May 29, 2020

ESPRESSO Confirms the Proxima B | Habitable Planet Near Proxima centari in Tamil

பூமிக்கு அருகில் உள்ள பூமிபோன்ற கிரகம்
Proxima B Artistic Concept in Tamil

ஏற்கனவே நாம் Proxima C பற்றியும் அதன் கூடவே Proxima B பற்றியும் பார்த்து இருந்தோம்.

இப்போது நமது சூரியனுக்கு மிகவும் அருகாமையில் உள்ள "பிராக்ஸிமா செண்டாரி" நட்சத்திரத்தினை சுற்றிவரக்கூடிய முதல்  கிரகமாக 2016 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட கிரகம் தான் பிராக்ஸிமா பி.

இந்த கிரகத்தினை ரேடியல் வெலாசிட்டி என்ற முறையை பயன்படுத்தி ஆராய்சியாளர்கள் ஆகஸ்டு 2016 இல் கண்டறிந்தனர்.

இருந்த போதிலும் இந்த கிரகத்தின் பல கச்சிதமாக தகவல்கலை (Precise Data) ஆராய்சியாளர்கள் தற்போதுதான் கண்டறிந்து உள்ளனர்.

ESPRESSO & Harps

(Echelle Spectrograph for Rocky Exoplanet- and Stable Spectroscopic Observations) இதைத்தான் ESPRESSO என்று கூறுகின்றனர், இது நிறமாலை கருவிகளில் பயன்படுத்தப்படகூடிய ஒரு கருவி. இதன் மூலமாக நமக்கு மிகவும் துள்ளியமாக தகவல்களை பெற முடியும்.

Credits : Wiki


ஒளி நிறமாலையில் இந்த கருவியினை கொண்டு ரேடியல் வெலாசிட்டி முறையில் கண்டறியப்படும் கிரகத்தினை தண்மைகளை (உம்) எடை, அளவு போன்றவற்றினை பற்றி மிகவும் துள்ளிய தகவல்கள் அறிந்துகொள்ள முடியும்.

Harps

High Accuracy Radial Velocity Planet Searcher என்பதுதான் இதன் சுருக்கம் இந்த ஹார்ப்ஸ் என்பது.

இது ஒரு பிரத்தியேகமான planet-finding spectrograph (நிரல் வரைவி) இந்த கருவியானது ESO விற்கு சொந்தமான 3.6 மீட்டர் தொலை நோக்கியான LA SILLA Observatory யில் 2002 ஆம் ஆண்டு பொருத்தப்பட்டது. (இந்த லா சில்லா Observatory சிலி என்ற நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.)

Credits : ESO


மாற்றப்பட்ட தகவல்கள்


கிரகத்தின் நிறை - 1.17 பூமியின் எடைக்கு சமம் (ஏற்கனவே இதை நாம் 1.3 என்று கணித்திருந்தோம்.)

கிரகம் சூரியனை சுற்றிவர எடுக்கும் காலம்


இந்த பிராக்ஸிமா பி கிரகமானது தனது சூரியனை சுற்றிவர 11.2 பூமியின் நாட்களை எடுத்துக்கொள்ளும்.

சூரியனிடமிருந்து கிரகமிருக்கும் தொலைவு


நமது பூமி நமது சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ள்தோ அதைவிட 20 மடங்கு அருகில் உள்ளது இந்த கிரகம்.

என்னதான் இந்த கிரகம் அதன் சூரியனுக்கு மிகவும் அருகில் இருந்தாலும் நமது பூமிக்கு நம் சூரியனிடமிருந்து எவ்வளவு ஒளி மற்றும் ஆற்றல் கிடைக்கிறதோ அந்த அளவுதான் பிராக்ஸிமா செண்டாரி நட்சத்திரத்திலிருந்து இந்த கிரகத்திற்கு கிடைக்கிறது என்று தரவுகள் நமக்கு சொல்லுகின்றன.

இருந்த போதிலும் என்னதான் பிராக்சிமா செண்டாரி ஒரு குள்ள நட்சத்திரமாக இருந்தாலும். நம் சூரியனை விட எடை குறைந்ததாக இருந்தாலும்

Artistic Concept of Proxima B

அதன் அருகில் இருக்கும் இந்த பிராக்ஸிமா பி என்ற கிரகத்தில் மேலே அதிகப்படியான X Ray கதிர்களை அள்ளி தெளிக்கிறது.

அதிகப்படியான் X கதிர்கள் நமது பூமியில் , நமது சூரியனிடமிருந்து வரும் அளவினை விட 400 மடங்கு அதிக X கதிர்களை இந்த பிராக்ஸிமா பி கிரகத்திற்கு அதன் நட்சத்திரம் கொடுத்து வருகிறது.

இதனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தில் உயிரினங்கள் வருவாகி இருக்க வாய்ப்பு இருக்குமா கண்டு பிடிப்பதற்காக அந்த கிரகத்திற்கு வளிமண்டலம் இருக்குமா? என்றும் அது எந்த அளவு பலம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் ஆராய்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Ref

May 09, 2020

Analemma of the Moon | நிலவின் சாய்வான சுற்றுப்பாதை!!!

05-07-2020

An analemma is that figure-8 curve you get when you mark the position of the Sun at the same time each day for one year. But the trick to imaging an analemma of the Moon is to wait bit longer. On average the Moon returns to the same position in the sky about 50 minutes and 29 seconds later each day. So photograph the Moon 50 minutes 29 seconds later on successive days. Over one lunation or lunar month it will trace out an analemma-like curve as the Moon's actual position wanders due to its tilted and elliptical orbit. To create this composite image of a lunar analemma, astronomer Gyorgy Soponyai chose a lunar month from March 26 to April 18 with a good stretch of weather and a site close to home near Mogyorod, Hungary. Crescent lunar phases too thin and faint to capture around the New Moon are missing though. Facing southwest, the lights of Budapest are in the distance of the base image taken on March 27.

Image Copyright: Gyorgy Soponyai