ஹுப்புள் விண்வெளி தொலைநோக்கியானது , உண்மையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் என்றுதான் சொல்ல வேண்டும். 1990 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இந்த தொலைநோக்கியானது.. வின்வெளியிலேயே சர்வீஸ் செய்வதற்காக முதல் முதலில் வடிவமைக்கப்பட்டது இதுதான்
சில செய்திகள்:
ஏவப்பட்டது: ஏப்ரல் 24 , 1990 . ஃப்ளொரிடா மாகாணத்தில் உள்ள கெண்ணடி மையத்திலிருந்து இது டிஸ்கவரி விண்வெளி ஓடம் மூலம் இது விண்ணில் ஏவப்பட்டது
இதன் மொத்த எடையானது 10,886 கி. கிராம் (ஆரம்பத்தில்)
இப்போது இதன் எடை 12,246 கி.கிராம் ஆகும்
25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இரு விண் தொலைநோக்கி இது தான்
இதுவரைகும் 4 முறை விண்ணிலேயே சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது.அவையாவன
1. 1993 வருடம்
2. 1997 வருடம்
3a. 1999 வருடம்
3b. 2002 வருடம்
4. 2009 வருடம்
ஹுப்புள் விண் தொலைநோக்கியானது பூமியை கிடைமட்ட சுற்றுவட்ட பாதையில் சுற்றுகிறது . அதுவும் வினாடிக்கு 17,000 மைல் என்னும் வேகத்தில்
இந்த தொலைநோக்கியால் பிடிக்கப்படும் படங்கள்
இதுவரை ஹுப்புள் பூமியினை சுற்றியுள்ள தொலைவானது 3 பில்லியன் மைல்களுக்கும் மேல் ஆகும்..
ஹுப்புள் தொலைநோக்கி எந்த ஒரு Thruster யும் பயன்படுத்துவது கிடையாது.
இதன் முதன்மையான கண்ணாடியானது 2.4 மீட்டர் நீளமுடையது
இதுவரை ஹுப்புள் எடுத்த அண்டங்கள் மற்றும் இதர விண் பகுதிகளை மொத்தமாக இனைத்தால் வரும் தொலைவு எவ்வளவு தெரியுமா?13.4 பில்லியன் ஒளியாண்டு தொலைவு
ஹுப்புள் தொலைநோக்கியானது ஒரு பள்ளிக்கூட பேருந்து அளவு பெரியது
ஹுப்புள் தொலைநோக்கிக்கு Pointing Accuracy இருக்கும் அது .007 ஆர்க் நொடி (.007 Arc Seconds)
புவியின் முதல் படத்தினை வெளியிட்ட ஒரு வானிலை செயற்கைகோல்.
ஆம் நன்பர்களே GOES-16 என்று அழைக்கப்படக்கூடிய ஒரு புதிய வானிலை செயற்கைகோலை நாசா வானது விண்ணில் ஏவியது. இதன் கட்டுபாடுகள் அனைத்தும் இப்போது NOAA எனும் அமைப்பில் உள்ளது.அந்த NOAA அமைப்பால் வெளியிடப்பட்ட அதாவது, 4 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட (24-1-2017) இந்த புகைப்படமானது உணமையில். நீங்கள் கானும் இந்த CD தட்டு போன்ற , பூமியின் புகைப்படமானது. ஜனவரி 15, 2017 மதியம் 1 மனிக்கு எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இந்த GOES -16 செயற்கைகோலானது GOES-R செயற்கைகோல் வரிசையில் வின்னில் ஏவப்பட்டது ஆகும் இதன். கட்டுபாடுகள் அனைத்தும் NOAA அமைப்பில் உள்ளது.
GOES-16 செயற்கைகோலானது. நவம்பர் 19, 2016 அன்று , ஃப்லோரிடா மாகாண்த்தில் உள்ள கேப் கனவிரல் விமான படை தளத்திலிருந்து ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. Subscribe to Our channel
நீங்கள் பார்க்கும் இந்த பட்த்தில் பின் புறத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் நமது பால்வெளி க்கு சொந்தமானவை.
நடுவில் உள்ள இரண்டு வித்தியாசமான அண்டங்களை பாருங்கள்..அவைகள் நமது பால்வெளி அண்ட்த்திலிருந்து வெறும் 300 மில்லியன் ஒளியாண்டுகள் தள்ளிதான் உள்ளன… அதன் வித்தியாசமான வடிவம் எதனால் என்று அறிவியல் அறிஞ்சர்கள் கூறும் போது அவை இரண்டும் ஈர்பின் காரனமாக இவ்வாறு உள்ளன என் தெரியவருகிறது.
அல்லது இவை இரண்டு ஒன்றோடு ஒன்று மோதப் போகிறது என சொல்ல்லாம். அந்த இரண்டு அண்டங்களும் “ஆர்ப் 273 அல்லது யு ஜீ சீ 1810 (Arp 273 or UGC1810) என அழைக்கப்படுகிறது.
ஏன் இவ்வளவு தூரம் போக வேண்டும். நம்முடைய பால்வெளி அண்டமும் அருகில் உள்ள ஆன்றோமிடா அண்டமும் தான் ஈர்ப்பின் காரணமாக ஒன்றோடு ஒன்று மோத உள்ளது. இந்த விஷயம் தெரியுமா? விண்வெளியில் இது போண்ற நிகழ்வுகள் மிகவும் சாதாரணம்…
இது முதன் முதலில் 1948 ம் வருடம் நம்முடைய சூரியகுடும்பத்தின் பக்கம் தென்பட்டது. இந்த வால்மீன் ஆனது வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதையின் அருகிலேயே இது தென் பட்டுள்ளது. பிறகு அந்த வால்மீனானது வின்வெளியாளர்களின் கண்களுக்கு தென்படுவதைவிட்டு முழுமையாக மறைந்து விட்டது.பிறகு 2016 டிசம்பர் கடைசி வாக்கில் இந்த வால்மீனானது நமது சூரியனின் அருகில் ஆராய்சியாளர்கள் கண்டுள்ளனர். இதனை சாதாரன தொலைநோக்கி கொண்டு நம்மால் காணமுடியும். வெள்ளி கிரகத்திற்கு அருகில் ஒரு பிரகாசமான வால்மீனாக காட்சியளிக்கிறது.
ஆண்ரோமிடா அண்டம், இதனை மெஸ்ஸியர் 31 என்றும் அழைக்கப்படும் (Messier‘s ) அல்லது M31 என்றும் அழைக்கப்படும். நமது பால்வெளி அண்டத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அண்டம் எது என்றால் இந்த ஆண்ரோமிடா அண்டவெளிதான். இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நமது பால்வழி அண்டத்தினை போல் தான் காட்சியளிக்கும், ஆனால் நமது அண்டத்தினை விட இது மிகவும் பெரியது.
இந்த இரண்டு அண்டங்களும் தான் நமது Local Group எனும் பகுதியில் அதிக இடத்தினை ஆக்கிரமித்து இருக்கும் என்றால் அது மிகையாகாது. பில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள் தான் இந்த பிரகாசமான ஆண்ரோமிடா அண்டத்தினை பார்ப்பதற்கு ஏற்றார்போல் செய்துள்ளன. மேலும், இந்த படத்தில் மேல் மற்றும் கீழ் பகுதியிலு. மற்றும், பின் புறத்தில் உள்ள அனைத்து நட்சத்திறங்களும் (Background Stars )நமது அண்டவெளியை சார்ந்தவை.
M31 பற்றிய மற்ற விஷயங்கள் அனைத்தும் புதிராகவே உள்ளது.
இந்த புகைப்படமானது ஒரு சிறிய டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட பிறகு ஒன்று சேர்த்த ஒரு புகைப்படமாகும்,
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படம் தான் நாசா வின் காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிக அதிக(Resolution) ரிசலூசன் உள்ள ஒரு புகைப்படம். எதனுடையது என்று கேட்கிறீர்களா?
சனி கிரகத்தின் ஒரு துணைக்கிரகமான (Pandora) “பண்டோரா” என்னும் ஒரு சிறிய கிரகத்துடைய புகைப்படம் தான் இது.
இந்த பண்டோரா கிரகமானது சனி கிரகத்தின் F வளையத்திற்கு சற்று அருகில் (52 Miles (or) 84 KM) சனி கிரகத்தினை வலம் வரும் ஒரு துணைக்கிரகமாகும்.
பண்டோரா(Pandora) கிரகத்தினை மிகவும் அருகில் பறந்த போது இந்த புகைப்படமானது காசினி விண்கலத்திலிருந்து டிசம்பர் 16 2016 அன்று எடுக்கப்பட்டது see PIA07632,
ஒரு பொருள் நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால், கண்ணைத் திறந்து பார்த்தால் மட்டும் போதாது. அதற்கு வெளிச்சமும் தேவை. அப்போதுதான் பார்க்கும் பொருள் நம் கண்களுக்குத் தெரியும் ஒளியை மையமாக வைத்துத்தான் நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிடுகின்றனர். அதற்கான அலகுகளை தான். ஒளி நிமிடம்,ஒளி ஆண்டு என்று அழைக்கிறோம்
சூரியன் நெருப்பு கோளமாக இருப்பதால், அதில் இருந்து வெளிப்படும் ஒளி கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிற்குப் பரவுகிறது. சூரியக் கதிர்கள் பூமிக்கு வரும்போது, நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஒளி ஒரு வினாடியில் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கிறது. இந்த தூரத்திற்கு ‘ஒளி வினாடி ‘ என்று பெயர். ஒரு நிமிடத்தில் ஒளி பாயும் தூரம், ‘ ஒளி நிமிடம்’ எனப்படும். அதன்படி, ஒளி நிமிடத்தின் தூரம் 3,00,000 x 60=1,80,00,000 கிலோ மீட்டர். இப்படி கணக்கிடும்போது, ஒரு ஆண்டில் ஒளி பாயும் தூரம் அதாவது ஒளி ஆண்டு என்பது 9,460,800,000,000 கிலோ மீட்டர் Aல்லது 9,4605284 x 10^13 மீட்டர் என்ற அளவைக் குறிக்கிறது