January 16, 2020

Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்



குலசேகரபட்னத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 3 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன.
குலசேகரபட்டினம் அருகில் உள்ள மாதவன் குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 ஊர்கள் தேவைப்படுவதாக கருதப்படுகிறது.
இந்த ஊர்களில் நிலம் கையகப்படுத்துவதற்காக தற்காலிகமாக திருச்செந்தூரில் அலுவலகம் அமைப்பட்டு உள்ளது.
8 பிரிவுகளை கொண்ட வருவாய்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று செயல்பட தொடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிலும், 13 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்ப்டு உள்ளது. ஒவ்வொரு குழுவும் தாசில்தார் தலைவமையில் இயங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் செயல்படுவதை கண்கானிக்க டி.ஆர்.. பனி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவர்களின் முதற்கட்ட பனியினை தூத்துக்குடி கலெக்டர்சந்தீப் நந்தூரி”” அடிக்கடி பார்வையிட்டு வருகிறார்.

நிலம்
ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பனி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் போது அதற்குறிய இழப்பீடு தொகையை அரசின் சட்டப்படி வழங்கபடும். . ஏவுதளம் அமைப்பதற்க்காக சுமார் 2300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 80% இடங்கள் பட்டா உள்ள இடங்களாகவும். மீதம் உள்ள 20 % நிலங்கள் அரசின் புரம்போக்கு நிலங்களாகவும் உள்ளன.


மக்கள் வசிக்குமிடம்

மாதவன் குறிஞ்சி என்ற இடத்தில் 27 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் தருவதோடு இழப்பீடு தொகையும் கொடுக்கப்படும். .
அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரவும் முடிவு செய்துள்ளனர்கள். என்று தூத்துக்குடி கலெக்டர்சந்தீப் நந்தூரிஅறிவித்துள்ளார்.

கையகப்படுத்துதல்

இதற்காக 2300 ஏக்கரில் 1781 ஏக்கர் இடம் மாதவன் குறிஞ்சி கிராம சுற்று வட்டாரத்தை கொண்டுள்ளது.

அங்கு 131 ஏக்கர் அரசின் புறம்போக்கு நிலங்களாக உள்ளது. படுக்கப்பத்து மற்றும் பள்ளக்குற்ச்சியில் 491 ஏக்கர் நிலமும் , திருச்செந்தூர்கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 22 ஏக்கரும் ராக்கெட் ஏவுதளத்திற்காக கையகப்படுத்தப்படும் .

குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள அமரபுரம் , அழகப்பப்புறம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்ப்ட உள்ளது.

இந்த பணியில் கிராக நிர்வாக அலுவலர்களும் இப்போது தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

அவர்கள் அந்த பகுதியில் உள்ள புராதான சின்னங்களையும், கோவில்களையும், மரங்களையும் கணக்கெடுத்து வருகிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் முடிவு பெற்றுவிடும். அதன் பிறகு, ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தொடங்கி 2 வருடங்களைல் அதுவும் முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இங்கு அமைக்கப்டும் ராகெட் ஏவுதளத்தில் SSLV (Small Satellite Launch Vehicle) என்ற சிறிய வகை ராக்கெட் ஏவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தெரிவித்தார்.

January 06, 2020

Upcoming ISRO Missions in 2020 (Video)


  1. Chandrayaan 3 This Year Last or Early Next Year 2021
  2. GAGANYAAN - This Year ISRO have to Finish the First DEMO of 3 Planned Test mission the Last one will be the Crewed Testing.
  3. Aaditya L1 - Mission for SUN by ISRO. This is Supposed to Launch by Summer of This year by this is getting Late by the LOCKDOWN of CORONA virus
  4. XPOSAT - The Upgraded version of the ASTROSAT or Part 2 of Astrosat This Year End Mission
  5. GSAT 20 - The satellite is planned to be launched by GSLV Mk III in June 2020
  6. The launch of GISAT-1 onboard GSLV-F10, planned for March 05, 2020, and this is postponed 
  7. NAVIC - Its chip System in Mobile applications will be ready and its already getting some updates by Snapdragon side

January 02, 2020

திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?


Betelgeuse

இந்த நட்சத்திரத்திற்கு தமிழ் பெயரும் உண்டு, அதன் பெயர் தான் “திருவாதிரை” நட்சத்திரம்.
இந்த நட்சத்திரம், (Orion Constellation) ஒரியான் நட்சத்திர திரள் அருகில் இருக்கும் ஒரு மிக பெரிய சிவப்பு அரக்கன் அன்று அழைக்கப்படும் நட்சத்திரம்.
பூமியில் இருந்து சுமார் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த நட்சத்திரம் சூரியனை விட சுமார் 500 முதல் 700 மடங்கு பெரியதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நம்முடைய இரவு வானில் தெரியும் 10 பிரகாசமான நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Twitter
இந்த நட்சத்திரத்தில் நமது சூரியனுக்குப் பதிலாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டால், இந்த சூரியனின் அளவு தற்போதைய வியாழன் கிரகத்துக்கு அருகில் வரை செல்லும்.


ஆராய்ச்சிகள்

நம்முடைய இரவு வானில் தெரியும் அனைத்து நட்சத்திரங்களையும் நாம் சுமார் 25 ஆண்டுகளாக பலதரப்பட்ட அறிவியல் உபகரணங்களை கொண்டு ஆராய்ச்சி செய்து வந்து கொண்டிருக்கிறோம். அப்படி ஆராய்ந்ததில் நாம் கண்டறிந்த ஒரு விஷயம் என்னவென்றால், இந்த திருவாதிரை நட்சத்திரம் ஆனது ஒரு மாறும் நட்சத்திரம் என்பது தான்.

Variable Star

ஒரு நட்சத்திரம் தனது ஒளிரும் தன்மையை மாற்றிக் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பும் இது போன்ற வேறு வேறு ஒளிரும் தன்மையை ஒரு நட்சத்திகிறம் கொண்டிருப்பின் அந்த நட்சத்திரத்தினை மாறும் நட்சத்திரம் (variable star) என்று அழைப்பர்.
இந்த திருவாதிரை நட்சத்திரமானது. 450 நாட்களுக்கு (土15 )ஒருமுறை தனது ஒளிரும் தன்மையை மாற்றி கொண்டே இருக்கும். என்ற விசயங்களை நாம் தற்போது மிகப்பெரிய அறிவியல் உபகரணங்களை வைத்து கண்டு பிடித்து இருக்கிறோம்.



Betelgeuse

திடீரென மங்கிய நட்சத்திரம்

இந்த திருவாதிரை நட்சத்திரமானது கடந்த மாதம் அதாவது டிசெபர் 8 ஆம் தேதி முதல், ஒளி குறைந்து பிரகாசம் இழந்து காணப்படுவதை. தன்னார்வ அறிவியலாளர்கள் கண்டரிந்தனர்.
Twitter
இந்த செய்தி தற்போது விண்வெளி ஆர்வளர்களிடம் வெகுவாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


சூப்பர் நோவா

ஒரு நட்சத்திரம் தனது வாழ்நாளை முடிக்கும் போது மிக பெரிய அளவில் வெடித்து சிதறும் இதனை சூப்பர் நோவா வெடிப்பு என்பர்.
இந்த மாதிரியான நிகழ்வுகள் பிரபஞ்சத்தில் நிகழலும் ஆற்றல் மிக்க நிகழ்வுகளில் ஒன்றாக கருகப்படுகிறது.




இது போன்று வெடித்து சிதறும் நட்சத்திறம் அதன் பிரம்பாண்டமான ஆற்றலின் காரணமாக சாதாரண புள்ளியாக தெரியும் நட்சத்திரம், மிகவும் பிரகாசமான ஆற்றல் வடிவமாக நமக்கு தெரியும்.
இதனை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமானதாக இருக்கும் இந்த நிகழ்வை 1600 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பழங்கால மக்கள் நேரடியாக பார்த்து இருக்கிறார்கள்.
ஆனால் நாம் வாழும் இந்த காலகட்டத்தில் இது போன்ற நிகழ்வு நடக்கும் போது நாம் அதிலிருந்து பல விண்வெளி புதிர்களை வெளிக்கொணர முடியும்.

உண்மையில் வெடிக்க போகுதா?

அது பற்றி உண்மையில் யாருக்கும் தெரியாது. ஆனால் நம்மை பொறுத்த வரையில் , ஒரு சில சமயங்களில் புயல் வரும் முன் ஒரு நிசப்தத்தினை உணரமுடியும்.
இது போன்ற பல நிகல்விகள் நம் வாழ்நாளில் ஏற்பட்டு இருக்கும்.
அது போலவே இந்த திருவாதிரை (betelgeuae) நட்சத்திரமானது . ஒளி மங்கி இருப்பது அது வெடிக்கும் நிகழ்வுக்கான ஒரு முன் நிகழும் நிகழ்வு என்று அனைத்து வானியல் வல்லுனர்களும் . நம்புகிறார்கள்.

முன் கூட்டியே ஏற்பாடுகள்

இந்த நிகழ்வு மிகவும் அரிதான நிகழ்வு. ஆதலால், பூமியில் உள்ள “நியூட்ரினோ” கண்டறியும் அபிசேர்வேட்டரி கள் இப்போது முழு வேகத்தில் இயக்கப்படுகிறது.
அதாவது, எந்த நட்சத்திடம் சூப்பர் நோவா வாக வெடித்தாலும் அதன் மொத்த ஆற்றலில் 99% த் தினை அது “நுயூட்ரினோ” வாக வெளியேற்றும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
அப்படி அந்த அளவு நியூட்ரினோ வெளிப்படுமாயின் அது ஒளியின் வேகத்தினை விட அதிக வேகத்தில் பயணிக்கும் என்று எதுர்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு நிகழ்வு நடக்குமாயின் நம்மால் இந்த நட்சத்திரம் வெடித்து சிதறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஒரு எச்சரிக்கை கிடைக்கப்படும்.
இதன் மூலம் நம்மாள் அந்த நட்சத்திரத்தில் பிரகாசம் நம்மை அடைவதர்கு சில மணி நேரம் முன்பிருந்தே அதை கண்காணிக்க முடியும்.
இதை பற்றிய தங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி