Saturn Planet is Beautiful , If u Look at the best pictures of “Cassini” the Mission for Saturn and its Sister Craft “hugens” for Saturn’s moon “Titan” Both are Amazing. Just Look at the Best Pictures of “CASSINI”
Befour Its Grand Finale
சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி விண்கலமானது தனது முடிவினை நெருங்கிவிட்டது. ஆம் செப்டம்பர் 15 ஆம் நாள் 2017 ஆம் வருடம் அது சனிகிரகத்தின் வளிமண்டலத்தில் மோதி அழிக்கப்பட உள்ளது. அதாவது நாளைய தினம். இதனால் இந்த விண்கலத்தால் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்க்ளை வெளியிட்டு உங்களுக்காக பார்வைக்கு வைக்கிறேன்.
சனியின் துனைகிரகம் டைட்டன், டையோன் மற்றும் சனிகிரகத்தின் வளையம்.
டைட்டன் சனிகிரகத்தின் துனைக்கிரகம்
சனிகிரகத்தின் வளையங்களும் மற்றும் பூமியையும் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது
பழுதான திசை காட்டும் செயற்கைக்கோல் 2 மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாகப்பட்டினத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவர் DR. K. சிவன் என்பவர். அளித்த பேட்டியில். இவ்வாறு தெரிவித்தார். 2.4 டன் எடையுள்ள IRNSS-1H என பெயரிடப்பட்ட திசைகாட்டும் செயற்கைக்கோலானது. 40-60 நாட்களுக்குள். திரும்பவும் பூமிக்கு திரும்பும் அதாவது புவியின் உள் நுழையும் மேலும் அது பசுபிக் பெருங்கடலில் விழலாம் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி போன மாதம் அனுப்பப்பட்ட IRNSS-1H எனும் செயற்கைகோள். ஆரம்ப கட்ட ஏற்றம் சரியாக இருந்தாலும் விண்வெளியில். அந்த செயற்கைகோளை புவியின் வட்ட பாதையில் நிறுத்த தவறியது. (இன்னமும் விண்வெளியில் சுற்றிக்கொண்டு உள்ளது) எரிபொருள் தீர்வதற்கு 40-60 நாட்கள் ஆகலாம் . அப்படி தீர்ந்து போகும் போது. அது திரும்பவும் புவியின் உள் நுழையும்.. 250 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவர் 22ஆம் தேதி கூகுல் நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமும் அதன் கிரகங்களையும் பற்றி அடிப்படையான தகவல்கள் வந்தன. அதன் பிறகு இந்த நட்சத்திரத்தையும் அதன் கிரகங்களையும் பற்றி பல கேள்விகள் வந்தன. அவற்றில் ஒன்றுதான் . புற ஊதா கதிர்வீச்சி, விவரம்: டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமானது மிகவும் சிறிய , மங்களான நட்சத்திரம் தான் ஆனால் அதன்(UV Rays) புறஊதா கதிர்வீச்சி வெளிப்பாடு ஆனது கொஞ்சம் அதிகம் தான். அப்படி இருக்கையில் , அந்த டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரத்திற்கு மிக மிக அருகில் இருக்கும் கிரங்களில் அதன் தாக்கம் இருக்காதா? என்பதுதான். அந்த கேள்வி,. அப்படி ஒரு வேளை அதன் கதிர்வீச்சி அதிக அளவில் இருந்தால்.அந்த கிரகத்தில் உயிரினங்களை விடுங்கள் தண்ணீர் இருப்பதே அபூர்வம் என கருத்துக்கள் நிலவியது.
இதனை ஆராய்சி செய்த விண்சென்ட் எனும் ஆராய்சியாளர் மற்றும் அவரது குழுவினரும்.
(Vincent Bourrier at the University of Geneva in Switzerland) அதாவது அந்த நட்சத்திரத்தின் கதிர் வீச்சினை மட்டும் ஆராய்சி செய்தனர். அப்படி செய்கையில். அந்த நட்சத்திரத்தின் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் தன்மையானது அதிக அளவில் தான் உள்ளது .. ஆனால் அந்த கதிர்வீச்சின் வீரியமானது. தண்ணீர் மூல்க்கூறினை உடைக்கும் அளவுக்கு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல். ஹாபிடபுள் சோன் எனப்படும் பகுதி பற்றி உங்களுக்கு தெரியும். அந்த நட்சத்திரத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் கிரகங்களுக்கு . முதலில் இருக்கும் கிரகத்தினை விட உயிர் வாழ தகுதியான சூழ்நிலை இருக்கும் என நம்பப்படுகிறது. முதல் படத்தில் c, d, e ஐ காட்டிலும் f, g, h க்கு அதிக ஹாபிடபுள் சோன் தகுதி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆக்ஸ்ட்டு 31 ஆம் தேதி இந்தியாவின் போலார் ஸாட்டிலைட் லான்ச் வெய்கிள் (Polar Satellite Launch Vehicle) ஆனது IRNSS 1H எனும் ஒரு வழிகாட்டும் செயற்கைகோளை (Navigation Satellite) வின்வெளியில் நிறுவுவதற்காக. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது . ஆரம்ப கட்ட நிகழ்வுகள் சரியாக நடந்தன. ஆனால் கடைசியில். இரண்டாம் கட்ட ஸ்டேஜ் செபரேசனில் (Stage Separation) அது தோல்வியுற்றது. அதாவது. வட்டபாதையில் கழட்டி விட வேண்டிய செயற்கைகோலை அது கழற்ற தவறியது.
இதனை லான்ச் (Launch Controler ) கட்டுபடித்தும் கருவியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது. ராகெட் ஆனது முதல் கட்ட உயரத்தினை அடைந்த பிறகு 3 நிமிடத்தில் அந்த செய்ற்கைகோலை பிரித்து விட வேண்டும் ஆனால் அது அவ்வாறு செய்ய தவறியது. இதற்கு. பல்வேறு காரணங்கள், கருத்துகள் கூறப்படுகிறது. அதாவது அந்த செய்ற்கைகோலின் எடை தான் இதன் முக்கிய காரணம் என கருதப்படுகிறது எனினும், இஸ்ரோவானது இதற்கான காரனத்தை ஆராய்ந்து வருகிறது…