November 24, 2017

Interstellar Visitor "Oumuamua" வேறு சூரிய குடும்பத்திலிருந்து வந்த ஆஸ்டிராய்டு "ஒமுவாமுவா"


Updated Article Found Here

Oumuamua Intersteller visiter 2017 discovery
மிகவும் புதிரான , வித்தியாசமான ஒரு ஆஸ்டிராய்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுநமது சூரிய குடும்பத்தில் உருவாகி நமது சூரியனை சுற்றும் சாதாரணமான ஆஸ்டிராய்டு கிடையாது என்பதுதான் மேலும் ஆச்சரியமான விஷயம். இதன் பெயர்ஒமுவாமுவாஎன்பதுதான். அர்த்தம். புதிய விருந்தாளி
அக்டோபர் 19 ஆம் நாள் 2017 அன்றுபான்ஸ்டார் 1″ எனும் ஹவாயில் உள்ள ஒரு சிறிய தொலை நோக்கியின் மூலம் இது ஒரு சிறிய லேசான புள்ளியாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சதாரன ஆஸ்டிராய்டு என நினைத்தனர். பின்னர் அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டினை மேலும் இரண்டு நாட்களுக்கு ஆராய்சி செய்தனர். ஆனால் அவர்கள் ஆராய்ச்சி செய்தது அதன் டிரஜக்டரி என்று சொல்லக்கூடிய வளைவுபாதையும் , வட்டபாதையும்
 
அதன் ஆய்வு முடிவுகள் தான் எல்லாரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. ஏனெனில் அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டு ஆனது நமது சூரிய குடும்பத்தில் உருவாகி நமது சூரியனை சுற்றிவரும் ஒரு சாதாரண ஆஸ்டிராய்டு கிடையாது. இது நமது சூரிய குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாமல் , வேறு ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில் இருந்து வந்த ஒரு ஆஸ்டிராய்டு என்றது. எல்லா அறிஞ்சர்களும் வாயை பிளக்க ஆரம்பித்தனர்.
அதன் பிறகு ESO வில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி கொண்டு இதனை ஆராய்ச்சி செய்து அதன் வடிவம், நிறம் போன்றவை கண்டிபிடிக்கப்பட்டது. இது அடர்ந்த சிவப்பு நிறத்தில் உள்ளதாகவும். அதன் வடிவம் இதுவரை பார்த்திடாத அளவு வித்தியாசமாக ஒரு குச்சியை போன்று இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். 400 மீட்டர் நீள்வாக்கிலும், வெறும் 40 மீட்டர் அகலமும் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. (மேலே உள்ள படத்தில் இருப்பது போன்றுஇவ்வளவு நாம் நாம் எப்படி இதனை கண்டிராது விட்டோம் என பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். ஆம் இந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டு ஆனது கடந்த செப்டம்பர் மாதம் நமது சூரியனை கடந்துள்ளது. என்பது குறிப்பிடித்தக்கது
All Electronics @ Lowest Price
மேலும் இந்த ஆஸ்டிராய்டு மூலம் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இது பூமியை கடந்து சென்று விட்டது. இதனை நாசாவின் கிரக பாதுகாப்பு என்று சொல்லக்கூடிய “Nasa Near Earth Object” அமைப்பை சேர்ந்தவர்கள். இதனை வெளிஉலகுக்கு கொண்டு வந்தனர்
Updated Article Found Here
 
 

November 23, 2017

Garden in Space | சர்வதேச விண்வெளி மையத்தில் தோட்டம்.

இது வரைக்கும் நீங்கள் செவ்வாயில் உருளை பயிரிடுவதை திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். “மார்ஷியன்எனும் திரைப்படத்தில் இதனை உங்களுக்கு காமித்திருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் கற்பனைக்கதை. நிஜத்தில் உண்மையில்சர்வதேச விண்வெளி நிலையமான” ISS ல் தாவரங்கள் பயிரிடுவதெற்கென சிறப்பான ஒரு ஹாபிடன்ட் இருக்கிறது.
விண்வெளியில் பயிரிட்டால் வளருமா என்ற கேள்வி உங்களில் மனதில் இருந்தால். இதோ  பதில். “வளரும்என்பதுதான்சர்வதேச விண்வெளி நிலையத்தினை பொறுத்தவரை ஒரு சில காய்கறிகளை அவர்கள் விண்வெளி நிலையத்தில் முளைக்க வைக்கிறார்கள். (veggie) எனப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பானது 2013 ஆம் ஆண்டு சர்வதேச நிலையத்தில் அமைக்கப்பட்டது. இந்த வெஜ்ஜி அமைப்பானது கீரை வகையான அல்லது சால்ட் டைப் பொருட்களை உற்பத்தி செய்ய கூடிய அளவிற்கு உருவாக்கியுள்ளனர். இது மூன்று பேர் அடங்கிய குழு சாப்பிடும் அளவுக்கு உருவாக்கதக்கது. சர்வதேச விண்வெளி குழுவினருக்கு ருசியான , சத்துள்ள மற்றும் ஃப்ரஸ் உணவுப்பொருள்களை வழங்கவல்லது
நீங்கள் பார்க்கும் புகைப்படமானது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கொலம்மஸ் தொகுதியில் உள்ள VEG-03 எனும் ஒரு ஆய்வு பகுதியில் பயிரிட்டு வெளிவந்தசிவப்பு கீரையைத்தான். “red lettuce” இந்த கீரையை பயிரிட்டு உங்களுக்கு காட்டுவது எக்ஸ்பிடிஷன் 53 குழு உறுப்பினர் ஒருவர்தான். ஏற்கனவே இது போன்ற ஒருபிளான்ட் ஹாபிடட்ஒன்று செப்டம்பர் 2016 ல் புதிதாக சேற்க்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்
Shot Pantry Items


October 25, 2017

Origin Of the Elements Tamil | எங்கிருந்து வந்தன ? தனிம வரிசை அட்டவனை

தனிம வரிசை அட்டவனையை அனைவரும் பள்ளி பருவத்தில் பார்த்து இருப்பீர்கள் . படித்து இருப்பீர்கள்.  ஆனால் அந்த அனைத்து தனிமங்களும் மற்றும் பொருட்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தன என மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் தான். இந்த வண்ண அட்டவனை.

நம் உடலில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் தண்ணீரின் ஒவ்வொரு மூலக்கூறிலும் இருக்கும் ஹைட்ரஜன் எங்கிருந்து வந்தது என தெரிகிறதா? அதுதான் பெருவெடிப்பு கொள்கை எனும் “பிக் பேங்”. மேலும் ஹைட்ரஜன் மூலக்கூருக்கு மட்டும் வேறு எந்த காரணமும் நம்மால் காணமுடியவில்லை. நீங்கள் இந்த வண்ண அட்டவனையில் H எனும் தனிமத்தின் மீது ஒரே ஒரு வண்ணம் மட்டும் இருப்பதை காண முடிகிறது. மற்ற தனிமங்கள் பல வண்ணங்களின் கலவையாக இருப்பதையும் நம்மால் இங்கு காண முடிகிறது.

நமது உடலில் இருக்கும் கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய இரண்டும் அணுக்கரு இணைவு எனும் நிகழ்வினால் உண்டாகியுள்ளது. என தெரிய வருகிறது.
மேலும் நமது உடலில் இருக்கும் இருப்பு தாதுவானது நட்சத்திரங்களின் “சூப்பர் நோவா “வின்  போது உருவானவை. மேலும் இரும்பு எனும் தனிமம். பல காலங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வினால் உருவான ஒரு தனிமம்.

*சூப்பர் நோவா என்பது : ஒரு நட்சத்திரம திடீரெனெ ஒரு பேரழிவு வெடிப்பின் காரணமாக தனது அனைத்து நிறையையும் (அடர்த்தியையும்) வெளியேற்றும் அப்போது அது மிகுந்த பிரகாசத்தினை அடையும்

மேலும் நாம் பயன் படுத்தும் தங்கமானது, நியூற்றான் நட்சத்திரங்களின் மேதலினால் உருவானது . இதனால் தான் என்னவே தங்கத்தின் விலை முட்டி மேதிக்கொண்டிருக்கிறது.

நன்றி

Image Credit & LicenseWikipediaCmgleeData: Jennifer Johnson (OSU)

October 16, 2017

Bernard 68 Tamil Details | விண்வெளியில் நட்சத்திரங்களை பார்க்க விடாத! விசித்திர நெபுலா!!

வின்வெளியில் நடசத்திரங்கள் எங்கே போயின என கேட்கும் அளவிற்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது அந்த #நெபுலா.

Tamil Bernard 68
Bernard 68

ஆமாம், பூமியில் இருந்து வெறும் 500 #ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதுதான் “#பெர்னார்டு 68” எனும் நெபுலா. இது தெற்கு பகுதியில் ஆபியூகஸ் (#Ophiuchus) எனும் விண்மீன் திரள் தொகுப்பில் இது இருக்கிறது. அமெரிக்க வானியல் அறிஞ்சர் எட்வர்டு பெர்னார்டு என்பவரால், இது 1919 ஆம் ஆண்டுகளில் அவரின் அடர்ந்த நெபுலாக்கள் என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது. மேலும் இவரின் தொகுப்பானது 1927 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது அவரின் கனக்குப்படி 350 விண் பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.(ஏனெனில் அந்த நெபுலாவின் ஒளியை ஊடுருவி செல்லும் தண்மை காரனமாக.) இந்த எண்ணிக்கையானது முழுவதுமாக அரை ஒளியாண்டு தொலைவு இருக்கிற ஒரு நெபுலாவிற்கு மிகவும் குறைவு. அரை ஒளியாண்டு தொலைவு என்றால். அந்த நெபுலாவை கடந்து செல்வதற்கு ஒளியாக இருந்தாலும் அரை வருடம் தேவைப்படும்.

இது ஒரு நெபுலா என நாம் முன்னவே குறிப்பிட்டு இருந்தேன். இது இளம் சூரியன்கள் ஒருவாகும் ஒரு “ஸ்டெல்லர் நர்சரி” நெபுலாவாக இருக்கிறது. இந்த நெபுலாவானது இருண்ட மூலக்கூறு மேகங்களால் (Dark Molecular Cloud) ஆனது.இதலான் இது ஒளியை உள் இழுத்துக்கொள்கிறது. ஆகவே மனித கண்களுக்கு வெறும் கறுப்பு நிறமாக காட்சியளிக்கிறது. ஒரு கருந்துளையை போல. இந்த மூலக்கூறு மேகங்கள் அனைத்தும் மிகவும் அடர்ந்த தூசி மற்றும் மூலக்கூறு வாயுக்கலால் ஆனது.

இருப்பினும் இந்த நெபுலாவானது. சாதாரண கண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இன்ஃப்ராரெட் கருவி கொண்ட கேமராவினால் பார்க்கும் போது இதனுள் உள்ள நட்சத்திரங்களை நாம் பார்க்கலாம்

நன்றி: https://space-stuffin.blogspot.in/2017/10/dark-molecular-cloud-barnard.html

Image Copyright: FORS Team, 8.2-meter VLT Antu,ESO

செவ்வாயில் உலகலாவிய அரோரா!


செவ்வாயில் உலகலாவிய அரோரா
செவ்வாயில் நீல புள்ளிகள் புறஊதா கதிர்வீச்சின் தாக்கத்தை காட்டும் படம்

சிவப்பு கிரகம் என பெயர் பெற்ற செவ்வாயில் நீலநிற புள்ளிகள். இதுவரை செவ்வாயில் இல்லாத அளவுக்கு ஒரு அதிகப்படியான சூரிய புயலானது கடந்த மாதம் செவ்வாயின் மேற்பரப்புகளில் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட புறஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினை தான் நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்த்தீர்கள். இந்த படத்தில் இடது புறத்தில் இருப்பதை விட வலது புறத்தில் நீங்கள் பார்க்கும் படத்தில். செவ்வாயின் இரவு நேரப்பகுதிகளில். அதிகப்படியான நீல நிற புள்ளிகளை கானலாம். இது அந்த கிரகத்தில் ஏற்பட்ட புறஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினை காட்டுகிறது . இந்த இரண்டு புகைப்படங்களும், நாசாவின் மாவின் (Maven Space Craft) விண்வெளி ஓடம் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது. புவியைப்போன்று செவ்வாயில் காந்த புலங்கள் இல்லாத காரணத்தால், செவ்வாயில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக அறிவியலாலர்கள் கருதுகின்றார்கள். மேலும் இது செவ்வாயின் இரவு பகுதியாக அதாவது சூரிய ஒளியில் இல்லாத இடங்களில் முழுவதுமாக பரவி இருப்பதால், இதனை உலகலாவிய அரோரா என கணிக்கப்பட்டுள்ளது.

மாவின் விண்கலத்தின் மூலமாக பதியப்பட்ட இந்த தரவுகள். இதற்கு முன் நாசாவின் கியூரியாசிடி ரோவர் மூலமாக பதியப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிக அதிகம். மேலும் மாவின் விண்கலமானது, செவ்வாயின் வளிமண்டலம் பற்றிய ஆராய்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது செவ்வாயில் உலகலாவிய காந்த மண்டலம் இழப்பின் காரணமாகத்தால் வளிமண்டலம் இல்லாமல் உள்ளதா என ஆராய்சி செய்து வருகிறது.Image Copyright: MAVEN, LASP, University of Colorado, NASA

October 12, 2017

ISRO Recruitment Last Date 23-10-2017

ISRO recruitment 2017: Notification released, see how many government jobs vacancies announced, apply at vssc.gov.in

ISRO recruitment 2017: Vikram Sarabhai Space Centre (VSSC), Thiruvananthapuram, one of the major space research centres of the Indian Space Research Organisation (ISRO), has announced 34 vacancies under various departments at vssc.gov.in. The last date to apply for ISRO jobs is 23-10-2017 till 5:00 pm.

News Credits : financial express

October 10, 2017

Pluto's Bladed Terrains | புளூட்டோவின் கூறிய நிலப்பரப்பு

நியூ ஹரைசோனிலிருந்து எடுக்கப்பட்ட  புளூட்டோவின் படம்

நியூ ஹரைசோன் எனும் விண்கலமானது, புளூட்டோவை ஆராச்சி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அதாவது ஜனவரி 19 தேதி 2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆண்டின் இறுதியிலேயே புளூட்டோவானது கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்தது. இவை அனைத்தும் நாம் கேள்விப்பட்ட செய்திகள்தான். இதை பற்றி நாம் பிறகு விரிவாக பார்ப்போம்.

அதன் பிறகு நாசாவானது “நியூ ஹரைசோனின்” பணிகளை மாற்றியது. அதாவது இந்த விண்கலமானது புளூட்டோவையும், அதன் ஒரு துனைக்கிரகமான சாரன் எனும் சிறிய கிரகத்தினையும் மற்றும் “கைப்பர் பெல்ட்” என்று சொல்லக்கூடிய  ஆஸ்டிராய்டு குப்பை பகுதிகளையும் ஆராய்சி செய்யும் என மாற்றப்பட்டது. அதே போல் இந்த விண்கலமானது ஜூன் 2015 ஆம் ஆண்டு வாக்கில் கைப்பர் பெல்ட் மற்றும் புளூட்டோவை அடைந்தது. அதன் பிறகு எடுத்த படத்தினைத்தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள். ஆம் இது ஜூலை மாதம் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த அளவு தெளிவாக உள்ள படத்தினை நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. புளூட்டோவின்  மிகவும் வித்தியாசமான இந்த நிலப்பரப்பானது கூரிய பகுதிகளை கொண்டுள்ளதாகவும். அங்கு மீத்தேனால் பனிக்கட்டிகள் நிரப்பப்பட்டுள்ளன என்றும் ஆராய்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் சில ஆய்வு முடிவுகள் கூறுவதாவன, புளூடோவின் வித்தியாசமான சுற்றுவட்ட பாதையினால். அந்த கிரகம் சில காலகட்டத்தில் வெப்பப்படுத்தப்படுகிறது. அந்த கால கட்டங்களில். புளோட்டோவில் இருக்கும் உறைந்த மீத்தேனானது திரவ நிலையை அடையாமலேயே வாயு நிலையை அடைகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூர்மையான நிலப்பரப்புகள் அனைத்தும் புளூட்டோவின் உறைந்த மீத்தேன் ஆகும்.

கூர்மையான நிலப்பரப்புகள் அனைத்தும் மிக பெரிய மலைகளையும். மலைச்சிகரங்களையும் குறிக்கும்

கொஞ்சம் யோசித்து பாருங்கள் பெரிய பெரிய மலைச்சிகரங்கள் அனைத்தும் உறைந்த மீத்தேன் என்றால். இண்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தில் வருவது போல

October 05, 2017

95 Minutes Over Jupiter | வியாழனின் மேற்பரப்பில் 95 நிமிடங்கள்!

வியாழனின் தென் மற்றும் வட துருவங்கள் பெரிஜாவ்
நீங்கள் பார்க்கும் வண்ணமயமான வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வியாழன் கிரகத்தின் படங்கள்தான்.இவை அனைத்தும்  ஜூனோ விண்கலத்தின்  ஜூனோகேம் (Junocam)எனும் பிரத்தியேகமான புகைப்பட கருவியின்மூலமாக எடுக்கப்பட்ட புகைபடங்கள். இந்த வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வெறும் 95 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். அதாவது கிட்டதட்ட ஒரு மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவை ஆகும்.

Offer on Headsets
ஒவ்வொரு 53 நாட்களுக்கு ஒருமுறை ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தினை மிகவும் குறைவான தொலைவில் கடந்து செல்லும். கடந்து செல்வது மட்டுமல்லாது வட மற்றும் தென் துருவங்களை ஒரு முறை சுழலும் போது தெளிவான, மற்றும் நெருக்கமான படங்கள் எடுக்க முடியும்.இந்த நிகழ்வின் பெயரானது பெரிஜாவ் எனப்படுகிறது.
பெரிஜாவ் (Perijove) எனும் இந்த நிகழ்வானது செப்டம்பர் 1 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு  நிகழ்ந்தது. அதாவது போன மாதம் முதல் தேதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகும்
நீங்கள் பார்க்கும் படத்தில் இடமிருந்து முதல் 8 படங்கள் வியாழனின் தென் துருவத்தினையும் . கடைசியில் (வலது புறத்தில் முதல்) உள்ள படம் வியாழனின் வட துருவத்தையும் பார்க்க முடியும்
ஜூனோவானது நாசா மற்றும் ஜ.பி.எல் இன் கூட்டு முயற்சியாகும். இது கடந்த வருடம் ஜூலை 5 ஆம் தேதியன்று வியாழனின் சுற்றுவட்ட பாதையில் பயனிக்க ஆரம்பித்தது. வியாழன் கிரகம் பற்றிய பல அறிய தகவல்களை இது தந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலவிவரங்களை அறிய நீங்கள் ஸ்பேஸ் நீயூஸ் தமிழ் டாட் காம் எனும் இனையதளத்தினை பாருங்கள். நன்றி

Image Copyright: NASA, ESA, Caltech JPL

September 14, 2017

Cassini's Best 9 Photos of Saturn | காசினியால் எடுக்கப்பட்ட சனிக்கிரகத்தின் சிறந்த 9 புகைப்படங்கள்.

Saturn Planet is Beautiful , If u Look at the best pictures of “Cassini” the Mission for Saturn and its Sister Craft “hugens” for Saturn’s moon “Titan” Both are Amazing. Just Look at the Best Pictures of “CASSINI”
Befour Its Grand Finale
சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி விண்கலமானது தனது முடிவினை நெருங்கிவிட்டது. ஆம் செப்டம்பர் 15 ஆம் நாள் 2017 ஆம் வருடம் அது சனிகிரகத்தின் வளிமண்டலத்தில் மோதி அழிக்கப்பட உள்ளது. அதாவது நாளைய தினம்.
இதனால் இந்த விண்கலத்தால் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்க்ளை வெளியிட்டு உங்களுக்காக பார்வைக்கு வைக்கிறேன்.

சனியின் துனைகிரகம் டைட்டன், டையோன் மற்றும் சனிகிரகத்தின் வளையம்.
டைட்டன் சனிகிரகத்தின் துனைக்கிரகம்
சனிகிரகத்தின் வளையங்களும் மற்றும் பூமியையும் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது
என்ஸிலேடஸ் சனி கிரகத்தின் துனைக்கிரகம்
சனி கிரகத்தில் உள்ள ஆறு பக்க அமைப்பு (புரியாத புதிர்)
சனி கிரகமும் அதன் வளையங்களும் சூரிய ஒளியும்
டையோன் எனும் சனிகிரகத்தின் துனைகிரகம் வளையங்களுக்கு மத்தியில்
சனிகிரகத்தின் வளையங்கள்
ரோஜாப்பூ
Ad

September 11, 2017

Faulty Navigation satellite Maybe Fall in Pacific Ocean | கோளாரான செயற்கைக்கோல் பசுபிக் பெருங்கடலில் விழலாம்

பழுதான  திசை காட்டும் செயற்கைக்கோல் 2 மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் உள்ள  விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவர் DR. K. சிவன் என்பவர். அளித்த பேட்டியில். இவ்வாறு தெரிவித்தார்.
2.4 டன் எடையுள்ள IRNSS-1H என பெயரிடப்பட்ட திசைகாட்டும் செயற்கைக்கோலானது. 40-60 நாட்களுக்குள். திரும்பவும் பூமிக்கு திரும்பும் அதாவது புவியின் உள் நுழையும் மேலும் அது பசுபிக் பெருங்கடலில் விழலாம் என எதிர்பார்ப்பதாக கூறினார்.


ஆகஸ்ட் 31 ஆம் தேதி போன மாதம் அனுப்பப்பட்ட IRNSS-1H எனும் செயற்கைகோள். ஆரம்ப கட்ட ஏற்றம் சரியாக இருந்தாலும் விண்வெளியில். அந்த செயற்கைகோளை புவியின் வட்ட பாதையில் நிறுத்த தவறியது. (இன்னமும் விண்வெளியில் சுற்றிக்கொண்டு உள்ளது) எரிபொருள் தீர்வதற்கு 40-60 நாட்கள் ஆகலாம் . அப்படி தீர்ந்து போகும் போது. அது திரும்பவும் புவியின் உள் நுழையும்..

250 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Shop All Pantry Products


September 04, 2017

Trappist 1 Update News | டிராப்பிஸ்ட் 1 கிரகங்கள் தண்ணீர் மற்றும் புறஊதா கதிர்வீச்சி

Illustrated Trappist 1 and its Planets

பிப்ரவர் 22ஆம் தேதி கூகுல் நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமும் அதன் கிரகங்களையும் பற்றி அடிப்படையான தகவல்கள் வந்தன. அதன் பிறகு இந்த நட்சத்திரத்தையும் அதன் கிரகங்களையும் பற்றி பல கேள்விகள் வந்தன. அவற்றில் ஒன்றுதான் . புற ஊதா கதிர்வீச்சி,
விவரம்:
டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமானது மிகவும் சிறிய , மங்களான நட்சத்திரம் தான் ஆனால் அதன்(UV Rays) புறஊதா கதிர்வீச்சி வெளிப்பாடு ஆனது கொஞ்சம் அதிகம் தான். அப்படி இருக்கையில் , அந்த டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரத்திற்கு  மிக மிக அருகில் இருக்கும் கிரங்களில் அதன் தாக்கம் இருக்காதா? என்பதுதான். அந்த கேள்வி,.
அப்படி ஒரு வேளை அதன் கதிர்வீச்சி அதிக அளவில் இருந்தால்.அந்த கிரகத்தில் உயிரினங்களை விடுங்கள் தண்ணீர் இருப்பதே அபூர்வம் என கருத்துக்கள் நிலவியது.

Shop Kurtas

இதனை ஆராய்சி செய்த விண்சென்ட் எனும் ஆராய்சியாளர் மற்றும் அவரது குழுவினரும்.

(Vincent Bourrier at the University of Geneva in Switzerland) அதாவது அந்த நட்சத்திரத்தின் கதிர் வீச்சினை மட்டும் ஆராய்சி செய்தனர். அப்படி செய்கையில். அந்த நட்சத்திரத்தின் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் தன்மையானது அதிக அளவில் தான் உள்ளது .. ஆனால் அந்த கதிர்வீச்சின் வீரியமானது. தண்ணீர் மூல்க்கூறினை உடைக்கும் அளவுக்கு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல். ஹாபிடபுள் சோன் எனப்படும் பகுதி பற்றி உங்களுக்கு தெரியும். அந்த நட்சத்திரத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் கிரகங்களுக்கு . முதலில் இருக்கும் கிரகத்தினை விட உயிர் வாழ தகுதியான சூழ்நிலை இருக்கும் என நம்பப்படுகிறது.
முதல் படத்தில் c, d, e ஐ காட்டிலும் f, g, h க்கு  அதிக ஹாபிடபுள் சோன் தகுதி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

தோல்வியில் முடிந்த PSLV ன் செயற்கைகோல் லான்ச்

File Photo of PSLV Launch

ஆக்ஸ்ட்டு 31  ஆம் தேதி
இந்தியாவின் போலார் ஸாட்டிலைட் லான்ச் வெய்கிள் (Polar Satellite Launch Vehicle) ஆனது IRNSS 1H எனும் ஒரு வழிகாட்டும் செயற்கைகோளை (Navigation Satellite)  வின்வெளியில் நிறுவுவதற்காக. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து  ஏவப்பட்டது . ஆரம்ப கட்ட நிகழ்வுகள் சரியாக நடந்தன. ஆனால் கடைசியில். இரண்டாம் கட்ட ஸ்டேஜ் செபரேசனில் (Stage Separation)  அது தோல்வியுற்றது. அதாவது. வட்டபாதையில் கழட்டி விட வேண்டிய செயற்கைகோலை அது கழற்ற தவறியது.

All Electronics at Offer Price

இதனை லான்ச் (Launch Controler ) கட்டுபடித்தும் கருவியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது. ராகெட் ஆனது முதல் கட்ட உயரத்தினை அடைந்த பிறகு 3 நிமிடத்தில் அந்த செய்ற்கைகோலை பிரித்து விட வேண்டும் ஆனால் அது அவ்வாறு செய்ய தவறியது. இதற்கு. பல்வேறு காரணங்கள், கருத்துகள்  கூறப்படுகிறது. அதாவது அந்த செய்ற்கைகோலின் எடை தான் இதன் முக்கிய காரணம் என கருதப்படுகிறது எனினும், இஸ்ரோவானது இதற்கான காரனத்தை ஆராய்ந்து வருகிறது…

August 26, 2017

Space X's New Space Suite | புத்தம் புதிய ஸ்பேஸ் சூட்

வண்ணங்களும் அழமும் அதிகம் விரும்பப்படும் இந்த காலத்தில். ஒரு புதிய ஸ்பேஸ் சூட் ஒன்றினை ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனமானது தயாரித்து உள்ளது. மென்மையான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த புத்தம் புதிய ஸ்பேஸ் சூட்டினை (Space Suite) 2 நாட்களுக்கு முன். அந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (Instagram) இந்த வெள்ளை நில ஸ்பேஸ் சூட்டின் படத்தினை வெளியிட்டார்

Photo Credits : Space X
மேலும் இந்த புதிய சூட்டானது. அந்த நிறுவனம் தயாரித்த டிராகன் காப்ஸ்யூல் விண்வெளி ஓடத்தில் பயனிக்க இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படலாம் என கருத்து நிலவி வருகிறது.
Offers at Pantry Items
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பற்றி கூறும் போது. “சிறப்பம்சங்களுடகன் சேர்ந்து அழகானதாக வடிவமைப்பது சற்று கடினம் ” என்று கூறியுள்ளார்.

It was “incredibly hard to balance aesethetics and function,”

நாசா நிறுவனமானது , அடுத்ததலைமுறை ஸ்பேஸ் சூட் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன். மேலும் மூன்று ஸ்பேஸ் சூட் வளர்ச்சி திட்டங்களும் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது (NASA has three next-generation space suit development projects in the pipeline)

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது , சர்வதேச விண்வெளி மையத்திற்ற்கு சரக்கு களை ஏற்றிச்செல்லும், ராக்கெட் மற்றும் காப்ஸூல் களை அனுப்புவதில் 2014 ஆம் ஆண்டுமுதல் இருந்து வருகிறது. இந்த நிலையில். அடுத்த வருடம் ஜூன் மாத வாக்கில். குழுவுடன்(The company is due to launch its first crewed mission with NASA in June next year பணி மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளது.

மேலும் கூடுதலாக. ஸ்பேஸ் எக்ஸ் ன் செவ்வாய் காலனியாக்கம் திட்டம் (Mars Colonization)  2018 ஆம் ஆண்டு கடைசியில் அறிவிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://www.newscientist.com/article/2144989-elon-musk-shows-off-first-photo-of-spacex-space-suit/

Shop pantry Item at Amazon


August 25, 2017

Alien Megastructure Star May Host Saturn Like Exoplanet | KIC 8462852 நட்சத்திரத்தின் புதிய அனுமானங்கள்

KIC 8462852 –  Tabby’s Star

வேற்றுகிரக கட்டமைப்புகள்:

டேபி யின் நட்சத்திரம் என பட்டபெயரிடப்பட்ட இந்த KIC 8462852 எனும் நட்சத்திரத்தில். வேற்றுகிரக கட்டமைபு வேலைகள் நடைபெறலாம்.என பிரபலமான கருத்துகள் நிலவி வந்தன.

ஆரம்பம்:

2015 ஆம் ஆண்டு டிபெதா பயாஜியன் (Tebetha Bayajian) எனும் ஆராய்சியாளரின் குழுவினர். KIC 8462852 எனும் நட்சத்திரத்தினை கண்டரிந்தனர். ஆனால் கிரகங்களை கண்டரியும் ஒரு முறையான டிரான்சிட் (transit) என்ற நிகழ்வுகளை கவனிக்கும் போது, அதாவது KIC 8462852 நட்சத்திரத்தின் டிரான்சிட்  ஆனது மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. இந்த வித்தியாசமான நிகழ்சியின் காரனமாக,(எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சியதாக இருந்ததனால்) அந்த நட்சத்திரத்தினை ஒரு வேற்றுகிரக வாசிகளின் கட்டுமானம் நடந்து வந்து கொண்டு இருக்கலாம் என பிரபலமாக கருத்துகள் பரவின. இந்த நட்சத்திரம் இன்னால் வரைக்கும் ஒரு புதிராகவே இருந்து வந்துள்ளது. அப்படி இருக்கையில். இதனை பற்றிய ஒரு புதிய கருத்தினை “மாரியோ சூசர்கியே ” எனும் ஆராய்சியாளர் கூரியுள்ளார்
Pantry Products at Amazon

புதிய கோனம்:

கொலம்பியாவின்  ஆண்டிக்வா பல்கலைக்கழகத்தினை சார்ந்த “மாரியோ சூசர்கியே ” என்ற வான இயற்பியல் அறிஞ்சர் ஒருவர். இந்த வித்தியாசமான ஏற்ற இரக்கங்கள். அதாவது டிரான்சிட் எனும்  கிரக கண்டுபிடிப்பில் வரும் ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் . சனிகிரகத்தினை போல் (வளையங்களுடன்) இருக்கும் ஒரு கிரகத்தால் ஏற்பட்டிருக்கலாம். அதுவும் அந்த வளையங்களுடன் இருக்கும் அதிக எடையுடைய  கிரகமானது அந்த KIC 8462852 என்ற நட்சத்திரத்திற்கு மிகவும் அருகில் இருந்திருந்தால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் அதாவது. அதன் வளையங்கள் ஒரு வித்தியாசமான ஒளி மறைவையும் , அதன் கிரகம் ஒரு ஒளிமறைவையும் அதனை தொடர்ந்து வரும் அந்த கிரகத்தின் வளையங்கள். திரும்பவும் ஒளி மறைவை ஏற்படுதும் என கூறியுள்ளார். இதற்காக ஒரு சில கணினி சிமுலேசங்கள் (Simulation) செய்து,, அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளார்..

August 24, 2017

It Could be Snowing on Mars | செவ்வாயில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு

மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.  ஏன், , அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் ஒரு வேளை நாம் செவ்வாய்க்கு சென்றுவிட்டோம் என்றால்!!!. அந்த கிரகத்தின் இரவு நேர பனிப்பொழிவு நம்மை கொல்லும் அளவிற்கு மிகவும் கொடியதாக இருக்கும் .! என ஒரு சில Simulations முடிவுகள் காட்டுகின்றன.

முன் காலங்களில் செவ்வாய் கிரகத்தில்  தண்ணீர் இருந்ததாகவும், பனிப்பொழிவுகள் இருந்ததாகவும் , கருத்துகள் நிலவி வந்தன. ஆனால். அவை அனைத்தும் தற்போது குறைந்திருக்கலாம் எனவும் நம்பப்பட்டன. அது மட்டுமல்லாது Phoenix Lander என்னும் லாண்டர் (lander) 2008 ஆம் ஆண்டு. ஒரு சிறிய பனிப்பொழிவையும் படம் பிடித்துள்ளது.

மேலும் செவ்வாய் கிரகத்தின் வானிலையை ஆராய்ச்சி செய்யும் சில மார்ஸ் ஆர்பிடர்ஸ்களும். அதன் தரவுகளின் அடிப்படையில். சிமுலேஷன் கள் கணக்கிடப்பட்டதாகவும் அதன் புராஜக்ட் தலைவர் “அமெரிக் ஸ்பீகா” Aymeric Spiga, University Pierre and Marie Curie in Paris,

செவ்வாயின் மேககூட்டத்தினை காட்டும் படம்

மேகங்கள்:

செவ்வாய் கிரகமானது பூமியை போலவே மேகங்களை கொண்டுள்ளது. அதன் மேகங்கள் தண்ணீர் மற்றும் பனி மூலக்கூறுகளால் ஆனது. இந்த மேகக்கூட்டங்கள். செவ்வாயின் இரவு நேரங்களில். ஏற்படும் மாற்றங்களால். Microbursts எனும் (பனித்துகள்கள் கொண்ட) சூராவளி ஏற்பட வாய்ப்பு உள்ளது என
கண்டறியப்பட்டுள்ளது. 
இதைப்பற்றிய மேலும் செய்திகளை தெரிந்து கொள்ளவதற்கு. Ref links பயன் படுத்தவும்.












Ref Links

1.https://www.newscientist.com/article/2144536-it-could-be-snowing-on-mars-right-now/
2.https://m.europebreakingnews.net/2017/08/incredibly-fast-falling-blizzards-of-snow-sprinkle-mars-at-night/
3.https://weather.com/science/space/news/mars-violent-nighttime-snowstorms-clouds
4.http://www.nature.com/ngeo/journal/vaop/ncurrent/full/ngeo3008.html?foxtrotcallback=true

Shop at Amazon