இது வரைக்கும் நீங்கள் செவ்வாயில் உருளை பயிரிடுவதை திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். “மார்ஷியன்” எனும் திரைப்படத்தில் இதனை உங்களுக்கு காமித்திருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் கற்பனைக்கதை. நிஜத்தில் உண்மையில் “சர்வதேச விண்வெளி நிலையமான” ISS ல் தாவரங்கள் பயிரிடுவதெற்கென சிறப்பான ஒரு ஹாபிடன்ட் இருக்கிறது.
விண்வெளியில் பயிரிட்டால் வளருமா என்ற கேள்வி உங்களில் மனதில் இருந்தால். இதோ பதில். “வளரும்” என்பதுதான். சர்வதேச விண்வெளி நிலையத்தினை பொறுத்தவரை ஒரு சில காய்கறிகளை அவர்கள் விண்வெளி நிலையத்தில் முளைக்க வைக்கிறார்கள். (veggie) எனப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பானது 2013 ஆம் ஆண்டு சர்வதேச நிலையத்தில் அமைக்கப்பட்டது. இந்த வெஜ்ஜி அமைப்பானது கீரை வகையான அல்லது சால்ட் டைப் பொருட்களை உற்பத்தி செய்ய கூடிய அளவிற்கு உருவாக்கியுள்ளனர். இது மூன்று பேர் அடங்கிய குழு சாப்பிடும் அளவுக்கு உருவாக்கதக்கது. சர்வதேச விண்வெளி குழுவினருக்கு ருசியான , சத்துள்ள மற்றும் ஃப்ரஸ் உணவுப்பொருள்களை வழங்கவல்லது.
நீங்கள் பார்க்கும் புகைப்படமானது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கொலம்மஸ் தொகுதியில் உள்ள VEG-03 எனும் ஒரு ஆய்வு பகுதியில் பயிரிட்டு வெளிவந்த “சிவப்பு கீரையை“த்தான். “red lettuce” இந்த கீரையை பயிரிட்டு உங்களுக்கு காட்டுவது எக்ஸ்பிடிஷன் 53 குழு உறுப்பினர் ஒருவர்தான். ஏற்கனவே இது போன்ற ஒரு “பிளான்ட் ஹாபிடட்” ஒன்று செப்டம்பர் 2016 ல் புதிதாக சேற்க்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்.
![]() |
Shot Pantry Items |
No comments:
Post a Comment