November 30, 2018

India Launched Hysis Earth Observatory Satillite |இந்தியாவின் புதிய செயற்கைக்கோள்

இந்தியா அனுப்பிய புதிய செயற்கைக்கோள் HysIS நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இந்த செயற்கை கோளானது கிட்டத்தட்ட 380 கிலோ எடை உடையது மேலும் இது பூமியில் இருந்து சரியாக 636 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படும் எனவும் இஸ்ரோவின் அதிகாரிகள் கூறினர்.

இந்த HysIS வகை செயற்கை கோளானது சர்வதேச அளவில் விவசாயம், காடுகள் பாதுகாப்பு, உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு , மற்றும் கடற்கரை போன்ற துறைகளில் அதன் தரவுகளை பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் இது பூமியில் மேல் பரப்பினை மின்காந்த நிறமாலையின் உள்ள அகச்சிவப்பு மற்றும் குறுகிய அலைநீளம் கொண்ட அகச்சிவப்பு ஒளியின் மூலம் தரவுகளை சேகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்

மேலும் இது இஸ்ரோ ஏவும் இரண்டாவது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது அதுவும் இந்த மாதத்திலேயே ஏற்கனவே ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் 29 என்ற செயற்கைகோளை விண்ணில் இஸ்ரோ நிறுவியது



Download Our App

More Posts to Read on:-



November 29, 2018

First Image After Recovery of Hubble | பழுது நீங்கிய பின் ஹப்புள் எடுத்த முதல் புகைப்படம்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியின் ஒரு தன்னிலை பாதுகாப்பு கருவி செயழிலந்தது . உங்களுக்கு நினைவிருக்கலாம் 3 வார காலத்திற்கு பிறகு ஹப்புள் குழுவினர் இதனை சரி செய்தனர். அந்த நிகழ்வுக்கு பிறகு ஹப்புள் தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட முதல் படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. அதைதான் நீங்கள் கீழே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்

இது கிட்ட தட்ட 11 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கேலக்ஸி தொகுப்புதான் இந்த கேலக்ஸி தொகுப்பானது “பெகஸஸ்” எனும் விண்வெளி தொகுப்பில் உள்ளது. இதனை ஹப்புளின் உள்ள பெரிய கோணம் கொண்ட காமிரா மூலமாக எடுக்கப்பட்டுள்ளது என நாசா 2 நாட்களுக்கு முன் ஒரு பதிவில் சொல்லியிருந்த்தது.

Sources : NASA

For PodCast and Daily News Download Our APP



Download Our App

More Posts to Read on:-

November 28, 2018

EP.2 Facts of Sun | PodCast Sun and its Facts | Space News Tamil

நமது சூரியனானது ஒரு  ஆற்றல் மூலம் பல உயிரினங்கள் பூமியில் வாழ சூரியனின் உதவி தேவைப்படுகிறது. வேண்டுமென்றால் எந்த கிரகத்தில் வேண்டுமானாலும். இது போன்று உயிரினங்கள் வாழ சூரியன் வழி வகுக்கும் என நான் நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இதோ உங்களுக்காக  சூரியனை பற்றிய ஒரு சில செய்திகள்

Donate to Improve our Service thanks in advance

PodCast

Facts about Sun in Tamil | சூரியனை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

சூரியன் என்பது நமது முன்னோர்களால் கடவுளாக பார்க்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் அதெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களால் தான். இப்போது அறிவியல் முன்னேறிவிட்டது நமது சூரியனை ஆராச்சி செய்ய சூரியனுக்கே விண்கலங்களை விடும் அளவுக்கும். பார்க்கர் சோலார் புரோப்

அந்த சூரியனை பற்றிய ஒரு சில சுவாரசியமான செய்திகளை இங்கு பார்ப்போம்:

1. சூரியனின் அளவு

1.989 × 10^30 kg எடையுடைய இந்த நட்சத்திரமானது நமது பூமியை போல் 3,30,000 மடங்கு அதிக எடையுடையது. வியாழன் கிரகத்தினை போல் 75 மடங்கு அதிக எடை யுடையது.

2. ஒரு மில்லியன் பூமி கொள்ளும் அளவு பெரியது

சூரியன் பெரியதாக இருப்பதால் நமது பூமிகிரகத்தினை அதனுள் வைத்தால் கிட்டதட்ட நீங்கள் 1 மில்லியன் பூமிகளை சூரியனை வைத்து அடைக்க முடியும். அவ்வளவு பெரியது.

3.பூமியை உன்ணும் சூரியன்

சூரியனில் நடக்கும் அனுகரு இனைவு நிகழ்வின் மூலமாக எல்லா ஹைற்றஜன் அனுவும் எரிந்து முடித்த பிறகும் சூரியன் கிட்டதட்ட 130 மில்லியன் வருடங்களுகு எரிந்து கொண்டு இருக்கும் இந்த நிகழ்வின் போது அதன் விரிவடையும் நிகழ்வு ஏற்படும். அப்போது சூரியனானது புதன் , வெள்ளி மற்றும் பூமியையும் உண்ணும் அளவு பெரியதாக மாறும் அப்படி மாறிய சூரியனைதான் சிவப்பு அரக்கன் என்பர் (அதாவது Red Giant)

4. சூரியனில் நடக்கும் அனுக்கரு இனைவு

நமது சூரியனுக்கு ஏது இவ்வளவு வெப்ப ஆற்றல் என்று பல கேள்வி வந்திருக்கும், இதற்கு காரணம். சூரியனில் நடக்கும் அனுக்கரு இனைவு எனும் நிகழ்ச்சிதான். சூரியனில்  நான்கு ஹைற்றஜன் அனுக்கள் ஒரு ஹீலியன் அனுவில் இனைக்கப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவதால் அது அதிக வெப்ப ஆற்றலை வெளியிடுகிறது.

5. மிகச்சரியான கோள வடிவம்:

இயற்கையாக இது போன்று அமைவது மிகவும் அறியது. சூரியனானது மிகவும் சரியான கோளவடிவத்தினை பெற்றுள்ளது. அதன் அளவில் மத்திய ரேகை பகுதியில் உள்ள விட்டத்திற்கும், துருவ பகுதியில் உள்ள விட்டத்திற்கும் வெறும் 10 கி.மீ மட்டும் தான் வித்தியாசம். இது ஒரு மிகச்சரியான கோளவடிவம் கொண்ட நட்சத்திரம் .

6. வினாடிக்கு 220 கி.மீ என்ற வேகத்தில் பயனிக்கும் சூரியன்

நமது பூமி சூரியனை சுற்றிவருகிறது சூரியனானது அண்டத்தின் மையத்தினை சுற்றி வருகிறது. நமது சூரியனானது அண்டத்தின் மையத்திலிருந்து தோராயமாக 24,000 – 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதனை வைத்து நமது சூரியனானது அண்டத்தின் மையத்தினை தோராயமாக 225-250 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றிவரும் என கண்டறிந்துள்ளனர். அப்படி சுற்ற வேண்டும் என்றால் சூரியன் வினாடிக்கு 220 கி.மீ என்ற வேகத்தில் நகரவேண்டும்.

7. எட்டு நிமிட பிரயானம்

ஒளியானது சூரியனில் இருந்து பூமிக்கு வந்து சேர 8 நிமிட காலம் எடுத்துக்கொள்ளும். சூரியனில் தொடர்ச்சியான் வெப்ப ஆற்றல் புவியை வந்து சேர சரியாக 8 நிமிடம் 20 வினாடிகள் ஆகும், இந்த கணக்கானது ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ என்றும். பூமி சூரியனில் இருந்து 150 மில்லியன் தொலைவில் உள்ளது என கடக்கிடும் போது கிடைக்கும் விடை. அவ்வளவு தான்

8. பாதி வயது முதிர்ந்த சூரியன்

நமது சூரியனின் வயது கிட்ட தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகள் என கனக்கிடப்பட்டுள்ளது. இதுவரை பாதியளவு ஹைட்ரஜ்னை எரித்து இன்னும் மீதி இருக்கும் பாதி ஹைற்றஜனை எரித்து முடிவதற்கு இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். இப்போது நமது நட்சத்திரமானது மஞ்சள் சிறிய நட்சத்திரம் (Yellow Dwarf star)

9. தன்னைத்தானே சுற்றும் சூரியன்

சூரியனானது அசையாமல் ஓரிடத்தில் உள்ளது என பல காலமாக நம்பப்பட்டு வந்தது. பிறகு சூரியனில் உள்ள ஒரு சில கரும்புள்ளிகள் கண்டறியப்பட்டன. இந்த கரும்புள்ளிகளின் மறைவு மற்றும் கண்ணுக்கு புலப்படும் செயலானது சூரியன் தன்னை தானே சுற்றிவருகிறது என்ற முடிவுக்கு வின்வெளியாளர்களை தள்ளியது. பிறகு தான் சூரியன் 25 பூமியின் நாட்களுக்கு ஒரு முறை தன்னைதானே சுற்றிவருகிறது என கண்டு பிடித்துள்ளனர்.

10. எதிர் திசையில் சுற்றும் சூரியன்:

நமது சூரியகுடும்பத்தில் வெள்ளிகிரகமும் இப்படித்தான் சுற்றிகிறது எப்படி என்று கேட்கிறீர்களா? அதாவது நமது பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றுகிறது அப்படி என்றால் கிழக்கில் சூரியன் உதிக்கும் மேற்கில் மறையும் ஆனால் வெள்ளி கிரகத்தில் அப்படியே தலைகீழ்தான். மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். சரி சரி, சூரியனில். ?? அதேதான். சூரியன் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றிகிறது. ஆனால் அதான் சூரியனாயிற்றே அங்கு எப்படி சூரியன் உதிப்பது வைத்து சொல்ல முடியும்.

11.மிக அடர்த்தியான காந்த புலம்:

சூரியனில் காந்த புயல் உருவாகும் போது சூரியனில் ஒரு சில பகுதியில் காந்த ஆற்றலை உருவாகும். அப்படி ஒரு வாகும் போது solar flares  உருவாகும் இதனையே நாம் கரும்புள்ளிகள் என்கிறோம். அப்படி உருவாகும் கரும்புள்ளிகள் (sunspots) கருப்பாக இருக்க காரணம்? அதன் அருகில் உள்ள வெப்பநிலையை காட்டிலும். அந்த இடத்தில் வெப்பம் குறைவாக இருப்பதால் தான்.

12. அரோராவை உருவாக்கும் சூரியன்

ஆஸ்திரேலியா பகுதிகளில் உருவாகும் அரோராக்கள் சூரியனில் மேற்பகுதி(கரோனா)யில் உருவாகும் சூரிய காற்றினால் உருவாகிறது. Solar Wind என்பது இதனை அதிக சூடான மின்னூட்ட துகள்கள் அல்லது Charged Particle என்று கூறுவர்

13. சூரியனின் வளிமண்டலம்

இது மூன்று வகைகளை கொண்டது.இதனி போட்டோ ஸ்பியர், குரோமே ஸ்பியர், மற்றும் கரோனா என்பதுதான்.

 

நமது சூரியனானது எந்த வகைய சார்ந்தது. நமது அண்டவெளியில் கணக்கில்லாத நட்சத்திரங்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் நமது சூரியனை G V Star என்ற கணக்கில் வைத்துள்ளனர், இதற்கு வகை பெயரும் உண்டு அதுதான் மஞ்சல் சிறு நட்சத்திரம் (Yellow Dwarf Star),  இது போன்ற நட்சத்திரங்களை அதன் மேல் பகுதி வெப்பநிலையை பார்த்து வகைப்படுத்துவார்கள். அதாவது 5027-5727 டிகிரி செல்சியல் இருகும் நட்சத்திரங்களைதான்.

இதற்கு வேறு ஏதாவது பெயர்கள் உண்டா? என்றால் ம்ம்ம்ம்ம்ம். அறிவியலாலர்கள் பல நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்து பெயர்கள் வைத்துள்ளனர். ஆனால் நமது சூரியனுக்கு எந்த ஒரு சிறப்பு அறிவியல் பெயர்கள் இல்லை  ஆனான். சூரியனை SUN or SOL  என அழைப்பார்கள்.

for PodCast  Click here

 

November 27, 2018

Insight Land on Mars Successfully | நாசாவின் இன்சைட் லேண்டர் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிரங்கியது

நாசா அமைப்பானது செவ்வாயின் உள்பகுதிகளை அதாவது அந்த கிரகத்தின் கட்டமைப்புகளை interior மூலமாக ஆராய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு லேண்டர். உங்களுக்கு லேண்டர் என்றால் என்ன என்று தெரியும் தானே?

ஒரு கிரகத்தின் மேற்பரப்பில் தரையிரங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் இயந்திரத்தின் பெயர்தான் லேண்டர். நாசாவானது இந்த ஆண்டு மே மாத வாக்கில் இன்சயிட் என்ற ஒரு செவ்வாய்கிரகத்திற்கான லேண்டரை ஏவியது. அந்த லேண்டரானது இன்று அதாவது இந்திய நேரப்படி 26ம் தேதி நவம்பர் மாதம்  அதிகாலையில் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிரங்கியது.

ஒரு விதமாக துளையிடும் இயந்திரம் மூலமாக இது செவ்வாய்கிரகத்தின் உள் கட்டமைப்பை ஆராயும் எனவும் நாசா தரப்பில் கூறியுள்ளது. நேற்று அதாவது அமெரிக்காவில் 26 ஆம் தேதி. நாசாவானது இன்சயில் லேண்டர் தரையிரங்குவதை  நேரடியாக ஒளிபரப்பும் செய்தது இதனை பல நூறு கனக்காக மக்கள் நேரடியாக கண்டுகளித்தனர்.



Download Our App

More Posts to Read on:-



November 24, 2018

3rd Launch pad at sriharikota for gaganyaan | இஸ்ரோ மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் "ககன்யான்"

2022 ல் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ள ககன்யான் மிஷனுக்காக இஸ்ரோ தற்போது மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்திய குடிமகன் மூவரை தேர்வு  செய்து அவர்களை விண்ணில் அதாவது (Low earth Orbit) ல் 5-7 நாட்கள் உலவ விடவேண்டும் அதுவும் 2022 க்குள் இது தான் பாரத பிரதமரின் கட்டளை.

இதனை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள இஸ்ரோ. இந்த மனிதர்களை வின்ணில் அனுப்பு திட்டம் பற்றி 2004 ஆண்டு முதல் திட்ட மிட்டு வந்துள்ளது.(Space capsule recovery experiment, Crew module atmospheric re-entry & pad abort test) அதில் விண்வெளி பாதுகாப்பு பெட்டகம் , குழுவினரை பத்திரமாக வைத்திருக்கும் கேப்சூல் பாதுகாப்பு சோதனை, மற்றும் ஆபத்து கால குழு பாதுகாப்பு பெட்டகம். மேலும் வளிமண்டல சோதனை , பாரசூட் பரிசோதனை போன்ற மிக முக்கியமான சோதனைகள் முடிவுற்ற நிலையில் தற்போது இஸ்ரோ. இதற்கான. ராக்கெட் ஏவுதளம் மறு சீறமைவு அல்லது புனரமைவு பனியில் ஈடுபட்டுவருகிறது.

மூன்றாவது ஏவுதளம்:

இஸ்ரோ வானது 2 ராக்கெட் ஏவுதளங்களை கொண்டுள்ள ஒரு விண்வெளி மையம். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்த இரண்டும் தற்போது முழுமையாக உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றினை மறு புனரமைக்க வேண்டுமென்றாலும். அது இஸ்ரோவின் பல மிஷன்களை பாதிக்கும். இதனால் இஸ்ரோவானதுசிறியவகை ராக்கெட் ஏவுதளம் ஒன்றைமேற்கு கடற்கரை பகுதியான குஜராத் பக்கம் பார்த்து வருவதாகவும் . அப்படி குஜராத் பகுதிகளில் ஒரு புதிய ராகெட் ஏவுதளமானது அமைக்கப்படுமாயின் அது முற்றிலுமாக சிறிய வகை ராக்கெட் ஏவுதளமாக அமையும் என்றும் இஸ்ரோ அறிவித்து உள்ளது. இருப்பினும் இந்த செய்தி உறுதியானது கிடையாது. இஸ்ரோ தனது மனித விண்வெளி குழுவினை அனுப்புவதற்கு. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இரண்டில் ஒன்றைதான் மறுபுனரமைவு செய்ய வேண்டும்.

GSLV Mk3

இந்தியாவின் பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும். GSLV mk3 ராகெட் தான் ககன்யான் குழுவினரையும் , அவர்களுக்கு அடைக்களமாகவும் இருக்கும் பகுதிகளையும் விண்ணில் கொண்டு செல்லும் ஆனால் இந்த ராக்கெட் இதுவரை மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றப்படவில்லை. அதனால் GSLV mk3 ராக்கெடிலும்  ஒரு சில மாறுதல்களை செய்து இதனை மனிதர்கள் பிரயானிக்க ஏதுவானதாக மாற்றும் செயலிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

குழு ககன்யான்

இந்தியாவின் 3 குடிமகன்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள் அவர்கள் ஆண்களா அல்லது பெண்களா அல்லது இருவரும் இருப்பார்களா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் குழுவானது ரஷ்யா சென்று அங்குள்ள பயிற்சிகளையும் முடித்தால் தான் அவர்கள் விண்வெளி செல்ல தகுதியானவர்கள் என்ற சான்றிதழ் அளிக்கப்படும் . அதாவது ஆஸ்ரோனெட் தேர்வு செய்வதில் இந்தியா ரஷ்யாவின் உதவியை நாடவுள்ளது

3ஆவது முறைதான்

இஸ்ரோ ஏற்கனவே சொன்னது போல் இரண்டு முறை சோதனை ஓட்டங்கள் அதாவது  மறு புனரமைவு செய்யப்பட்ட ஏவுதளத்திலிருந்து, மறு புனரமைவு செய்யப்பட்ட GSLV mk3 ராக்கெடினை வைத்தும் இரண்டு முறை சோதனை ஓட்டம் செய்யப்படும் மூன்றாவது முறைதான் மனிதர்கள் குழு அதனும் செல்லும் என்றும் இஸ்ரோ அறிவித்திறுந்தது. அதன் காரனமாக 2020 ஆம் ஆண்டு முதல் சோதனை செய்யப்படும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியுள்ளார்.

Source

Source2

Source3



Download Our App

More Posts to Read on:-



Ozone hole in northern hemisphere to recover completely by 2030 | குணமாகும் ஓசோன் படலம்

Ozone Layer Tamil

நாம் நம்முடைய புவியினை பாதுகாக்க வேண்டும் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதனை நாம் செய்கிறோமோ இல்லையோ. புவி நம்மை காப்பாற்றும் வேலையினை சரிவர செய்துவருகிறது இதுவரை. எதுவரை என்றால் நாம் அதன் ஓசோன் படலத்தினை சேதப்படுத்தாதிருந்த வரையில் . ஓசோன் படலம் எதற்காக என உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நமது பூமியினை . அதி பயங்கரமாக பிரபஞ்ச கதிர்வீச்சுகளிலிருந்தும் , சூரியனின் புற ஊதா கதிர் வீச்சுகளிலிருந்தும் . இது நம்மை பாதுகாத்து வருகிறது, இந்த படலமானது 30 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலமையை விட இப்போது நல்ல நிலமையில் உள்ளது என்றும் . இன்னும் 12 வருடங்களில் . அதாவது 2030 வாக்கில் இது தானாக தன்னை குனப்படுத்திக்கொள்ளும் என்றும் Scientific Assessment of Ozone Depletion: 2018 என்ற அமைப்பானது கூறியுள்ளது. இதனை அவர்கள் World Meteorological Organization, என்ற அனைப்பில் சமர்ப்பித்து உள்ளனர்

குணமாகும் ஓசோன் படலம்:

2000 ஆவது ஆண்டில் நாம் ஓசோன் படலத்தினை பலமாக சேதப்படுத்தி இருந்தோம். பிறகு. உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு சபதத்தினை எடுத்தது அதுதான். ஓசோன் மீட்டெடுப்பு. இதற்காக நாம் செய்தது என்ன வென்றால்? ஒசோன் படலத்தினை சேதப்படுத்தும் செயல்களை தவிர்த்த்து தான் அதாவது . குளோரோ ஃப்லோரோ கார்பன் எனும் CFC வாயுக்களை தவிர்த்தது. மற்றும். பல வகையான ஓசோன் அழிக்கும் தன்மையுல்ள வாயுக்களை வெளியாக்கும் குளிர்சாதனங்களையும் நாம் இதுவரை குறைத்துள்ளோம். இதன் காரனமாக ஓசோன் தன்னை புதுப்பிக்க ஆரம்பித்தது. இப்போது ஆராய்சியாளர்கள். இதன் புதுப்பிக்கும் வேகமானது. இந்த நிலமையில் இருந்தால். இது இன்னும். 2030 ஆண்டுக்குள் முழுமையாக குணமடைந்து விடும் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலிலிருந்து. பூமியின் தெற்கு அறைக்கோளமானது அதாவது (southern hemisphere) 2050 ஆம் ஆண்டுக்கும் தன்னைத்தானே குணமாக்கி கொள்ளும் என்றும். மற்றும் துருவப்பகுதிகளில் உள்ள ஓசோன் ஓட்டையானது 2060 ஆண்டு வாக்கில் தன்னைத்தானே குனமாக்கிக்கொள்ளும் என்றும் அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

 

அதெல்லாம் சரி. நமது பூமியின் வெப்பநிலை தேராயமாக 2 டிகிரி அளவுக்கு கூடியுள்ளது உலகலாவிய அளவில் இதற்கு என்ன தீர்வு என்று கேட்கிறீர்களா? பொறுமையாக இருங்கள். நம்மால் முடிந்தவரை பூமிக்கு நல்லது செய்வோம். வாழ இடம் கொடுத்த இந்த பூமிக்கு நாம் முடிந்தால் நல்ல மரங்களை வரப்போம். மேலும் இதற்காக நாசாவின் ஐஸ் சாட்2 போன்ற செயற்கைகோள்கள். பலதரப்பட்ட தகவல்களை கொடுக்க உள்ளன. இதனை பயன்படுத்தி நாம் அதையும் சமாளிக்கலாம்

Source : http://www.spacedaily.com/reports/Ozone_hole_in_northern_hemisphere_to_recover_completely_by_2030_999.html

Download Our App

More Posts to Read on:-

EP.1- PodCast: Facts of Space | Space News Tamil

விண்வெளி மற்றும் அதை பற்றிய ஒரு சில ஆச்சரியமூட்டும் செய்திகள் உங்களுக்காக மற்றும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு விண்வெளி பற்றி எடுத்து சொல்லவும். அவர்கள் அறிவியல் மற்றும் விண்வெளியில் அதிக ஆர்வத்தினை கொடுக்கவும் இது மிகவும் உறுதுனையாக இருக்கும் என நான் நம்புகிறேன். இதே உங்களுக்காக.

 

Interesting Space facts in Tamil | Facts of Space in Tamil | Space News Tamil

இப்போது ஓரிரு வின்வெளி சம்பந்தபட்ட செய்திகளை பார்ப்போம்.

1.விண்வெளியில் சப்தம் கிடையாது

விண்வெளியில் உங்களால் சப்தம் எழுப்ப முடியாது. ஏனெனில் ஒலியானது கேட்பதற்கு நமக்கு ஒரு ஊடகம் தேவை . இதனை நமது வளிமண்டலத்தில் உள்ள  காற்று செய்யும். வின்வெளியில் காற்று இல்லாததால். அங்கு சப்தம் யாருக்கும் கேட்காது. நமது விண்வெளி அறிவியலாலர்கள். ரேடியே அலைவரிசைகளை நம்மால் அனுப்பவும் பெறவும் முடியும் என்பதால் இதனை பயன்படுத்தி . விண் கலங்களை தொடர்பு கொள்கின்றனர்.

2.450 டிகிரி செல்சியல் கிரகம்தான் அதிக சூடான கிரகம்

நமது சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் என்றால் அது வெள்ளி கிரகம் தான். ஆனால் புதன் கிரகம் தான் சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ளது. ஆனால் புதன் கிரகத்தில் வளி மண்டலம் இல்லாததால் அங்கு அதிக வெப்பம் இருக்காது. வெள்ளி கிரகத்தில் அடர்ந்து வளிமண்டலம் காணப்படுவதால் இந்த கிரகம் வெப்பத்தினை வெளியிடாமல் அதிக வெப்பநிலைக்கு உள்ளாகிரது.

3.செவ்வாய்: வருங்கால பூமி

நமது சூரிய குடும்பத்தினை பொருத்த வரையில், பூமிக்கு பிறகு மனிதர்வாழும் தகுந்த கிரகமான செவ்வாய் இருக்கவும். இதில் மனிதர்களை காலனியாக குடியமர்தவும். பல திட்டங்கள் செய்து வருகிறது. இதற்கு முதல் காரனமாக 1986 ஆம் ஆண்டு நாசா செவ்வாயில் கண்டறிந்த நுன்ணிய உயிரினங்களின் புதைபடிமங்கள் தான்.

4.கனக்கில்லா நட்சத்திரங்கள் அல்லது சூரியன்கள்

விண்வெளியில் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளன என்பது யாருக்கும் தெரியாத ஒரு விஷயம். பல தரப்பட்ட கனக்கீடுகளுக்கு பிறகு நமது பால்வழி அண்டத்தில் தேராயமாக 200-400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம் என்றும். நமது அருகில் இருக்கும் நட்சத்திரமான ஆன்றோமிடா கேலக்ஸியில் 1 டிரில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம் எனவும் (தேராயமாக) கணக்கிடப்பட்டுல்ளது. இது போன்று கேலக்ஸிகள் எவ்வளவு உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. ஹா ஹா.

5. ரூபாய் 84,67,80,000.00 மதிப்புள்ள நாசாவின் வின்வெளி கவசம்

நாசாவின் விண்வெளியாலர்கள் பயன் படுத்தும் விண்வெளி கவசமானது இதனை ஸ்பேஸ் சூட் என்பர் இது முழுவதும் $12 மில்லியன் டாலர்கள் செலவாகும் இதல் 70 % தொகையானது அதன் பின்பக்க இருக்கும் ஆக்ஸிஜம் மாடுயூல் மற்றும் இதனை கட்டுப்படுத்தும் control Module உம் தான்.

6. அதிவேகமாக சுற்றும் நியூற்றான் நட்சத்திரம்: 4-40000 RPM

நியூற்றான் நட்சத்திரங்கள் தான் விண்வெளியில் அதிவேகமாக சுற்றும் இது ஒரு நிமிடத்திற்கு 4-40000 தடவை சுற்றும் . மிகவும் சுழற்சி குறைந்த நியூற்றான் நட்சத்திரங்கலை பல்சார் நட்சத்திரங்கள் என்பர் இதுவும் ஒரு நிமிடத்திற்கு 100 முறையாவது சுற்றிவிடும்.

7. ஒரு நாள் ஒரு வருடத்தினை விட அதிகம்.

நமது வெள்ளி கிரகம் அதன் தன்னைதானே சுற்றும் வேகம் குறைவாக இருப்பதால் இதன் ஒரு நாள் என்பது 243 பூமியின் நாட்களுக்கு சமமானது. ஆனால் இது சூரியனை ஒரு முறை சுற்றிவர வெறும் 225 (பூமியின்) நாட்களில் சுற்றிவந்து விடும். அதாவது ஒரு நாள் ஒரு வருடத்தினை விட அதிகம்

8. ஆன்ரோமிடா மற்றும் பால்வழி அண்டத்தின் மோதல்

இன்னும் 3.75 பில்லியன் ஆண்டுகளில் நமது கேலக்ஸியான பால்வழி அண்டமும் , நமது அண்டை கேலக்ஸியான ஆன்ரோமிடா அண்டவெளியும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் என்று விண்வெளியாளர்கல் கணித்துள்ளனர். ஆண்ரோமிடா கேலக்ஸியானது வினாடிக்கு 110 கி.மீ என்ற வீதத்தில் நமது கேலக்ஸியை நோக்கி வந்துகிட்டு இருக்குக்கு.

9. மிகப்பெரிய ஆஸ்டிராய்டு 1000 கிமீ விட்டம் உடையது

இது ஒரு தவறான புரிதல். முதன் முதலில் நாம் சீரிஸ் (சிரஸ்) எனும் ஒரு குட்டி கிரகத்தினை தான் ஒரு ஆஸ்டிராய்டு என தவறாக புரிந்து வைத்து இருக்கிறோம். செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கும் பகுதிதான் ஆஸ்டிராய்டு பெல்ட் இதில் இருக்கும் ஒரு பெரிய பொருள்தான் சிரிஸ் கிரகம் இதனை dwarf planet என்றும் அழைப்பர்

10. 99.86 % சூரிய குடும்பத்தின் எடையை சூரியனே எடுத்துக்கொண்டது

ஹீலியத்தாலும் , ஹைற்றஜனாலும் உருவான நமது சூரியனானது நமது சூரிய குடும்பத்தில் 99.86 சதவீத எடையை உடையது.நமது பூமியோடு ஒப்பிடும் போது இது 3,30,000 மடங்கு அதிக எடை கொண்டது,

மேலும் வின்வெளி பற்றிய உடனடி செய்திகளை தெரிந்து கொள்ள இனைந்திருங்கள் நமது ஆன்ட்ராய்டு செயலியை பதிவிறக்கு கொள்ளுங்கள்

 

November 23, 2018

23-11-2015 OTD in Space | Blue Origin Vertical Landing Rocket | மீண்டும் பயன்படுத்தப்படும் ராக்கெட்

நாம் அனைவரும் அறிந்த ஒரு செய்தி என்ன வென்றால் ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனமானது. முதன் முதலில் ஃபால்கன் 9 (falcon 9) ராக்கெடினை வைத்து மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில். அதனை பத்திரமாக பூமியில் தரையிரங்கும் படி செய்ததுதான். ஆனால் இதனை 2015 ஆம் ஆண்டு முதன் முதலில் செய்து காட்டியது Blue Origin என்ற ஒரு ராக்கெட் நிறுவனம் தான். அதுவும் இந்த நாளில் தான் .அதாவது 23-11-2015

முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

 

November 15, 2018

Gaia Telescope | காயா தொலைநோக்கி தமிழ் விவரங்கள்


காயா தொலைநோக்கியானது நமது பால்வழி அண்டத்தினை 3D முறையில் வழங்குவதற்காக விண்ணில் விவரங்களை சேகரிக்க , ஐரோப்பிய ஆய்வுக்கழகத்தால் டிசம்பர் மாதம் 13 ஆம் நாம் 2013 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது.

அதாவாது விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களையும் மற்றும்  தனித்தனி பொருட்களையும் அதன் தூரம். அளவு. மற்றும் அதன் நகரும் வேகம் எந்த திசையில் நகர்கிரது என்பது போன்ற விவரங்களை இது சேகரிக்கும். என்னது விண்வெளியில் திசைகளா ? என்று ஆச்சரியப்படாதீர்கள் கீழே உள்ள படத்தினை பாருங்கள் உங்களுக்கு புரியும்.


அதாவது ஒரு விண்வெளி பொருளானது எந்த பக்கம் நகர்கிரது என்பதை இது துள்ளியமாக அளவிடும் திறமை உள்ளது.. இதற்கு வானியலில் Astrometry வான் பொருள் அளவீடுகள் என கூறப்படும். இதன் பிரசித்தி பெற்ற கண்டு பிடிப்புகளில் ஒன்றுதான்.

நமது பால்வழி அண்டமானது சாதாரனமாக தனியான ஒரு அண்டம் கிடையாது இது சுமாராக 10 பில்லியன் வருடங்கள் முன்பு இது ஒரு பெரிய வேறு ஒரு அண்டத்துடம் மோதல் நடந்திருக்க வேண்டும் என்பது . கடந்த அக்டோபர் 31 ஆம் நாள் இது வெளிஉலகுக்கு தெரிந்தது.

மற்றுமொரு புதிரான கண்டு பிடிப்பு தான் நிழல் அண்டம். நமது அண்டத்திலிருந்து கிட்டதட்ட 1,30,000 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டறியப்பட்டது

November 14, 2018

வெற்றிகரமாக வின்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடு விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட் 29 தொலைதொடர்பு செயற்க்கைகோள். பிரதியேக காட்சிகள் உங்களுக்காக

இதன் மூலமாக இந்தியாவின் வடக்கு பகுதிகளுக்கு அதாவது காஷ்மீர் , ஜம்மு போண்ற பகுதிகளை டிஜிட்டல் மயமாக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

https://www.pscp.tv/PIB_India/1eaJbOkndPqxX?t=3m22s

Twitter Update:

 

பிரதமரின் வாழ்த்து ஜிசாட் 29 வெற்றிக்காக

 

 

https://indianexpress.com/article/technology/science/gsat-launch-live-20-isro-rocket-gslv-mk-iii-sriharikota-5446366/?#liveblogstart

Gaia Telescope Finds "Ghost Galaxy" | நிழல் கேலக்ஸி ஆன்ட்லியா 2 தமிழ் விவரங்கள்.


விண்வெளியில் புதியாக கண்டறியப்பட்ட நிழல் அண்டம் அதாவது கோஸ்ட் கேலக்ஸி (Ghost Galaxy) விண்வெளியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது நமது பால்வழி அண்டத்திற்கு வெளியே உள்ள ஒரு மிகவும் லேசான கேலக்ஸி எனவும் அதாவது அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது இதனை (faint galaxy) என்றும் அறிவியலாலர்கள் கூறுகின்றனர்.

காயா தொலைநோக்கி (Gaia Telescope)


இது ஐரோப்பிய வின்வெளி கழகத்தால் அனுப்பப்பட்ட காயா Gaia தொலைநோக்கியின் பழைய பதிவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. காயா தொலநோக்கியின் நோக்கமே பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தையும் கண்டறிந்து அதனை ஒரு 3D மாடலாக உருவாக்கிட வேண்டும் என்பது தான். இதுவரை காயா தொலைநொக்கியானது 1.7 பில்லியன் நட்சத்திரங்களை கண்டறிந்து மேப் செய்துள்ளது.

நிழல் கேலக்ஸி : ஆன்ட்லியா 2 (Ghost Galaxy :Antlia2)

சர்வதேச விண்வெளியாளர்களின் குழு ஒன்று இதனை கண்டறிந்து உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர்கலால் கூட இதனை பற்றி முழு விவரங்களையும் கூறிவிட முடியாது. இதற்கு அவர்கள் ஆன்ட்லியா (Antlia 2) என பெயரிட்டுள்ளனர். இது நமது பால்வழி அண்டத்தின் வெளிப்பகுதியில் இருந்து 1,30,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்ட்லியா 2 என்ற நிழல் கேலக்ஸியானது கிட்டத்தட்ட LMC (Large Magillan Cloud) அளவுக்கு பெரியதாக இருக்கலாம் எனவும், மேலும் இது சாதாரனமாக இருக்கும் கேலக்ஸிகளை விட 10,000 மடங்கு மங்களானது என்றும் அறிவித்துள்ளனர்.

இதன் மங்கள் தண்மைக்கு காரணமாக டார்க் எனர்ஜி கூறப்படுகிறது. உங்களின் கருத்து என்ன .??? கீழே பதிவிடுங்கள்.

November 13, 2018

CYCLONE Clouds | இஸ்ரோவை மிரட்டும் புயல் மேகங்கள் | நவம்பர் 14

வரும் நமம்பர் 14 ஆம் நாள் இஸ்ரோவானது தனது தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட் 29 ஐ விண்ணில் ஏவ திட்ட மிட்டு இருந்தது. ஆனால் தற்போது நிலவும் வானிலை நிலமை இஸ்ரோவை மிகவும் பயப்பட வைத்துள்ளது.

விண்ணில் ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் வானிலையை பார்ப்பது எல்லா ராக்கெட் ஏவு தளங்களும் பார்க்கும். இந்தியாவின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜிசாட் 29 செயற்கைகோளானது இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க உதவும் . கா மற்றும் கு. கட்டுகளில். (K and Ku Bands)

தற்ப்போது ஆந்திராவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதால் புயல் மேகங்கள் வர வாய்ப்பு உள்ளது.

இந்த செயற்கைகோளும் மிகவும் முக்கியம் அதே நேரத்தில் அதை அனுப்பு இருக்கும் GSLV Mk 3 இந்தியாவின் மிகவும் அதிக திறம் கொண்ட ஹெவி லாஞ்சர் இரண்டும் கொஞ்சம் முக்கியமானது எனவே இஸ்ரோ இப்போது நாளைய லாஞ்சில் என்ன செய்யும் என்பது ஒரு கேள்விக்குறிதான்.??????

அது மட்டுமல்ல இதே மாதம் 26 ஆம் நாள் அதாவது நவம்பர் 26 ஆம் நாள் இஸ்ரோ தனது PSLV ராகெட் மூலமாக இரண்டு HySIS வகை (இவ்வகை செயற்கைகோள்கள் பூமியின் ஆராயும்) செயற்க்கைகோள் மற்றும் 20-30 சிறிய செயற்கைகோள்களை  வின்ணில் ஏவ உள்ளது. இந்த புயல் மேகம் நீடித்தால் நவமபர் 26 லாஞ்சும் கேள்விக்குறிதான்.?????? ஆறு மாதங்கள் கழித்து இஸ்ரோ இப்போது தான் இந்திய செயற்கைகோளினை ஏவுகிறது இதற்கு முன் IRNSS-1I launched on April 12.

 

அதே நேரத்தில் இதன் மற்றொரு செயற்கைகோளான ஜிசாட் 11 திரும்பவும் கயானாவுக்கு சென்றுள்ளது. ஏரியன் 5 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவுவதற்கு.

Source: The Hindu

PodCast:

 

GSAT-11 returns to Guiana for December launch | விண்ணில் ஏவ தயாராகும் ஜிசாட் 11

 

டிசம்பர் 4 ஆம் தேதி வின்னில் ஏவுவதற்காக , இந்தியாவின் மிகவும் அதிக எடை உடைய தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட்11   திரும்பவும் ஃப்ரஞ்ச் கயானா சென்றுள்ளது. 

நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம். சரியாக சொல்லவேண்டும் என்றால்  கடந்த ஏப்ரல் மாதம் இது பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது கயானாவிலிருந்து. ஏனெனில் இஸ்ரோ இதற்கு முன்னால் அதாவது மார்ச் மாதம் அனுப்பிய ஜிசாட் 6A  எனும் ஒரு செயற்கைகோள் , வின்ணில் ஏவிய ஒரு சில மனிநேரங்களில் மறைந்து போனது. அதாவது அதனுடன் பூமியின் தொடர்பு விடுபட்டது. இதன் காரணமாக கயானாவில் உள்ள ஜிசாட் 11 என்ற செயற்க்கைகோளினை நாங்கள்  ஒரு சில மாற்றங்கள் செய்வதற்காக திரும்ப எடுத்துக்கொள்கிறோம் என இந்தியா கூறி அதனை ஏப்ரல் மாதமே திரும்ப பெற்றது. பிறகு பல வித வாக்கு வாதங்களும். பேரங்களும் நடந்தபிறகு . ஒரு வழியாக இதனை டிசம்பர் 4 ஆம் தேதி விண்ணில் ஏவிதர ஐரோப்பிய நிறுவனமான ஏரியன் குழுமம் ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து இஸ்ரோ வானது இந்த ஜிசாட் 11 என்ற ஹெவி சாட்டிலைட்டை நவம்பர் 3 ஆம் தேதி கயானாவுக்கு அனுப்பியது.

அது தற்போது ஐரோப்பிய கடற்கரை பகுதியாக Kourou வில் உள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த ஜிசாட் 11 மற்றும் ஜிசாட் 29 என்ற இரண்டும் இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க உதவும் தொலைதொடர்பு செயற்கைகோள்களாகும். (ஜிசாட் 29 ஸ்ரீஹரிகோட்டாவிலுருந்து நவம்பர் 14 ஆம் நாள் விண்ணில் ஏவ திட்ட மிடப்பட்டுள்ளத்.)

 

Source: the Hindu

 

November 12, 2018

CHEOPS Details in Tamil | Exoplanet Satellite in Tamil | Space News Tamil

இதற்கு போன பதிவில் நாம் இந்த எக்ஸோ பிளானட் செயற்கைகோளில் பதிய வைத்து இருக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் பற்றி பார்த்தோம். இப்போது நாம் இந்த செயற்கைகோளை பற்றி வேறு பல செய்திகளை தெரிந்து கொள்ளுவோம்.

CHEOPS என்றால் Characterizing Exoplanet Satellite என்று அர்த்தம். இந்த செயற்க்கைகோளானது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தால் 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவ தீர்மானிக்கப்பட்டுள்ள ஒரு விண்வெளி தொலைநோக்கியாகும். விண்வெளி தொலைநோக்கி என்ற உடன் நீங்கள் பெரிய அளவுக்கு கற்பனை செய்ய வேண்டாம். இது தான் ஐரோக்கிய விண்வெளி கழகத்தால் விண்ணில் ஏவ உள்ள மிக குறைந்த செலவுடைய செயற்கைகோள். ஆம் இது வெறும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவினங்களை உடைய 3.5 (mission duration )ஆண்டுகள் அவகாசம் கொண்ட ஒரு சாதாரன மிஷன்.

ஆனால் அதை எதற்கு தொலைநோக்கியாக அனுப்புகிறார்கள் . என்ற கேள்வி எழுந்திருக்கும். . இந்த செயற்கைகோளானது ஏற்கனவே கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்த 2700க்கும் மேற்பட்ட  எக்சோ பிளானட்களில் குறிப்பிட்ட  ஒரு சில எக்ஸோ கிரகங்களை மட்டுமே தேர்வு செய்து அதனை ஆராயும். என கூறப்பட்டுள்ளது.

எக்ஸோ கிரகங்களின் ஆரங்களை அளவிடுவது தான் CHEOPS இன் முக்கிய பனியாக இருக்கம் எனவும். இதனை Transit எனும் முறைய பயன் படுத்தி இது கண்டறியும் என்றும் அறிவித்துள்ளனர். ஆனால் இன்னெரு விஷயத்தினை நீங்கள் மறந்து விடக்கூடாது . இது கண்டறியும் அனைத்து கிரங்களும் ஏற்கனவே நாம் கெப்ளர் மூலமாக கண்டறிந்து. மேலும் பூமியில் உள்ள Land Telescope மூலமாக அதன் எடை , விட்டம் போன்றவற்றை அளவிட்டது தான். இதனை உறுதி செய்து கொள்ளத்தான். இந்த CHEOPS செயற்கைகோளை செலுத்த உள்ளனர்.

ஏற்கனவே ஆகஸ்டு 17 ஆம் நாம் 2018 அன்று பாஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு அறிவியல் மாநாடும் இதற்கு முக்கிய காரணம் என்றும் கருதப்படுகிறது. இதில் பங்கு பெற்ற ஒரு எக்ஸோ பிளானட் ஆராச்சி குழுவானது ஒரு புதிய தகவலை சொன்னனர். அதனை நீங்கள் தெரிந்து கொள்ள ….. Click Here

Source: wiki , ESA

PodCast:

Soon

CHEOPS Will Take Children's Artwork to Space | புதிய எக்ஸோ பிளானட் ஆராயும் செயற்கைகோளில் குழந்தைகளின் படங்கள்

 

செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளதை காட்டும் படம்

CHEOPS என்றால்  Characterizing Exoplanet Satellite  என்று அர்த்தம் இது ESA வால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் ஒரு பகுதியைல் சிறிய சிறிய படங்களை கொண்ட ஒரு டைட்டானியத்தால் ஆன தகடு ஒன்று வைத்துள்ளனர். இந்த தகட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தால் . 2015 ஆம் ஆண்டு பெர்ன் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகளுக்காங்க ஒரு ஓவியப்போட்டி , மற்றும் அதில் வெற்றி பெற்ற குழந்தைகளின் 2700 ஓவியங்களைத்தான் அதில் ஒரு தகட்டில் பொரித்து . அதனை . இந்த “சிபோப்ஸ்” செயற்கைகோளில் வைத்து இருக்கின்றனர்.

இரண்டு டைட்டானிய தகடுகளில் இதனை தயாரித்து உள்ளனர். இவை முறையே7 இஞ்ச் அகலமும் 9.4 இஞ்ச் உயரமும் கொண்டுள்ளது. இதனை நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்க்கலாம்.

இந்த சிறிய வகை செயற்கைகோளானது பூமி போலவே இருக்கும் குறிப்பிட்ட ஒரு சில எக்ஸோ பிளானட்களை ஆராய்சி செய்யும் எனவும். கூறியுள்ளனர்

 

Source: Space.com

PodCast:

 

November 04, 2018

BepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ - புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள்

பேர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதா? எனக்கும் அப்படித்தான் இருக்கும். இது ஏன் என்றால். இந்த மிஷனானது. ஐரோப்பியா விண்வெளி ஆராய்சி கழகம் மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனத்தால் இனைந்து அனுப்பப்படும் ஒரு கூட்டு திட்டம். ஒரு வேளை அதனால் தான் இப்படி பெயர் வைத்திருக்கிறர்களோ!!!???

இந்த செயற்கை கோளானது நமது புதன் கிரகத்தினை ஆராய்சி செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதை அனுப்பியது போன மாதம் 20 ஆம் தேதி. அதாவது

20 அக்டோபர் 2018,

இந்த விண்கலத்தில் இரண்டு வெவ்வேறு ஆர்பிட்டர்கள் உள்ளன். ஆர்பிட்டர் என்றால் என்னவெண்று தெரியும் தானே உங்களுக்கு. அந்த கிரகத்தினுள் இறங்கி அதை பற்றிய விவரங்களை சேகரிக்கும் ஒரு  கருவி. அந்த இரண்டு ஆர்பிட்டர்களின் பெயரானது.முதலாவது.

  1. மெர்குரி பிளானிடரி ஆர்பிட்டர் Mercury Planet Orbiter (MPO) இதனை அனுப்புவது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்.
  2. மெர்குரி மெக்னடோஸ்பியர் ஆர்பிட்டர் Mercury Magnetospheric Orbiter (MMO). இது ஜப்பானுக்கு சொந்த மானது

இந்த இரண்டு தனித்தனி ஆய்வுக்கலங்களும். இப்போது பிபி கொலும்போ விண்கலத்தின் உள்ளன. மேலும் இவை இரண்டும். புதன் கிரகத்தின் வட்டபாதையில் விடப்படம் ஆனால் 7 வருடங்கள் கழித்து தான்.

7 வருடங்களா? புதன் கிரகத்திற்கு செல்வதற்கு ஏம்பா 7 வருடம் என கேட்பது புரிகிறது. இதனை வடிவமைத்த விண்வெளி அறிஞ்சர்கள் கூறுகையில் . இந்த புதன் கிரகமானது நமது சூரியனை மிகுந்த நெருக்கத்தில் சுற்றி வருகிறது என்றும். நாம் மிகவும் வேகமாக செலுத்தும் பிபிகொலும்போ விண்கலமானது சூரியனின் ஈர்ப்பு விசையால் . புதன் கிரகத்தினை அடைவதற்கு முன்னரே. சூரியனில் விழ வாய்ப்பு உள்ளது என்றும். இந்த பிபிகொலும்போ விண்கலத்தின் வேகத்தினை குறைப்பதற்க்காகவே நாம் இவ்வளவு காலத்தினை எடுத்துக்கொள்கிறோம் என்றும் அந்த குழுவில் உள்ள இஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.

2018 ல் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலமானது 2020 ஆம் ஆண்டுகளில் நமது பூமியையும் வெள்ளி கிரகத்தினையும் சுற்றிவரும் படி செய்துள்ளனர். அதன் பின்னர்  2021ல் வெள்ளி கிரகத்தினை சுற்றிவரும் இது பின்னர் 2021 முதல் 2025 வரை புதன் கிரகத்தினை சுற்றிவரும் என்றும் கூறியுள்ளனர். See the Beautiful Images of Venus

 

இதனை பற்றிய மேலும் விவரங்களை நாம்  வரும் பதிவுகளில் பார்ப்போம்.

மேலும் விவர்ங்களுக்கு நீங்கள் நமது இனையதளத்தினை Subscribe செய்து வைத்துக்கொள்ளுங்கள். நன்றி

November 03, 2018

Gravitational Wave in Tamil - விளக்கம்

நாம் நமது பூமியில் ஈர்ப்பு விசையினை உணர்ந்துள்ளோம். அது புவியின் ஈர்ப்பு விசை. இது எப்படி வருகிறது ? என இப்போது பார்ப்போம்.

ஈர்ப்பு விசை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புவியீர்ப்பு மற்றும் ஈர்ப்பு விசை, அதாவது Gravity and Gravitational Force,

ஒரு பொருள் எவ்வளவு எடை அதிகமாக இருக்குமோ அதே அளவுக்கு அதன் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈர்ப்பு விசை என்பர்,

அதேபோல் ஈர்ப்பு விசை அதாவது Gravitational Wave என்றால்?

இதனை விண்வெளியில் ஏற்படும் சிற்றலைகள் என கூறலாம். அதாவது நமது விண்வெளியினை ஒரு பெரிய ரப்பர் துணி போல நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது இதில் நீங்கள் ஒரு அதிக எடையுள்ள பொருளை வைத்தால் அந்த

ரப்பர் துணியில் இது ஒரு பள்ளத்தினை உருவாக்கும். மேலே உள்ள படத்தினை பாருங்கள்.

அப்படி இருக்கும் தருனத்தில் நீங்கள் அந்த பொருளைநோக்கி வேறு ஒரு பொருளை அனுப்பினால்

அது  ஒரு வட்டபாதையில் சுற்றி வருவதை பார்க்கலாம். அதே போல்  விண்வெளியிலும் நடை பெறுகிறது. ஒரு கிரகம் எவ்வளவு எடையில் அதிகமோ. அந்த அளவு அதன் ஈர்ப்பு விசை இருக்கும். இப்போது புரிகிறதா. நமது சூரியனை ஏன் கிரகங்கள் சுற்றி வருகிறது என்று.

 

(இதற்கு காரனம் நமது சூரியன் மற்ற கிரகங்களை காட்டிலும் அதிக எடை உடையது.)

சரி இப்போது Gravitational wave விசயத்திற்கு வருவோம்.

அதல்லாம் சரி, இப்போ நமது சூரியன் தான் அதிக எடையுடைய பொருளா? விண்வெளியினை பொருத்த வரையில். அப்படி அல்ல. நமது சூரியன் சாதாரண ஒரு நட்சத்திரம். இதனை விட அதிக எடையுடைய நட்சத்திரங்கள் நமது பால்வழியில் உள்ளன. இவைஅனைத்தையும் விடை அதிகமாக எடை உடையது தான் . கருந்துளைகள். Black holes அதற்கு பிறகு நியூற்றான் நட்சத்திரம், அதன் பிறகு சாதாரன நட்சத்திரம்

  1. Black Holes (More Heavy)
  2. Neutron Star (slightly heavy)
  3. Normal Star (ordinary Heavy)

இப்போது நாம் இந்த மூன்று பொருட்களின் ஏதேனும் இரண்டு பொருட்கள் விண்வெளியில் ஒன்றை ஒன்று சுற்றிவரும் படி அமையுமாயின். அது நமது விண்வெளியில் அதிகமாக சிற்றலைகளை ஏற்படுத்தும்.  (அதாவது நமது ரப்பர் துணி)அப்படி ஒரு வேளை இரண்டு அதிக எடையுடைய கருந்துளைகள் தண்ணைத்தானே சுற்றிவரும் படி அமையுமாயின் அவை இரண்டும் சேர்ந்து நமது விண்வெளியில் சில சிற்றலைகளை ஏற்படுத்தும். ஏனென்றால் இரண்டும் அதிக எடையுடையது ,.  அது போன்று வரும் சிற்றலைகலைதான் gravitational waves  என கூறுவர்.

நாம் நமது பூமியில் இதனை கண்டறிவதற்காக LIGO எனும் ஒரு தொழில் நுட்ப கருவியினை கண்டறிந்துள்ளோம். இந்த நூற்றாண்டின் நவீன கண்டு பிடிப்பில் இதுவும் உள்ளது.அப்படி ஏற்படும் சிற்றலைகள் அந்த பகுதியில் கடந்து செல்லும் போது அந்த ஒட்டு மொத்த விண்வெளியினையே சுருக்கி, விரிக்கும் தண்மை உடையது. அப்படி ஏற்படும் சிற்றலைகலை தான். நாம் gravitational wave  என கூறுகிறோம்.

 

 

Source:

Video.Eng

Video Tamil

PODCAST: