December 30, 2018

New Horizon at Ultima Thule | Historic Kuiper Belt Object Flyby in the Space History | அல்டிமா துலே யை சந்திக்க போதும் நியூ ஹரைசோன் விண்கலம்

அல்டிமா துலே நியூ ஹரைசோன் சந்திக்கும் நிகழ்வு
new illustration from NASA

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வுக்காக காத்திருக்கின்றனர் அனைத்து விண்வெளியாளர்களும், அது என்னவென்றால்.நியூ ஹரைசோன் விண்கலத்தின் இரண்டாம் இலக்கான அல்டிமா துளெ என்ற ஒரு கைப்ப்பர் பெல்ட்பகுதில் உள்ள ஒரு விண்வெளி பொருள். இது கைப்பர் பெல்ட் பகுதியில் இருக்கும் ஒரு புதிரானவிஷயம். இதனை ஒரு சிறிய கிரகம் என்று கூட பலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெண்றால்  அது என்ன என்று யாருக்கும் சரியாக தெரியாது. இதுஒரு புதிர் நிறைந்த விண்வெளி பொருள்.

அல்டிமா துலே

இந்த அல்டிமாதுளே வானது புளூட்டோவிலிருந்து சுமார் 1 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது. பூமியில்இருந்து சுமார் 4.1 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது. நியூ ஹரைசோன்விண்கலத்தின் இரண்டாம் இலக்கான இதனை இன்னும் 2 தினங்களில் அனைத்து விஷயங்களையும் நாம்படிக்க இருக்கிறோம். இதுவரையில் கைப்பர் பெல்ட் பகுதியில் உள்ள எந்த பொருளையும் நாம்கடந்து சென்றது கிடையாது அதாவது (Flyby) இது தான் முதல் முறை.

நியூ ஹரைசோன் விண்கலம்

அது சரி நியூஹரைசோனின் முதல் இலக்கு என்ன தெரியுமா .? அது தான் புளூட்டோ. அதுதான் ஊருக்கே தெரியும்எங்கிறீர்களா? உண்மையில் இது புளோட்டோவினை 2015 ஆம் இது கடந்து சென்றது அதாவது(Flyby) இதற்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் விண்வெளியாளர்கள் இந்த கைப்பர் பெல்ட் பொருளானஅல்டிமா துளேவை கண்டறிந்தனர். அந்த நேரத்தில் அருக்கில் இருந்த ஒரே விண்கலம் இந்த நியூஹரைசோன் தான்.  அதனால் உடனே புளுட்டோவை கடந்தஉடன்  அதன் இரண்டாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது..

Old Illustration OF NH and Mu69 , kuiper Belt in tamil #NewHorizon in Tamil

Indepth விவரம் / செய்திகள்

இப்போது உள்ளநிலமையின் படி நியூ ஹரைசோனிலிருந்து பூமிக்கு ஒரு தகவல் வந்து சேர்வதற்கு கிட்டத்தட்ட6 மணி நேரம் மற்றும் 8 நிமிடங்கள் எடுக்கிறது. ஒரு தடவை தகவலை கொடுத்து பெற்றிட(Signal Round Trip) சுமார் அரை நாள் எடுக்கும் அதாவது 12 மணி நேரம் 15 நிமிடங்கள்.அதனால், விண்கலமானது அல்டிமா துளேவை கடக்கும் போது தனது அனைத்து அறிவியல் உபகரனங்களையும்பயன்படுத்த வேண்டும். அது வும் , எந்த வித பிரச்சனையும் இல்லாமல், 

இந்த அல்டிமாதுளே வை நியூ ஹரைசோன் விண்கலமானது சுமார்  வினாடிக்கு39,000 மைல் என்ற வேகத்தில் கடந்து செல்லும். அது மட்டும் இன்றி, கடந்து செல்லும் போதுவிண்கலத்திற்கும் அந்த அல்டிமா துளேவிற்கும் இடையே  வெறும் 2,200 மைல் தான் தூரம் இருக்கும் அதாவது3540 கிலோ மீட்டர், அந்த அளவு அருகில் இது கடக்கும் என்று நியூ ஹரைசோனின் பொறியாளர்கள்கூறுகிறார்கள்.( இது லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திற்கும் வாஷிங்க்டன் DC நகருக்கும் இடையேஉள்ள தூரமாகும்.)

ஜனவர் 1 ஆம்தேதி விண்கலம் இதனை கடப்பதை அதன் தரவுகளை மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.குழுவின் முழு அட்டவனையயும் நீங்கள் கீழே காணலாம். ஜனவர் 2 ஆம் தேதி முதல் அந்த புதிர்நிறைந்த கைப்பர் பெல்ட் பொருள் என்ன வென்று தெரியவரும்.

Popular Posts

December 28, 2018

ISRO recruitment till Jan 15, 2018 | scientist and engineers recruitment for ISRO job offer

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐஎஸ்ஆர்ஓ வில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் பகுதியில் SC (Stipendiary cadre’ level) ஆட்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது.
Civil, Electrical, Refrigeration and Air Conditioning, and Architecture. Candidates who are going to complete courses this academic year are also eligible to apply,
மொத்தம் 18 இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இஸ்ரோ செய்துள்ளது இதற்கான பதிவேற்றங்கள் அனைத்தும் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வமான இணையதளm isro.gov.in மூலமாகவே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

Dec 26, 2018 முதல் ஜனவரி 15 2019ஆம் நாள் வரை நீங்கள் பதிவு செய்யலாம்.

பதிவு கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படும் . அதையும் நீங்கள் ஆன்லைன் மூலமாக செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுபற்றி கூறுகையில் கடைசி நேரத்தில் ஆன்லைனில் ஏற்படும் பரிமாற்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் offline மூலமாகவும் நீங்கள் இந்த தொகையை கட்ட முடியும் , இதற்காக நீங்கள் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையை அணுக வேண்டும்.

Source

Voyager spacecraft and Nuclear Fissure | எப்படி இவ்வளவு தூரம் போகுது இந்த வாயேஜர்

Voyager Spacecraft details in tamil
Voyager Space craft Image. Artificial

வாயேஜர் விண்கலங்கள் எப்படி இவ்வளவு தூரம் செல்கின்றன? என பலருக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும் இதற்கு விடையாகத்தான் இந்த பதிவு இருக்கப்போகிறது, என்றால் அது மிகையாகாது!!!

இந்த வாயேஜர் விண்கலங்கள் 1977ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டவை,  என்பது நமக்குத் தெரியும் ஏற்கனவே நாசாவின் விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் மிகப்பெரும் கிரகங்களான நான்கு பெரிய கிரகங்களை அதாவது சனி, வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களை தாண்டி சூரிய குடும்பத்தை பார்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள். ஆகவே அந்த காலத்தில் நாசாவில் உள்ள propulsion laboratory விஞ்ஞானிகள் இதில் RTG  ஆர் டி ஜி என்று பெயரிடப்பட்ட ஒருவகையான மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையான இயந்திரங்கள் அணுக்கரு பிளவு அதாவது (Neclure Fissure) என்ற ஒரு நிகழ்வினை மையமாக கொண்டு மின்சாரம் தயாரிக்கும், ஒரு வகையான கருவி என்று கூறலாம் இந்த வகையான கருவிகள் வாயேஜர் விண்கலங்கள் மட்டுமில்லாமல் அதற்குப்பின் அனுப்பப்பட்ட பயணியர் 10 பயனியர் 11 நியூ ஹரைசோன் மற்றும் காசினி போன்ற விண்கலங்களிலும் இதே வகையான RTG Generator தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்.

cassini spacecraft rtg unit
காசினியில் பயன்படுத்தப்பட்ட RTG இயந்திரத்தினை சோதித்து பார்க்கிரார் ஒரு பெண்

இந்த வகையான ஆர் டி ஜி இயந்திரத்தில் புளூட்டோனியம் 238 என்று பெயரிடப்பட்ட கதிரியக்கத் தனிமம் பயன்படுத்தப்படுகிறது RTG  இயந்திரத்தில் thermocouple என்ற ஒரு பகுதி இருக்கும் இந்த பகுதியானது இயந்திரத்தில் இருக்கும் கதிரியக்க தனிமத்திற்கும் மற்றும் வெளிப்புறம் இருக்கும் குளிர்ச்சியான விண்வெளிக்கும் இடையே உள்ள வெப்ப நிலை மாற்றத்தை மையமாகக் கொண்டு    விண்கலனுகு தேவையான சக்திகளை பெறுகின்றன.

இந்த plutonium 238 என்ற கதிரியக்க தனிமமானது ஆல்ஃபா துகள்கலை மட்டுமே வெளியிட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்பதனால், வெளியிடக்கூடிய ஆல்ஃபாத் துகளை அந்த ஆர் டி ஜி இயந்திரமே உட்கிரகித்துக் கொள்கிறது இதன்மூலம் விண்கலத்தில் உள்ள மற்ற கருவிகளுக்கு கதிரியக்கம் பாதிப்பு ஏற்படாமல் இது பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த மின்சாரம் தயாரிக்கும் ஆர் டி ஜி இயந்திரமானது மிகவும் பாதிக்கப்படுகிறது.

உண்மையில் 1977 ஆம் ஆண்டு இந்த வாயேஜர் விண்கலங்கள் அனுப்பும்போது இந்த ஆர் டி ஜி கருவிகளின் மூலமாக தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவானது மற்றும் அது சக்தி குறையும் அளவை ஒப்பிட்டு கூறும் பொழுது 0.7% ஓராண்டுக்கு என்று கூறியுள்ளனர். அதாவது ஒரு வருடம் ஆனாலும் அந்த விண்கலத்தில் இருக்கும் சக்தியானது ஒரு சதவீதம் கூட குறைந்து இருக்காது அந்த அளவுக்கு இருந்தது தான் இந்த ஆர் டி ஜி தொழில்நுட்பம் கொண்ட அந்த கால மின்சாரம் தயாரிக்கும் கருவி

thermocouple shows the room temparature while connected to multimer
Thermocouple இயந்திரத்தினை Multimetre உடன் பொருத்தும் போது அறை வெப்ப நிலைய காட்டுகிறது

  புளுடோனியம் 238 என்ற கதிரியக்கத் தனிமத்தின் அரைவாழ் காலம் 87 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது அதாவது இந்த கதிரியக்கத் தனிமம் தனது அணுக்கரு பாதியாக குறைவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் தான்  அரை வாழ் (half Life) காலம் என்று கூறப்படும். RTG இயந்திரத்தின் திறன் மிகவும் குறைந்து வருவதையொட்டி இந்த வகையான விண்கலன் அதாவது வாயேஜர் விண்கலங்கள் 2025-லிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முழு திறனையும் இழந்து அதாவது மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்து விண்வெளியில் திக்கற்று கிடக்கும் என கருதுகிறார்கள் விண்வெளியாளர்கள்.

கடந்த 2000மாவது ஆண்டில் இந்த ஆர் டி ஜி இயந்திரத்தின் படி இது வெறும் 67 சதவீத மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்வதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

மேலும் இது போன்ற விபரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள ஸ்பேஸ் நியூஸ் தமிழ் டாட் காம் என்ற இணைய தளத்தை தொடர்ந்து பாருங்கள் நன்றி வணக்கம்

நான் தான் வேற யாரு

உங்கள் கருத்து என்ன

https://www.forbes.com/sites/quora/2016/09/14/after-50-years-in-space-voyager-will-go-dark-sometime-before-2030/#227b13106818

December 23, 2018

Jezero Crator NASA's 2020 Rover landing location confirm | நாசாவின் 2020 ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும் இடம்

நாசா 2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இருக்கும் மார்ஸ் 20 20 ரோவர் எங்கு இறங்க வேண்டும் என்று நாசாவின் சார்ந்த jet propulsion laboratory விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சாத்தியமான தரையிறங்கும் இடங்களில் குறிப்பிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது 8 தரை இறங்கும் இடங்கள், அந்த 8 தரையிறங்கும் இடங்களையும் 2015ஆம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஒன்றான ஜிசிரோ பள்ளத்தாக்கினை விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்,

இந்தப் பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 22 மைல் அகலம் கொண்ட ஒரு ஏரியாக இருந்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது, அப்படி ஒருக்கால் இது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாக இருந்திருந்தால் (நமது பூமியில் ஏரிகளில் உயிரினங்கள் வாழும் அதெப்போல)செவ்வாய் கிரகத்தில் இந்த குறிப்பிட்ட இடத்தில் ஏரி இருந்திருக்கும் பட்சத்தில், உயிரினங்கள் வாழ்ந்து இருக்கும்பட்சத்தில் அதன் காலப்போக்கில் தண்ணீர் வற்றி அதில் உள்ள உயிரினங்கள் மடிந்து அந்த ஏரியின் கீழ்ப் பக்கத்தில அதாவது அடியில் அதன் படிமங்கள் மற்றும் அது உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அதிகம் கிடைக்கப் பெறலாம் என்று கருதுகின்ற விஞ்ஞானிகள் இதன் அடிப்படையாகவே இந்த மார்ஸ் 2020 ரோவர் ஐ jezero crater பகுதிக்கு அனுப்ப நாடுகின்றனர்.

Korolev crater in Mars filled with ICE | பனிக்கட்டியால் உறைந்துள்ள செவ்வாய் கிரக விண்கல் பள்ளம்

Sergei korolev என்பவரின் பெயரை கொண்டு இந்த செவ்வாய் கிரக விண்கல் பள்ளம் பெயரிடப்பட்டுள்ளது. இவரை சோவியத் ரஷ்யாவின் விண்வெளி தொழில்நுட்ப தந்தை என்று கூறுவர் .

1950 முதல் 1966 வரை இவர் சோவியத் ரஷ்யாவிற்கு செய்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கப்படுகிறது. இவரின் பெயராலேயே இந்த விண்கல் பள்ளத்தாக்கு பெயரிடப்பட்டுள்ளது. இவர்தான் முதன்முதலில் ரஷ்யாவின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கொண்ட ஸ்புட்னிக்-1 என்ற விண்கலத்தை வடிவமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

சரி இப்போது நாம் விண்கல் பள்ளத்தாக்கினை பற்றி பேசுவோம் இந்த விண்கல் பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 84 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பெரிய பள்ளத்தாக்கு இந்த பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட ஒரு மைல் (1.8 கிலோ மீட்டர்)அளவுக்கு அடர்த்தியான பணி நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது (இந்த ஒரு மைல் என்பது அதன் மையப் பகுதியில் மட்டும்). மேலும் இந்த பள்ளத்தாக்கில் சுமார் 2200 கியூபிக் கிலோ மீட்டர் ( 2,200 cubic km (530 cu mi)) அளவுள்ள தண்ணீர் உறைந்துள்ளது என்று கருதப்படுகிறது, இந்த அளவானது பூமியில் உள்ள இரண்டு பெரிய ஏரிகளான Lake Erie and Lake Ontario வில் உள்ள நீரின் அளவுக்கு சமமானது என்று கூறுகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படமானது 2003 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி கழகத்தால் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் . இந்த ஆர்பிட்டர் ஆனது 2003 ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட்டது. அது ஒரு கிறிஸ்துமஸ் தினம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், அதேபோல் வரக்கூடிய கிறிஸ்துமஸ் அன்று இந்த 2018 இல் அந்த விண்கலமானது பதினைந்தாம் ஆண்டு நிறைவு செய்திருக்கும் என்றும் அதன் நினைவாக எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தினை பகிர்ந்துள்ளனர் esa (European space agency) விஞ்ஞானிகள்.

இந்த புகைப்படமானது விண்கலத்தில் உள்ள அதிக ரெசல்யூசன் கொண்ட கேமராவால் (High Resolution Stereo Camera) எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் . இந்த கருவியை ESA உக்கு வழங்கியது ஜெர்மன் ஏரோஸ்பேஸ் மையம் (DLR) ஆகும்.

இந்தப் புகைப்படம் ஆனது செவ்வாய் கிரகத்தின் வட துருவப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் மேலும் இந்த ஆர்பிட்டர் அதாவது விண்கலமானது இந்த குறிப்பிட்ட துருவப் பகுதியை கிட்டத்தட்ட ஐந்து முறை சுற்றி வந்துள்ளது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் . அதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஒன்றுதிரட்டி இப்பொழுது உங்கள் முன் கொடுத்துள்ளார்கள். இதைத்தான் நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்த்தீர்கள்.

எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ தகுதியான என ஆராய்ச்சி செய்வதற்காக நாசாவும் ஒரு Rover அனுப்ப இருக்கிறது இதனை நாசாவின் 20-20 ரோவர், என்று கூறினார்கள் இதைப்பற்றிய தகவல்கள் விரைவில் உங்களுக்கு வரும் subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்

Source

December 20, 2018

வெற்றி கரமாக விண்ணில் பாய்ந்தது ஜி எஸ் எல் வி f 11 | Gsat 7a successfuly Launched

GSLV f 11 ரக ராக்கெட் மூலமாக gsat 7a தொலைதொடர்பு செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இது முக்கியமாக ku அலைவரிசை களை அதிகரிக்க செய்யவும் இந்திய ராணுவத்தில் மிகவும் பெரிய மாற்றத்தினை கொடுக்கும் எனவும். எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த gsat 7a செயற்கைக்கோள் ஆனது தரைசார்ந்த ரேடார் களை இணைக்க பயன்படுத்தப்படும் எனவும் இதன் மூலம், இந்திய போர் விமானங்களை கண்காணிக்கவும் இது மிகவும் உறுதுணையாக இருக்கும். என்று இஸ்ரோ கூறியுள்ளது.

எடை : 2250 கிலோ

Payload : ku band transponder

Duration : 8 years

இது gslv யின் 13 வது லான்ச் என்பதும் மற்றும் இந்த குறிப்பிட்ட 3 பக்க என்ஜின் கொண்ட integeonus cryo stage ராக்கெட்டின் ஏழாவது launch என்பது குறிப்பிடத்தக்கது.

December 19, 2018

35th communication satellite will be launched tomorrow by ISRO GSLV f 11| 35ஆவது தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது இஸ்ரோ

Gsat 7a என்ற தொலைத் தொடர்பு செயற்கைக் கோளானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதாவது ku band அலைவரிசையை அதிகரிப்பதற்காக இந்த gsat 7a என்ற செயற்கைகோளை இஸ்ரோ நாளை மாலை 4 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது .

இந்த செயற்கை கோளானது இஸ்ரோவால் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயற்கை கோளானது ஜிஎஸ்எல்வி f 11 வகை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என கூறப்படுகிறது. இவ்வகை ராக்கெட் இஸ்ரோவின் நான்காம் தலைமுறைக் ராக்கெட் என்று வர்ணிக்கப்படுகிறது.

சுமார் எட்டு வருட காலங்கள் Mission Duration கொண்ட இந்த gsat 7 a செயற்கை கோளானது முதலில் ராக்கெட்டால் Geosynchronous Transfer Orbit (GTO). வில் நிலை நிறுத்தப்படும். பிறகு செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள propulsion என்ஜின் உதவியுடன் இது geostationary Earth Orbit ல் திரும்பவும். விஞ்ஞானிகளின் உதவியுடன். மீண்டும் நிலை நிருத்தப்படும். எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.

இதற்கான கவுன்டவுன் நேற்று அதாவது 18 december செவ்வாய் கிழையன்று தொடங்கி உள்ளது.

இது இன்று (19 டிசம்பர் ) புதன் கிழமை மாலை 04.10க்கு விண்ணில் ஏவப்படும்.

Source

December 18, 2018

Next GEN GPS III launching Tomo space X | அடுத்த தலைமுறை ஜிபிஎஸ் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் ஸ்பேஸ் எக்ஸ்

Next Generation GPS III Launched by Space X Tamil Space News

அமெரிக்காவின் வான்படை துறையினரால் உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறைக்கான ஜிபிஎஸ் எனப்படும் global positioning system செயற்கைக்கோளை. நாளை அதாவது டிசம்பர் 19ம் தேதி Space X விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது உள்ளது.

உண்மையில் சொல்லப்போனால் இன்று அதாவது 18 டிசம்பர் 2018 ஆம் ஆண்டு தான் Space X இந்த மூன்றாம் தலைமுறை காண ஜிபிஎஸ் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது, ஆனால் தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களால் இந்த launch நாளை ஏவப்படும் எனவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எந்த காரணங்களுக்காக இது மாற்றி அமைக்கப்பட்டது என்ற எந்த விவரமும் space x தரப்பிலிருந்து இதுவரை கொடுக்கப்படவில்லை.

GpS III SV 01

இந்த மூன்றாம் தலைமுறை ஜிபிஎஸ் செயற்கை கோளானது இதுவரை விண்ணில் உள்ள gps செயற்கைக்கோள்களை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் துல்லியத் தன்மை வாய்ந்தது எனவும் அதிகம் திறன் கொண்டது

எனவும் Lockheed Martin மூலம் சான்றளிக்க பட்டுள்ளது. மேலும் இந்த செயற்கைக் கோளானது பூமியிலிருந்து Middle Earth Orbit என்று சொல்லப்படும் MEO or IEO வில் நிலை நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர் மிடில் Earth Orbit என்பது Leo மற்றும் GEO வுக்கு இடைப்பட்ட தூரம் என்று கூறப்படும்.

Lockheed Martin என்பது ஒரு பாதுகாப்பு அமைப்பு மற்றும் விண் அமைப்பு ( aero space company)

பயன்கள்

நான் ஆரம்பத்தில் மேலே சொன்னது போலவே இது அமெரிக்காவின் வான்வெளி (United States air Force) துறையினரால். தயாரிக்கப்பட்டுள்ளது இதன் பயன்களும் அதை சார்ந்தே இருக்கும் என்று நம்பலாம் அதாவது அமெரிக்கா மற்றும் அதன் சார்பு நாடுகளை பாதுகாக்கவும் மற்றும் மற்ற நாடுகளில் இருப்பதை கவனிக்கவும் இதுபோன்ற ஜிபிஎஸ் செயற்கைகோள்களை பயன்படுத்தப் போவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது மக்கள் பயன்பாட்டிற்கு இருக்குமா என்பது ஒரு சந்தேகத்திற்கு உள்ள ஒரு கேள்விதான் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போமா தங்களது மேலான கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

Source

December 15, 2018

46P/Wirtanen closest apporoch | பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல்

நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படமானது டிசம்பர் 2ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் இது இந்த மாதம் முழுவதுமே மிகப்பெரிய அல்லது சற்று பெரிய தொலைநோக்கிகளுக்க்கு புலப்படும் என்று ஏற்கனவே நாசாவால் மற்றும் உலகளாவிய விண்வெளியாளர்களால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

அப்படிப்பட்ட ஒரு நடுத்தரமான பெரிய தொலைநோக்கியால் இந்த மாதம் 2nd இரண்டாம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மேலும் இந்த 46P/Wirtanen எனும் விண்கல்லானது கிட்டத்தட்ட 1.1 கிலோ மீட்டர் அகலம் கொண்டது என்றும் இது தோராயமாக அதன் மிகவும் அருகில் வரக்கூடிய காலத்தில் அதாவது பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய காலத்தில் அது 0.07 விண்வெளி அலகு AU அல்லது அது சந்திரனைப் போன்று 30 மடங்கு தொலைவில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
7.1 million miles (11.4 million kilometers, or 30 lunar distances)

இந்த விண்கல்லானது பூமியை மிக அருகில் கடக்கும் விண்கற்களில் 10ல் ஒன்று அதுவும் கடந்த 70 வருடங்களில்.

அதுமட்டுமின்றி வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது டிசம்பர் 16ஆம் நாள் இந்த விண்கல்லானது நம் மனித கண்களுக்கு புலப்படும் அளவு மிகவும் அருகில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

December 14, 2018

3D Bennu | first 3D image of asteroid bennu|பெண்ணு விண்கல்லின் 3டி படம் இதோ

உங்களிடம் நீலம் மற்றும் சிவப்பு கலர் உள்ள 3D கண்ணாடி இருந்தால் அணிந்து பாருங்கள்.

விண்கல்லின் மேற்பகுதியில் சிறு சிறு கல் துண்டுகளை கொண்டு குப்பை போட்டது போல் இருக்கும் இந்த விண்கல் பென்னு வை , நாசாவின் ஓசைரிஸ் ரெக்ஸ் விண்கலமானது சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருந்து அதில் உள்ள PolyCam கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட படங்களை வைத்து ஒன்று திரட்டி உருவாக்கியதுதான் இந்த 3டி விண்கல்.

இப்படங்கள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் மேலும் இந்த விண்கலமானது 2023-ம் ஆண்டு அந்த விண்கல்லின் ஒருசில கற்பாறைகளில் மனல்களையும் பூமிக்கு கொண்டு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Source

14-12-1962 OTD in Space| Mariner2 Venus first flyby |முதன் முதலில் வேறு கிரகத்தை வலம் வந்த விண்கலம்

மரைனர் 2 விண்கலம் ஆனது ஆகஸ்ட் மாதம் 1962 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது அதே மாதத்தில் டிசம்பர் 14, 1962 தேதி, இந்த விண்கலமானது வெள்ளி கிரகத்தை முதன்முதலாக கடந்து சென்றது இதுதான் முதன் முதலாக மனிதன் உருவாக்கிய ஒரு கிரகத்தை பூமி அல்லாத வேறு கிரகத்தை சுற்றி வந்தது அல்லது கடந்து சென்றது என்று கூறலாம்.

December 12, 2018

Voyeger 2 is now in interstellar space confirmed by NASA | சூரிய குடும்பத்தை தாண்டி சென்ற வாயேஜர்-2 விண்கலம் நாசா உறுதி செய்தது

1977 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலம் ஆனது தற்போது நமது சூரிய குடும்பத்தை தாண்டி இன்டர்ஸ்டெல்லார் விண்வெளியில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

விண்ணில் இந்த விண்கலத்தை ஏவி பல ஆண்டுகள் ஆனாலும் இந்த விண்கலத்தை இன்னமும் நாசா தொடர்பிலேயே வைத்துள்ளது எனினும் ஒருமுறை இந்த விண்கலத்தை தொடர்பு கொள்ள நாசாவாகவே இருந்தாலும் . சரி கிட்டத்தட்ட தோராயமாக 17 மணி நேரங்கள் ஆகின்றன ஒரு சாதாரண செய்தியை கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, மேலும் அதிலிருந்து செய்திகளை திரும்ப பெற மீண்டும் பல மாதங்கள் எடுக்கின்றது. இருந்தபோதிலும் விண்கலத்தில் உள்ள. (Cosmic Ray monitor) விண்வெளி கதிர்வீச்சு கருவியில் பதிவான தகவல்களின் அடிப்படையில் இப்போது இந்த வாயேஜர்-2 விண்கலம் ஆனது சூரியனின் எல்லைக்குட்பட்ட பகுதியை தாண்டி சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நீங்கள் மேலுள்ள படத்தில் பார்த்தீர்கள் இதை சூரியன் தனது ஆதிக்கம் செலுத்தும் பகுதி என்று கூறலாம் அல்லது ஹீலியோ ஸ்பேர் என்று கூறுவார்கள். நமது கிரகத்தில் பதிவாகும் கதிரியக்கங்கள் அனைத்தும் நமது சூரியனிடம் இருந்து வருவதுதான், மேலும் இந்த விண்கலத்தில் உள்ள கருவி இன் அடிப்படையில் சூரியனின் கதிர்வீச்சின் அளவு குறைந்து வேறுவித கதிர்வீச்சுகளை அது பெற ஆரம்பித்துள்ளது இதனையே சூரிய கதிர்வீச்சு குறைவு அல்லது heliosphere ஐ தாண்டி சென்று விட்டது என்று கருதலாம் , இதன்மூலமே நாசா இந்த விண்கலமானது நமது சூரிய குடும்பத்தை தாண்டி சென்றுவிட்டதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

December 11, 2018

NASAs Newly Arrived OSIRIS-REx Spacecraft Already Discovers Water on Asteroid |அஸ்டிராய்Dil கண்டறியப்பட்ட தண்ணீர் மூலக்கூறுகள்

நாசாவின் ஓசைரிஸ் விண்கலமானது பெண்ணு என்ற வின்கல்லில். தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்துள்ளது. ஒசைரிஸ் Rex விண்கலமானது விண்கல்லை 19 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து அதனை சுற்றி வருகிறது.

நாசாவில் உள்ள விண்வெளி யாளர்கள் விண் கலத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு நிறமாலை கருவிகளைக்கொண்டு இதனை கண்டுபிடித்துள்ளனர்.

1. ஒளி மற்றும் infrared அலை நீளம் கொண்ட கருவி மற்றும்

2. வெப்ப சிதறல் நிறமாலை கருவி

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவை (hydroxyls)ஹைட்ராக்ஸி என்ற வகையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளனர் அதாவது H2O பதிலாக OH என்று இணைந்து உள்ளதாக கூறியுள்ளனர்.

Source:

http://nasa.gov/press-release/nasa-s-newly-arrived-osiris-rex-spacecraft-already-discovers-water-on-asteroid

Download Our App

More Posts to Read on:-



December 09, 2018

Insight lander sent the sound of the Mars the (otherworld sound)| செவ்வாய் கிரக சப்தத்தை கேளுங்கள்

.. செவ்வாய் கிரகத்தில் நாசா அனுப்பிய புத்தம் புதிய இன்சைட் லேண்டர் , ஒரு வித்தியாசமான செவ்வாய் கிரக காற்று சப்தத்தை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இந்த சப்தமானது தோராயமாக , மணிக்கு 10 மைல் முதல் 15 மைல் வேகத்தில் வீசிய காற்றின் மூலமாக லேண்டர் இல் இருந்த சூரிய தகடுகள் அதிர்வின் மூலமாகவும் இந்த சப்தம் வெளிப்படுவதாக கருதப்படுகிறது. இதனை நாசா தனது இன்சைட் லேண்டர் டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்தனர் .

அதற்கான லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது நீங்களும் கேட்டுப் பாருங்கள்

Download Our App

More Posts to Read on:-

December 08, 2018

Change 4 launched today to far side of the Moon| விண்ணில் ஏவப்பட்டது சாங்கி 4 விண்கலம்

நிலவின் புறப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக சாங்கி 4 விண்கலமானது, இன்று நள்ளிரவு 2 மணி 22 நிமிடங்கள் அதாவது டிசம்பர் 8, 2018 (2.22am) சைனா நேரப்படி விண்ணில் ஏவப்பட்டது.

லேண்டர் மற்றும் ரோவர் கொண்ட இந்த விண்கலமானது நிலவின் பின்பகுதியை ஆராய்ச்சி செய்வதனால், பூமிக்கும் விண்கலத்தின் இடையே தொலைத் தொடர்பை உருவாக்குவதற்காக சைனா ஏற்கனவே Quequaue என்ற செயற்கைக்கோளை நிலவின் வட்டப்பாதையில் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே சைனா ஏவியுள்ளது.

. Changi 4 விண்கலத்தின் முக்கிய பணியாக நிலவின் மிகப்பெரிய விண்கல் பள்ளத்தாக்கு Von Karman Crater ஐயும், அந்த பகுதியில் உள்ள நிலத்தின் தரத்தையும் இது ஆராய்ச்சி செய்யும் என சீனா அறிவித்துள்ளது.

சாங்கி 5 விண்கலத்தினை அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ சைனா ஏற்கனவே திட்டமிட்டு உள்ளது அதுமட்டுமல்லாமல் சாங்கி 5 வின்களமானது, Osiris Rex , மற்றும் hayabusa போல , மாதிரியை எடுத்து வரும் sample return mission ஆக இருக்கும் என சீனா அறிவித்துள்ளது

Download Our App

More Posts to Read on:-



December 07, 2018

Insight new Photo From Mars | செவ்வாய் கிரகத்தில் இன்சைட் லேண்டர் புதிய புகைப்படம்

நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படமானது இன்சைட் லேண்டர் இல் உள்ள ஒரு இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான்,

இந்த புகைப்படத்தில் நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இந்த இன்சைட் லேண்டர் தரையிறங்கிய surface of Elysium Planitia in the எலிசியம் பிலனிடா பகுதியை நீங்கள் பின்புறத்தில் காணலாம் அதாவது செவ்வாய் கிரகத்தின் வெளிப்பகுதி உங்களால் இப்போது இந்த புகைப்படத்தில் பின் பகுதியில் பார்க்க முடியும். பூமி அல்லாத வேறு ஒரு கிரகத்தின் தரைப்பகுதி எப்படி இருக்கும் என்று நான் முதன் முதலில் பார்த்தது இதில்தான்.

இந்த புகைப்படத்தில் உங்களுக்கு ஆறு பக்க குணங்களை உடைய உலோகத்தால் ஒரு பொருள் மூடப்பட்டிருப்பது உங்களால் பார்க்க முடியும் இதுதான் லேண்டர் இல் உள்ள துளையிடும் கருவி ஆகும். இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து மீட்டர் அளவிலான இடப்படும் மற்றும் அதிலிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் முக்கியமாக செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இது தெளிவான முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்படத்தின் வலது பகுதியில் நீங்கள் பார்க்கும் பொழுது இன்சைட் லேண்டர் இன் ஒரு பக்க சூரிய தகடுகளை உங்களால் பார்க்க முடியும் அதாவது இயந்திரத்திற்கு மின்சாரம் வழங்கும் சூரிய தகடுகள் சோலார் பேனல் உங்களால் காண முடியும்.

. மேலும் இந்த புகைப்படத்தில் இன்சைட் லேண்டர் இன் கால் பகுதியானது செவ்வாய் கிரகத்தின் தரையில் பதிந்திருப்பதைக் காணலாம் இதன் மூலம் கிரகத்தின் தரைப் பகுதி சற்று கடினமானது கிட்டத்தட்ட ஒரு டன் எடையுடைய space craft ஐயும் எளிதாக . தாங்குகிறது.

Download Our App

More Posts to Read on:-

December 06, 2018

EP.3 Rodent Issue Launch Delay News | PodCast Tamil | SNT Abdul

கெட்டுப்போன எலிகளின் உணவை திரும்பவும் அதில் வைத்து அனுப்புவதற்கு. நாசாவுக்கு கிட்டத்தட்ட ஒரு நாள் தேவைப்பட்டிருக்கு,

இந்த ஒரு சாதாரண காரணத்தினால் விண்வெளி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு நாள் முழுவதும் rocket launch பாதிக்கப்பட்டு இருக்கு அப்படின்னு சொன்னா, அது மிகையாகாது. அதை பற்றிய ஒரு சில விவரங்களை கீழே உள்ள போட்காஸ்ட் பதிவின் மூலம் தெரிஞ்சுக்கங்க.

 

Source

Download Our App

More Posts to Read on:-



December 05, 2018

Juno spacecraft captured a dolphin on jovian clouds | வியாழனின் மேகக் கூட்டங்களில் டால்பின் போன்ற உருவத்தை கண்ட ஜூனோ விண்கலம்

நீங்கள் மேலே பார்க்கும் GIF படத்தில் வியாழன் கிரகத்தின் மேகக் கூட்டங்களில் டால்பின் போன்ற ஒரு உருவத்தை ஜூனோ விண்கலம் ஆனது புகைப்படம் எடுத்து இருப்பதை காட்டுகிறது.

உண்மையில் இந்த படங்கள் அனைத்தும் ஜூனோவில் உள்ள ஜூனோ கேம் இயந்திரம் மூலம். எடுக்கப்பட்டவை கிடையாது மாறாக இவை ஜூனோ கேம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்திn செயல்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் என்று கூறலாம் ( processed image) இதனை செய்தது பொதுமக்கள் அறிவியலாளர் சமூகத்தை சார்ந்த பிரின் ஸ்விஃப்ட் மற்றும் Doran என்பவரால் இது உருவாக்கப்பட்டுள்ளது.

( Citizen scientists Brian Swift and Seán Doran created this image using data from the spacecraft’s JunoCam imager)

ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தை 16வது முறையாக வலம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை, இந்த புகைப்படங்கள் October 28 , 2018 தேதி எடுக்கப்பட்டவை.

இந்த புகைப்படம் எடுக்கும் தருவாயில் விண்கலமானது கிரகத்திலிருந்து 11,400 மைல் தொலைவில் இருந்ததாக கூறப்படுகிறது

ஜூனோ கேம் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன இதிலிருந்து மேலும் பல பதப்படுத்தப்பட்ட அதாவது ( processed image) புகைப்படங்கள் உருவாக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூனோ கேம் மூலம் எடுக்கப்பட்ட மூல ( raw images)புகைப்படங்கள். கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.

http://missionjuno.swri.edu/junocam

Source

Download Our App

More Posts to Read on:-

December 04, 2018

64 satellite launch from one rocket spaceX had a new record | இரண்டாவது உலக சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ் 64 செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது

டிசம்பர் 3ஆம் தேதி, Vandenberg Airforce Station, California .

ஸ்பேஸ் எக்ஸ் இன் falcon 9 rocket ஆனது 64 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி , அதிகமான செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவிய இரண்டாவது விண்வெளி அமைப்பு என்ற பெருமையை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க நாடுகளில் அதிகமான செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் ஏவிய முதல் விண்வெளி அமைப்பு என்ற பெருமையையும் ஸ்பேஸ் எக்ஷ் பெற்றுள்ளது.
SSO-A: Smallsat Expres என்று பெயரிடப்பட்ட இந்த பணியில் உபயோகப்படுத்தப்பட்ட 64 சிறிய ரக செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் குறைந்த அளவில் விண்ணில் ஏவப்பட்டன இதனை low Earth orbit என்று கூறுவர்.

இந்த ஒட்டுமொத்த 64 செயற்கைக்கோள்களும் 34 வகையான வணிக மற்றும் அரசு சார் நிறுவனங்கள் யிருந்து அனுப்பப்பட்டவை.

கூடுதல் தகவல்களாக 64 செயற்கைக்கோள்களில் 49 செயற்கைக்கோள்கள் மிகவும் சிறிய ரக செயற்கை கோள்கள் அதாவது பத்து சென்டிமீட்டர் அளவு உடையாது மற்றும் 1.3 கிலோ கிராம் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஆகும் மேலும் 23 செயற்கைக்கோள்கள் பல்கலைக்கழக செயற்கைக்கோள்கள் என்றும் 19 செயற்கைக்கோள்கள் புகைப்பட செயற்கைக்கோள்கள் அதாவது imaging satellites. என்றும் Space X கூறியுள்ளது.

மேலும் இதில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சிறியரக செயற்கைக்கோளான ExSeed SAT -1 என்ற செயற்கைகோளும் அதில் இடம் பெற்றுள்ளது இது நமது உள்ளங்கை அளவைப் போன்று இரண்டு மடங்கு உடைய ஒரு ரேடியோ சேட்டிலைட் ஆகும்.

இது அனைத்திற்கும் கூடுதல் தகவல்களாக ஸ்பெஷலானது ஸ்பேஸ் எக்ஸ் இன் பால்கன் 9 rocket ஆனது. திரும்பவும் பத்திரமாக பூமியின் தரைப்பகுதியில் தரையிறங்க வைத்தது தான்.

இந்தியாவின் ஐஎஸ்ஆர்ஓ உம் இதுபோன்ற திரும்பவும் பயன்படுத்த கூடிய வகையிலான ராக்கெட் ஐ 2016ஆம் ஆண்டு பரிசோதனை செய்து பார்த்தது என்பது குறிப்பிட தக்க ஒரு செய்தி.

 

Source

Download Our App

More Posts to Read on:-



ISRO planning for Venus Mission Shukrayaan and invitation for International payload | இந்தியாவின் புதிய சுக்கிரயான் 1 வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர்


Shukrayaan 1 is a Proposed Space craft for Venus , it will be launched in 2023

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ஐஎஸ்ஆர்ஓ சர்வதேச அளவில் ஒரு AO (announcement of opportunity) வை வெளியிட்டு உள்ளது, உலகமெங்கும் உள்ள விண்வெளியாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தங்களது அறிவியல் சாதனங்களை சுக்ரயான் 1 எல் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி 2018 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.

இஸ்ரோ சுக்ரயான் 1

சுக்கிரயான் ஒன்று என்பது 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் விண்ணில் ஏவுவதற்காக திட்டமிடப்பட்ட ஒரு பணியாகும். இந்தியா முதன் முதலில் தனது மங்கள்யான் மிஷன் 2013 ஆம் ஆண்டு விண்ணில் ஏவியது, இதனை interplanetary mission என்று கூறுவார்கள். இந்தியாவின் இச்செயல் உலகளாவிய அளவில் இந்தியாவின் மதிப்பையும் ஐஎஸ்ஆர்ஓ வின் மதிப்பையும் பெருமளவு கூட்டியது அந்த வரிசையில் ஐஎஸ்ஆர்ஓ வின் அடுத்த interplanetary mission தான் ஷுக்ரயான் 1, வெள்ளி கிரகத்திற்கான ஒரு பணி.

ராக்கெட் : GSLV MK 3

எடை : 2500 KG. (proposed)

இடம் : சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் பெங்களூரு

வெள்ளியும் சுக்ரயானும்

வெள்ளி கிரகமான பூமியை ஒத்த கிரகம் என்று கூறுவர் அதாவது பூமியின் அளவு , எடை, வளிமண்டல கலவை, புவியீர்ப்பு விசை போன்றவற்றில் வெள்ளி கிரகமும் பூமி கிரகமும் ஒத்துக் காணப்படும் . சுக்கிரன் 1 ஐ பொறுத்தவரை இது வெள்ளி கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்யும் (surface and subsurface) என்றும் சூரியனிடமிருந்து வரக்கூடிய சூரிய கதிர்வீச்சு மற்றும் சூரிய காற்று (solar radiation and solar wind) போன்றவற்றையும் இது கவனிக்கும் என்றும் கூறியுள்ளனர்.


சுக்கிரயான் 1 ஐ பொறுத்தவரையில் இது ஒரு ஆர்பிட்டர். இது வெள்ளி கிரகத்தில் இருந்து 500 கிலோ மீட்டர் உயரம் முதல் 60 ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் வரை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் அதாவது சுக்கிரயான் ஒன்றானது வெள்ளி கிரகத்திலிருது சுமார் 500 km உயரம் முதல் அதிக பட்ச உயரமாக 60,000 km உயரம் வரையில் அதன் சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் என்று அர்த்தம்.

இதில் 12 அறிவியல் சாதனங்களை வைக்கப்போவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது அவையாவன

  1. S-band synthetic aperture radar (SAR)
  2. ADVANCED RADAR FOR TOP SIDE ionosphere AND SUBSURFACE SOUNDING
  3. ULTRAVIOLET IMAGING SPECTROSCOPY TELESCOPE
  4. Thermal camera
  5. Cloud monitoring camera
  6. Venus atmospheric spectro polarimeter
  7. Airglow photometer
  8. Radio occupation experiment
  9. Ionospheric electron temperature analyser
  10. Retarding potential analyser
  11. Mass spectrometer
  12. Plasma wave detector

நீங்கள் ஏதாவது அறிவியல் சாதனங்களை இந்த வெள்ளி கிரகத்தின் சுக்கிரயான் பணியில் இணைக்க நாடினால் அதற்கான AO, April 2017 ஆம் ஆண்டு ஐஎஸ்ஆர்ஓ வால் வெளியிடப்பட்டு அதன் கால நேரங்கள் முடிந்துவிட்டன. இப்போது இஸ்ரோ வெளியிட்டிருக்கும் Ao வானது சர்வதேச அளவில் உள்ள விண்வெளி அவர்களின் அறிவியல் சாதனங்களை இத்திட்டத்தில் இணைப்பதற்காக வெளியிட்டுள்ள அறிக்கையாகும்.

மேலும் 2017ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி 175 கிலோ கிராம் எடையுள்ள அறிவியல் சாதனங்கள் என்ற குறிப்பை நீக்கி 100 கிலோ கிராம் என்று அதன் எடையை குறைத்துள்ளது.



December 03, 2018

Expedition 58 to international Space station | நாசாவின் எக்ஸ்பிடிஷன் 58வது குழு

நாசா அமைப்பானது சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று பேர் அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவை அனுப்பி கொண்டே இருக்கும் இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான் இந்த முறை எக்ஸ்பிடிஷன் 58வது குழு டிசம்பர் 3ம் தேதி அதாவது இன்று புறப்பட உள்ளது இதற்காக தீர்மானிக்கப்பட்ட விண்வெளி வீரர்கள்

1. அண்ணி மேட்க்கைன் Anni McClain from NASA

2. டேவிட் ஜாக்காஸ் David Saint Jacque from Canada

3. ஓலெக் கொனன்கோ Oleg kononenko from Russia

சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல, ஆனால் அவர்களும் மனிதர்கள்தான் கொஞ்ச நேரம் ஜாலியாக அவர்களின் விண்வெளி கவசங்களுடன் போஸ் கொடுத்த காட்சி தான் இது

இந்தப் படங்கள் நவம்பர் 20ஆம் தேதியன்று எடுக்கப்பட்டவை

Download Our App

More Posts to Read on:-



Insight lander first image from Mars | நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பிறகு எடுத்த முதல் புகைப்படம்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ தகுதியானதா என ஆராய்ச்சி செய்வதற்காக அந்த கிரகத்தின் உள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அதாவது நிலத்தின் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக இன்சைட் என்ற லேண்டர் ஐ நாசா அனுப்பியது,

லேண்டர் தரையிறங்கும் நேரத்தில் அதன் எஞ்சின் மூலம் கிளம்பிய புழுதியினால் செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் துகள்கள் அந்த கேமராவை மூடியிருந்த பாலிதீன் கவரில் (அதுபோன்று ஏதோ ஒரு லென்ஸ் பாதுகாப்பான்) புழுதிபடிந்து போல் காட்சி அளிப்பதை முதலில் படம் பிடித்து அனுப்பியது அந்த இன்சைட் லேண்டர்.

Download Our App

More Posts to Read on:-



December 01, 2018

Osiris-rex is going to start orbiting the asteroid bennu on coming Monday | இலக்கை நெருங்கியது நாசாவின் ஒஸைரிக்ஸ்

நாசாவின் ஒசைரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலமானது வருகின்ற திங்கள்கிழமை முதல் பெண்ணு வை வட்டமடிக்க ஆரம்பிக்கும் என நாசா தரப்பில் கூறியுள்ளது. 2016 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த ஒசைரிஸ் ரெக்ஸ் எனும் விண்கலமானது பூமிக்கு மிக அருகில் உள்ள பென்னு என்று பெயரிடப்பட்ட விண்கல்லை ஆராய்ச்சி செய்து, அதிலிருந்து மாதிரிகளை எடுத்து வருவதற்காக அனுப்பப்பட்டது தான்.

இந்த விண்கலமானது வருகின்ற திங்கட்கிழமை அதாவது டிசம்பர் 3-ம் தேதி சரியாக இந்த விண்கல்லை வட்டமடிக்கும் படி அதன் ஆர்பிட் இல் இணைக்கப்படும் என்று நாசா கூறியுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்வினை நாசாவின் தலைமை இடத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப் படுவதாகவும் கூறியுள்ளது இதனை நாசா TV தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

500 மீட்டர் நீளம் கொண்ட, முக்கோண வடிவிலான இந்த விண்கல்லை ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலமானது சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வட்டமடிக்க ஆரம்பிக்கும் டிசம்பர் 31ம் தேதி முதல் சுமார் 18 மாதங்கள் இந்த விண்கலமானது அந்த ஆராய்ச்சி செய்யும் பிறகு 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்த ஒசைரிஸ் ரெக்ஸ் ஆனது விண் கல்லில் மேற்புறத்தில் தரையிறங்கும் பிறகு அதிலிருந்து சேகரிக்க முடிந்த அளவு மாதிரிகளை சேகரித்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த வின்கல்லை விட்டு புறப்படும்.

சேகரிக்கப்பட்ட மாதிரிகள் 2023 செப்டம்பர் மாதம் பூமியை வந்து அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source



Download Our App

More Posts to Read on:-



Beautiful moon image ever taken by lunar Reconnaissance orbiter| நிலவின் மிக அழகான புகைப்படத்தை எடுத்த லூனார் ஆர்பிட்டர்

நிலவு ஏற்கனவே மிக அழகானது தான் அதுவும் அதனை அருகில் இருந்து படம் எடுத்தால் எவ்வளவு அழகாக இருக்கும் , அதே போன்ற ஒரு படத்தினை தான் நாசாவின் லூனார் ரிகணைசர் ஆர்பிட்டர் கடந்த மாதம் அதாவது நவம்பர் 3ஆம் தேதி எடுத்து பூமிக்கு அனுப்பியது, இதனை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்து இருந்தது.

மேலும் நிலவில் உள்ள இந்த பள்ளத்தாக்கின் அது கிட்டத்தட்ட உருவாகி 100 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆகியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த பள்ளத்தாக்கு சுமார் 1.8 நீளம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.


அந்த படத்தை நீங்கள் மேலே பார்த்தது இந்த புகைப்படத்தை ஆராய்ந்த விண்வெளி அவர்களும் ஆராய்ச்சியாளருமான அரிசோனா மாகாணத்தில் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் இந்தப் புகைப்படத்தின் படி தரைப்பகுதியில் ஒரு துளை இருப்பதை அவர்கள் கண்டறிந்ததாக கூறுகிறார்கள் உங்களுக்கு உண்மையில் அது போன்று ஏதாவது தெரிகிறதா?

இதன் பிரத்தியேக முழுமை ரெசல்யூஷன் புகைப்படத்தினை லூனார் ஆர்பிட்டர் இணையதளத்தில் நாசா வெளியிட்டுள்ளது அதற்கான link 

அந்த உண்மையான புகைப்படத்தினை பார்க்கும் போது கொஞ்சம் பாத்து செய்யுங்க. அது 450 MB irukku.



Download Our App

More Posts to Read on:-



பூமிக்கு மிக அருகில் வர இருக்கும் விண்மீன் | Comet 46P closest approach to earth | Wirtanen

46 பி என பெயரிடப்பட்ட இந்த விண்மீன் அது வாழ்வின் ஆனது பூமிக்கு மிக அருகில் வர உள்ளது அதுவும் அடுத்த மாதம் 16ம் தேதி வரை இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த 46P என பெயரிடப்பட்ட வால்மீன் ஆனது காரல் விர்தானேன் (Coral Wirtanen) என்பவரால் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று வால்மீன்களின் ஒன்று.

இந்த வால்மீன் ஆனது வியாழன் கிரகத்தை சுற்றி வரக்கூடிய 400க்கும் மேற்பட்ட வால்மீன்களின் தொகுப்பில் உள்ள ஒரு சாதாரண வால்மீன் தான் இந்த வால்மீனானது கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் விட்டத்தை பெற்றிருப்பதாகவும் கூறுகின்றனர் அதாவது அரை கிலோ மீட்டர் ஆரம் உடைய இந்த மிகப்பெரிய கல்லானது அடுத்த மாதம் முழுவதும் நம்முடைய கண்களுக்குத் தெரியும் அளவுக்கு விண்ணில் சுற்றித்திரியும் . மேலும் டிசம்பர் 16ஆம் தேதி நம்மால் மிக எளிதாக இந்த பொருளை விண்வெளியில் பார்க்க இயலும் என விண்வெளி யாளர்கள் கூறியுள்ளனர் நீங்களும் உங்கள் நாள்காட்டியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.

 

Source: https://www.space.com/42575-see-comet-64p-wirtanen-earth-flyby-december-2018.html

November 30, 2018

India Launched Hysis Earth Observatory Satillite |இந்தியாவின் புதிய செயற்கைக்கோள்

இந்தியா அனுப்பிய புதிய செயற்கைக்கோள் HysIS நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இந்த செயற்கை கோளானது கிட்டத்தட்ட 380 கிலோ எடை உடையது மேலும் இது பூமியில் இருந்து சரியாக 636 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படும் எனவும் இஸ்ரோவின் அதிகாரிகள் கூறினர்.

இந்த HysIS வகை செயற்கை கோளானது சர்வதேச அளவில் விவசாயம், காடுகள் பாதுகாப்பு, உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு , மற்றும் கடற்கரை போன்ற துறைகளில் அதன் தரவுகளை பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் இது பூமியில் மேல் பரப்பினை மின்காந்த நிறமாலையின் உள்ள அகச்சிவப்பு மற்றும் குறுகிய அலைநீளம் கொண்ட அகச்சிவப்பு ஒளியின் மூலம் தரவுகளை சேகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்

மேலும் இது இஸ்ரோ ஏவும் இரண்டாவது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது அதுவும் இந்த மாதத்திலேயே ஏற்கனவே ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் 29 என்ற செயற்கைகோளை விண்ணில் இஸ்ரோ நிறுவியது



Download Our App

More Posts to Read on:-



November 29, 2018

First Image After Recovery of Hubble | பழுது நீங்கிய பின் ஹப்புள் எடுத்த முதல் புகைப்படம்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியின் ஒரு தன்னிலை பாதுகாப்பு கருவி செயழிலந்தது . உங்களுக்கு நினைவிருக்கலாம் 3 வார காலத்திற்கு பிறகு ஹப்புள் குழுவினர் இதனை சரி செய்தனர். அந்த நிகழ்வுக்கு பிறகு ஹப்புள் தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட முதல் படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. அதைதான் நீங்கள் கீழே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்

இது கிட்ட தட்ட 11 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கேலக்ஸி தொகுப்புதான் இந்த கேலக்ஸி தொகுப்பானது “பெகஸஸ்” எனும் விண்வெளி தொகுப்பில் உள்ளது. இதனை ஹப்புளின் உள்ள பெரிய கோணம் கொண்ட காமிரா மூலமாக எடுக்கப்பட்டுள்ளது என நாசா 2 நாட்களுக்கு முன் ஒரு பதிவில் சொல்லியிருந்த்தது.

Sources : NASA

For PodCast and Daily News Download Our APP



Download Our App

More Posts to Read on:-

November 28, 2018

EP.2 Facts of Sun | PodCast Sun and its Facts | Space News Tamil

நமது சூரியனானது ஒரு  ஆற்றல் மூலம் பல உயிரினங்கள் பூமியில் வாழ சூரியனின் உதவி தேவைப்படுகிறது. வேண்டுமென்றால் எந்த கிரகத்தில் வேண்டுமானாலும். இது போன்று உயிரினங்கள் வாழ சூரியன் வழி வகுக்கும் என நான் நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இதோ உங்களுக்காக  சூரியனை பற்றிய ஒரு சில செய்திகள்

Donate to Improve our Service thanks in advance

PodCast

Facts about Sun in Tamil | சூரியனை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

சூரியன் என்பது நமது முன்னோர்களால் கடவுளாக பார்க்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் அதெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களால் தான். இப்போது அறிவியல் முன்னேறிவிட்டது நமது சூரியனை ஆராச்சி செய்ய சூரியனுக்கே விண்கலங்களை விடும் அளவுக்கும். பார்க்கர் சோலார் புரோப்

அந்த சூரியனை பற்றிய ஒரு சில சுவாரசியமான செய்திகளை இங்கு பார்ப்போம்:

1. சூரியனின் அளவு

1.989 × 10^30 kg எடையுடைய இந்த நட்சத்திரமானது நமது பூமியை போல் 3,30,000 மடங்கு அதிக எடையுடையது. வியாழன் கிரகத்தினை போல் 75 மடங்கு அதிக எடை யுடையது.

2. ஒரு மில்லியன் பூமி கொள்ளும் அளவு பெரியது

சூரியன் பெரியதாக இருப்பதால் நமது பூமிகிரகத்தினை அதனுள் வைத்தால் கிட்டதட்ட நீங்கள் 1 மில்லியன் பூமிகளை சூரியனை வைத்து அடைக்க முடியும். அவ்வளவு பெரியது.

3.பூமியை உன்ணும் சூரியன்

சூரியனில் நடக்கும் அனுகரு இனைவு நிகழ்வின் மூலமாக எல்லா ஹைற்றஜன் அனுவும் எரிந்து முடித்த பிறகும் சூரியன் கிட்டதட்ட 130 மில்லியன் வருடங்களுகு எரிந்து கொண்டு இருக்கும் இந்த நிகழ்வின் போது அதன் விரிவடையும் நிகழ்வு ஏற்படும். அப்போது சூரியனானது புதன் , வெள்ளி மற்றும் பூமியையும் உண்ணும் அளவு பெரியதாக மாறும் அப்படி மாறிய சூரியனைதான் சிவப்பு அரக்கன் என்பர் (அதாவது Red Giant)

4. சூரியனில் நடக்கும் அனுக்கரு இனைவு

நமது சூரியனுக்கு ஏது இவ்வளவு வெப்ப ஆற்றல் என்று பல கேள்வி வந்திருக்கும், இதற்கு காரணம். சூரியனில் நடக்கும் அனுக்கரு இனைவு எனும் நிகழ்ச்சிதான். சூரியனில்  நான்கு ஹைற்றஜன் அனுக்கள் ஒரு ஹீலியன் அனுவில் இனைக்கப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவதால் அது அதிக வெப்ப ஆற்றலை வெளியிடுகிறது.

5. மிகச்சரியான கோள வடிவம்:

இயற்கையாக இது போன்று அமைவது மிகவும் அறியது. சூரியனானது மிகவும் சரியான கோளவடிவத்தினை பெற்றுள்ளது. அதன் அளவில் மத்திய ரேகை பகுதியில் உள்ள விட்டத்திற்கும், துருவ பகுதியில் உள்ள விட்டத்திற்கும் வெறும் 10 கி.மீ மட்டும் தான் வித்தியாசம். இது ஒரு மிகச்சரியான கோளவடிவம் கொண்ட நட்சத்திரம் .

6. வினாடிக்கு 220 கி.மீ என்ற வேகத்தில் பயனிக்கும் சூரியன்

நமது பூமி சூரியனை சுற்றிவருகிறது சூரியனானது அண்டத்தின் மையத்தினை சுற்றி வருகிறது. நமது சூரியனானது அண்டத்தின் மையத்திலிருந்து தோராயமாக 24,000 – 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதனை வைத்து நமது சூரியனானது அண்டத்தின் மையத்தினை தோராயமாக 225-250 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றிவரும் என கண்டறிந்துள்ளனர். அப்படி சுற்ற வேண்டும் என்றால் சூரியன் வினாடிக்கு 220 கி.மீ என்ற வேகத்தில் நகரவேண்டும்.

7. எட்டு நிமிட பிரயானம்

ஒளியானது சூரியனில் இருந்து பூமிக்கு வந்து சேர 8 நிமிட காலம் எடுத்துக்கொள்ளும். சூரியனில் தொடர்ச்சியான் வெப்ப ஆற்றல் புவியை வந்து சேர சரியாக 8 நிமிடம் 20 வினாடிகள் ஆகும், இந்த கணக்கானது ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ என்றும். பூமி சூரியனில் இருந்து 150 மில்லியன் தொலைவில் உள்ளது என கடக்கிடும் போது கிடைக்கும் விடை. அவ்வளவு தான்

8. பாதி வயது முதிர்ந்த சூரியன்

நமது சூரியனின் வயது கிட்ட தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகள் என கனக்கிடப்பட்டுள்ளது. இதுவரை பாதியளவு ஹைட்ரஜ்னை எரித்து இன்னும் மீதி இருக்கும் பாதி ஹைற்றஜனை எரித்து முடிவதற்கு இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். இப்போது நமது நட்சத்திரமானது மஞ்சள் சிறிய நட்சத்திரம் (Yellow Dwarf star)

9. தன்னைத்தானே சுற்றும் சூரியன்

சூரியனானது அசையாமல் ஓரிடத்தில் உள்ளது என பல காலமாக நம்பப்பட்டு வந்தது. பிறகு சூரியனில் உள்ள ஒரு சில கரும்புள்ளிகள் கண்டறியப்பட்டன. இந்த கரும்புள்ளிகளின் மறைவு மற்றும் கண்ணுக்கு புலப்படும் செயலானது சூரியன் தன்னை தானே சுற்றிவருகிறது என்ற முடிவுக்கு வின்வெளியாளர்களை தள்ளியது. பிறகு தான் சூரியன் 25 பூமியின் நாட்களுக்கு ஒரு முறை தன்னைதானே சுற்றிவருகிறது என கண்டு பிடித்துள்ளனர்.

10. எதிர் திசையில் சுற்றும் சூரியன்:

நமது சூரியகுடும்பத்தில் வெள்ளிகிரகமும் இப்படித்தான் சுற்றிகிறது எப்படி என்று கேட்கிறீர்களா? அதாவது நமது பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றுகிறது அப்படி என்றால் கிழக்கில் சூரியன் உதிக்கும் மேற்கில் மறையும் ஆனால் வெள்ளி கிரகத்தில் அப்படியே தலைகீழ்தான். மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். சரி சரி, சூரியனில். ?? அதேதான். சூரியன் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றிகிறது. ஆனால் அதான் சூரியனாயிற்றே அங்கு எப்படி சூரியன் உதிப்பது வைத்து சொல்ல முடியும்.

11.மிக அடர்த்தியான காந்த புலம்:

சூரியனில் காந்த புயல் உருவாகும் போது சூரியனில் ஒரு சில பகுதியில் காந்த ஆற்றலை உருவாகும். அப்படி ஒரு வாகும் போது solar flares  உருவாகும் இதனையே நாம் கரும்புள்ளிகள் என்கிறோம். அப்படி உருவாகும் கரும்புள்ளிகள் (sunspots) கருப்பாக இருக்க காரணம்? அதன் அருகில் உள்ள வெப்பநிலையை காட்டிலும். அந்த இடத்தில் வெப்பம் குறைவாக இருப்பதால் தான்.

12. அரோராவை உருவாக்கும் சூரியன்

ஆஸ்திரேலியா பகுதிகளில் உருவாகும் அரோராக்கள் சூரியனில் மேற்பகுதி(கரோனா)யில் உருவாகும் சூரிய காற்றினால் உருவாகிறது. Solar Wind என்பது இதனை அதிக சூடான மின்னூட்ட துகள்கள் அல்லது Charged Particle என்று கூறுவர்

13. சூரியனின் வளிமண்டலம்

இது மூன்று வகைகளை கொண்டது.இதனி போட்டோ ஸ்பியர், குரோமே ஸ்பியர், மற்றும் கரோனா என்பதுதான்.

 

நமது சூரியனானது எந்த வகைய சார்ந்தது. நமது அண்டவெளியில் கணக்கில்லாத நட்சத்திரங்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் நமது சூரியனை G V Star என்ற கணக்கில் வைத்துள்ளனர், இதற்கு வகை பெயரும் உண்டு அதுதான் மஞ்சல் சிறு நட்சத்திரம் (Yellow Dwarf Star),  இது போன்ற நட்சத்திரங்களை அதன் மேல் பகுதி வெப்பநிலையை பார்த்து வகைப்படுத்துவார்கள். அதாவது 5027-5727 டிகிரி செல்சியல் இருகும் நட்சத்திரங்களைதான்.

இதற்கு வேறு ஏதாவது பெயர்கள் உண்டா? என்றால் ம்ம்ம்ம்ம்ம். அறிவியலாலர்கள் பல நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்து பெயர்கள் வைத்துள்ளனர். ஆனால் நமது சூரியனுக்கு எந்த ஒரு சிறப்பு அறிவியல் பெயர்கள் இல்லை  ஆனான். சூரியனை SUN or SOL  என அழைப்பார்கள்.

for PodCast  Click here

 

November 27, 2018

Insight Land on Mars Successfully | நாசாவின் இன்சைட் லேண்டர் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிரங்கியது

நாசா அமைப்பானது செவ்வாயின் உள்பகுதிகளை அதாவது அந்த கிரகத்தின் கட்டமைப்புகளை interior மூலமாக ஆராய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு லேண்டர். உங்களுக்கு லேண்டர் என்றால் என்ன என்று தெரியும் தானே?

ஒரு கிரகத்தின் மேற்பரப்பில் தரையிரங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் இயந்திரத்தின் பெயர்தான் லேண்டர். நாசாவானது இந்த ஆண்டு மே மாத வாக்கில் இன்சயிட் என்ற ஒரு செவ்வாய்கிரகத்திற்கான லேண்டரை ஏவியது. அந்த லேண்டரானது இன்று அதாவது இந்திய நேரப்படி 26ம் தேதி நவம்பர் மாதம்  அதிகாலையில் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிரங்கியது.

ஒரு விதமாக துளையிடும் இயந்திரம் மூலமாக இது செவ்வாய்கிரகத்தின் உள் கட்டமைப்பை ஆராயும் எனவும் நாசா தரப்பில் கூறியுள்ளது. நேற்று அதாவது அமெரிக்காவில் 26 ஆம் தேதி. நாசாவானது இன்சயில் லேண்டர் தரையிரங்குவதை  நேரடியாக ஒளிபரப்பும் செய்தது இதனை பல நூறு கனக்காக மக்கள் நேரடியாக கண்டுகளித்தனர்.



Download Our App

More Posts to Read on:-



November 24, 2018

3rd Launch pad at sriharikota for gaganyaan | இஸ்ரோ மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் "ககன்யான்"

2022 ல் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ள ககன்யான் மிஷனுக்காக இஸ்ரோ தற்போது மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்திய குடிமகன் மூவரை தேர்வு  செய்து அவர்களை விண்ணில் அதாவது (Low earth Orbit) ல் 5-7 நாட்கள் உலவ விடவேண்டும் அதுவும் 2022 க்குள் இது தான் பாரத பிரதமரின் கட்டளை.

இதனை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள இஸ்ரோ. இந்த மனிதர்களை வின்ணில் அனுப்பு திட்டம் பற்றி 2004 ஆண்டு முதல் திட்ட மிட்டு வந்துள்ளது.(Space capsule recovery experiment, Crew module atmospheric re-entry & pad abort test) அதில் விண்வெளி பாதுகாப்பு பெட்டகம் , குழுவினரை பத்திரமாக வைத்திருக்கும் கேப்சூல் பாதுகாப்பு சோதனை, மற்றும் ஆபத்து கால குழு பாதுகாப்பு பெட்டகம். மேலும் வளிமண்டல சோதனை , பாரசூட் பரிசோதனை போன்ற மிக முக்கியமான சோதனைகள் முடிவுற்ற நிலையில் தற்போது இஸ்ரோ. இதற்கான. ராக்கெட் ஏவுதளம் மறு சீறமைவு அல்லது புனரமைவு பனியில் ஈடுபட்டுவருகிறது.

மூன்றாவது ஏவுதளம்:

இஸ்ரோ வானது 2 ராக்கெட் ஏவுதளங்களை கொண்டுள்ள ஒரு விண்வெளி மையம். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்த இரண்டும் தற்போது முழுமையாக உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றினை மறு புனரமைக்க வேண்டுமென்றாலும். அது இஸ்ரோவின் பல மிஷன்களை பாதிக்கும். இதனால் இஸ்ரோவானதுசிறியவகை ராக்கெட் ஏவுதளம் ஒன்றைமேற்கு கடற்கரை பகுதியான குஜராத் பக்கம் பார்த்து வருவதாகவும் . அப்படி குஜராத் பகுதிகளில் ஒரு புதிய ராகெட் ஏவுதளமானது அமைக்கப்படுமாயின் அது முற்றிலுமாக சிறிய வகை ராக்கெட் ஏவுதளமாக அமையும் என்றும் இஸ்ரோ அறிவித்து உள்ளது. இருப்பினும் இந்த செய்தி உறுதியானது கிடையாது. இஸ்ரோ தனது மனித விண்வெளி குழுவினை அனுப்புவதற்கு. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இரண்டில் ஒன்றைதான் மறுபுனரமைவு செய்ய வேண்டும்.

GSLV Mk3

இந்தியாவின் பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும். GSLV mk3 ராகெட் தான் ககன்யான் குழுவினரையும் , அவர்களுக்கு அடைக்களமாகவும் இருக்கும் பகுதிகளையும் விண்ணில் கொண்டு செல்லும் ஆனால் இந்த ராக்கெட் இதுவரை மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றப்படவில்லை. அதனால் GSLV mk3 ராக்கெடிலும்  ஒரு சில மாறுதல்களை செய்து இதனை மனிதர்கள் பிரயானிக்க ஏதுவானதாக மாற்றும் செயலிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

குழு ககன்யான்

இந்தியாவின் 3 குடிமகன்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள் அவர்கள் ஆண்களா அல்லது பெண்களா அல்லது இருவரும் இருப்பார்களா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் குழுவானது ரஷ்யா சென்று அங்குள்ள பயிற்சிகளையும் முடித்தால் தான் அவர்கள் விண்வெளி செல்ல தகுதியானவர்கள் என்ற சான்றிதழ் அளிக்கப்படும் . அதாவது ஆஸ்ரோனெட் தேர்வு செய்வதில் இந்தியா ரஷ்யாவின் உதவியை நாடவுள்ளது

3ஆவது முறைதான்

இஸ்ரோ ஏற்கனவே சொன்னது போல் இரண்டு முறை சோதனை ஓட்டங்கள் அதாவது  மறு புனரமைவு செய்யப்பட்ட ஏவுதளத்திலிருந்து, மறு புனரமைவு செய்யப்பட்ட GSLV mk3 ராக்கெடினை வைத்தும் இரண்டு முறை சோதனை ஓட்டம் செய்யப்படும் மூன்றாவது முறைதான் மனிதர்கள் குழு அதனும் செல்லும் என்றும் இஸ்ரோ அறிவித்திறுந்தது. அதன் காரனமாக 2020 ஆம் ஆண்டு முதல் சோதனை செய்யப்படும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியுள்ளார்.

Source

Source2

Source3



Download Our App

More Posts to Read on:-