Ingredients for Life? in Europa | யுரோப்பாவில் வாழ்வியல் ஆதாரம்?

யுரோப்பா என்பது ஒரு துனைக்கிரகம்,!! எதனுடையது என்றால். ?? ஒரு மிகப்பெரிய காற்று கோளமான வியாழன் கிரகத்தின் ஒரு துனைக்கிரகம்..
இதற்கு வேறு ஒரு பெயரும் உண்டு, அது என்ன வெனில்.?

கலிலியோ நிலவுகள்.!!!!!  ஜோவியன் நிலவுகள் (Jovian moons, ) & (Galilean satellites )

ஆம், இந்த துனைக்கிரகமானது 1610 ஆம் ஆண்டுகளிலே கலிலியோ கலிலி யால் கண்டு பிடிக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து மூன்று துனைக்கிரகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன..இதனால் தான் “நிலவுகள்”

இங்கு நாம் பார்க்க இருப்பது. இதன் வாழ்வியல் தன்மைகள் பற்றிதான். ஆமாம் இந்த கிரகத்தினை ஆராய்ச்சி செய்ய நாசாவும் ., ESA வும் தனித்தனியே விண்கலன் களை கட்ட ஆரம்பித்துள்ளனர்…அப்படி என்ன அங்கு இருக்கிறது என பார்ப்போம்….!!!

வரலாறு:

இதுவரை இரண்டு விண்கலங்கள் தந்த தரவுகளின் அடிப்படையில் தான் அனைத்தும் அனுமானிக்கப்படுகிறது… முதலில் சென்ற வாயோஜர் விண்கலம் தான் 1970களில் இந்த கிரகத்தினை ஃபலை பை (FlyBy) செய்து, அதாவது அதன் பக்கமாக பறந்து அதன் புகைப்படங்களை எடுத்து.
பின் 1995-2003 வாக்கில் அனுப்பிய கலிலியோ மிஷனானது ( Galileo mission)
இதைப்பற்றிய பல அரிய புகைப்படங்களையும் மற்றும் பல முறை அந்த துனைக்கிரகதின் மேல் பறந்தும் (made numerous flybys of Europa) அதைப்பற்றிய அனைத்து தகவல் களையும் சேகரித்தது..

அதன் வாயிலாகதான் அந்த கிரகத்தின் மேல் அடுக்கானது பனியால் படர்ந்துள்ளது என தெரியவந்தது. மேலும் அந்த பனி மேலடுக்கில் பல தரப்பட்ட சேதங்கள் இருப்பதும் தெரியவந்தது,. பிறகு தான் 2013 ஆண்டு, இந்த கிரகத்தினை ஹுப்புள் விண்வெளி தொலைநோக்கி வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.அதன் பின் தான் , சனிகிரகத்தின் என்ஸிலேடஸ்  துணைக் கிரகத்தில் இருப்பது போன்று புகைத்திரள்களை வெளிவிடும் ஓட்டை போன்ற பகுதி இருப்பது தெரியவந்துள்ளது. இது விண்வெளி ஆராய்சியாளர்களை மிகந்த ஆச்சரியத்தில் உட்படுத்தியுள்ளது…

உலகலாவிய கடல்:

விண்வெளி ஆராய்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது புகைதிரள் ஓட்டைகள் மட்டுமல்ல, அதன் பனியோடுகளுக்கு கீழ் உள்ள உலகலாவிய உப்புதன்னீர் கடல் என கண்டுபிடிக்கப்பட்டதுதான். 
அதன் ஆதாரம்:
1995-2003 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட கலிலியோ மிஷின் மூலமாக ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது அது என்ன வென்றால், நமது பூமியைபோன்றெ ஒரு காந்த ஓட்டப்பகுதியானது வியாழன் கிரத்திலும் உள்ளன.. ஆனால் அந்த காந்த மண்டலமானது யுரோப்பாவின் அருகினில் மட்டும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறது.
இதற்கு காரணம் என்ன வென்று ஆராய்கையில் அது, யுரோப்பாவின்  இருக்கும் ஒரு சிறப்பு வகை காந்த புலம் என தெரியவந்துள்ளது..  அந்த சிறப்பு காந்த புலத்திற்கான   காரணம் என்ன என்று அறிஞ்சர்களின் கருத்துப்படி பார்ப்போமேயானால். அது “சில மின்மயமாக்கும் திரவத்தினால்” ஆக்கப்பட்டிருக்கலாம்……………….
மேலும் அது அந்த யுரோப்பா துனைக்கிரகத்தின் பனிமேலேடுகளுக்கு கீழ் இருக்கலாம் என கருதுகின்றனர்…
மேலும் அதுதான் உப்பு தண்ணீர் என்றும் அது அந்த பனிமேலோடுகளுக்கு கீழ் ஒரு கடலாக இருக்கலாம் என. அறிஞ்சர்கள் கருதுகின்றன.

எனர்ஜி(ஆற்றல்)

நமது கிரகத்தினை போல் அல்லாது யுரோப்பாவானது சூரியனை விட்டும் பல மடங்கு தூரத்தில் உள்ளது… பிறகு எப்படி இந்த கிரகத்தில் உயிர் வாழ்விற்கான (LIFE BUILDING BLOCK) இருக்க முடியும் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு தான் இந்த பதில், 
யுரோப்பாவானது  , வியாழன் கிரகத்தினை 3.5 நாட்களில் முழுவதும் சுற்றிவிடும் மேலும் இது வியாழன் கிரகத்தில் ஈர்ப்பு விசையினால் பூட்டப்பட்டுள்ளது… யுரோப்பாவின் அரைக்கோளம் தான் எப்பொதும் வியாழன் கிரத்தினை நோக்கி இருக்கும் படி, இந்த கிரகம் அமையப்பட்டுள்ளது மேலும், இதன் வட்டபாதையானது சற்று நீள்வட்ட பாதை என்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையானது . யுரோப்பாவின் பகுதிகளை சற்று இழுத்தும் , சாதாரனமாகவும் (மாவு பிசைவது)  விடுவது போல் ஆக்குகிறது…
புரியவில்லை எனில் வீடியோவினை பார்க்கவும்
இந்த மாதிரி யுரோப்பாவானது 30 மீட்டர் வரை விரிவாகக்கூடும். இதுவே அதன் ஆற்றலான வெப்ப சக்திக்கு அடித்தளமாக அமையும் என அறிவியலாவர்கள் கருதுகிறார்கள்… அதாவது அந்தகிரகத்தின் உப்பு தன்னீரினை  திரவநிலையில் வைத்து இருப்பதற்கு அந்த வெப்ப ஆற்றலே போதும் என கூறுகின்றன, அதனால். அங்கு உயிர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கலாம் என கருத்து நிலவுகிறது வின்வெளி அறிஞ்சர்கள் மத்தியில்..

No comments