April 25, 2020

Covid-19 and ISRO


இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையானது நமது இந்தியாவின் பெருமை என்று கருதப்படக்கூடிய "இஸ்ரோ" விலும் பிரச்சனை செய்து வந்துள்ளது. அதாவது அங்கு இருக்கும் அறிவியல் அறிஞ்சர்களும் இப்போது வீட்டு காவலில் (Work From Home) இல் தான் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக தற்போது அடுத்த மாதம் நடக்க இருந்த Young Scientist நிகழ்ச்சியின் 11 நாள் வகுப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனை யுவிகா என்றும் அழைப்பர்.
அது மட்டும் இல்லாமல் இஸ்ரோவில் பலரும் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்வதால். இஸ்ரோவிலிருந்து இந்த ஆண்டு நடுவில் அதாவது ஏப்ரல் , மே மாதங்களில் ஏவுவதாக அறிவித்த ஆதித்யா சூரியனுக்கான விண்கலமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இந்தியாவில் இருந்து 4 Air force வீரர்கள் ரஷ்யா சென்றுள்ளனர். எதற்காக என்று நான் சொல்லி தெரிய தேவையில்லை அதுதான் இந்தியாவின் முதல் Human Space Program ககன்யான். அந்த வீரர்களின் பயிற்ச்சியும் இப்போது ரஷ்யாவில் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நாட்கள் குறைவாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள் . அதாவது இந்த ஆண்டின் இறுதியில் ககன்யானின் முதல் ஆளில்லா சோதனை ஓட்டம் நடைபெற வேண்டும். ஆனால் நமக்கு நேரம் மிகவும் குறைவாக உள்ளது .
எனினும் அவர்கள் சிறந்த முறையில் வேலை செய்து தற்போது இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயனத்திற்கு தேவையான தொழில் நுட்பங்களை பெறுவதற்காக ஒரு AO வை வெளியிட்டு உள்ளனர்.
AO - Announcement of Oppurtunity
இந்த AO வானது இந்தியாவில் உள்ள அறிவியல் நிலையங்கள், பல்கழை கழகங்கள், மற்றும் தனிநபரிடமிருந்து HSP க்கு உதவும் திட்டங்கள் மற்றும் ஐடியாக்கள் இருந்தால் கொடுங்கள் என்று ஒரு அறிக்கை விடுத்துள்ளனர்.
17 வகையான துறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  1. Radiation Hazards Characterisation and Mitigation Techniques
  2. Space Food and Related Technologies
  3. Inflatable Habitats Technology
  4. Human Robotic Interfaces
  5. Thermal Protection Systems
  6. Environmental Control And Life Support Systems
  7. Green Propulsion
  8. Advanced Materials
  9. Debris Management And Mitigation
  10. Energy Harness And Storage 
  11. In-situ 3D Manufacturing Technologies For Space
  12. Fluid Technology and Management
  13. Space Bioengineering 
  14. Bio-Astronautics
  15. Simulated Gravity Technologies
  16. Human Psychology For Long Term Missions
  17. Space Medicine And Diagnosis
  18. Any Other Relevant Technology Related To Human Space Program
இவைகளில் உங்களுக்கு ஏதேனும் ஒரு ஐடியா இருப்பின் அதனை நீங்கள் இஸ்ரோவுக்கு ஜூலை 15 2020க்கு முன்னதாக Speed Post மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் (softcopy)

Email : dhsp-ao@isro.gov.in
Address : Director, Directorate of Human Space Programme, ISRO Headquarters, Antariksh Bhavan,New BEL Road, Bangalore-560094.



April 23, 2020

Vyomanaut – வியோமனான்ட்

Russian’s = Cosmonauts, American’s = Astronauts, Chinese = Taikonaut’s, Indians = ? The Answer is Vyomanaut

Image Credits : Gareeb Scientist youtube Channel
இது என்னவென்று யோசிக்கிறீர்களா?
உங்கள் அனைவருக்கும் விண்வெளி வீரர்கள் என்றால் ஆங்கிலத்தில் என்ன நினைவுக்கு வரும் Astronaut என்பதுதானே.
ஆம் அனைவருக்கும் அதுதான் நினைவிற்கு வரும் .
ஆனால் விண்வெளிக்கு ஒரு சில குறிப்பிட்ட நாடுகள் தான் தனது வீரர்களை அனுப்பியுள்ளது அதில் அமெரிக்காவை சார்ந்த வீரர்களுக்கு மட்டும்தான் இந்த ஆஸ்ரோனாட் (Astronauts) என்ற வார்த்தை பொருந்தும்.
ரஷ்யாவும் தான் தனது வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது அவர்களின் வீரர்களுக்கு காஸ்மோனாட் (Cosmonauts)என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று சைனாவின் வீரர்கள் விண்வெளிக்கு சென்றால் அவர்களை உலகில் டைகோனாட்” (Taikonaut’s) என்று அழைப்பர்.
அடுத்த அந்த வரிசையில் இருப்பது யார் என்று உங்களுக்கு தெரியும் தானே. வேற யாரு இந்தியர்கள்தான்.
இந்தியாவில் இருந்து வீரர் ஒருவர் விண்வெளிக்கு சென்றான் அவருக்கு என்ன பெயர் தெரியுமா?
அது தான் ” வியோமனான்ட் (Vyomanaut)
சமஸ்கிருதத்தில் வியோம் (Vyom) என்றால் விண்வெளி என்று அர்த்தம்,

April 20, 2020

நான் பார்த்த நட்சத்திரங்கள் | VLOG | Stars Through My Phone

Hi guys I just used a star tracking app to find the star pattern.

And identified pattern of stars that I saw.

April 06, 2020

"Perseverance" Mars 2020 Rover Name Contest Winner

13 வயது நிரம்பிய அலெக்ஸ் மாதர் என்ற சிறுவன் தான் வருகின்ற ஜூலை(ஆகஸ்டு) 2020 இல் செவ்வாய்க்கு அனுப்ப இருக்கும் நாசாவின் புதிய ரோவருக்கு பெயரிட்டான் என்றால் நம்ப முடிகிறதா?

கட்டுரை போட்டி

இந்த 2020 மார்ஸ் ரோவருக்கு பெயரிடுவது தொடர்பாக ஒரு ஆண்டு முன்னரே நாசா ” name the rover ” என்ற ஒரு போட்டியை நடத்தி வந்தது.
அது ஒரு “கட்டுரை போட்டி” . ஆம் பள்ளி மாணாக்கள் “நாசாவின் ரோவர்கள்” என்ற தலைப்புகளில் தங்களின் சிறிய கட்டுரையை வெளியிட வேண்டும். கட்டுரையின் தலைப்பு ரோவரின் பெயர்.
அதற்காக எழுதப்பட்ட கட்டுரை நன்றாக இருப்பின் அந்த கட்டுரையின் தலைப்பை “ரோவரின் ” பெயராக எடுத்துக்கொள்ளப்படும் என்பதுதான்.

புதிய பெயர் : Perseverance

இதுவரை பெயரில்லாமல் இருந்த 2020 மார்ஸ் ரோவர் இப்போது “Perseverance = விடாமுயற்சி” என்ற பெயரினை பெற்றுளது.



அலெக்ஸின் கட்டுரை:

அலெக்ஸ் எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதுதான். என்னவெனில், ஏற்கனவே நாம் (நாசா) செவ்வாய்க்கு அனுப்பிய ரோவர் மற்றும் லேண்டர்களின் பெயர்களை கவனியுங்கள்
Curiosity – ஆர்வம்
Insight – நுண்ணறிவு
Spirit – ஆண்மா
Opportunity – வாய்ப்பு
இவையனைத்தும் மனிதர்களின் தனித்தன்மைகளாக கருதப்படுகிறது. (இதைத்தான் நாம் ரோவர்களுக்கும் பெயராக வைத்து இருக்கிறோம்) அப்படி இருக்கையின் மனிதனின் மற்றோரு முக்கியமான பண்பாக கருதப்படுவதுதான் விடாமுயற்சி என்று கூறக்கூடிய Perseverance.
இந்த அடுத்த பண்பைதான் நாம் அடுத்த ரொவருக்கு வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் அலெக்ஸ் எழுதிய சிறிய கட்டுரையில்.

கட்டுரை பின்வருமாறு

Curiosity
Insight,
Spirit
Opportunity
if you think about it, all of these names of past mars rovers are qualities we possess as humans.
we are always curies and seek oppurtunity we have the spirit and insight to explore moon mars beyand but if rovers are to be the qualities of us as a race, we missed the most important thing: perseverance,
we as humans evolved as creatures who could learn to adapt to any situatin, no matter how harsh.
we are species of explorers and we will meet many setbacks on the way to mars.
how ever we can persevere,
we, not as a nation. But as Humans, will not give up
The human race will always persevere into the future.

-Alexander Mather
NASA Rover Naming Contest Winner

Video