
முன்னுரை:
asteroid பட்டை அல்லது விண்கல் பட்டை. இந்த பகுதியானது பொதுவாக விண்கற்கள், தூசு, மற்றும் விண்வெளி குப்பைகள் உள்ள ஒரு பகுதியை குறிக்கும். இவை அனைத்தும் நமது சூரியனை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வருகின்றன. சரியாக புரியும்படி சொல்லப்போனால் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதான் இந்த விண்கல் பட்டை ஆகும்.இந்த விண்கல் பட்டையானது ஒரு வானியல் அலகு(1 Astromonical Unit Thick) அளவிற்கு மிகவும் தடிமனான ஒரு பகுதியாகும்
உண்மைகள்

- இது சூரியனில் இருந்து 2.2 வானியல் அலகுகள் தொலைவில் உள்ளது.
- இந்த பட்டையில் சிரஸ் மற்றும் வாஸ்டா என்ற இரு ஆஸ்டிராய்டுகள் உள்ளன அவை தற்ப்போது சிறு கிரகங்களாக மாற்றப்பட்டுள்ளன்.
- சிரஸ் மற்றும் வாஸ்டா என்ற இந்த இரண்டு ஆஸ்டிராய்டு மட்டுமே அந்த ஒட்டு மொத்த விண்கல் பட்டையில் 50 % எடையினை பெற்றிருக்கின்றன.
- அங்கிருக்கும் அனைத்து விண்கற்களையும் ஒன்று சேர்த்தால் அது ஒரு நிலவின் அளவுக்கு பெரிய கிரகத்தினை உண்டாக்கும் என்ற மற்றொரு கூற்றும் இருக்கிறது.
- இவைகள் தண்னைத்தானே சுற்றிக்கொள்ளும் மற்றும் சூரியனையும் சுற்றிவரும்.
- இவற்றில் வளிமண்டலம் கிடையாது
- இதுவரை 7000 க்கும் மேற்பட்ட விண்கற்களை இந்த பட்டையில் நாம் அறிந்து உள்ளோம்.
- லட்சக்கணக்கான ஆஸ்டிராய்டுகள் இந்த விண்கல் பட்டையில் காணப்படலாம் என கருதப்படுகிறது.
- ஏதேனும் ஒரு கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசையின் காரணமாக இவை இடம் மாறலாம்.
- இந்த ஆஸ்டிராய்டு பட்டையினை நாம் முக்கிய பட்டை என்று கூறுவோம் (Main Belt) ஏனென்றால் இதே போல் ஒரு சில பகுதியில் உள்ள லெக்ராஞ்சியாஸ் மற்றும் சென்டாரஸ் (
Lagrangians and Centaurs. )ஆஸ்டிராய்டுகளை வேறுபடுத்துவதற்காக.
No comments:
Post a Comment