October 26, 2018

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் ஹப்புள் தொலைநோக்கி | Hubble Return to Normal Science Operations

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி , தன்னிலை பாதுகாப்பு கருவி அதாவது (கைரோ ஸ்கோப் ) செயல் இழந்ததன் காரணமாக ஹப்புள் தொலைநோக்கியானது பாதுகாப்பான முறைக்கு தள்ளப்பட்டது. அதாவது இதனை (Safe Mode) என்று கூறுவர். இந்த செய்தியானது பூமியில் உள்ள ஹப்புள் தொலைநோக்கியின் கட்டுபாட்டு அறைக்கு வந்த பிறகு இதனை சரி செய்யும் முயற்சியில் அதன் பொறியாளர்கள் உள்ளனர்.

ஹப்புள் தொலைநோக்கியானது 100 % திறம்பட செயல்பட அதற்கு 3 கைரோ ஸ்கோப் தேவைப்படும். (Gyroscope). ஏற்கனவெ இது போன்ற பிரச்சனை ஏற்பட்ட போது. அதன் மூன்று கைரோஸ்கோப்கள் . 2009 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் மூலம். மாற்றப்பட்டது. அதாவது இப்போது ஹப்புள் தொலைநோக்கியில் பழுதான 3 கைரோஸ்கோப் மற்றும் 2009 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களால் பொருத்தப்பட்ட 3 கைரோஸ்கோப் என 6 கைரோஸ்கோப் உள்ளது.

நாசாவின் உள்ள ஹுப்புள் விண்ஞ்சானிகள் கூறும் போது . இப்போது இருக்கும் 3 கைரோஸ்கோப்களில் 1 தான் செயல் இழந்துள்ளது , மற்ற இரண்டு நன்றாக தான் உள்ளது . அதனால் நாங்கள். இருக்கும் இரண்டில் ஒன்றினை ஹப்புளின் தன்னிலை பாதுகாப்பு அமைப்பாக. அதாவது ஒன்றை Primary ஆகவும் மற்றொன்றை பாதுகாப்புக்காகவும் . Backup . வைக்க இருப்பதாக கூறினர். இதனை. கடந்த வாரம் அதாவது அக்டோபர் 19 ஆம் நாள் மாற்றி கான்ஃபிகுரேசன் Configuration செய்து முடித்தனர். அதன் பிறகு ஒரு வாரத்திற்கு எந்த வித அறிவியல் செயல்பாடுகளும் இருக்காது. எதற்காக என்றால். இதனை Calibration செய்ய போவதாக கூறினர். அதாவது 1 கைரோஸ்கோபில் நன்றாக வேலை செய்கிறதா என பார்ப்பதற்காக.

 

தற்போது வந்த தகவலின் அடிப்படையில் . முக்கால்வாசி பறிசோதனைகள் முடிந்து விட்டதாகவும். இன்னும் சில தினங்களில் ஹுப்புள் தொலைநோக்கியானது . தனது அறிவியல் வேலைகளை பழையபடி செய்ய ஆரம்பிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

PodCast:

 

 

–>Source 

October 21, 2018

Chandra x ra Teleacope in Safe mode | செயல்படாத தன்மையில் உள்ள சந்திரா எக்ஸ் ரே தொலைநோக்கி

1999 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரா எக்ஸ் ரே தொலைநோக்கி நமது அண்டவெளியில் உள்ள பொருட்களை எக்ஸ் ரே மூலம் புரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது… அப்படிப்பட்ட சிறப்பான தொலைநோக்கி
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி safe mode  என்ற ஆபத்துகாள  பாதுகாப்பு முறை க்கு சென்றது. அதாவது செயல்படாத தன்மைக்கு சென்றுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த முறையில் தால் இன்னமும் உள்ளது. இது கூடிய விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என  நாசா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக பழுதடைந்த நிலைநிறுத்தி கூறப்படுகிறது. அதாவது Gyroscope . தொலைநோக்கி எந்த பக்கம் திரும்பினாலும் சரியாக தான் நிலையை சரி செய்து கொள்ளும் திறனை  Orientation maintained என்று கூறப்படும். இதனை செய்யும் வேலை. கைரோஸ்காப் என்ற கருவி செய்யும் அதில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொலைநோக்கி யில் உள்ள தற்காப்பு அமைப்பானது . ஒட்டுமொத்த தொலைநோக்கியை பாதுகாப்பான safe mode இல் அமைத்து உள்ளது.

இன்னும் 1 வார காலத்தில் இது சரி செய்யப்படும் என நாசா
அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Source

Download Our App

More Posts to Read on:-



October 17, 2018

Space X commercial test crew will be launch 2019 early| சந்திரனுக்கு டூரிஸ்ட் களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ்

கூடிய விரைவில் ஸ்பேஸ் எக்ஸ் ஆனது டூரிஸ்ட் களை சந்திரனின் வட்டபாதைக்கு அனுப்ப உள்ளது. செல்பவர் கூட யார் என அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு செல்வதற்கு முன். ஸ்பேஸ் எக்ஸ் உடைய குழு ஒன்று இதனை சோதனை முயற்சியில் செய்ய உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அந்த சோதனை குழு புறப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

திடீரென இந்த சோதனை குழு செல்வது 2019 ஆரம்பம் . அதாவது ஜனவரி முதல் மார்ச் வரை. எந்த நாளாகவும் இருக்கலாம். என மாற்றப்பட்டுள்ளது. பேப்பர் ஒர்க் காரணமாக இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக. ஸ்பேஸ் எக்ஸ் உடைய அதிகாரி Koenigsmann என்பவர். கூறியுள்ளார்.

Source

Download Our App

More Posts to Read on:-



October 09, 2018

Interstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2

வாயேஜர் 2 , 1977 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த வின்களமானது தற்போது உடுக்களிடை(Interstellar Space)  விண்வெளியில் பயணிக்க இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் வாயிஜர் 1 . விண்கலத்தில் காணப்பட்ட அதே விண்வெளி கதிரியக்க அளவீடுகள் இப்போது வாயெஜர் 2எல் தென் பட ஆரம்பித்துள்ளது.
எனவே தான் இதனை interstellar விண்வெளியில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது. என வானவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இதுவரை நமது சூரிய குடும்பத்தினை தாண்டி பல விண்கலங்கள் சென்றுள்ளன. உதாரணமாக பயணியர்11 வரிசையில் உள்ள விண்கலங்கள். மற்றும் இப்போது நியூ ஹராய்சோன்  நமது சூரிய குடும்பத்தினை தாண்டி செல்ல இருக்கிறது. ஆனாலும் வாயிஜெர் விண்கலங்களை இன்னமும் நம்மால் தொடர்பு கொள்ள முடியும். அது தான் இதன் சிறப்பு அம்சம்.

Voyager team members note that the increase in cosmic rays is not a definitive sign that the probe is about to cross the heliopause. Voyager 2 is in a different location in the heliosheath — the outer region of the heliosphere — than Voyager 1 had been, and possible differences in these locations means Voyager 2 may experience a different exit timeline than Voyager 1.

October 07, 2018

முடிவுக்கு வரும் டான் விண்கலம் | Dusk for Dawn - Space Craft to CERES

“DAWN” அதிகாலைப்பொழுது எனப்பொருள் படும் இந்த விண்கலமானது நமது புவியின் அருகில் இருக்கும் ஒரு சிறிய கிரகத்தினை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. அதன் பெயர் தான் “சிரிஸ்” அது மட்டும் இல்லாமல் இதன் முதல் இலக்கு “வாஸ்டோ” என்ற ஒரு சிறிய ஆஸ்டிராய்டுதான். அதாவது இரண்டு இலக்குகளை ஆராய இது அனுப்பப்பட்டது.

 

ஆரம்பம்:

இதன் ஆரம்ப லாஞ்ச் : செப்டம்பர் 27 , 2007
இலக்குகள் : வாஸ்டோ, சிரிஸ்
நோக்கம் : சூரிய குடும்பம் எப்படி உருவானது என ஆராய

பிரயான வரலாறு:

2007 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இது, 2011 ஆம் ஆண்டு வாஸ்டோ என்ற சிறிய கிரகத்தினை (இதனை Prototype planet என்றும் கூறுவர்) அதாவது “மெயின் ஆஸ்டிராய்டு பெல்ட்” பகுதியில் இவை இரண்டும் தான் சிரிஸ் உம் வாஸ்டோவும் தான் மிகவும் எடை அதிகமான பெரிய பொருள்கள்.) ஆராய்ச்சி செய்தது. பிறகு 14 மாத ஆராய்ச்சிக்கு பின் இது 2012 ஆம் ஆண்டு அதன் அடுத்த இலக்கான சிரிஸ் ஐ நோக்கி திரும்பியது. சுமார் 2 1/2 வருடங்கள் கழித்து அதன் மற்றொரு இலக்கான சிரிஸ் ஐ இது 2015 ல் எட்டியது அதிலிருந்து இது வரை “சிரிஸ்” சிறிய கிரகத்தினைதான் இது ஆராய்ச்சி செய்து வருகிறது.

பிரகாசமான பகுதிகள்:

சிரிஸ் கிரகத்தில் இருக்கும் பிரகாச மான பகுதிகள் என்ன என்ற ஆராய்ச்சியில் டான் விண்கலம் ஈடுபட்டது, இதுவரை டான் விண்கலத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட பிரகாசமான புள்ளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பகுதிப்பொருட்கள் தான் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. “சோடியக் கார்போனேட் ” என்ற உப்பு பொருளை கண்டறிந்தனர். இந்த சோடியம் கார்போனெட் சூரிய குடும்பத்தில் சாதாரணமாக பார்த்துவிட முடியாது, நமது சூரிய குடும்பத்திலேயே 3 கிரகங்களில் தான் இந்த சோடியக் கார்போனெட் கிடைக்கிறது. அது சனி கிரகத்தின் ஒரு துனைக்கிரகமான “என்ஸிலேடஸ்” மற்றும் பூமியில் உள்ள ஒரு சில ஏரிகளில் இந்த கலவை (சோடியம் கார்பொனெட்) கிடைக்கிறது. எனவேதான் சிரிஸ் சிறிய கிரகமானது ஒரு உருவாகிக்கொண்டிருக்கும் கிரகம் என பல ஆராச்சியாளர்களால். நம்பப்படுகிறது.

முடிவு:

ஆரம்பத்தில் 8 வருடங்கள் இருக்கும் என டான் விண்கலத்தினை கணித்து இருந்தனர். ஆனால் அதன் ஐஒன் எஞ்சினின் சிறப்பான செயல் திறனின் காரனமாக 3 வருடங்கள் கூடுதலாக பனியாற்றியது இந்த டான் விண்கலம் மொத்தம் 11 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த விண்கலம் சிரிஸ் கிரகத்தினை வட்டமடித்து வருகிறது. இப்போது அதன் எரிபொருள் தீரும் தருவாயில் உள்ளது. ஒரு வேளை இது தீர்ந்து விட்டால் பிறகு டான் விண்கலத்தால் பூமியினை தொடர்பு கொள்ள முடியாமல் போகும்.
 

–>Source2
–>Source3
–>Multimedia of Both

Download Our App

More Posts to Read on:-



October 05, 2018

பத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu

பத்திரமாக தரையிரங்கியது “மாஸ்கோட்” லேண்டர்.  ஜப்பானிய விண்கலமான ஹயபுஸா 2 ஆனது . பூமியின் அருகில் இருக்கும் “ருயுகு” என்ற ஆஸ்டிராய்டை நோக்கி அதிலிருந்து மண்மாதிரிகளை எடுத்துவர சென்றது. அந்த விண்கலத்தில் 2 ரோவர்களும் 1 லேண்டரும் கூட இருந்தது.

அதன் இரண்டு ரோவர்களை  ஒரு வார்த்திற்கு முன்பு வெற்றிகரமாக “ருயுகு” ஆஸ்டிராய்டில் தரையிறக்கியது. அந்த விண்கலம். இப்போது, ஜென்மனியின் ஒரு லேண்டரான ” மாஸ்கோட்” லேண்டரையும் . வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது 

lander

51 மீட்டர் தொலைவில் இருந்து இந்த லேண்டர் அந்த ஆஸ்டிராய்டின் மீது இறக்கிவிடப்பட்டுள்ளது மாஸ்கோட் என்றால்  Mobile Asteroid Surface Scout என்று அர்த்தம் இதன் முக்கிய பனியாக அந்த ஆஸ்டிராய்டில் உள்ள  தரைப்பகுதிகளின் ஆராய்சி மற்றும் அதன் படங்கள் . தாது பொருட்களின் கலவை. கனிம வளங்கள் போன்றவை ஆராயப்படும் என “மாஸ்கோட்” லேண்டரின் கண்கானிப்பு தலைவர் Tra-Mi Ho  கூறியுள்ளார். 

—>Source

Check My App

Read More Posts