July 27, 2019

Chandrayaan 2 takes NASA's retro reflected Mirror | சந்திரயான் 2 கொண்டு சென்ற நாசாவின் கருவி இதுதான் Retro Reflector

அப்போலோ மிஷன் 1969இல் அறிஞர்கள் சிலர் சந்திரனில் ஒரு விதமான கருவியை பொருத்தி அதனை ஆராயும் நிலை இருந்தது. இதன் பெயர் lunar laser ranging experiment. இந்த ஆராய்ச்சியின் மூலம் சந்திரன் பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று நம்மால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இது போன்ற கருவிகளை நாம் நினைவில் வைத்து ஐம்பது வருடங்களுக்கு பிறகு திரும்பவும் இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் மூலமாக நாசா மேற்கண்ட புகைப்படத்தில் இருக்கும் retro reflected Mirror கருவியை மீண்டும் சந்திரனில் வைக்க முற்பட்டிருக்கிறார்கள்.

இந்த முறை சந்திரனின் தென் துருவப் பகுதியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன்-2 வெற்றியை பொறுத்து tதான் இந்த கருவியின் செயல்பாடுகளும் அதன் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளும் நமக்கு கிடைக்கப் பெறும்.

July 22, 2019

Upcoming Interplanetary Missions of ISRO| அடுத்த 10 வருடங்களில் இஸ்ரோவின் திட்டம் என்ன?

isro tamil news details

இப்போது வரையில் நமக்கு தெரிந்தது எல்லாம், சந்திரயான் 2 மற்றும் ககன்யான் என்ற இரு மிகப்பெரிய இலக்குகள் தான் இஸ்ரோவுக்கு உள்ளது என்று.

இவை இரண்டு மட்டும் அல்லாமல் இஸ்ரோவின் விஞ்சானிகள் பல பனிகளில் பனியாற்றி வருகின்றனர்.

அதாவது அடுத்த 10 ஆண்டுகளின் இஸ்ரோவின் பனிகள் Missions குறிக்கப்பட்டு அவற்றில் பனியாற்றி வருகின்றனர். அவை என்னவென்று பார்ப்போம்.

2019-2020: Aditya L1 mission

ஆதித்யா எல் 1 என்ற இந்த மிஷனானது சூரியனை பற்றி அறிந்து கொள்வதற்காக, இஸ்ரோவால் திட்டமிடப்பட்ட ஒரு மிஷன் .

எப்போது ஏவப்படும்?

இது 2019-2020 வாக்கில் விண்ணில் ஏவப்படலாம் என கருதப்படுகிறது.

என்ன வேலை செய்யும் ஆதித்யா?

இதன் முக்கிய பனியாக சூரியனின் கொரொனா என சொல்லக்கூடிய அதன் மேற்பறப்பு, மற்றும் அதன் வளிமண்டலம் அதாவது Atmosphere of Sun பற்றி தெரிந்து கொள்வதற்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதித்யா விண்கலமானது PSLV ராக்கெட் மூலமாக ஏவப்படும் என்றும் கருதப்படுகிறது.

ஆதித்யா L1 அர்த்தம் என்ன?

முதன் முதலில் இது ஆதித்யா 1 நஎன் அபெயரிடப்படுகிறது . பிறகு இது விண்ணில் பூமியில் இருந்து 1.5மில்லியன் கி.மீட்டர் தொலைவில் “லெக்ராஞ்சியன் 1” என்ற புள்ளியில் நிலைநிறுத்த படும் என மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் “ஆதித்யா L1” என அழைக்கப்படுகிறது.

சூரியனின் கொரோனா பகுதியானது சூரியனை விட சூடான பகுதி என்று அறியப்படுகிறது. இதற்கான காரனம் நமக்கு இன்னும் தெரியாது. இதனை அறிந்து கொள்ளத்தான் “நாசா”வின் பார்க்க்ர் விண்கலம் சூரியனை மிக அருகாமையில் சென்று தகவல் சேகரித்து வருகிறது. விரைவில் இந்தியாவின் ஆதித்யா விண்கலமும் இதற்கான பனியில் ஈடுபடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை

2023-2024: Mangalyaan-2 (Mars Orbiter Mission-2)

mangalyaan onboard camera image of mars

மங்கல்யான் செவ்வாய் கிரகத்திற்கான ஒரு விண்கலம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்திதான்.

இதன் வரிசையில் இஸ்ரோ திட்ட மிட்ட அடுத்த கட்டம் தான் இந்த மங்கள்யான் 2 விண்கலம். இது 2024 ஆம் ஆண்டு அனுப்பப்படலாம் என செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2017 பட்ஜெட்டில் போதே இந்த மங்கள்யான்2 திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாம் Mangalyaan 1 விண்கல்த்தினை ஆர்பிட்டராக வடிவமைத்து இருந்தோம் . இதன் மூலம் நாம் செவ்வாயின் மேல் சுமார் 400 கிலோ மீட்டர் உயர்த்தில் பறந்து அதன் வடிவமைப்புகளையும் , தகவல்களையும் சேகரித்தோம். ஆனால் இந்த முறை அதாவது மங்கள்யான்2 விண்கலமானது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காற்று தடைகளை பயன்படுத்தி, செவ்வாயின் மேற்பகுதியில் மிகவும் குறைந்த உயரத்தில் , கிரகத்தினை சுற்றுவட்ட பாதையில் சுற்றிவர முடியும் என்றும் கூறியுல்ளனர்.

இதன் மூலம் பல அரிய தகவல்கள் நாம் பெற முடியும்.

Chandrayaan 3 or Robotics in MOON 2025

சந்திரயான் 2 பற்றி குறிப்பிடும் போது, அதன் தொடர்ச்சியாக சந்திரயான் 3 திட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார் இஸ்ரோவின் தலைவர் கே சிவன்., இந்த திட்டத்தில், நாம் நிலவில் இந்தியரை அனுப்பது பற்றியும். நிலவில் , இயந்திர கட்டமைப்புகளை பற்றியும், அவர் கூறியுள்ளார், இவை அனைத்தும் 2022 இல் ககன்யான் சரியாக முடிந்த பிறகு தான். என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி,

2024-2026: Shukrayaan mission to Venus


பூமியித்தாயின் சகோதரி கிரகமாக கருதப்படும் ஒரு கிரகம் தான் வெள்ளி கிரகம் இது நமது பூமியோடு பல விஷயங்களில் ஒத்துப்போகிறது, வடிவம், வளிமண்டல பொருட்கள், ஈர்ப்பு விசை, மற்றும், பல, இதனால் தான் இது இஸ்ரோவுக்கு அடுத்த இலக்காக மாறியுள்ளது.

அப்படி 2026 வாக்கில் இஸ்ரோ வெள்ளி கிரகத்தினை பற்றிய செய்திகளையும் பல புதிர்கலையும் வெளிஉலகிற்கு கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இந்த சுக்ரயான் மிஷனானது , ஆர்பிட்டர் கொண்டு செயல்படும், ஆர்பிட்டரில் இருந்து ஒரு வெள்ளி கிரகம் நோக்கி, தரைப்பகுதியில் ஒரு Probe அனுப்பபடும், பிறகு அந்த தரைப்பகுதியில் உள்ளProble மூலம், கிடைக்கும் செய்திகளை நமக்கு அந்த ஆர்பிட்டர் அனுப்பும். இது போல் தான்.

சுக்ரயான் விண்கலம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான AO இஸ்ரோ ஏற்கனவே கொடுத்துள்ளது. ISRO AO about Sukrayaan

EXPO Sat 2020



AstroSAT இன் தொடர்ச்சியாக இந்த எக்ஸ்போசாட் இருக்கும் என கருதப்படுகிறது. ஆஸ்ர்ரோ சாட், ஒரு பல அலைவரிசை கொண்ட இந்தியாவின் அல்லது இஸ்ரோவின் விண்வெளி எக்ஸ் ரே தொலைநோக்கி , இதன் பனிகள் பல உள்ளன அதில் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எக்ஸ்ரே கதிர்களை வெளியிடும் பொருட்களை ஆராய்ச்சி செய்வது இதன் பிரதியேக பனி,

மேலும் இந்த அடுத்த படைப்பான எக்ஸ்போ சாட் குறிப்பிட்ட ஒரு சில பிரபஞ்ச பொருட்களை ஆராயும் என குறிப்பிட்டுள்ளனர். அதில் நியூற்றான் நட்சத்திரம், சூப்பர் நோவா ரெம்னன்ட், SuperNova Remnent, கருந்துளையின் ஒரு சில பகுதிகள், மற்றும் பல,

neutron stars, supernova remnants, pulsars and around black holes

பிரப்ஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சுகளை பற்றி நமக்கு அதிக அளவு ரகசியங்களும் புதிர்களும் எப்படி என தெரியவரும் இதுவரை தெரிந்த்ததை விட அதிக அளவு நமக்கு தெரியவரும். இதனால் , வரும் காலத்தில் நாம், நமது செயற்கைகோள்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கலாம். ஏன் ஒரு வேளை மனிதர்கள் வின்ணில் கால் பதிக்கும் போது , மனிதர்களையும் கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றும். அறிவை நாம் பெற முடியும்.

Ref DNA India

2023: India’s Space Station



இந்தியாவிற்கு என தனியான பிரதியேகமான ஒரு விண்வெளி மையம், இதனை இஸ்ரோ 2023 என்று கூறியிருந்தாலும் இதன் பனிகள் . 2028 ல் தான் முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ககன்யான் என்பது ஒரு ஆரம்பம் என்றால் இந்திய விண்வெளி மையம் தான் இதன் முடிவாக இருக்கும்-. கே சிவன்

திட்ட மிடப்பட்ட விண்வெளி மையம் சுமார் 15-20 டன் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 3 பேர் அடங்கிய குழு சுமார் 20 நாட்கள் வரை தங்கி ஆராய்சி பனிகளை மேற்கொள்ளும் அளவுக்கு உருவாகப்படுன் என்றும் இஸ்ரோ தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

நாம் இதனை முழுமையாக கட்டி முடிக்க சில ஆண்டுகள் தேவைப்படும் , அதிலும் பல தொழில்நுட்பங்கள் இன்னும் நாம் பழக வேண்டும். அதில் முக்கியமாக Docking தொழில்நுட்பம்.

Ref : . BS ; First Post

இதனை பற்றிய மேலும் பல செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், இப்போதே Space News Tamil க்கு சப்ஸ்கிரைபு செய்து கொள்ளுங்கள். நன்றி

நான் தான்

What are ISRO’s upcoming Missions?

  1. 2019-2020: Aditya L1 mission

    ISRO is Try to Understand the Mysteries of SUN . by Placing a Spacecraft at ” Lagrangian L!” Point, thats why this mission is called “Aditya L1”

  2. 2023-2024: மங்கள்யான்-2 (Mars Orbiter Mission-2)

    இதன் வரிசையில் இஸ்ரோ திட்ட மிட்ட அடுத்த கட்டம் தான் இந்த மங்கள்யான் 2 விண்கலம். இது 2024 ஆம் ஆண்டு அனுப்பப்படலாம் என செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

  3. Chandrayaan 3 or Robotics in MOON 2025

    Chandrayaan 3 is also a Proposed Plan . But the “Indians to Moon” will only be Executed after the successful of GAGANYAAN, First Human Space program of India

  4. 2024-2026: Shukrayaan mission to Venus

    Shukrayaan-1  or Venus craft) is a proposed orbiter to Venus by the Indian Space Research Organisation (ISRO) to study the surface and atmosphere of Venus.

  5. EXPO Sat 2020

    AstroSat-2 is India’s second dedicated multi-wavelength space telescope, proposed by ISRO as the successor of the current Astrosat-1 observatory, which has a five-year operation time ending in 2020.

  6. 2023: India’s Space Station

    Upcoming, India’s Human Space Program Mission,

July 21, 2019

நாளை மதியம் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 2 விண்கலம் | ஜி எஸ் எல் வி ML III ராக்கெட் | #Chandrayaan2's LAUNCH RESCHEDULED ON 22ND JULY, 2019, AT 14:43 HRS #ISRO #GSLVMkIII

ஜூலை 15 ஆம் தேதி நடு இரவு பகுதி , கிட்ட தட்ட 130 கோடி மக்களில் ஒரு 20 கோடி மக்களாவது இது பற்றிய தெளிவான அறிவு கொண்டு. எப்படியாவது இந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சந்திரயான்2 வின்ணில் பாயும் நிகழ்வை நேரடியாகவோ அல்லது இனையத்திலோ பார்த்து விட வேண்டும் என்று ஆர்வத்துடன் காந்திருந்தனர்.

இரவு 2.51 மனிக்கு 1 மனிநேரம் முன்பு தான் . ராக்கெடில் சிறிய பிரச்சனை கண்டறியப்பட்டது. உடனே இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு , தள்ளி வைக்கப்பட்டது. இது பற்றிய செய்திகளை இஸ்ரோ தனது Twitter பக்கத்தில் உடனடியாக பதிவுசெய்தது.

பிறகு எப்போது திரும்பவும் இந்த விண்கலம் அதாவது GSLV MkIII ராக்கெட் சந்திரயான் விண்கலத்தினை சுமந்து வின்ணில் பாயும் என்று அனைவரும் காத்து இருந்தனர். அந்த நாள் தான் நாளை (22 ஜூலை 2019)

அதுவும் மதியம் 2.43 மணியளவில் இந்த லாஞ்ச் வைத்து இருக்கிறார்கள். ஒட்டு மொத்த இந்தியாவும் விழித்து இருக்கும் அந்த நேரத்தில். அனைவரின் கவனமும் இஸ்ரோவின் இந்த சந்திரயான் 2 விண்கலத்திலும், GSLVMkIII ராக்கெட்டிலும் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,

நாளை மதியம் ராக்கெட் விண்ணில் ஏவ இன்று அதாவது 21 ஜூலை 2019 மாலை 6 மணியளவில் கவுண்டவுண் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான டிவிட்டர் பதிவைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்

July 15, 2019

#Chandrayaan-2 Launch Has Been Called off | #சந்திரயான்-2 விண்ணில் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது | #Chandrayaan-2 Latest News

உலகமே ஆவல் கொண்டு எதிர்பார்த்த #சந்திரயான்-2 விண்வெளிக்கு ஏவும் அந்த ராக்கெட் லாஞ்ச்,

ஆனால் ராக்கெட்டில் எஞ்சின் பகுதியில் ஏற்ப்பட்ட கோளாரு காரணமாக , இந்த லாஞ்ச் இன்று நிறுத்தப்பட்டது.

அதுவும் நல்லது தான். பிரச்சனை கொண்ட ராக்கெட் சென்று மொத்தமாக , சந்திரயான் விண்கல பொருட்கள் அனைத்தும் Fail ஆவதை விட , அதனை தள்ளி வைப்பதே மேல், என்று நான் நினைக்கிறேன்,

T-56 நிமிடங்களில் இந்த பிரச்சனை கண்டறியப்பட்டது. அதாவது 1 மணி நேரம் முன்பு, இஸ்ரோவின் தொழில்நுட்ப நபர்களுக்கு , நன்றிகள். அடுத்த லான்ச் வரை நாம் காத்திருப்போம்,

July 03, 2019

சந்திரயான் 2 விண்வெளியில் செல்லும் நிகழ்வை பார்க்க வேண்டுமா???| Live witnessing the #Chandrayaan-2 Launch |

ராக்கெட் விண்ணில் சீரிப்பாய்வதை பார்க்க பலருக்கும் ஆசை இருக்கும் , அதை தொலைக்காட்சியில் பார்ப்பதை விட , நேரில் பார்க்க்கும் போது. அது பற்றிய ஆசையும், ஆர்வமும் இன்னும் அதிகரிக்கும். இது போன்ற வாய்ப்பு உங்களுக்கு வந்தால் நீங்கள் கண்டிப்பாக. ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரடியாக சென்று பாருங்கள்.

இதற்காக நீங்கள் செல்லவேண்டிய இடம்,, சூலூர் பேட்டை, ஒரு வேளை நீங்கள் சென்னை பகுதியில் வாழ்ந்தால், அதுவும் தனியாக தான் நீங்கள் ” புலிகட் ஏரியில் நின்று ” பார்க்கவேண்டும்.. ஆனால்

தற்போது இஸ்ரோ தனியாக , பிரத்தியேகமாக பொது மக்கள் பார்க்க ஒரு புதிய வசதியை செய்துள்ளது. அது தான்

Launch Viewing Galary

பொது மக்கள் பார்வைக்காக

சந்திரயான் 2 விண்கலத்தினை கொண்டு செல்லும் GSLV Mk3 / M1 வகை ராக்கெட் வரும் ஜூலை 15 ஆம் தேதி அதிகால 2:51 மணியளவில் வின்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்காக முன்பதிவுகள் நாளை அதாவது ஜுலை 4 ஆம் தேதி 00:00 மனிக்கு ஆரம்பிக்க உள்ளது. பொதுவாக பதிவு செய்யும் இனையதளமாக கீழ்கானும் இனையதளம் தான் இருக்கும்

https://www.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp

https://www.isro.gov.in/update/28-mar-2019/launch-view-gallery

டுவிட்டர் பதிவு