June 14, 2019

சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் நாள் !! அறிவிக்கப்பட்டது| என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்கிறது??

உலகமே எதிர்பார்த்து இருந்த சந்திராயன் 2 விண்கலம் வின்னில் ஏவும் நிகழ்வானது வருகின்ற ஜூலை மாதம் 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு என்று குறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்புக்கு உட்பட்ட இந்த விண்வெளி பயனமானது மூன்று விதமான கருவிகளை நிலவிற்கு கொண்டு செல்கிறது.

ஆர்பிட்டர் , லேண்டர் மற்றும் ரோவர் – மொத்தமாக இந்த சந்திராயன் 2ன் எடையானது 3.8 டன் எடை உள்ளதாகும்

இதில் ரோவர் வெறும் 27 கிலோ தான். லேண்டரானது 1.4டன் எடையுடையது, இதை இரண்டையும் சுமந்து செல்லும் ஆர்பிட்டரானது 2.4டன் எடையுடையது , ஆக மொத்தம் 3.8 டன் எடை கொண்டது இந்த சந்திரயான் 2 விண்கலம்

லேண்டரின் பெயர் – விக்ரம் என்றும் ரோவரின் பெயர் பிரக்யான் என்றும் வைத்துள்ளனர். அது மட்டுமில்லாமல் ,, இந்த விண்கலமானது அங்கு பல பறிசோதனைகளை செய்ய இருக்கிறது.

Payloads of the Mission:

இப்போது என்னென்ன பொருட்களை கொண்டு செல்கிறது என பார்ப்போம்

In Orbiter ஆர்பிட்டரில் இருக்கும் உபகரணங்கள்

  • Terrain Mapping Camera 2 (TMC 2)
  • Chandrayaan 2 Large Area Soft X-ray Spectrometer (CLASS)
  • Solar X-ray Monitor (XSM)
  • Orbiter High Resolution Camera(OHRC)
  • Imaging IR Spectrometer (IIRS)
  • Dual Frequency Synthetic Aperture Radar (SAR)
  • Chandrayaan 2 Atmospheric Compositional Explorer 2

In Vikram Lander விக்ரம் லேண்டரின் உள்ள கருவிகள்

  • Radio Anatomy of Moon Bound Hypersensitive ionosphere and Atmosphere (RAMBHA)
  • Chandra’s Surface Thermo-physical Experiment
  • Instument for Lunar Seismic Activity

In Pragyaan Rover பிரக்யான் என்ற ரோவரில் உள்ள உபகரணம்

  • Alpha Particle X-ray Spectrometer
  • Laser Induced Breakdown Spectroscope

சும்மா ஒப்புக்கு சப்பா

நாசா தந்த ரெட்ரோ ரெஃப்லெக்டர் (LRA) Laser Retroreflector Array

June 12, 2019

Gaganyaan Astronaut Selection will finish in 2 Months | 2 மாதத்தில் விண்வெளி வீரர் தேர்வு முடியும்

ஜூன் 8ஆம் தேதி national advisory council (NAC), யில் நடந்த மாநாட்டில். காகன்யான் மிஷனின் முக்கியமான அமைப்புகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர், அதில் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் k சிவன்.

IAF(Indian Air Force) அமைப்பானது விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியினை இன்னும் 1 அல்லது 2 மாதத்திற்குள் முடித்துவிடும் .

அதுமட்டும் இன்றி IAF மூலம் மொத்தம் 10 வீரர்கள் தேர்ந்தெடுக்க படுவார்கள். அவர்களில் இருந்து இஸ்ரோ மூன்று பேரை மட்டும் தெரிவு செய்து. காகண்யான் , இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத்தில் பங்கு பெற வைப்பார்கள் என்று கூறியுள்ளது.

CE-20 என்ற புது வகை எஞ்சினும் தயாராக உள்ளது. இந்த வகை என்ஜின் பிரத்தியேகமாக GSLV mk 3 ல் upper stage ல்பயன்படுவது,

மேலும் DRDO அமைப்பானது விண்வெளி வீரர்களின் உயிர் காக்கும் அமைப்பை மேம்படுத்தும் பணியினை செய்கிறது (life support system or capsule)

மேலும் இந்திய விண்வெளி வீரர்கள் திரும்பும் நிகழ்வின் போது. ராக்கெட்டில் பாதுகாப்பு பெட்டகம் (crew capsule) கடலில் விழும் தருணத்தில். அவர்களை மீட்டு எடுக்க , இந்திய கப்பற்படை தயாராக உள்ளது என மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பு அமைப்புகளின் அதிகாரிகள் தெரிித்துள்ளனர்.

உலகமே எதிர்பார்க்கும் இந்த நிகழ்வை நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நீங்கள் எப்படி.