December 29, 2019

சிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது.


1992 ஆம் ஆண்டு முதன்முதலாக பூமி போன்ற கிரகங்கள் கண்டு பிடிக்க ஆரம்பித்தோம். இன்றுவரை (நமது சூரிய குடும்பக் இல்லாத )வேறு ஒரு நட்சத்திரத்தின் கிரகங்களை கண்டு பிடித்து கொண்டுதான் இருக்கிறோம்.
இதில் பெரிய ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்? நாம் கண்டறிந்தது அனைத்தும் பூமியை விட 1.5 மடங்கு அல்லது அதற்கு பெரிய அளவில் உள்ள கிரகங்களை தான். இது போன்ற கிரகங்களை விட பூமியின் அளவுக்கு ஒத்த கிரகங்களை ஆராய்ச்சி செய்தால் தான். நம் அடுத்த குடியேறும் கிரகம் பற்றி யோசிக்க முடியும்.

GJ1252 Red Dwarf

நமது பூமி போன்ற 1.2 மடங்கு இருக்கும் ஒரு கிரகம் தான் இந்த gj1252b என்ற கிரகம்.
இதன் மேலும் சிறப்பு என்ன தெரியுமா? இந்த கிரகம் சுற்றி வரும் நட்சத்திரம் GJ1252 ஆனது ஒரு சிவப்பு குள்ள கிரகம்.
அதனால் என்ன பயன் என்ற கேட்கிறீர்களா? இருக்கு. நான் மேலே சொன்னதுபோல சாதாரணமாக நாம் பூமியின் அளவினை விட பெரிய கிரகங்களை தான் கண்டரிகிரோம்.
இதற்கான காரணம். அந்த நட்சத்திரமான து . மிக பிரகாசமாக இருப்பதால் பூமியில் அளவில் உள்ள கிரகங்களை நம்மால் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால் இந்த GJ1252 என்ற சூரியன். ஒரு (Red Dwarf) சிவப்பு குள்ள நட்சத்திரமாக இருப்பதால் . இத்த கிரகம் பற்றிய பல தகவல்களை நம்மால் கண்டறிய முடியும். ஏனெனில் இதன் ஒளி மிகவும் மங்கியதாக இருக்கிறது.

கிரகம் GJ1252b

இந்த புதிய கிரகத்திற்கு பெயர்தான் GJ1252b என்பது. இந்த கிரகமானது. அதன் நட்சத்திரத்தின் மிகவும் அருகில் சுற்றி வருகிறது. எவ்வளவு அருகில் என்றால்? இந்த கிரகம் ஒரு முறை அதன் நட்சத்திரத்தை சுற்றிவர பூமியின் கணக்கு படி வெறும் 12.4 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
அதாவது அந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது 12.4 மணி நேரம்தான்
இந்த கிரகத்தின் எடையானது நமது பூமியின் எடையை போல் இரண்டு மடங்கு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த தரவுகள் அனைத்தும் TESS விண்வெளி தொலைநோக்கி மூலம். கண்டறியப்பட்டுள்ளது . அது மட்டும் இல்லாமல் இந்த கிராகமானது பூமியில் இருந்து 66.5 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.
நம்மால் இந்த தொலைவில் இருக்கும் ஒரு சிவப்பு குள்ள சூரியனை எளிதாக ஆராய முடியும். அதே போன்று அதன் கிரகத்தையும்.

Rocky exoplanets

இந்த கிரகமானது ஒரு Rocky surface கொண்ட கிரகமாக இருப்பதில் அதிக வாய்ப்புகள் உள்ளன ஏனென்றால்,
இது பூமியின் அளவிற்கு மிகவும் ஒத்து இருப்பதுதான்.இதுபோன்று பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் மிகவும் சொற்பமாகவே நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
  • Pi Mensae c – 60 Light Years away
  • LHS 3844b. – 49 light years
  • TOI-270b. – 73. Light years
  • Teegarden b & c. -12.5 Light Years
  • Gliese b , c, d – 12 light years
  • Recently GJ1252b – 66.5 light years
மேலே குறிப்பிட்டுள்ள கிரகங்களில் இப்போது குறிப்பிட்ட GJ1252b என்ற கிரகம் மட்டும்தான் ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தின் ஐ மிகவும் அருகில் சுற்றி வருகிறது.
இதனால் நமக்கு,  சிறிய வகை கிரகங்கள் பற்றிய போதுமான தகவல்கள் வரக்கூடிய காலங்களில் அதிகமான அளவு கிடைக்கப்படும். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உங்களின் மேலான கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்
Space news tamil

December 19, 2019

Asteroid Bennu Sample (back up ) Site by OSIRIS REX

Asteroid Bennu Sample Site Back up. It has a Main Asteroid Sample Collect Site and also has a secondary backup site. if that main site is missed.

Main Site

nightinggale
“Nightingale” is the Name of the Main Sample Return Mission of the OSIRS Rex

so here is the Osprey view of the Backup Sample Collection Site in Bennu Asteroid.

101955 Bennu is a carbonaceous asteroid in the Apollo group discovered by the LINEAR Project on 11 September 1999. It is a potentially hazardous object that is listed on the Sentry Risk Table with the second-highest cumulative rating on the Palermo Technical Impact Hazard Scale

NASA Sent the “Osirix-REX” asteroid sample collection mission to This Bennu Asteroid

Stages of Osirix Rex Mission in Tamil

The 3d Picture of Asteroid Bennu is here

REX is Nearing the Bennu Tamil article

தன்னீரை கண்ணடறிந்தது ரெக்ஸ்

நாசா மூலமாக இப்போது அதன் இரண்டாவது மாதிரி எடுக்கும் இடம் முப்பரிமானத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது.

December 15, 2019

ஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment


உங்களை ஆச்சரிய பட வைக்கும் அறிவியல் உலகில் உள்ளது., ஆம்அதற்கு முன் மேலே உள்ள Bold ஆன வார்த்தையை பாருங்கள், உண்மையில் அது போன்ற எந்த வார்த்தையும் இல்லை, Levitate என்ற வார்த்தைக்கும் , பறக்க வைப்பது அல்லது மிதக்க வைப்பது என்ற அர்த்தம் சிறப்பாக இருக்கும்.’

Levitate Tamil Meaning is No

சரி இப்போது மிதப்பதை அதாவது பறந்து மிதப்பதை சப்தத்தினை வைத்து எப்படி செய்வது என பார்ப்போம்,

CHLADNI PLATE


C

கிளாட்னி தட்டு என்ற ஒரு வகை தட்டினை அதிர்வடைய செய்யும் போது , அதன் மீது இருக்கும் சிறிய வகை லேசான பொருளை அது மேலே தூக்கி போடும். உதாரனத்திற்கு அதில் நீங்கள் “SALT” உப்பு துகள்களை போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்,அந்த தட்டின் மீது இருக்கும் உப்பு துகளை அது மேலே தூக்கி போடும் , அதனை பறக்க வைக்கும் ,……….


உண்மையில் அது அப்படி செய்வதில்லை அதைவிட அதிகமாக ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு செயலை செய்கிறது.

VIDEO



அதாவது அந்த உப்பு துகள்கள் ஒரு வரிசையில் ஒருங்கினைவதை அது காட்டுகிறது. இது எதனால் ஏற்படுகிறது.

அறிவியல்

ஒலி அலைகள் அதிர்வடைகின்றன. அதன் மூலம் இந்த வித்தியாசமான உருவங்கள் (Pattern)ஏற்படுகின்றன.

வேறுபாடுகள்

ஆனால் நீங்கள் மேலே பார்த்த அந்த Pattern மட்டும் வருவது கிடையாது , நீங்கள் ஒலி அலைகளை அதிகரிக்கும் போது அதன் உருவத்தில் அதிகமான மாற்றங்கள் ஏற்படும்,

இன்னும் வித்தியாசமான உருவங்கள்

இது போன்ற பல உருவங்கள் உங்களுக்கு தோன்றும்,.


உண்மையில் ஒலி என்பது அலைகள் நீங்கள் கத்தினாலோ அல்லது கைதட்டினாலோ அதிலிருந்து ஒலி அலைகள் வெளியேரும்,வெளியேரிய ஒலி அலைகள் உங்கள் காதில் உள்ள சவ்வினை அதிர்வடைய செய்வதால் நீங்கள் சப்தத்தினை உனர்கிறீர்கள்,அது இசையாக இருக்கலாம். அல்லது கூச்சலாக இருக்கலாம்,

கிளாட்னி தட்டு

இந்த தட்டினை பயன்படுத்திதான் நாம் உப்பு துகள்களை உருவம் வரும் படி செய்தோம்,உண்மையில் நீங்கள் பார்க்கும் வடிவங்களில் தட்டில் ஒலி அலைகள் ஏற்படுத்திய மாற்றங்கள் தான். ஆம் கீழே உள்ள படத்தினை பாருங்கள்,


VIDEO


December 03, 2019

விக்ரம் லேண்டர் விழுந்த இடம் "Vikram lander found" nasa said


விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்க ளை, சந்திரனில் உள்ள நிலப்பரப்பினை வைத்து நாசா அடையாளம் கண்டதாக படத்தினை வெளியிட்டுள்ளது.
மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கும் மஞ்சள் நிறப் புள்ளிகள் விக்ரம் லேண்டர் இன் உடைந்த பகுதிகள் என்றும்,
நீல நிறமாக இருப்பவை சந்திரனில் உள்ள மணலில் ஏற்பட்ட மாற்றங்கள் என்றும், நாசா கூறியுள்ளது.
இதனை வித்தியாசப்படுத்தும் வகையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட அதே இடத்தின் புகைப்படத்தையும், விக்ரம் விழுந்ததன் பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக நாசா கூறியுள்ளது.


To see gif please goto source link

Source nasa

December 01, 2019

இன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா


Mars-iversary

2018 நவம்பர் 26 ஆம் தேதிதான் நாசாவின் இன்சைட் லேண்டர் முதன் முதலில் செவ்வாயில் காலடி எடுத்து வைத்தது. இப்போது ஒரு வருடம் முடிந்த நிலையில் இதனை நாசாவில் இருப்பவர்கள் Mars-iversary என்று கொண்டாடி வருகின்றனர்.

First Celebration of Insight Lander Touch down

முதன் முதலில் செவ்வாயில் Elysium Planitia. என்று பெயரிடப்பட்ட தரைப்பகுதியில் இரங்கியவுடன் எடுத்த புகைப்படம் தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள்.

1/2 பாதி காலம்

ஆனால் இந்த செய்தியை பலரும் கொண்டாடி வந்தாலும். சற்று சோகமான விஷயம் என்னவென்றால் இந்த லேண்டருக்கு நாசா தரப்பில் வைத்த கால அளவு 2 வருடங்கள் மட்டுமே. அதிலும் பாதி காலத்தினை இது கடந்து விட்டது.

வெற்றியும் தோல்வியும்

இன்சைட் லேண்டர் அனுப்பிய இரண்டு நோக்கங்களில் ஒன்று சிறந்த முறையில் செயல் பட்டு விட்டது ஆனால் மற்றொன்று தான் சற்று சரியாக செயல் படவில்லை.
ஆம் இன்சைட் லேண்டரின் “ஹீட் புரோப்” அதாவது கிரகத்தின் உள்சார்ந்த வெப்பநிலையினை ஆராயும் குச்சி போன்ற அமைப்புக்கு பெயர்தான் Heat Probe , ஆனால் இது அவ்வளவாக வேலை செய்தது போண்று தெரியவில்லை.
நிலநடுக்கம்,
செவ்வாயில் சப்தங்கள்,
முதல் படம்