October 30, 2019

விண்வெளியில் பேய் முகம் | பின்னனி என்ன? | Halloween Photo in Space Nasa Hubble images

நீங்கள் எல்லாரும் ஒரு விதமான விகாரமாக, பயமுறுத்தக்கூடிய ஒரு முகம் போன்ற அமைப்பை நாசாவின் ஹப்புள் விண்வெளி தொலைநோக்கி எடுத்து இருப்பதாக சொல்லி ஒரு புகைப்படத்தினை பார்த்து இருக்கலாம்.

இந்த புகைப்படம் தான் அது.

உண்மையில் நாசா இது போன்ற எந்த உருவத்தையும் விண்வெளியில் பார்க்கவில்லை. மாறாக இது கிராபிக்ஸ் செய்யப்பட்ட ஒரு புகைப்படம்.

ஆமா, ஹலோவீன் வந்துடுச்சில்ல அதுக்காக ஒரு புகைப்படம் தான் இது. இந்த பகுதியியை AM 2026-464 என்ற , வித்தியாசமாக கேலக்ஸிகள் வகையில் இருக்கும் கேலக்ஸிதான் இது.

கீழுள்ள படத்தினை பாருங்கள்

இந்த இரண்டு கேலக்ஸிகளும் ஒன்றோடு ஒன்று மோதும் கேலக்ஸிகள். இந்த நிகழ்வு மிகவும் மெதுவான ஒரு நிகழ்வு என்பதால்.

புகைப்பட வடிவமைப்பாளர் இதனை பேய் முகம் போன்று வடிவமைத்து இருக்கிறார்.

கீழுள்ள வீடியோவை பார்க்கவும்

October 26, 2019

அரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்

credit: space.com

ஐக்கிய அரபு எமிரேட்:

யு ஏ ஈ என்று அழைக்கப்பட கூடிய (யுனைடட் அரப் எமிரேட்) நாட்டிலிருந்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இதில் கூறப்பட்டதாவது “ஹோப்” “Hope” நம்பிக்கை என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கலத்தினை செவ்வாய் கிரகத்தின் வட்ட பாதையில் 2021 ஆம் ஆண்டில் நிலைநிறுத்த போவதாக கூறியிருந்தனர்.

இதனை Emirates Mars Mission என்று பெயரிட்டுள்ளனர்.


முதல் நாடு:

ஒரு காலத்தில் அரபு இஸ்லாமியர்கள் கணிதத்திலும் வானியலிலும் முன்னோடியாக இருந்தார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இப்போது வானியல் ஆராய்ச்சியில் இஸ்லாமிய நாடுகள் ஏதும் ஆர்வம் காட்டுவதாக இல்லை . எனினும் இந்த செவ்வாய் கிரக விண்கலத்தினை முதன் முதலில் எமிரேட் தயாரிப்பதால்,

அரபு இஸ்லாமிய நாடுகளிளேயே எமிரேட் தான் முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு அதாவது இண்டர் பிளானிடரி மிஷன், அனுப்பும் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.


2014 ஆம் ஆண்டு:

UAE Hope Planning Mission Mars

அப்போது எமிரேட்டின் தலைவராக இருந்த “ஷேக் கலிஃபா பின் சைது அல் நஹ்யான்” என்பவர் 2014 கூறும் போது, தங்களின் நாட்டிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஒரு விண்கலம் நாங்கள் அனுப்புவோம். அதுவும் 2020 ல் என்று குறிப்பிட்டு இருந்தார்.


பூமியும் செவ்வாயும்

அவர் ஏதேச்சையாக 2020 என்று கூறினாரா இல்லை உண்மையில் தெரிந்து சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால் நமது பூமியும் – செவ்வாயும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் மிகவும் அருகில் வரும் இதனை “Mars Opposition” என்று அழைப்பர். அந்த நாள் 2020 ஜூலை மாதம் வருகிறது. இதனால் . எமிரேட்டில் உள்ள அறிவியல் அறிஞ்சர்கள் 2020 ஜூலைக்குள் இந்த “நம்பிக்கை விண்கலத்தினை ” தயார் செய்ய வேண்டும்.


ஐம்பதாவது ஆண்டு விழா:

2020 ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் HOPE விண்கலமானது 7 மாத பயனத்திற்கு பிறகு 2021 ஆரம்ப கட்டத்தில் செவ்வாயை அடையும் அந்த ஆண்டுதான். எமிரேட் எனும் நாடு உருவாகி ஐம்பதாவது ஆண்டு விழா என்பதும் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு.


சொந்தமாக தயாரிக்கும்:

சாதாரணமாக சொல்லப்போனால் அரபுநாடுகள் பணக்கார நாடுகள் என்று எல்லாரும் சொல்லுவார்கள், அவர்கள் நினைத்தால் ஜப்பானிலிருந்து சிறந்த டெக்னாலஜி மெஷின் களை வாங்க முடியும். அமெரிகாவிலிருந்து சிறந்த விண்கல பாகங்களை வாங்க முடியும், இந்தியாவிலிருந்து சிறந்த அறிவியலாலர்களை சம்பளம் கொடுத்து வேலை அமர்த்த முடியும் . ஆனால் இதையெல்லாம் அவரகள் செய்யாமல் . இந்த தொழில் நுட்பம் தங்கள் நாட்டிலேயெ தயாரிக்கவேண்டும் என்ற என்னத்தோடு. முழுக்க முழுக்க உள்நாட்டு அறிவியலாலர்களை கொண்டு தயாரிக்கபடுகிறது. இது மிகவும் பாராட்டுக்குறிய விஷயம்.


நம்பிக்கை HOPE

இந்த விண்கலம் சுமார் சிறிய ரக கார் போன்ற எடையும் அளவும் கொண்டது. விண்கல்த்தின் எடை (எரிபொருளுடன் சேர்த்து) 1.5டன். இது ஒரு ஆளில்லா விண்கலம். இதன் முக்கிய நோக்கம் செவ்வாயின் வளிமண்டலத்தினை பற்றிய பல அதிகப்படியான தகவல்களை தருவது.

அதுமட்டும் இல்லாமல் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் பற்றியும் இது ஆராயும் என்று கூறியுள்ளனர்.




200 ஆராய்ச்சி கழகங்கள்

இந்த விண்கலம் 2021 ல் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டபின் அதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள். உலகம் முழுவதும் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கழகங்கள் மற்றும் பல்கலைகழகங்களுக்கு பகிரப்படும் என்று பெருந்தன்மையாக கூறியுள்ளனர்.


October 24, 2019

சூரிய குடும்பத்திற்கு வரும் இரண்டாவது விருந்தாளி | comet 2I/Borisov Confirmed Intersteller Visiter by Hubble



Hubble Observes the Interstellar Visitor comet 2I/Borisov in October 12th

சூரிய குடும்பத்திற்கு சொந்தமில்லாத அதாவது நமது சூரியனை சுற்றிவராத விண்கற்களை அல்லது வால்மீண்களை நாம் விண்வெளியில் பார்க்கும் போது அதனை இண்டர்ஸ்டெல்லர் விசிடர்கள் என்கிறோம்.

அறிமுகம்

இந்த  comet 2I/Borisov என்ற வால்மீனை முதன் முதலில் Gennady borisov ஒரு சாதாரன தன்னார்வ வானியலாலர் கடந்த மாதம் (ஆகஸ்டு 30, 2019ல்) கண்டறிந்தார். இவர்களை Amateur Astronomer என்று அழைப்பர்.

இவரின் பெயராலேயே இந்த வால்மீன் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மற்றொரு பெயர் ” C/2019 Q4 ” என்பதாகும்.

எதை வைத்து சொல்றாங்க

அதனுடைய வேகத்தினை வைத்துதான் சொல்லுவாங்க. இந்த பொரிசாவ் ( comet 2I/Borisov,) என்ற பொருளை நாம் ஹப்புள் விண்வெளி தொலைநோக்கி கொண்டு ஆராய்ந்ததில் ,

இந்த வால்மீன் சுமார் மணிக்கு 1,10,000 மைல் என்ற வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் வேகம்தான் இது வேறு இடத்திலிருந்து வந்திருக்கிறதென சொல்லுகிறது.

முதல் விருந்தாளி

2017 ஆம் ஆண்டுகளில் நீங்கள் ஒமுவாமுவா என்ற ஒரு ஆஸ்டிராய்டினை பற்றி கேள்விபட்டிருக்ப்பீங்கள்.

அது தான் நமது சூரிய குடும்பத்தில் முதன் முதலில் நுழைந்த வேறு சூரிய குடும்பத்திற்கு சொந்தமான ஒரு பொருள்.

இந்த ஒமுவாமுவா என்ற பொருள் ஒரு ஆஸ்டிராய்டா அல்லது காமெட் வகையை சார்ந்ததா என இன்னும் கூட விண்வெளியாளகளாளே ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. காரனம் இதனை நாம் சரியாக ஆராய வில்லை.

ஒமுவாமுவாவை நாம் ஏற்கனவே பார்த்து இருந்தோம் ஆனால் அது சாதாரன ஒரு சூரிய குடும்பத்தின காமெட்டாக இருக்கலாம் என நினைத்து அசால்ட்டாக இருந்து விட்டோம் .

அதன் பிறகு தான் தெரிந்தது அது வேறு பகுதியில் இருந்து வந்தது என்ற விஷயம்.

ஹப்புள் ஆராய்ச்சி

ஒமுவாமுவா விஷயத்தில் அசட்டையாக இருந்ததை போன்று இதிலும் இருக்க கூடாது என்பதற்காகதான்.

தன்னார்வ வானவியலார் ஆக்ஸ்டில் கண்டறிந்த ஒரு பொருளினை அடுத்த மாதமான அக்டோபரில் ஹப்புளிடம் ஒப்படைத்தனர்.

ஆம் இந்த மாதம் (அக்டோபர் )12 ஆம் தேதி ஹப்புள் தொலைநோக்கியின் மூலம் ஆராய்ந்ததில் இந்த பெரிசாவ் என்ற வால்மீனின் தன்மைகள் நமது சூரிய குடும்பத்தின் ஆரம்ப நிலையில் இருப்பதை போன்று இருப்பதாக அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்.

 hubble found the comet’s properties appear to be very similar to those of our own solar system’s building blocks

Hubble data

இதனை பற்றிய செய்திகளை நான் கண்டிப்பாக இந்த இனையதளத்தில் வெளியிடுவேன். நீங்கள் அதுவரை காத்திருங்கள்.

Ref: Nasa

உலோகத்தால் ஆன ஆஸ்டிராய்டு "16-சைக்கி" | Metal Asteroid - 16 psyche tamildetails


16- Psyche is One of the most intriguing targets in the main asteroid belt, because 16 Psyche is a giant metal asteroid, 226 kilometer in diameter,
மனிதர்கள் கண்டுபிடித்ததிலேயே மிகவும் புதிரான ஒரு வானியல் பொருட்களில் ஒன்றுதான் “16ஸைக்கி” ஏனெனில் இதுவரை நாம் பாறையாள் உருவான குறுங்கோள்களை பார்த்து இருக்கிறோம். பனிகட்டியால் ஆன ஆஸ்டிராய்டுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் முதல் முறையாக உலோகத்தால் ஆன ஒரு ஆஸ்டிராய்டினை பார்த்து இருக்கிறோம்.


16 psyche artistic concept

கண்டுபிடிப்பு

இந்த 16 சைக்கி என்ற குறுங்கோள்
கண்டறியப்பட்டதுMar. 17, 1852
கண்டு பிடித்தவர்Annibale de Gasparis (இத்தாலி)
அளவு 226 கி.மீ விட்டம்
மூலக்கூறுகள்பெரும்பாலும் இரும்பு-நிக்கல்
சூரியனை சுற்றிவர 5 ஆண்டுகள்
நாள் நீளம் (பகல்)4.196 hours
சூரியனிடமிருந்து தொலைவு235 மில்லியன்- 309 மில்லியன் மைல்

உலோகத்தால் ஆன ஆஸ்டிராய்டு

இந்த 16சைக்கி என்ற ஆஸ்டிராய்டானது முழுக்க முழுக்க இருப்பு மற்றும் நிக்கல் மற்றும் பிற உலோகங்களால் ஆனதென. அறிவியலாலர்கள் நம்புகிரார்கள்.
அது மட்டுமல்ல அந்த ஆஸ்டிராய்டில் இருக்கும் மொத்த இரும்பின் விலை தற்போது நிலவரப்படி 1×10^18 டாலர் இருக்கும் என கருதுகிறார்கள்


Psyche Spacecraft on 16 psyche Asteroid concept

2022ல் சைக்கி விண்கலம்

வருகின்ற 2022 ஆம் வருடம் ஆகஸ்டு மாதத்தில் சைக்கி விண்கலம் வின்ணில் ஏவப்படும். இதற்கான முடிவுகள் ஏற்கனவே 2017 ஜனவரியில் எடுக்கப்பட்டுவிட்டன. Site
2022 ஆகஸ்டில் வின்னில் ஏவப்படும் இந்த சைக்கி விண்கலம் 2026 ஜனவரியில் சைக்கி ஆஸ்டிராய்டினை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Psyche Orbit and Plan
21 மாதங்கள் அங்கு இருந்து . சைக்கி ஆஸ்டிராய்டினை ஆராய்ச்சி செய்து அதை பற்றிய தகவல்களை சேகரிக்கும். அதன் பிறகு 2027 அக்டோபரில் இந்த விண்கலம் செயலிழக்கும். என நாசா விஞ்சானிகள் திட்டமிட்டுள்ளனர்

உட்கரு (Inner core of Planet)

நமது பூமியின் உட்கருவானது இதே போன்று இரும்பு மற்றும் நிக்கல் என்ற இரு உலோக தனிமத்தால் ஆனது.
அதே போன்று இந்த சைக்கி ஆஸ்டிராய்டும் இரும்பு மற்றும் நிக்கல் கொண்டு ஆக்கப்பட்டிருப்பதால், இது ஏதேனும் ஒரு பூமி போன்ற கிரகத்தின் அழிவுக்கு பிறகு அதன் மீதமிருக்கும் மையப்பகுதியாக இருக்கலாம் என அறிவியலாலர்கள் நம்புகிறார்கள்.



அப்படி இல்லை என்றால் இது வேறு ஏதேனும் ஒரு கிரகம் உருவாக்க நிகழ்வில் இருந்து பிரிந்து வந்திருக்கலாம் என்றும் ஒரு விதமான கருத்து நிலவுகிறது.
என்னவாக இருந்தாலும் சரி, நமது சூரிய குடும்பத்திலேயே பல புதிரான பொருட்கள் உள்ளன அவற்றை நாம் புரிந்து கொள்வது தான் மிகவும் அறிய செயலாக உள்ளது.



அதாவது நமது அறிவுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என நான் சொல்கிறேன்.
நீங்க என்ன சொல்றீங்கள். கமெண்டில் பதிவிடுங்கள்.
Ref : NASA , ASU

FAQ பொதுவான கேள்விகள்



சைக்கி என்றால் என்ன?

இரும்பு – நிக்கல் உலோகத்தால் ஆன ஒரு ஆஸ்டிராய்டு

எங்கு இருக்கு இந்த சைக்கி?

சூரியனிடமிருந்து சுமார் 235-309 மில்லியன் தொலைவில் , செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள, விண்கல் பட்டையில் சுற்றிவருகிறது.

கிரகத்தின் மையப்பகுதியா?

நாம் இதுவரை நமது பூமியின் மையப்பகுதியை ஆராய்ச்சி செய்தது கிடையாது. ஆனால் இந்த சைக்கி ஆஸ்டிராய்டின் தன்மைகள் கிரகத்தின் மையம் போல் உள்ளது.

சைக்கி விண்கலத்தின் செலவு ?

$760 மில்லியன் அமெரிக்க டாலர்கள்,

சைக்கி விண்கலமா? ஆஸ்டிராய்டா?

“சைக்கி” என்று பெயரிடப்பட்ட ஆஸ்டிராய்டை ஆராய்சி செய்ய நாம் அனுப்பும் விண்கலத்தின் பெயர் “சைக்கி” 🙂

சைக்கி ஆஸ்டிராய்டு யாரால் எப்போது கண்டறியப்பட்டது?

1852  ஆம் ஆண்டு இத்தாலிய வானியலாலர் அனிபலே டி கஸ்பாரிஸ் என்பவரால் கண்டறியப்பட்டது (Annibale de Gasparis)

October 22, 2019

Space X plans to put 30,000 satellites in space

30,000 satellites in space are actually triple the number put into orbit by human in history so far

SpaceX Starlink Satellites

30,000 செயற்கைகோள்கள்

என்ன தலைப்பை கேட்ட உடனே தலை சுற்றுகிரதா?

ஆம், இதற்கான ஆவனங்கள் கடந்த வாரம் தான் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

ஆவனம்

அதில் கூறியதாவது, எலோன் மஸ்கிற்கு சொந்தமான விண்வெளி நிறுவனம் மூலம் 20 தடவை 1500 சிறிய ரக செயற்கைகோள் வீதம் விண்ணில் செலுத்தப்படும். என்று கூறியிருந்தது.

அதாவது Space X Plants to Launch 20 sets of 1500 satellites.

ஆனால் இதனை அவர்கள் செய்து முடிக்க பல அமைப்புகளின் ஒப்புதல் வாங்கவேண்டி இருக்கும். அதனால் இந்த செயலானது நடந்து முடிக்க பல வருடங்கள் கூட ஆகலாம்.

SpaceX Plan

இது போன்ற 12,000 சிறிய ரக தொலைதொடர்பு செயற்கைகோள்களை வின்ணில் ஏவ ஏற்கனவே அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அவரக்ள் 60 செயற்கைகோள்களை விண்ணில் ஏவி இருக்கிறார்கள்.

ஸ்டார்லிங்க் என்ற வயர்லெஸ் இணைய சேவையை உருவாக்க இவற்றைப் பயன்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து செயற்கைகோள்களும் “குறைந்த பூமி சுற்றுப்பாதை” யில் சுமார் 330-580 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

Debris (விண்வெளி குப்பை)

இந்த அளவு உயரத்தில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் போது அது “நீண்ட கால சுற்றுப்பாதை குப்பைகளை” உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன,

இந்த அளவு உயரம் போதுமானதுதான். அதாவது அங்கு செயல் இழக்கும் அல்லது கோளாராகும் செயற்கைகோள்கள் பூமியில் வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாக்கும் அளவுக்கு அங்கு அந்த வளி மண்டலம் அடர்த்தியானது தான், ஆனால் ஏதாவது திடீரென ஆபத்தாக முடிந்தால் என்னவாகும்? சற்று யோசியுங்கள்…

ஏதேனும் இரண்டு செயற்கைகோள்கள் மோதிக்கொண்டால்,??? நாம் பூமியின் மீது போட்டிருக்கும் குப்பைகள் ஏராளம், ஏராளம். இன்னும் இவ்வளவா?

Starlink


Starlink space internet concept

இவர்கள் இந்த அளவு செயற்கைகோள்களை அவர்களின் இஷ்டத்திற்கு அனுப்பினால் . ஆமாங்க அவங்களுக்கு ஸ்டார் லிங்க் என்ற அனைவருக்கும் விண்வெளி மூலமாக இலவச இண்டர்னெட் சேவை வேண்டுமாம்.

அதற்கான இத்தனை தொலைதொடர்பு செயற்கைகோள்களை வின்ணில் ஏவ திட்டமிட்டுள்ளார்கள்.

I recommend


more to read

Ref: https://www.newscientist.com/article/2220346-spacex-plans-to-put-more-than-40000-satellites-in-space/

October 20, 2019

நாசாவின் பெண்கள் செய்த சாதனை | first ever All women spacewalk | JessicaMeir and Christina koch


NASA astronauts Jessica Meir and Christina Koch are conducted the first all-female spacewalk outside of the International Space Station. The spacewalk is officially began at 7:38 a.m. ET and lasted for seven hours and 17 minutes, ending at 2:55 p.m. ET. … This was the fourth spacewalk for Christina and First Time for Jessica Meir

Jessica meir and christina koch

விண்வெளியில் நடப்பது சாதாரன விஷயம் இல்லை, அதற்கான தகுந்த பயிற்சியும் அனுபவமும் ரொம்ப முக்கியம்.
அதுவும் விண்வெளியில் பெண்கள் நடப்பது என்பது மிகவும் பாரட்டுக்குரியது. மற்றும் ஆச்சரியமானது .

முதன் முதலாக

ரஷ்யாவினை சார்ந்த Savitskaya என்பவர்தான் 1984 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்வெளியில் நடந்தார். அதற்கு அடுத்தபடியாக நாசாவினை சேர்ந்த cathy sullivan என்ற வின்வெளி வீராங்களை இந்த சாதனையை செய்து முடித்தார்.

இதுவரை

12 பெண்கள் இந்த விண்வெளியில் நடப்பது என்ற செயலை செய்து முடித்துள்ளனர். கிட்டதட்ட 40 தடவை பெண்கள் கலந்து கொண்ட நிகழ்வினை நாம் கூறலாம்.
அதாவது 40 வெவ்வேறு விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகளில் பெண்கள் கலந்து கொண்டு பனியாற்றி இருக்கின்றனர்.

ஜெஸ்ஸிகாவின் முதல் முறை



தற்போது அதாவது அக்டோபர் 18 ல் நடந்து முடிந்த இந்த spacewalk நிகழ்வில் கலந்துகொண்ட ஜெஸ்ஸிகா மெர் என்பவர். இப்போது தான் முதல் முதலாக விண்வெளியில் நடப்பது என்ற நிகழ்வினை மேற்கொள்கிறார்.
அவருடன் பனியாற்றிய மற்றொரு பெண் ஆஸ்ரோனாட் தான் கிரிஸ்டினா கோச் இவருக்கு இது 4 ஆவது முறை.

அக்டோபர் 11ல்

அக்டோபர் 11 ல் ஏற்கனவே ஒரு குழு வின்னில் நடந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான அத்தியாவசிய பேட்டரிகளை வின்வெளி மையத்தின் வெளியே அமைத்தனர்.
11 ஆம் தேதி அமைத்த பேட்டரிகளில் ஏதே ஒன்று தவறாக செயல்பட்டு வருகிறது. என்பதை கண்டறிந்தனர்
இதன் காரனமாக . கிடக்க வேண்டிய அதிகபடியான மின் சக்தி. எதிர்பார்த்த அளவினை விட குறைவாகவே கிடைக்கிறது.
இந்த fault ஆன பேட்டரியை எடுக்காவிட்டால் அது மற்ற பேட்டரிகளையும் பாதிக்கும் என்பதால் தற்போது அதாவது அக்டோபர் 18 ஆம் தேதி இந்த இரண்டு பெண்கள் அந்த பேட்டரியை எடுக்க வேண்டிய சூழ்நிலை.ஏற்பட்டுள்ளது.

வாழ்த்து



அவர்கள் இருவரும் வின்ணில் நடந்து வேலை செய்து கொண்டிருக்கும் போதே அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து, தலைவர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.
அது மட்டுமில்லாது. நாசாவின் தலைவின் ஜிம் பிரஸ்டைன் அந்த சரிசெய்யும் spacewalk ஐ முழுவதுமாக நேரலையில் கண்டார். அதேடு தனது வாழ்த்துக்களையும் . அவர் அந்த இரண்டு பெண் விண்வெளி வீராங்களைகளுக்கும் தெரிவித்தார்.

video


October 18, 2019

NavIC Coming to Phone in 2020 Qualcomm Confirms on Indian Mobile Congress 2019

#Qualcomm at the #IndiaMobileCongress has partnered with #isro to use its #NavIC platform, which uses India-made satellites for navigation. This tech will be made available on phones to the end-user in 2020

2020 இல் வருகிறது நேவிக் தொழில் நுட்பம் கொண்ட கைபேசிகள் (Phone)

இது பற்றி இஸ்ரோ ஏற்கனவே குவால்காம் நிறுவனத்திடம் பேசியிருந்தது .

கடந்த அக்டோபர் 14-16 ஆம் நேதி நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் குவால்காம் கல்ந்துகொண்டது.

அதுமட்டும் இல்லாமல் அவரக்ள் ஏற்கனவே செய்துகாட்டிய technology demonstration Mobile phone ஐயும் அவர்கள் பார்வைக்காக வைத்து இருந்தனர்.

Twitter

செய்தியாளர்களுக்கு சொல்லும் போது , நேவிக் தொழில்நுட்பம் கொண்ட மைக்ரோபுராசசர்கள் இன்னும் 3,4 மாதங்களில் மாஸ் புரெடெக்சன் ஆரம்பம் ஆகிவிடும்.

அதன் பிறகு 2020 ஆரம்பத்தில் இது மற்ற OEM மொபைல் கம்பெனிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும். கூறி இருந்தார்கள்.

ஆகவே நமக்கு இதிலிருந்து தெரிவது என்னவென்றால் 2020 ஏப்ரலுக்கு பிறகு வரும் தொலைபேசிகளை நாம் பரவலாக இந்த நேவிக் தொழில் நுட்பம் கொன்ட தொலைபேசிகளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

IRNSS

இது வரைக்கும் 8 செயற்கைகோள்கள் உள்ளன அதில் 7 இப்போது வரை பயன்பாட்டில் உள்ளது. அந்த ஏழு செயற்கைகோள்களிலும். ஒன்று மட்டும் தான் இப்போது வரைக்கும் இடம்சுட்டிக்கு(Navigation) பயன்பட்டு வருகிறது.

வரும் காலத்தில் இந்த 7 செயற்கைகோள் என்ற என்னிக்கை 11 ஆக அதிகரிக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் அவரக்ள் கூறியுள்ளார்.

இதுவரை 4 நாடுகள் மட்டுமே தன்னுடைய சொந்த (navigation) இடம்சுட்டியை பயன்படுத்தி வருகிறது.

Ref, ISRO,

How Many GPS Currently Available in Global

  1. GPS (United States)

    Global Positioning System , currently 31 sat in Total and is own by United States

  2. GLONASS (Russia)

    GLObal NAvigation Satellite System or GLONASS ,12 sat in Orbit and Operational Owned by Russia

  3. Galileo (EU)

    22 out of 30 Sat are in Orbit and Operational and its owned by European Union

  4. BeiDou (China)

    BeiDou is Satellite Navigation System of China. 22 sat currently in orbit planned to put 35.

  5. QZSS (Japan)

    The Quasi-Zenith Satellite System is the regional satellite navigation system from Japan. 7 Satellite Constellation currently 4 in orbit

  6. IRNSS India

    NavIC or NAVigation with Indian Constellation, 7 in orbit planned to put 11 in the future.

October 14, 2019

Qualcomm உடன் இனையும் ISRO | விரைவில் இந்தியாவின் ஜி.பி.ஸ் வரபோகுது

Indian Mobile Congress (IMC) Oct14-16. Qualcomm Announce the First Ever Demonstration of NavIC with Snapdragon Mobile Platform Support.


Qualcomm Joins with ISRO to make NavIC possible for Snapdragon Processor in India

இந்தியாவின் பிரத்தியேக இடம் சுட்டி கருவிதான் நேவிக் (NavIC – Navigation with Indian Constellation)

இது 7 செயற்கைகோள்களை கொன்ட ஒரு தொடர் அமைப்பு. இதுவரைக்கும் இதன் பயன்பாடுகள். மிகவும் பாதுகாக்க பட்டதாக உள்ளது. ஏனென்றால் இந்த கருவியின் பயன்பாடுகள். இப்போது வரை நமது ரானுவம் மற்றும் கப்பல் படை போன்ற வர்களிடம் மட்டுமே இருந்து வருகிறது.

ஆனால் இப்போது இஸ்ரோ இதனை இந்தியாவில் வாழும் சாதாரன மக்களுக்கும் பயன்படும் வகையில். பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது.

குவால்காம் (Qualcomm)

இதற்காக மொபைல் செமி கண்டக்டர் நிறுவனத்தின் முன்னோடியான குவால்காம் நிறுவனத்திடம் இஸ்ரோ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதைபற்றி குவால்காம் நிறுவன மூத்த துணைத் தலைவர் துர்கா மல்லாடி கூறுகையில் . இஸ்ரோவுடன் இனைந்து பணியாற்றுவது சிறப்பான அனுபவமாக உள்ளது. என்றும்

நேவிக் (NavIC) தொழில்நுட்பத்தினை தங்களது ஸ்னாப் டிராகன் (SnapDragon) Processor இல் Embed செய்து இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவதில் முழு ஆர்வம் என்றும் கூறியுள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் இந்த தொழுல்நுட்பத்தினை முதல் முயற்சியாக செப்டம்பர் 19 ஆம் தேதி . ஒரு technology demonstration செய்து பார்க்க போவாதாகவும் சென்னார்கள்.

அந்த குறிப்பிட்ட நிகழ்வானது இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்திய மொபைல் காங்ரஸ் (IMC – Indian Mobile Congress) மாநாட்டில் திரும்பவும் மக்கள் பார்வைக்காக வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் பயன்பாடு

இப்போது வரைகும் இந்த நேவிக் மற்றும் IRNSS போன்ற இந்திய தொழில் நுட்பங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வரவில்லை.

இந்திய ரானுவத்தின் உயர் அதிகாரிகள் மட்டுமே உபயோகிக்க தகுதிபெற்றவர்கள்.

ஆனா இந்தநிலை மாறி, பொதுமக்களின் பயன் பாட்டிற்க்காக . புதியவகை Snapdragon புராசசர்களில் இது அறிமுகப்படுத்தப்படலாம்.

இதன்மூலம் பல கோடி இந்திய மக்கள் பயன்பெறுவர்

அதுமட்டும் இல்லாமல். இஸ்ரோ குவால்காமை தேர்ந்தெடுத்தது மிகவும் நல்ல தேர்வு.

ஏனெனில் இந்தியாவில் அதிகம் உள்ள மொபைல் போன் களில் Qualcomm நிறுவனத்தில் snapdragon புராசசர்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

IRNSS

நமது இந்த இனையதளத்தில் ஏற்கனவே ஒரு ஒப்பீடு ஒன்றை வெளியிட்டு இருக்கிரேன். முடிந்தால் அதனை பாருங்கள்

இதுவரைக்கும் 7 IRNSS தொலைநோக்கிகள் இந்தியாவின் மேலே சுற்றிவந்து கொண்டிருக்கின்றன்.

வரும் காலங்களில் இது 11 ஆக மாற்றப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

video

மேலும் ஏதாவது தகவல் கிடைத்தால் உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் சப்ஸ்கிரைபு பன்னிவைத்துக்கொள்ளுங்கள்.நன்றி

U buy i earn .thanks..

October 12, 2019

சந்திரயான் 2 விண்கலத்தின் கேமரா மூலமாக எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படம் | OHRC High res image Ever Taken #Chandrayaan2

சந்திரயான் 2

Chandrayaan 2’s High res Camera Takes the most highest resolution image of Lunar Surface Ever.and Even you can see approx ~1-2 METER boulders are so visible

சந்திரயான் 2 ல் உள்ள மிகவும் பிரத்யேக கேமரா பெயர் தான் OHRC (Orbiter High Resolution Camera) என்பதன் சுருக்கம் தான் இது.

இந்த கேமிரா மூலமாக எடுக்கப்பட்ட மிகவும் அதிக ரெசலூசன் (Resolution) கொண்ட புகைப்படத்தினை கடந்த மாதம் அதாவது செப்டம்பர் 5 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் எடுத்தது.

அந்த புகைப்படத்தினை இஸ்ரோ இந்த மாதம் அக்டோபர் 5 ஆம் தேதி உலகுக்கு அறிவித்தது. அந்த புகைப்படத்தினை தான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.

புகைப்படம்

இந்த புகைப்படத்தினை எடுக்கும் போது விண்கலம் சுமாராக ~100 கி.மீ உயரத்தில் இருந்தது.

தென் துருவத்தில் BOGUSLAWSKY என்ற 14 கிமீ நீண்ட ஒரு பள்ளத்தாக்கினை இது படம் எடுத்து இருக்கிறது.

இப்போது படம் பாத்து கதை சொல்

Mangalyaan's 4th Year Data Available now | 4 ஆம் வருட மங்கள்யானின் தரவுகள் இப்போது பொது பார்வைக்கு

Mangalyaan’s 4th Year data are available now From the date range September 24, 2017 to September 23, 2018, are available in the ISSDC website

தரவுகள்

மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு 5 வருடங்கள் முடிந்தாகிவிட்டது.

செப்டம்பர் 24 2014 ல் தான் முதன் முதலில் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்பட்டது.

அதே போன்று கடந்த மாதம் 24ஆம் தேதி (அதாவது செப்டம்பர் 24, 2019 ல்) இது 5 வருடம் என்ற ஒரு மைல் கல்லையும் தாண்டி விட்டது. இந்த நிலையில்,

இஸ்ரோ, மங்கள்யானின் 4 ஆம் ஆண்டு தரவுகளை ( September 24, 2017 to September 23, 2018 ) பொது மக்களின் பார்வைக்காக அல்லது Scientist மற்றும் ஆராய்ச்சியாளர்களின் என்று கூட சொல்லலாம்.

இவர்களுக்காக இனி இனைய தளத்தில் மங்கள்யானின் தரவுகள் கிடைக்கும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது.

எங்கே

ISRO Space Science Data Center சுருக்கமாக ISSDC மங்கள்யானின் தரவுகள் பிரதேயகமாக MOMLTA என்ற தளத்தில் கிடைக்கும்.

இதற்காக நீங்கள் . இந்த தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்போது தான் யார் யார் இந்த தரவுகளை பயன் படுத்து , பயன் பெறுகிறார்கள் என்பது இஸ்ரோவுக்கு தெரியும்.

இதற்காக டுவிட்டர் பதிவி கீழே பாருங்கள்

டுவிட்டர் பதிவு

உதவுகள்

அது என்ன உதவிகள் என்று பார்க்கிறீர்களா. அதாவது நாம் முதன் முதலில் ஒரு விண்கலத்தினை வேறு ஒரு கிரகத்திற்கு அனுப்புகிறோம் அப்போது என்னென்ன பிரச்சனைகளிய நாம் சந்தித்து இருப்போம் அதனை எப்படி நாம் சரி செய்தோம் என்ற ஒரு வீடியோ தான் கீழே உங்களுக்காக

பார்த்து மகிழுங்கள்

20 புதிய துனைகிரகம் கண்டு பிடிப்பு |சனி கிரகத்துக்கு 82 துணைகிரகம் இருக்கு |New moons discovered orbiting Saturn

Newly discovered Saturn's 20 Moons
Newly discovered Saturn’s 20 Moons

20 புதிய நிலவுகள் சனிக்கு

நமது சூரிய குடும்பத்திலேயே அதிகமாக துனைகிரகங்களை கொண்ட கிரகம் எது என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள்?

வியாழன் என்று தானே

ஆனால் இப்போது மாறிவிட்டது அது சனிகிரகம்தான்.

ஆமாங்க வியாழனின் 79 துனைகிரகங்களை தாண்டி 3 அதிகமாக இருக்கு

ஆக மொத்தத்துல இந்த சனிகிரகத்துக்கு 82 துனைகிரகங்களை கண்டறிந்து இருக்காங்க. இப்போ

ஏற்கனவே கிடப்பில் இருந்த 20 நிலவுகள்(Unconfirmed) . இது நிலவா இல்லையா என குழப்பத்தில் இருந்தார்கள். இப்போது அதையும் உறுதி செய்துவிட்டார்கள் (Confirmed Now)

ஆராய்ச்சி

கார்னேகி அறிவியல் நிறுவனத்தினை சார்ந்த ஸ்காட் செப்பர்டு என்பவரின் தலைமையிலான குழு தான் இந்த தகவலை கண்டறிந்து உலகிற்கு சொன்னார்கள்.

அவர்கள் “ஹவாய்”தீவில் உள்ள “சுபரு” என்ற தொலைநோக்கியின் உதவி கொண்டு இந்த தகவலை கண்டறிந்ததாக கூறினார்கள்

2018 VG18 என்ற ஒரு சூரிய குடும்பத்திலேயே அதிக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் இந்த “சுபரு” தொலைநோக்கி கொண்டு கண்டறிந்துள்ளனர் இந்த குழு!! என்பது குறிப்பிடத்தக்கது

தண்மைகள்

கண்டறியப்பட்ட 20 புதிய நிலவுகளின் 17 நிலவுகள் சனிகிரகத்தினை எதிர் திசையில் சுற்றி வருகின்றன. மற்ற நிலவுகள் சாதாரனமாக (சனி கிரகம் சுற்றும் திசையிலேயே ) சுற்றி வருகிறது. படம் பார்க்க.


Saturn’s new moons that rotate the opposite direction of Saturn’s rotation
[Retrograde Moons of Saturn ]

புதிதாக கண்டறியப்பட்ட 20 நிலவுகளும் சுமாராக 5 கிலோ மீட்டர் விட்டம் உடையதாக இருக்கிறது என அறிவியலாலர்கள் தெரிவித்தனர்.

இதில் 2 நிலவுகள் மட்டும் சனிகிரகத்தினை சுற்றிவர 2 வருட காலம் எடுத்துக்கொள்கிறது என்றும் மற்ற 18 நிலவுகள் சனி கிரகத்தினை சுற்றிவர 3 வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்கிறது அறிஞ்சர்கள் தெரிவித்தனர்.


For Your Ref:

Podcast

October 02, 2019

Space X Star ship wil deliver the Supplies and humans for moon and Mars base மனிதர்களை நிலவிருக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் கொண்டு செல்லும் விண்கலம்

மனிதர்கள், செவ்வாய் கிரகத்திலும் நிலவிலும் குடியேற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

இதில் மிகுந்த ஆர்வம் செலுத்தும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதன் ஸ்டார் ஷிப் விண்வெளி ஓடத்தின் மூலம். நிலவில் கட்டப்பட வேண்டிய பொருட்களையும் மனிதர்களையும் கொண்டு போய் சேர்க்கும் என்று சித்தரிக்கப்படும் ஒரு படத்தை வெளியிட்டு இருந்தனர்.

அதைத்தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள்.