October 25, 2017

Origin Of the Elements Tamil | எங்கிருந்து வந்தன ? தனிம வரிசை அட்டவனை

தனிம வரிசை அட்டவனையை அனைவரும் பள்ளி பருவத்தில் பார்த்து இருப்பீர்கள் . படித்து இருப்பீர்கள்.  ஆனால் அந்த அனைத்து தனிமங்களும் மற்றும் பொருட்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தன என மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் தான். இந்த வண்ண அட்டவனை.

நம் உடலில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் தண்ணீரின் ஒவ்வொரு மூலக்கூறிலும் இருக்கும் ஹைட்ரஜன் எங்கிருந்து வந்தது என தெரிகிறதா? அதுதான் பெருவெடிப்பு கொள்கை எனும் “பிக் பேங்”. மேலும் ஹைட்ரஜன் மூலக்கூருக்கு மட்டும் வேறு எந்த காரணமும் நம்மால் காணமுடியவில்லை. நீங்கள் இந்த வண்ண அட்டவனையில் H எனும் தனிமத்தின் மீது ஒரே ஒரு வண்ணம் மட்டும் இருப்பதை காண முடிகிறது. மற்ற தனிமங்கள் பல வண்ணங்களின் கலவையாக இருப்பதையும் நம்மால் இங்கு காண முடிகிறது.

நமது உடலில் இருக்கும் கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய இரண்டும் அணுக்கரு இணைவு எனும் நிகழ்வினால் உண்டாகியுள்ளது. என தெரிய வருகிறது.
மேலும் நமது உடலில் இருக்கும் இருப்பு தாதுவானது நட்சத்திரங்களின் “சூப்பர் நோவா “வின்  போது உருவானவை. மேலும் இரும்பு எனும் தனிமம். பல காலங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வினால் உருவான ஒரு தனிமம்.

*சூப்பர் நோவா என்பது : ஒரு நட்சத்திரம திடீரெனெ ஒரு பேரழிவு வெடிப்பின் காரணமாக தனது அனைத்து நிறையையும் (அடர்த்தியையும்) வெளியேற்றும் அப்போது அது மிகுந்த பிரகாசத்தினை அடையும்

மேலும் நாம் பயன் படுத்தும் தங்கமானது, நியூற்றான் நட்சத்திரங்களின் மேதலினால் உருவானது . இதனால் தான் என்னவே தங்கத்தின் விலை முட்டி மேதிக்கொண்டிருக்கிறது.

நன்றி

Image Credit & LicenseWikipediaCmgleeData: Jennifer Johnson (OSU)

October 16, 2017

Bernard 68 Tamil Details | விண்வெளியில் நட்சத்திரங்களை பார்க்க விடாத! விசித்திர நெபுலா!!

வின்வெளியில் நடசத்திரங்கள் எங்கே போயின என கேட்கும் அளவிற்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது அந்த #நெபுலா.

Tamil Bernard 68
Bernard 68

ஆமாம், பூமியில் இருந்து வெறும் 500 #ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதுதான் “#பெர்னார்டு 68” எனும் நெபுலா. இது தெற்கு பகுதியில் ஆபியூகஸ் (#Ophiuchus) எனும் விண்மீன் திரள் தொகுப்பில் இது இருக்கிறது. அமெரிக்க வானியல் அறிஞ்சர் எட்வர்டு பெர்னார்டு என்பவரால், இது 1919 ஆம் ஆண்டுகளில் அவரின் அடர்ந்த நெபுலாக்கள் என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது. மேலும் இவரின் தொகுப்பானது 1927 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது அவரின் கனக்குப்படி 350 விண் பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.(ஏனெனில் அந்த நெபுலாவின் ஒளியை ஊடுருவி செல்லும் தண்மை காரனமாக.) இந்த எண்ணிக்கையானது முழுவதுமாக அரை ஒளியாண்டு தொலைவு இருக்கிற ஒரு நெபுலாவிற்கு மிகவும் குறைவு. அரை ஒளியாண்டு தொலைவு என்றால். அந்த நெபுலாவை கடந்து செல்வதற்கு ஒளியாக இருந்தாலும் அரை வருடம் தேவைப்படும்.

இது ஒரு நெபுலா என நாம் முன்னவே குறிப்பிட்டு இருந்தேன். இது இளம் சூரியன்கள் ஒருவாகும் ஒரு “ஸ்டெல்லர் நர்சரி” நெபுலாவாக இருக்கிறது. இந்த நெபுலாவானது இருண்ட மூலக்கூறு மேகங்களால் (Dark Molecular Cloud) ஆனது.இதலான் இது ஒளியை உள் இழுத்துக்கொள்கிறது. ஆகவே மனித கண்களுக்கு வெறும் கறுப்பு நிறமாக காட்சியளிக்கிறது. ஒரு கருந்துளையை போல. இந்த மூலக்கூறு மேகங்கள் அனைத்தும் மிகவும் அடர்ந்த தூசி மற்றும் மூலக்கூறு வாயுக்கலால் ஆனது.

இருப்பினும் இந்த நெபுலாவானது. சாதாரண கண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இன்ஃப்ராரெட் கருவி கொண்ட கேமராவினால் பார்க்கும் போது இதனுள் உள்ள நட்சத்திரங்களை நாம் பார்க்கலாம்

நன்றி: https://space-stuffin.blogspot.in/2017/10/dark-molecular-cloud-barnard.html

Image Copyright: FORS Team, 8.2-meter VLT Antu,ESO

செவ்வாயில் உலகலாவிய அரோரா!


செவ்வாயில் உலகலாவிய அரோரா
செவ்வாயில் நீல புள்ளிகள் புறஊதா கதிர்வீச்சின் தாக்கத்தை காட்டும் படம்

சிவப்பு கிரகம் என பெயர் பெற்ற செவ்வாயில் நீலநிற புள்ளிகள். இதுவரை செவ்வாயில் இல்லாத அளவுக்கு ஒரு அதிகப்படியான சூரிய புயலானது கடந்த மாதம் செவ்வாயின் மேற்பரப்புகளில் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட புறஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினை தான் நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்த்தீர்கள். இந்த படத்தில் இடது புறத்தில் இருப்பதை விட வலது புறத்தில் நீங்கள் பார்க்கும் படத்தில். செவ்வாயின் இரவு நேரப்பகுதிகளில். அதிகப்படியான நீல நிற புள்ளிகளை கானலாம். இது அந்த கிரகத்தில் ஏற்பட்ட புறஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினை காட்டுகிறது . இந்த இரண்டு புகைப்படங்களும், நாசாவின் மாவின் (Maven Space Craft) விண்வெளி ஓடம் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது. புவியைப்போன்று செவ்வாயில் காந்த புலங்கள் இல்லாத காரணத்தால், செவ்வாயில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக அறிவியலாலர்கள் கருதுகின்றார்கள். மேலும் இது செவ்வாயின் இரவு பகுதியாக அதாவது சூரிய ஒளியில் இல்லாத இடங்களில் முழுவதுமாக பரவி இருப்பதால், இதனை உலகலாவிய அரோரா என கணிக்கப்பட்டுள்ளது.

மாவின் விண்கலத்தின் மூலமாக பதியப்பட்ட இந்த தரவுகள். இதற்கு முன் நாசாவின் கியூரியாசிடி ரோவர் மூலமாக பதியப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிக அதிகம். மேலும் மாவின் விண்கலமானது, செவ்வாயின் வளிமண்டலம் பற்றிய ஆராய்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது செவ்வாயில் உலகலாவிய காந்த மண்டலம் இழப்பின் காரணமாகத்தால் வளிமண்டலம் இல்லாமல் உள்ளதா என ஆராய்சி செய்து வருகிறது.Image Copyright: MAVEN, LASP, University of Colorado, NASA

October 12, 2017

ISRO Recruitment Last Date 23-10-2017

ISRO recruitment 2017: Notification released, see how many government jobs vacancies announced, apply at vssc.gov.in

ISRO recruitment 2017: Vikram Sarabhai Space Centre (VSSC), Thiruvananthapuram, one of the major space research centres of the Indian Space Research Organisation (ISRO), has announced 34 vacancies under various departments at vssc.gov.in. The last date to apply for ISRO jobs is 23-10-2017 till 5:00 pm.

News Credits : financial express

October 10, 2017

Pluto's Bladed Terrains | புளூட்டோவின் கூறிய நிலப்பரப்பு

நியூ ஹரைசோனிலிருந்து எடுக்கப்பட்ட  புளூட்டோவின் படம்

நியூ ஹரைசோன் எனும் விண்கலமானது, புளூட்டோவை ஆராச்சி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அதாவது ஜனவரி 19 தேதி 2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆண்டின் இறுதியிலேயே புளூட்டோவானது கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்தது. இவை அனைத்தும் நாம் கேள்விப்பட்ட செய்திகள்தான். இதை பற்றி நாம் பிறகு விரிவாக பார்ப்போம்.

அதன் பிறகு நாசாவானது “நியூ ஹரைசோனின்” பணிகளை மாற்றியது. அதாவது இந்த விண்கலமானது புளூட்டோவையும், அதன் ஒரு துனைக்கிரகமான சாரன் எனும் சிறிய கிரகத்தினையும் மற்றும் “கைப்பர் பெல்ட்” என்று சொல்லக்கூடிய  ஆஸ்டிராய்டு குப்பை பகுதிகளையும் ஆராய்சி செய்யும் என மாற்றப்பட்டது. அதே போல் இந்த விண்கலமானது ஜூன் 2015 ஆம் ஆண்டு வாக்கில் கைப்பர் பெல்ட் மற்றும் புளூட்டோவை அடைந்தது. அதன் பிறகு எடுத்த படத்தினைத்தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள். ஆம் இது ஜூலை மாதம் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த அளவு தெளிவாக உள்ள படத்தினை நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. புளூட்டோவின்  மிகவும் வித்தியாசமான இந்த நிலப்பரப்பானது கூரிய பகுதிகளை கொண்டுள்ளதாகவும். அங்கு மீத்தேனால் பனிக்கட்டிகள் நிரப்பப்பட்டுள்ளன என்றும் ஆராய்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் சில ஆய்வு முடிவுகள் கூறுவதாவன, புளூடோவின் வித்தியாசமான சுற்றுவட்ட பாதையினால். அந்த கிரகம் சில காலகட்டத்தில் வெப்பப்படுத்தப்படுகிறது. அந்த கால கட்டங்களில். புளோட்டோவில் இருக்கும் உறைந்த மீத்தேனானது திரவ நிலையை அடையாமலேயே வாயு நிலையை அடைகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூர்மையான நிலப்பரப்புகள் அனைத்தும் புளூட்டோவின் உறைந்த மீத்தேன் ஆகும்.

கூர்மையான நிலப்பரப்புகள் அனைத்தும் மிக பெரிய மலைகளையும். மலைச்சிகரங்களையும் குறிக்கும்

கொஞ்சம் யோசித்து பாருங்கள் பெரிய பெரிய மலைச்சிகரங்கள் அனைத்தும் உறைந்த மீத்தேன் என்றால். இண்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தில் வருவது போல

October 05, 2017

95 Minutes Over Jupiter | வியாழனின் மேற்பரப்பில் 95 நிமிடங்கள்!

வியாழனின் தென் மற்றும் வட துருவங்கள் பெரிஜாவ்
நீங்கள் பார்க்கும் வண்ணமயமான வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வியாழன் கிரகத்தின் படங்கள்தான்.இவை அனைத்தும்  ஜூனோ விண்கலத்தின்  ஜூனோகேம் (Junocam)எனும் பிரத்தியேகமான புகைப்பட கருவியின்மூலமாக எடுக்கப்பட்ட புகைபடங்கள். இந்த வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வெறும் 95 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். அதாவது கிட்டதட்ட ஒரு மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவை ஆகும்.

Offer on Headsets
ஒவ்வொரு 53 நாட்களுக்கு ஒருமுறை ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தினை மிகவும் குறைவான தொலைவில் கடந்து செல்லும். கடந்து செல்வது மட்டுமல்லாது வட மற்றும் தென் துருவங்களை ஒரு முறை சுழலும் போது தெளிவான, மற்றும் நெருக்கமான படங்கள் எடுக்க முடியும்.இந்த நிகழ்வின் பெயரானது பெரிஜாவ் எனப்படுகிறது.
பெரிஜாவ் (Perijove) எனும் இந்த நிகழ்வானது செப்டம்பர் 1 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு  நிகழ்ந்தது. அதாவது போன மாதம் முதல் தேதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகும்
நீங்கள் பார்க்கும் படத்தில் இடமிருந்து முதல் 8 படங்கள் வியாழனின் தென் துருவத்தினையும் . கடைசியில் (வலது புறத்தில் முதல்) உள்ள படம் வியாழனின் வட துருவத்தையும் பார்க்க முடியும்
ஜூனோவானது நாசா மற்றும் ஜ.பி.எல் இன் கூட்டு முயற்சியாகும். இது கடந்த வருடம் ஜூலை 5 ஆம் தேதியன்று வியாழனின் சுற்றுவட்ட பாதையில் பயனிக்க ஆரம்பித்தது. வியாழன் கிரகம் பற்றிய பல அறிய தகவல்களை இது தந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலவிவரங்களை அறிய நீங்கள் ஸ்பேஸ் நீயூஸ் தமிழ் டாட் காம் எனும் இனையதளத்தினை பாருங்கள். நன்றி

Image Copyright: NASA, ESA, Caltech JPL