July 20, 2020

Hope Spacecraft Successfully Launched to Mars from Japan


Hope Spacecraft

அமீரகத்தின் செவ்வாய்க்கான விண்கலம் "ஹோப்" இன்று காலை 7 மணியளவில் , ஜப்பானின் "தனிகசிமா" (Tanegashima Space Center) விண்வெளி மையத்தில் இருந்து


H-IIA ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் அடுத்த வருடம் பிப்ரவர் மாதம் , அதாவது 2021 பிப்ரவரியில் , செவ்வாயில் தரையிரங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இது இந்த மாதம் 14 ஆம் தேதி விண்னில் ஏவ திட்டமிட்டு இருந்தனர். இருப்பினும் ஜப்பானில் நிலவிய பருவ நிலை காரனமாக 6 நாட்கள் தாமதப்படுத்தி , (20.7.2020)  இன்று . விண்ணில் ஏவியிருக்கிறார்கள்

Video:




Ref : Verge


July 07, 2020

Phobos Moon of Mars Photo Taken by Mangalyaan (MOM) ISRO Latest Update

போபோஸ் என்பது செவ்வாயின் இரண்டு நிலவுகளின் மிகவும் பெரிய நிலவு அதுமட்டும் இல்லாமல் இது செவ்வாய்க்கு மிக அருகில் உள்ளது
இதை எடுக்கும் போது மங்கள்யான் சரியாக 4200 கிமீ தொலைவில் இருந்துள்ளது. அப்படியோ செவ்வாய்கும் மங்கள்யானுக்கும் சுமார் 7200 கிமீ தொலைவு இருந்திருக்கும்.

சுமார் 6 துண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த படம் பின்பு வரைகலை வல்லுனர்களார் ஒன்று சேர்க்கப்பட்டது. பின் இதற்கு ஒரு சில வண்ணங்களையும் அவர்கள் கொடுத்துள்ளனர்.


வீடியோ:

July 03, 2020

$360 Billion Space Economy What is India's?? | ISRO Chief K. Sivan Speech on June 25th 2020 in Tamil

இஸ்ரோ தலைவரின் பேச்சு:

கடந்த 25ஆம் தேதி ஜூன் மாதம் 2020இல் இஸ்ரோவின் தலைவர். மற்றும் இந்திய விண்வெளி துறையின் தலைவருமான டாக்டர் கே. சிவன் அவர்கள், 

இஸ்ரோவின் யூடியூப் சேனலில் ஒரு நேரடி காணொலி ஒன்றை பேசியிருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருந்த சாராம்சம் என்ன என்று பார்ப்போம்.



சாராம்சம் என்ன?:

அவரின் பேச்சிலிருந்து தெரிந்து கொள்வது என்னவெனில். இந்தியாவின் விண்வெளி துறையான இஸ்ரோவானது,

தனது பனிகளையும் . வேலை செய்யும் பகுதிகளையும் விரிவு படுத்த இருக்கிறது. 

இதற்கான முதன் முயற்சிதான். இந்த மாதிரி தனியார் விண்வெளி நிறுவனங்களை இஸ்ரோவின் இனைக்கும் முயற்சி. 

இதன் மூலம் இஸ்ரோ தனது வேலைகளையும் சிறப்பாக செய்ய முடியும், அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பையும் கொடுக்க முடியும்.

உலகலாவிய விண்வெளி பொருளாதாரம்:

இந்த உலகில் ஒட்டு மொத்த விண்வெளி பொருளாதாரம் எனப்படும் Global Space Economy யானது ஒட்டு மொத்தமாக $360 பில்லியன் டாலர்கள் ஆகும்.


அதில் வெறும் 

  • 2% மட்டும் தான் ஒட்டுமொத்த ராக்கெட் ஏவுவதற்கும் செலவாகிறது
  • 5% மட்டும் தான் செயற்கைகோள் தயாரிக்க செலவாகிறது
  • இஸ்ரோவின் பங்கு வெறும் 3% (Less then <3%) மட்டும்தான்
  • மீதமுள்ள பங்குகளில் 45% த்தினை விண்வெளி தொடர்பான சேவைகள் அமைப்பு கையில் கொண்டுள்ளது. இதில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு, செல்போன் சேவைகள். விமான நேவிகேஷன் சேவைகள் போன்றைகளும் அடங்கும். அது மட்டும் இல்லாமல் இது வெறும் சொற்ப்பம்தான். 
  • மீதம் இருக்கும் 48% பங்குகளை Ground Segments எனும் துறை பெறுகிறது. ஒரு செயற்கைகோளை விண்ணில் சரியாக ஏவும் வரை அல்லது அது செயல் படும் வரை அதனை கண்கானிக்க உதவுவதே இந்த Ground Segments இல் அடங்கும்.  Telemetry and DSN etc...


 👉👉👉What are Ground Segments👈👈👈👈


திட்டம்:

இஸ்ரோ, தற்போது 45% உலக விண்வெளி பொருளாதாரத்தினை உள்ளடக்கிய. துறையான Space Based Services and Applications என்பதை கையில் எடுக்க உள்ளது.

இதற்காக நமக்கு அதிக அளவில் மனித வளம் (Man Power) மற்றும் அறிவு வளம் மற்றும் அனுபவம் தேவைப்படும்.

அந்த குறிப்பிட்ட துறையில் ஆர்வமும். அனுபவமும் கொண்டு ஏற்கனவே இயங்கிவரும். இளம் இந்திய விண்வெளி தனியார் அமைப்புகளை இஸ்ரோவுடன் இனைக்கும் பனிதான் இந்த திட்டம். 

NSIL & In-SPACe

New Space India Limited 

என்பதன் சுருக்கமே NSIL ஆகும். இந்த அமைப்பு ஏற்கனவே 2019 ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டுவிட்டது.

இதன் முக்கிய நோக்கம், வியாபார ரீதியான அனைத்து காரியங்கலையும் இனிமேல் என்.எஸ்.ஐ.எல் தான் பார்த்துக்கொள்ளும். 

இதற்கு முன்புவரை இஸ்ரோ மட்டுமே இவை அனைத்தையும் செய்து கொண்டிருந்தது. அதாவது.

வியாபார ரீதியான செயல்பாடுகள், செயற்கைகோள் உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்ற செயல்பாடுகளை தனியே கவனித்துகொண்டு இருந்தது. 

பிறகு இதில் ஒரு பகுதியை மட்டும் NSIL என்ற அமைப்பை தனியாக பிரித்து அவர்களுக்கு பொறுப்பு கொடுத்துவிட்டார்கள்.

இனிமேல் இஸ்ரோ விஞ்சானிகள் தங்களின் ஆராய்சி பனிகளை திறம்பட கவனம் செலுத்தி செய்ய முடியும்.

In-SPACe

இதே போல் இன்-ஸ்பேஸ் என்ற அமைப்பானது. இப்போது இஸ்ரோ மற்றும் இந்திய அரசாங்கம் எடுத்துள்ள புதிய திட்டமான "தனியார் விண்வெளி நிறுவனங்களை" இஸ்ரோவுடன் இனைக்கும் புதிய முயற்சிக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள ஒரு புதிய அமைப்பு.

இந்த அமைப்பின் மூலம்தான். இதன் தனி கொள்கைகளை வகுக்கப்படும். என்று கூறியுள்ளது. (Safety Policies , Security Policies  and Regulation )

அதே போல். இந்த அமைப்பு DOS இன் கீழ் தனித்து இயங்கும் என்றும் மற்றும் முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த இன்-ஸ்பேஸ் என்ற அமைப்பை உருவாக்க குறைந்தது 3 முதல் 6 மாத காலங்கள் வரை ஆகலாம். 

ஆனாலும் இஸ்ரோ தற்போது Fasttrack செயல்பாடுகளின் ஒரு சில தனியார் விண்வெளி அமைப்புகளை சேர்த்து வருகிறது. 

அதாவது In-SPACe என்ற நிறுவனம் வருவதற்கு முன்னதாகவே.

அது போன்ற ஒரு சில தனியார் இந்திய விண்வெளி நிறுவனங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

பலன்கள்:

இந்த செயல்களின் மூலமாக இந்தியாவானது பல உலகநாடுகளுக்கு. குறைந்த விலையில் அதிக விண்வெளி சம்மந்தபட்ட சேவைகளை கொடுக்க முடியும். அது மட்டும் இல்லாமல். 45% விண்வெளி சார்ந்த சேவைகளை நாம் கையில் எடுப்பதன் மூலமாக . நம்மால் அதிக வருமானம் ஈட்டமுடியும்.

என்னை பொறுத்தவரையில் இந்த முயற்சியானது. இஸ்ரோவும் இந்திய அரசாங்கமும் எடுத்த மிகப்பெரிய முயற்சி என்றுதான் கூறவேண்டும்.

மிகவும் தொலைநோக்கி பார்வையுடன் எடுக்கப்பட்ட முடுவாக நான் பார்க்கிறேன். (More Focused Decision) by Govt and ISRO, 

2020 இல் தான் நம்மால் வல்லரசு நாடாக வரமுடியவில்லை. இந்த திட்டம் சரியாக நடக்கும் பட்சத்தில் 2040 நிச்சயம் நம்மால் வல்லரசு நாடாக வர முடியும்,

அப்படி இல்லையென்றாலும் பொருளாதார ரீதியில் நம்மால் ஒரு நல்ல இடத்தில் இருக்க முடியும் .என்பது என் கருத்து உங்களுடையது என்ன?

பதிவிடுங்கள்.


👇💪💜 
மிக்க நன்றி இந்த இனையதளத்தினை பார்வையிட்டதற்கு.



ISRO Ground Segments Mauritius, PortBair, Brunei,Telemetry | ISRO's Deep Space Network in Tamil


ISRO's Ground Stations


ஒரு ராக்கெட் நாம் ஏவுகிறோம் என்று சொன்னால் அதனை நாம் சரியாக பூமியில் வட்டபாதையில் நிலைநிறுத்தும் வரை கண்கானிக்க வேண்டும்.


அது மட்டும் அல்ல சுற்றுபாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோளில் இருந்து தரவுகளை பதிவிறக்கவும் இந்த நிலையங்கள் பயன்படுத்தப்படும்.


மேலே உள்ள வரைபடம் நாம் எங்கெல்லாம் இது போன்ற நிலையங்களை வைத்து இருக்கிறோம் என காட்டுகிறது. இதில்

  • ST1 & ST2 என்பது கப்பல் மூலம் இயங்கும் தளங்கள்.
  • Goldstone, Madrid & Canberra இவைகள் நாசாவுக்கு சொந்தமான DSN (Deep Space Network) இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிக உணர்திறன் வாய்ந்த அறிவியல் தொலைத்தொடர்பு அமைப்பு
  • மொரிஷியஸ், போர்ட்பிளையர், Brunai மற்றும். Biak (Indonesia) போன்ற இடங்களில் இஸ்ரோ இதுபோன்ற கிரவுண்டு ஸ்டேஷங்கலை நிறுவியுள்ளது.
ISRO Telemetry and Tracking System around the World


ISRO Ground Segment in Mauritius



ISRO Downrange Station at Biak (Indonesia)



அதுமட்டும் இல்லாமல் நாம் வேறு கிரகங்களுக்கு விண்கலண்கலை ஏவும் போது அதிலிருந்து வரும் தகவல்கலை பெற நாசா போன்ற அமைப்பினருக்கு சொந்தமான பெரிய ரேடியோ ஆண்டனாக்கலை பயன்படுத்துகிறோம்.

இதனை இரண்டாக பிரிக்கிறார்கள் 
  1. Launch Phase
  2. Orbital Phase
மேலே பார்த்தது போல நாம் வைத்து இருப்பது அனைத்தும். ராக்கெட் ஏவும்போது கவனிக்க பயன்படும் கவனிப்பு நிலையங்கள்தான். 

ஒரு செயற்கைகோள் வின்னில் ஏவியபிறகு அதிலிருந்து வரும் தகவல்கலை பெற நாம் இன்னும் நாசா போன்ற பெரிய நிறுவங்களையே சார்ந்து இருக்கிறோம்.

Ref : ISROISRO 2