு  🙂 ]

உருளும் கிரகம் (Ref) Wiki

சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கிரகம் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. 

அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். (REFERENCE) WIKI PEDIA 

Video

 
இந்த கிரகத்தினை இதுவரை பார்த்த  ஒரே விண்கலம் வாயேஜர் 2 எனும் செயற்கைகோல் மட்டுமே. .

 

இந்த Blog உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்யுங்கள்
மீண்டும் ஒரு space செய்திகளோடு சந்திப்போம்.
நன்றி.

 

 

 

 

யுரேனஸ் கிரகம் யாரால் எப்போது கண்டறியப்பட்டது?

வில்லியம் ஹர்சேல் 1781 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

யுரேனசுக்கு ஒரு வருடம் பூமியின் கணக்கு படி எவ்வளவு?

யுரேனஸ் ஒரு முறை சூரியனை சுற்ற 84 ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும்.

யுரேனஸ் அரக்க கிரகமா?

ஆம், யுரேனஸ் பனி அரக்க கிரகம் (ICE Giant)

யுரேனஸ் பற்றிய் 5 சுவாரசியமான தகவல்கள்.

1.யுரேனசின் வளிமண்டலத்தில் பணியால் ஆக்கப்பட்டுள்ளது.
2. யுரேனஸ் பார்ப்பதற்கு சுழலுவது போல் தெரியாது இது உருளுவது போல் தெரியும்
3.யுரேனசுக்கு வளையங்கள் உண்டு.
4.யுரேனசுக்கு 27 நிலவுகள் உள்ளன.

October 09, 2016

Facts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்


இன்று நாம் பார்க்க இருக்கும் கிரகமானது சனி கிரகம் (Saturn) என்ற ஒரு கிரகத்தினை பற்றிய ஒரு சில செய்திகளை தெரிந்து கொள்வோம்…இந்த கிரகமானது ஒரு பெரிய வாயு கிரகம்  (Gas Giant) இதில் அதிகமாக இருக்கும் காற்று மூலக்கூறு : ஹீலியல் மற்றும் ஹைட்ரஜன்

பொதுவானவை:

   இந்த கிரகமானது அனைவருக்கும் தெரிந்தது போலவே. வியாழன் கிரகத்திற்கு அடுத்தபடியாக ஒரு மிகப்பெரிய கிரகம். அது மட்டுமல்லாது
நமது சூரிய குடும்பத்தில் ஆறாவது (6) கிரகமாக உள்ளது.


Hexagon Shape

  • இது சூரியனிடமிருந்து 1.4 பில்லியன் கி.மீ (Or) 886 மில்லியன் மைல் (or) 9.5 AU தொலைவில் உள்ளது.  [Astronomical Units] 1 AU என்பது 150 மில்லியல் கிலோ மீட்டர்களை குறிக்கும்
  • சுற்றுப்பாதையின் சராரசி வேகம் (அ) திசைவேகம் :(mean orbital velocity) ஆனது 34,701 கி.மீ / வினாடி ( kmph) [என்ற வேகத்தில் இது சூரியனை சுற்றிவருகிரது
  • Equatorial radius (அந்த கிரகத்தின் மத்திய ரேகையிலிருந்து அதன் ஆரமானது 58,232 கி.மீ
  • இந்த கிரகத்தின் பரப்பு இழுவிசையானது (Surface Gravity) 10.4*m/sஅதாவது நீங்கள் புவியில் 100 (Pound) பவுண்ட் எடை இருப்பின் சனிகிரகத்தில் நீங்கள் 107 பவுண்ட் இருப்பீர்கள். ( * சில மாறுதல்கள் இருக்கலாம் இந்த கணக்கானது. சனிகிரகத்தின் மத்திய ரேகை பகுதியில் எடுக்கப்பட்டது.. விண்வெளி அறிஞர்கள் இதன் கணக்கு மாறலாம் என கருதுகின்றனர்.
     
  • விடுபடும் வேகம் (Escape Velocity) (Or ) தப்பிக்கும் வேகமானது129,924 கி.மீ / மணி [ 129,924 KMPH] . அதாவது, சனிகிரகத்திலிருந்து மனிக்கு 129,924 கி.மீ எனும் வேகத்தில் புறப்படும் ஒரு பொருள் மிக எளிதாக சனிகிரகத்தின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பி விண்வெளிக்கு சென்றுவிடும்.
சனி கிரகம் அதன் வளையங்களோடு
 

நாட்கள் & வருடம்

சனிகிரகத்தில் ஒரு நாளானது அதாவது ஒரு முறை அந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலமானது பூமியின் கணக்குப்படி 10.7 மணி நேரங்களாகும். 10 மணி 40 நிமிடங்களில் அந்த கிரகம் ஒரு முறை சுற்றிவிடும். 

ஆனால் அந்த கிரகத்தில் ஒரு வருடமானது மிகவும் அதிகமாக [பூமியின் கணக்குப் படி 10,756 நாட்கள்] எடுத்துக்கொள்ளும். புரியும் படி சொல்வதென்றால் 29 வருடங்கள். ஆமாம் சனி கிரகத்தில் ஒரு வருடமானது பூமியின் கணக்கு படி 29 வருடங்களுக்கு சமமானது.

வளையங்கள்

இந்த கிரகத்தில் அழகான வளையங்கள் காணப்படுகின்றன. மேலும் இது ஏழு (7) பிரிவுகளாகவுள்ளது. அதோடு இல்லாமல் இந்த ஏழு வளையங்களுக்கு இடையே சீரானா இடை வெளிகளும் காணப்படுகின்றன. சனிகிரகத்தின் மத்திய ரேகையிலிருந்து. 6630 கிமீ முதல் 1,20,700 கிமீ வரை இந்த வளையங்கள் நீண்டு உள்ளன. இந்த வளையங்களில் அப்படி எதுவும் இல்லை வெறும் உறைந்த தண்ணீர் மூலக்கூறுகள் அல்லது பனி என அறியப்படுகிறது மேலும் அதில் தூசி தும்புகள் அதிகமாக உள்ளது
   இந்த வளையங்களின் தடிமன் 10 மீட்டர்கள் எனவும் கண்டறிந்துள்ளனர் இது 1980 களில் நாசாவால் செலுத்தப்பட்ட வாயேஜன் 1 & 2 விண்கலம் மூலம் அறியப்பட்டது

துனைக்கோள்கள்

 
இந்த கிரகத்திற்கு துனைக்கிரகங்கள் உள்ளன இதுவரை 53 துனைகோள்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன். மேலும் 9 துனைகோள்கள் உறுதி செய்யப்படவில்லை .
டைட்டன் 
 
 மெலும் அவை சனிகிரகத்தினை தான் சுற்றி வருகின்றன என உறுதி செய்யப்படுமாய்யின். இதற்கு மொத்தம் 62 துணைக்கோள்கள் . இதன் ஒரு துணைக்கோளான டைட்டனில் வாழ்க்கைக்கான சாத்திய கூறுகள் இருக்கலாம் என பிரபலமான கூற்று உள்ளது. இது தான் நமது சூரிய குடும்பத்தில்  இரண்டாவது பெரிய துணைகோளாகும். ( முதலாவது வியாழனின் துணைக்கோள் கேனிமிடி (Ganymede) ஆகும்

விண்கலம்

இந்த கிரகத்தினை சந்தித்த விண்கலம்கள் மிகவும் சொற்பமே அதில் குறிப்பிட்டு சொல்லப்படுபவை 
1. பயனீர் 11 [Pioneer 11]
2. வாயேஜர் 1 & 2 (Voyager I & II) Voyager Enter Interstellar Space News Latest
3. காசினி – ஹுஜன்ஸ் (Cassini –  Huygens)
 
Cassini
 
இதில் காசினி-ஹுஜன்ஸ் எனும் இரண்டு விண்கலங்களும் ஒன்றாக அக்டோபர் 15 1997ல்  அனுப்பப்பட்டவை இதில் காசினி எனும் விண்கலமானது சனிகிரகத்தின் மேற்பரப்பு, வளிமண்டலம், வளையங்கள் மற்றும் ஒரு சில துணைகோள்களை ஆராய்ச்சி செய்வதற்காக டிசம்பர் 2004 முதல் அதன் வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.
ஹுஜன்ஸ் விண்கலமானது ஜனவரி 2005 ஆம் ஆண்டு  சனியின் துனைகிரகமான டைட்டனில் தரையிரக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கிரகத்தில் வாழ்க்கைக்கான எந்த ஆதாரமும் இல்லை என அறிவியலாலார்கல் கருதுகின்றனர். ஆனால் சனிகிரகத்தின் துணைகோலான டைட்டனில் அதற்கான சாத்திய கூறுகள் இருக்கலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. 

 

எதுவாக இருந்தாலும் நாம் இருப்பது நமது கிரகம் புவியில்.  நாம் தான் புவியின் பாதுகாவலர்கள். இதனை நாம். விண்வெளி கற்களிலிருந்து பாதுகாப்பது முடியாத காரியம். ஆனால் இந்த கிரகத்தினை பசுமையாக வைத்திருக்க நாம் நம்மால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும், ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நட முயற்சிக்க வேண்டும்

 
இப்படிக்கு 

September 29, 2016

வியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்

வியாழன் கிரகமானது நமது சூரிய குடும்பத்தின் ஒரு மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான ஒரு கிரகம். இந்த கிரகமானது நமது சூரியன் உருவான நேரத்தில் தோன்றியிருக்கலாம் என ஒரு சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். Juno Space Craft Info in Tamil

பொதுவான விடயம்

கிரகத்தின்  பெயர் : வியாழன் (Jupiter)

இடம்  : நமது சூரிய குடும்பத்தில் 5ஆவது கிரகம்

தூரம் : 484 மில்லியன் மைல் (778 மில்லியன் கி.மி) சூரியனிடமிருந்து

AU : 5.2 AU (Astronomical Units; 1 AU = 150 Million KM)

இந்த கிரகமானது மிகவும் பெரியது. எவ்வளவு பெரியது எனில். அதனும் 1300 பூமியை வைத்தாலும் அது தனக்குள் அடைத்து வைத்துக் கொள்ளும்.

ஆனால் இந்த கிரகமானது ஒரு காற்றுக்கிரகம் என அறிவியல் அறிஞர்களால் அறியப்படுகிறது. அதாவது. அந்த கிரகத்தில் உள்ள காற்று மேகங்கள் முழுவதுமாக அந்த கிரகத்தினை மூடியுள்ளது.

ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களை நாம் அந்த கிரகத்தில் கான முடியும்

 

 வளையங்கள்

இந்த  கிரத்தினை சுற்றி சனிக் கிரகத்தில் இருப்பது போல் வளையங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் அளவு சிறியதாக இருப்பதால் அவை பெரும்பாலான ஸ்பேஸ் டெலஸ்கோபிற்கு தெரிவதில்லை
இந்த செய்தியானது 1979ல் வாயேஜர் எனும் செயற்கைகோல் மூலம் நமக்கு தெரிய வந்தது. அதுமட்டுமல்ல.. மற்ற கிரகங்களான சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய மூன்றிற்கும் வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
 
 

நாட்கள் மற்றும் நேரங்கள்

வியாழன் கிரகமானது ஒரு முறை தன்னைதானே சுற்றிவர (பகல் இரவு வர) பூமியின் கனக்குபடி 10 மணி நேரங்களையே அது எடுத்துக்கொள்ளும். 
ஆனால்
அது ஒரு முறை சூரியனை சுற்றிவர 4333 நாட்கள் பூமியின் கணக்குபடி எடுத்துக்கொள்ளும். அதாவது கிட்டத்தட்ட 12 வருடங்கள் எடுத்துக்கொள்ளும்

துனைகோள்கள்.

இதற்கு மொத்தம் 67 துனைகோள்கள் உள்ளன அதில் 50 (பெயரிடப்பட்ட)     உறுதிசெய்யப்பட்டது ,
17 இன்னும் உறுதி செய்யப்படவில்ல



September 28, 2016

ஜுனோ! | செயற்கைகோள் | தமிழ் லேடஸ்ட் செய்திகள் | Space News Tamil

இது வானவியல் செய்திகள் தமிழ்

இன்று நாம் பார்க்க இருக்கும் ஒரு விடயம் தான். வியாழன் கிரகம் அல்ல
அதனை ஆராய சென்றிருக்கும் “ஜுனோ என்ற ஒரு செயற்கை கோளை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம். இந்த செயற்கைகோளானது ‘நாசா’ 2011 ஆகஸ்ட் 5ம் தேதி இந்திய நேரப்படி 9:55 மனிக்கு இரவு  அனுப்பப்பட்டது

இந்த செயற்கைகோளானது முக்கியமாக வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தினை ஆராய அனுப்பப்பட்டுள்ளது

இதன் முக்கிய பணிகளாவன

 

  • வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஈரப்பதம் மற்றும் அதன் தண்ணீர் பற்றிய முக்கிய விடயங்களை ஆராயும்
  • இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள் என்னென்ன? என்பதை பற்றி ஆராயவும்
  • வியாழனின் வெப்பநிலை மேக ஓட்டங்கள்
  • மற்றும் இறுதியாக அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசை , மற்றும் காந்தபுலம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றியும் ஆராய இது அனுப்பப்பட்டுள்ளது.

இதர பணிகள்:

மேலும் இந்த செயற்கைகோள் இதை மற்றும் இல்லாமல் வேறு சில பணிகளையும் இது செய்ய இருக்கிறது.
அவையாவன
“ஜுனோ” An Artistic Image by NASA
 
  1. இந்த கிரத்தின் ஆரம்பம் என்ன ? என்பது பற்றி இது ஆராயும் [ஏனெனில் இந்த கிரகம் பற்றிய சில செய்திகள் ஆச்சரியம் மக்கதாக உள்ளது. இது நமது சூரியன் தோன்றிய காலத்திலிருந்தே உருவாகி இருக்கலாம் என சில கருத்துகள் உள்ளன)
  2. மேலும் இந்த கிரகம் ஏதேனும் பரினாம வளர்சி அடைந்துள்ளதா? என்னென்ன வளர்ச்சி அடைந்துள்ளது?  என அறியவும் 
  3. இந்த கிரகத்தின் வளையங்கள் பற்றி ஆராயவும் [சனி கிரத்திற்கு இருப்பதை போன்ற வளையங்கள் இந்த கிரகத்திற்கும் உள்ளன ஆனால் அவை மிகவும் மெல்லியவை என்பதால் அவை தொலைநோக்கியின் கண்களுக்கு தெரிவதில்லை]
 
 
மேலும்:
இந்த கிரத்தினை பற்றி ‘நாசா’ அறிவிக்கும் போது இந்த கிரத்தில் மனிதர்களால் நிற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்தகிரகமானது முற்றிலும் காற்றினால் சூழப்பட்டுள்ளது. இதன் உண்மையான் பருப்பொருளானது ஒரு பூமியின் அளவு மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
 
 

Mission Timeline
  • Launch –  August 5 2011
  • Deep Space Maneuvers – Aug/Sep 2012
  • Earth Flyby Gravity assist – Oct 2013
  • Jupiter Arrival – July 2016
  • Space Craft Will orbit Jupiter for 20 Months (37 Orbits)
  • End of the Mission (Deorbit into Jupiter)
ஜுனோ கடைசியாக வியாழன் கிரகத்தின் மேல் விழுந்து அழியும் 
 
நாம் எவ்வளவு விடைகளை தெரிந்து கொள்ள போகிறோம் என்பது முக்கியமல்ல. ஏனெனில் கேள்விகள் எப்போது வந்து கொண்டே இருக்கும்
 

Download Our App

More Posts to Read



September 16, 2016

Facts About Planet Mars in 2019| செவ்வாய் கிரகம் பற்றிய சில செய்திகள் [Tamil]

  • நமது சூரிய குடும்பத்தில் 4 வதாக இருக்கும் கிரகம் இது தான் (செவ்வாய்) சிகப்பு கிரகம் எனவும் வர்னிக்கப்படுகிறது
  • சூரியனிடமிருந்து 228 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ளது (142 மில்லியன் மைல் தொலைவு என்றும் கூறலாம்)
  • செவ்வாய் கிரகமானது நமது பூமியிலிருந்து உள்ள தொலைவானது 54.6 மில்லியன் கிமீ ஆகும்
  • இது தன்னைத்தானே சுற்று சூரியனையும் சுற்றிவரும் இயல்புடையது. இந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது. (பூமியைப்போலவே) சரியாக சொல்ல வேண்டும் என்றால் 24 மணி 40 நிமிடங்களில் ஒரு சுழற்சியை முடித்துவிடும்
  • இந்த கிரகத்தில் வருடங்கள் எப்படி இருக்கு என்றால்? மிகவும் நீண்டு இருக்கும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடமானது  687 நாட்கள் ஆகும் (பூமியின் கனக்கு படி)
  • இதன் அளவானது பூமியை சரிபாதியாக கொண்டது இது 3389.5 கிமி ஆரம் கொண்டது
  • வளிமண்டலமானது மிகவும் மெல்லியது , மேலும் இதில் கார்பன்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன், ஆர்கன்
  • இந்த கிரகம் இரண்டு துணைகோள்களை கொண்டது . முறையே போபோஸ் & டீமோஸ் (Phobos & Deimos)
Information about Planet Mars Tamil Video
  • அதிகமான செவ்வாய் கிரகத்தினை ஆராய செய்ற்கை கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக 1965 ஆம் வருடம் அனுப்பப்பட்ட மரைர்4 என்ற செயற்கைகோள் தான் முதன் முதலில் வெற்றியடைந்த செயற்கைகோள் ஆகும்
  • இதன் ஈர்ப்பு விசை மிகவும் குறைவு அதனால் புவியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பொருள். செவ்வாயில் 38 பவுண்டு மட்டுமே இருக்கும்
  • இந்த கிரகத்தின் சிகப்பு தன்மையானது அதன் துரு கலந்து மணலினாலும். இருப்பு கனிமங்கள் நிறைந்த மனலினாலும் மேலும். அதன் அழுக்கடந்த மற்றும். மோசமான வளிமண்டலமும் காரனம்

2019ல் தகவல்கள் செவ்வாய் பற்றி

  • பொபோஸ் எனும் செவ்வாயின் ஒரு துனை கோள் நாளடைவில் அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையால் அழிக்கப்பட்டு தூசி துகள்கலாக மாற்றப்படும்
  • அப்படி மாற்றப்படும் தூசித்துகள்கள் , சனி கிரகத்திற்கு இருப்பதை போன்ற , ஒரு வளையங்களை இந்த கிரகத்திற்கு ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது,
  • இந்தியா மங்கள்யான் 2 விண்கலத்தினை 2024 அனுப்ப திட்டமிட்டுள்ளது, இதே நேரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் 2024 ல் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களையும் அனுப்ப திட்ட மிட்டுள்ளது
  • செவ்வாய் கிரகத்திற்கு 2 நிலவுகள், ஒன்றின் பெயர் ஃப்போபொஸ் (Phobos) அதன் அர்த்தம் பயம், மற்றொன்றின் பெயர் “டீமோஸ்” அதன் அர்த்தம் “பதற்றம்

பொபோஸ் மற்றும் டீமோஸ் பெயர்காரணம்??

கிரேக்க போர் கடவுளான “ஏரீஸ்” ன் குதிரை ரதத்தின் கட்டப்பட்ட இரண்டு குதிரைகளின் பெயர்தான் “பொபோஸ் மற்றும் டீமோஸ்” ஆனால் “மார்ஸ்” என்பது ரோமானிய போர் கடவுளின் பெயர்

How many moons for MARS?

Actually 2, Phobos & Deimos

Meaning of Phobos & Deimos ???

The Meaning is Actually Interesting, Phobos Means “Fear”
and Deimos Means “Panic”

What is Phobos & Deimos actually Mean?

Phobos & Deimos are two Horse that Pulls the chariot of Greek War God “Ares”. Actually MARS is the Roman War God Name

செவ்வாய் கிரகத்திற்கு எத்தனை நிலவுகள்?

2 நிலவுகள், ஒன்றின் பெயர் ஃப்போபொஸ் (Phobos) அதன் அர்த்தம் பயம், மற்றொன்றின் பெயர் “டீமோஸ்” அதன் அர்த்தம் “பதற்றம்”

பொபோஸ் மற்றும் டீமோஸ் பெயர்காரணம்??

கிரேக்க போர் கடவுளான “ஏரீஸ்” ன் குதிரை ரதத்தின் கட்டப்பட்ட இரண்டு குதிரைகளின் பெயர்தான் “பொபோஸ் மற்றும் டீமோஸ்” ஆனால் “மார்ஸ்” என்பது ரோமானிய போர் கடவுளின் பெயர்

Does mars going to have Rings?

It’s a proposed Theory, one of the Moon’s of Mars Phobos will be destroyed because of Tidal force of Mars and become the Rings of that Planet, but it takes thousands of years

Download Our App

More Posts to Read

Facts About Our Moon | நமது சந்திரன் பற்றிய சில செய்திகள் [Tamil]

Moon
 
  • சந்திரன் தான் நம் புவியின் இயற்கையான துனைக்கோள் என அழைக்கப்படுகிறது
  • இது 384,400 கிமி தொலைவில் உள்ள ஒரு துனைக்கோள் ஆகும் (239 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது
  • நிலாவின் ஒரே பகுதியை தான் நாம் இதுவரை பார்த்து வருகிறோம்.  நிலவின் பின் புறத்தினை நாம் இதுவரை பார்த்ததே இல்லை. [இதற்கு காரனம்: நிலவானது 27 நாட்களில் பூமியை சுற்றி வருகிறது இந்த வேகமும் நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகமும் கிட்டத்தட்ட ஒரே அளவு என்பதால் தான் நாம் நிலவின் மற்றொறு பக்கத்தினை பார்க்கமுடியவில்லை]
  • மனிதர்கள் நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு மலைப்பாங்கான (surface ) உள்ளது
  • நிலவின் வளிமண்டலம் மிகவும் மெல்லிய அளவுள்ளது (Very Thin Atmosphere) இதனால் இதனை Exosphere  என அழைக்கின்றனர்
  • இதற்கு எந்த ஒரு வளையங்களும் இல்லை (சனி கிரகத்திற்கு இருப்பது போல்)
Information about Our Moon in Tamil Video
 
  • இதுவரை 100 க்கும் மேற்பட்ட விண்வெளி ஓடங்கள் இதனை பார்த்துள்ள்து
  • இது வரை 12 மனிதர்கள் நிலவின் மேற்பரப்பில் காலடி பதித்துள்ளனர்
  • இதுவர 6 நாடுகளை சார்ந்த தேசிய கொடிகள் நிலவில் ஊன்றியுள்ளனர்( 4 வது நாடாக இந்திய கொடி நிலவில் பதிக்கப்பட்டுள்ளது)
  • இந்தியாவின் “சந்திராயன் 1” என்ற வின்வெளி செயற்கைகோளதான் முதன் முதலாக சந்திரனில் உறைந்தநிலையில் நீர் ஆதாரம் உள்ளது என கண்டுபிடித்தது) (Link)
  • சந்திரன் தான் இரவு வானத்தில் பிரகாசமாக இருக்கும் ஒரே பொருள்
  • மேலும் தகவல்கள் சந்திராயன் 2 மற்றும் ககன்யான்

Download Our App

More Posts to Read



September 06, 2016

Facts About Planet Venus | வெள்ளி கிரகம் பற்றிய சில செய்திகள்

வீனஸ் – வெள்ளி கிரகம். Venus Planet in Tamil , Latest News about Venus Planet in Tamil, venus is the second planet from Sun, வெள்ளி கிரகம் பற்றிய செய்திகள் உங்களுக்காக

வெள்ளி கிரகம்:

Facts about Venus in Tamil

  1. இந்த கிரகம்தான் சூரியனுக்கு அருகில் இருக்கும் இரண்டாவது கிரகம். 
  2. இது பூமியின் அளவுக்கு (கிட்ட தட்ட) உள்ள கிரகம் அதாவது அதன் அளவானது புவி = 6371 கிமீ ஆரம் கொண்டது ; வெள்ளி கிரகம் = 6051 கிமீ ஆரம் கொண்ட ஒரு கிரகம்
  3. இது சூரியனிடமிருந்து 108 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிரகம் ஆகும் அதாவது 67 மில்லியன் மைல் அல்லது 0.73 AU (Astronautical Units)
  4. இந்த கிரகமானது ஒரு முறை தன்னை தானே சுற்றிக்கொள்ள பூமியின் கணக்குப்படி 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும் ஆனால் ஒரு முறை சூரியனை சுற்றிவர வெறும் 225 நாட்களே எடுத்துக்கொள்ளும், (அதாவது ஒரு வருடம் வந்தாலும். ஒரு நாள் முடிந்திருக்காது ஹ ஹா ஹா)
  5. இந்த கிரகமானது ஒரு மலைப்பாங்கான கிரகம் (அதாவது நமது சூரிய குடும்பத்தில் முதல் நான்கு கிரகங்களில் மட்டுமே நம்மால் நிற்க முடியும்) இதை பற்றி பிறகு கேளுங்கள் (கமென்ட்  செக்ஸனில்)
  6. Atmosphere இந்த கிரகத்தில் வளிமண்டலமானது ஒரு அடர்த்தியான மேக கூட்டத்தினை போல் இருக்கும். மேலும் இதில் கார்பன் டை ஆக்ஸைட( ); நைட்ரஜன்( ); மற்றும் சல்பியூரிக் அமிலம் ( );  உள்ளது
  7. இந்த கிரகத்திற்கு எந்த துனை கிரகமும் இல்லை
  8. 40க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இந்த கிரகத்தினை ஆராய இதுவறை அனுப்பப்பட்டுள்ளன
  9. இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்ஸியஸ் வரையில் இருக்கும். (புதன் கிரகத்தினை விட அதிக வெப்பநிலை இருக்கும்)
  10. இது பெரும்பாலான மற்ற கிரகங்கள் சுற்றும் திசைய காட்டிலும் எதிர் புரமான சுற்றும் அதாவது நமக்கு கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைந்தால் , வெள்ளி கிரகத்தில் மட்டும் மேற்கே உதித்து கிழக்கே மறையும்.   ஹ ஹா 
இது தான் வெள்ளி கிரகத்தினை பற்றிய நான் அறிந்த செய்திகள். 

கேள்விபதில்

வெள்ளி கிரகம் எதனால் எதிர்பக்கமாக சுற்றுகிறது?

இதன் உண்மையான விடை தெரியவில்லை.

வெள்ளி கிரகம் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?

சுமார் 108 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் (0.73 வானியல் அலகுகள்)

வானியல் அலகு (AU) என்றால் என்ன?

Astronomical Unit என்பதன் சுருக்கமே AU என்பது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் ஒரு நேர் கோட்டு தூரத்தினை குறிக்கும். அதாவது சரியாக 150 மில்லியன் கிலோ மீட்டர்கள்

வெள்ளி கிரகத்தின் அளவு என்ன?

நமது பூமிக்கு ஒத்த அளவினை உடையது வெள்ளி கிரகம். நமது பூமி 6371 கி.மீ ஆரம் உடையது. வெள்ளி 6051 கி.மீ ஆரம் உடையது.

வெள்ளி பற்றிய வேடிக்கையான தகவல் 1

வெள்ளி தன்னை தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
ஆனால் சூரியனை சுற்றி வர 225 நாட்களே எடுக்கும். அதாவது . வருடத்தினை விட நாள் மிக அதிகம்

Download Our App

More Posts to Read