November 24, 2017

Interstellar Visitor "Oumuamua" வேறு சூரிய குடும்பத்திலிருந்து வந்த ஆஸ்டிராய்டு "ஒமுவாமுவா"


Updated Article Found Here

Oumuamua Intersteller visiter 2017 discovery
மிகவும் புதிரான , வித்தியாசமான ஒரு ஆஸ்டிராய்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுநமது சூரிய குடும்பத்தில் உருவாகி நமது சூரியனை சுற்றும் சாதாரணமான ஆஸ்டிராய்டு கிடையாது என்பதுதான் மேலும் ஆச்சரியமான விஷயம். இதன் பெயர்ஒமுவாமுவாஎன்பதுதான். அர்த்தம். புதிய விருந்தாளி
அக்டோபர் 19 ஆம் நாள் 2017 அன்றுபான்ஸ்டார் 1″ எனும் ஹவாயில் உள்ள ஒரு சிறிய தொலை நோக்கியின் மூலம் இது ஒரு சிறிய லேசான புள்ளியாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சதாரன ஆஸ்டிராய்டு என நினைத்தனர். பின்னர் அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டினை மேலும் இரண்டு நாட்களுக்கு ஆராய்சி செய்தனர். ஆனால் அவர்கள் ஆராய்ச்சி செய்தது அதன் டிரஜக்டரி என்று சொல்லக்கூடிய வளைவுபாதையும் , வட்டபாதையும்
 
அதன் ஆய்வு முடிவுகள் தான் எல்லாரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. ஏனெனில் அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டு ஆனது நமது சூரிய குடும்பத்தில் உருவாகி நமது சூரியனை சுற்றிவரும் ஒரு சாதாரண ஆஸ்டிராய்டு கிடையாது. இது நமது சூரிய குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாமல் , வேறு ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில் இருந்து வந்த ஒரு ஆஸ்டிராய்டு என்றது. எல்லா அறிஞ்சர்களும் வாயை பிளக்க ஆரம்பித்தனர்.
அதன் பிறகு ESO வில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி கொண்டு இதனை ஆராய்ச்சி செய்து அதன் வடிவம், நிறம் போன்றவை கண்டிபிடிக்கப்பட்டது. இது அடர்ந்த சிவப்பு நிறத்தில் உள்ளதாகவும். அதன் வடிவம் இதுவரை பார்த்திடாத அளவு வித்தியாசமாக ஒரு குச்சியை போன்று இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். 400 மீட்டர் நீள்வாக்கிலும், வெறும் 40 மீட்டர் அகலமும் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. (மேலே உள்ள படத்தில் இருப்பது போன்றுஇவ்வளவு நாம் நாம் எப்படி இதனை கண்டிராது விட்டோம் என பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். ஆம் இந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டு ஆனது கடந்த செப்டம்பர் மாதம் நமது சூரியனை கடந்துள்ளது. என்பது குறிப்பிடித்தக்கது
All Electronics @ Lowest Price
மேலும் இந்த ஆஸ்டிராய்டு மூலம் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இது பூமியை கடந்து சென்று விட்டது. இதனை நாசாவின் கிரக பாதுகாப்பு என்று சொல்லக்கூடிய “Nasa Near Earth Object” அமைப்பை சேர்ந்தவர்கள். இதனை வெளிஉலகுக்கு கொண்டு வந்தனர்
Updated Article Found Here
 
 

November 23, 2017

Garden in Space | சர்வதேச விண்வெளி மையத்தில் தோட்டம்.

இது வரைக்கும் நீங்கள் செவ்வாயில் உருளை பயிரிடுவதை திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். “மார்ஷியன்எனும் திரைப்படத்தில் இதனை உங்களுக்கு காமித்திருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் கற்பனைக்கதை. நிஜத்தில் உண்மையில்சர்வதேச விண்வெளி நிலையமான” ISS ல் தாவரங்கள் பயிரிடுவதெற்கென சிறப்பான ஒரு ஹாபிடன்ட் இருக்கிறது.
விண்வெளியில் பயிரிட்டால் வளருமா என்ற கேள்வி உங்களில் மனதில் இருந்தால். இதோ  பதில். “வளரும்என்பதுதான்சர்வதேச விண்வெளி நிலையத்தினை பொறுத்தவரை ஒரு சில காய்கறிகளை அவர்கள் விண்வெளி நிலையத்தில் முளைக்க வைக்கிறார்கள். (veggie) எனப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பானது 2013 ஆம் ஆண்டு சர்வதேச நிலையத்தில் அமைக்கப்பட்டது. இந்த வெஜ்ஜி அமைப்பானது கீரை வகையான அல்லது சால்ட் டைப் பொருட்களை உற்பத்தி செய்ய கூடிய அளவிற்கு உருவாக்கியுள்ளனர். இது மூன்று பேர் அடங்கிய குழு சாப்பிடும் அளவுக்கு உருவாக்கதக்கது. சர்வதேச விண்வெளி குழுவினருக்கு ருசியான , சத்துள்ள மற்றும் ஃப்ரஸ் உணவுப்பொருள்களை வழங்கவல்லது
நீங்கள் பார்க்கும் புகைப்படமானது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கொலம்மஸ் தொகுதியில் உள்ள VEG-03 எனும் ஒரு ஆய்வு பகுதியில் பயிரிட்டு வெளிவந்தசிவப்பு கீரையைத்தான். “red lettuce” இந்த கீரையை பயிரிட்டு உங்களுக்கு காட்டுவது எக்ஸ்பிடிஷன் 53 குழு உறுப்பினர் ஒருவர்தான். ஏற்கனவே இது போன்ற ஒருபிளான்ட் ஹாபிடட்ஒன்று செப்டம்பர் 2016 ல் புதிதாக சேற்க்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்
Shot Pantry Items