ஜனவரி 30, 2021

NASA Gives up on Insight's Heat Probe Equipment (MOLE Experiment)

Insight Lander Heat Probe 3 is Failed Equipment 

நவம்பர் 2018 ஆம் ஆண்டு நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாயில் தரையிரங்கியது நினைவிருக்கலாம்.

Insight Lander Heat Probe Failure Announce

இந்த லேண்டர் , செவ்வாயில் உள் கட்டமைப்புகளை அறிந்து கொள்வதற்காக அனுப்பப்பட்டது. அதாவது

  • கிரகத்தின் ஏற்படும் நில அதிர்வுகள் (seismic meter)
  • வெப்ப நிலை,(Heat probe)
  • கிரகத்தின் உள் கட்டமைப்பு  

போன்றவை,

Insight Lander Heat Probe Failure Announced by NASA

Podcast

இந்த லேண்டரில் உள்ள ஒரு சிறப்பான கருவிதான் செவ்வாயில் உள் வெப்பநிலை கண்டறியும் கருவி இது ஒரு குச்சி போன்றது. அதன் பெயர் HP3 அல்லது ஹீட் புரோப் (Heat Probe 3)

அதாவது தனக்கு தானே (Self Hammering) ஸ்பிரிங் அமைப்பை கொண்டு ஆணி அடிப்பது போல் (செவ்வாய் கிரகத்தின் உள்ளே செல்லும்) தண்மை உடையது.

இந்த அமைப்பை மொத்தமாக நாசா தற்போது கைவிட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த குறிப்பிட்ட உபகரனம் இனிமேல் செயல் பட போவதுமில்லை என்றும். குறிப்பிட்டுள்ளது.


Insight லேண்டரில் உள்ள எந்திர கை உதவியுடன். அந்த MOLE அமைப்பை அழுத்தி பிடிக்கும் காட்சி,

உதவிகள் : என்னென்ன முறையில் இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சித்தனர்

Feb 28 2019 ஆம் ஆண்டிலிருந்தே இந்த பிரச்சனையை சரிசெய்யும் முயற்சியில் நாசா குழுவினர் இருந்தனர். 

அதில் முதன் முயற்சியாக மேலே தள்ளப்பட்ட உபகரணத்தினை எந்திர கைகொண்டு தரையில் அழுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இதன் காரனமாக அது 35 செண்டி மீட்டர் வரைக்கும் எட்ட முடிந்தது (செவ்வாய் கிரகத்தின் அடியில்) மிக அதிக மாக

பிறகு திரும்பவும் அது மேலே தூக்கி எரியப்பட்டது. இதனால் நாசா விஞ்சானிகள்.

அருகில் இருக்கும் மணலை அதில் வைத்து அடைத்து உராய்வை ஏற்படுத்தி இன்னும் அதிக ஆழம் செல்ல வைக்க முடியும் என நினைத்தனர். 


ஆனால் அவர்கள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.

இதனால் தற்போது ஜனவரி 9 2021 இல், நாசா இந்த வெப்பம் அளவிடும் Heat Probe கருவி செயல் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இதற்கு மேல் விஞ்சானிகள் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள்.

ஜனவரி 29, 2021

143 செயற்ககோள்களை விண்ணில் ஏவி SpaceX புதிய உலக சாதனை ISRO வின் சாதனையை முறியடித்ததா?

இஸ்ரோவின் 104 செயற்கைகோளை ஒரே ராக்கெட்டில் வின்ணில் ஏவிய சாதனையை முறியடித்தது ஸ்பேஸ் எக்ஸ் 

Space x launches 143 Satellite into orbit record break ISRO's Old 2017 record for 104 Satellite by 1 Rocket Launch


ஜனவரி 25, 2021 இல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதன் சிறிய ரக ராக்கெட் பயன பகிற்வு திட்டத்தில் (SmallSat Rideshare Program) முதன்முதலாக 143 செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வெற்றி பெற்றுள்ளது.

இது இந்தியாவின் விண்வெளி நிறுவனமாக இஸ்ரோ கடந்த 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று PSLV-C37 ராக்கெட் மூலம்   104 செயற்கைகோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்த அந்த நிகழ்வின் சாதனையை முறியடித்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.


டுவிட்டர் பதிவு


Transporter 1

Space X ஆல் Transporter 1 என பெயரிடப்பட்ட இந்த திட்டம் Falcon 9 ராக்கெட் கொண்டு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இதி 133 அரசாங்க செயற்கைகோள்களும்
ஸ்பேஸ் எக்ஸ் கு சொந்தமான 10 ஸ்டார் லிங்க் செயற்கைகோள்களும் அடங்கும்
ஸ்பேஸ் எக்ஸ் 143 செயற்கைகோள் விண்வெளி செய்திகள்


அனைத்து செயற்கைகோள்களும் 500 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன். அதாவது அவை போலார் வட்ட பாதை எனப்படும். ஒரு துருவத்தில் இருந்து மறு துருவத்திற்கு சுற்றி வரும்.

இந்த திட்டத்தில் பங்கு பெற்ற மொத்த செயற்கைகோள்களின் எடை சுமாராக 5 டன் அதாவது 5000 கிலோ கிராம் எனப்படுகிறது.