சாங்கி 4
கடந்த வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட சாங்கி 4 விண்கலமானது நிலவின் புறப்பகுதியில் வெற்றிகரமாக இன்று அதிகாலை இரண்டு மணி வாக்கில் தரையிறங்கியுள்ளது. இந்த செய்தி சைனாவின் செய்தி நிறுவனம் மூலமாக நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.நிலவின் புறப்பகுதியில் தரை இறங்குவதால் பூமியோடு தொடர்பு துண்டிக்கப்படும், என்பதை உணர்ந்த சைனாவின் விண்வெளியாளர்கள் இதனுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்காக quiqei செயற்கைக்கோள் என்ற ஒரு செயற்கைக்கோளை கடந்த வருடம் ஆரம்பத்திலேயே நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருமாறு விண்ணில் ஏவி இருந்தனர் . அதன் மூலமாகத்தான் இந்த சாங்கி 4 விண்கலத்தின் தகவல்கள் பூமிக்கு கிடைக்கப்பெறும் என்பது ஒரு முக்கியமான செய்தி . அதுமட்டுமில்லாமல் நிலவின் பின் பகுதியில் எடுத்த புகைப்படத்தையும் சைனா வெளியிட்டுள்ளது.
வேலைகள் மற்றும் உபகரணம்
இந்த விண்கலத்தில் ஒரு லேண்டர் ஒரு ரோவர் மற்றும் ஒரு கேமரா பொருத்தி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இதன் மூலமாக வானியல் ஆய்வுகளை மேற்கொள்ள போவதாகவும், நிலவின் தரைப்பகுதி எப்படி இருப்பது ?என்று போன்ற ஒருசில ஆராய்ச்சிகளையும், அதன் உள்ள கனிம வளங்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சியையும் மேற்கொள்ளப்போவதாகவும், கூறியுள்ளனர் அதுமட்டுமில்லாமல் நிலவின் பின் பகுதியில் பூமியின் தொடர்பு இல்லாமல் இருப்பதால் அங்கு ரேடியோ மற்றும் கதிரியக்க மாறுபாடுகள் எப்படி இருக்கின்றன என ஆராய்ச்சி செய்வோம் எனவும் கூறியுள்ளர்.
2020
நாசா வானது 2020ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ரோவர் அனுப்பப் போவது என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் இதே பெயரில் மார்ஸ் 20 20 ரோவர் என்ற பெயரில் சீனாவும் ஒரு ரோவர் தயாரித்து வருகிறது. இது 2021 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் விண்ணில் ஏவப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

No comments:
Post a Comment