March 31, 2019

EMISAT Launch 1st April and Other 28 Sat | எமிசாட் மற்றும் 28 அயல் நாட்டு செயற்கைகோள்


நாளை திங்கள் கிழமை 9 மணிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 45 வகை ராக்கெட் மூலமாக drdo வின் புதிய emission என்ற வகை செயற்கை கோள் ஐ இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.

அயல் நாட்டு செயற்கைகோள்

அதுமட்டுமல்லாது28 அயல்நாட்டு செயற்கைக்கோள்களையும் இது சுமந்து செல்ல இருக்கிறது..

அந்த 28 அயல்நாட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் முறையே அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மற்றும் லூதியானா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ளது

ஆராய்சி உபகரனம்

மேலும் மூன்று வெவ்வேறு உபகரணங்களைக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள உள்ளது.

இந்த பிஎஸ்எல்வி சி 45 வகை ராக்கெட்டானது மூன்று விதமான விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அவையாவன:

  • automatic identification system(AIS) from ISRO
  • Automatic packet repeating system (APRS) from AMSAT radio amateur satellite corporation.
  • An advanced retarding potential analyzer for Ionospheric studies (ARIS) From Indian Institute of space science and technology

எங்கு நிலைநிறுத்தப்படும்

436 கிலோ எடையுள்ள இந்த emisat ஆனது பூமியிலிருந்து சுமார் 749 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளது. மற்ற 28 அயல்நாட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து சுமார் 504 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

PSLV C45 வகை ராக்கெட் பார்வையிடும் இஸ்ரோ ஆராய்சியாளர்கள்

இதர விவரங்கள்

  • பிஎஸ்எல்வி சி 45 வகை ராகெட் க்கு இது 47 ஆவது லான்ச்
  • மேலே சொன்ன இந்த அனைத்து விபரங்களும் அனைத்துமே ராக்கெட் ஏவி சுமார் 180 நிமிடங்களிலேயே முடிந்து விடும் என்று கூறியுள்ளனர்.
  • நாளை விண்ணில் ஏவப்படும் இந்த C45 வகை ராக்கெட்டானது நான்கு பிரிவுகளை ( 4 stage rocket) கொண்ட ஒரு ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது

PodCast EP.14 | Young Scientist Programme Registration


Explan of #YUVIKA #young Scientis Programme. in Tamil | Tamil PodCast for Science

ISRO Prepared a Stadium Like Viewpoint for Public to watch a rocket launch | பொதுமக்கள் பார்வைக்காக புதிய முயற்சி

உங்களுக்கு விண்வெளி மற்றும் ராக்கெட் ஏவுதல் போன்றவற்றை பார்ப்பதில் மிகவும் அதிக ஆர்வம் உள்ளதா?

அப்படி என்றால் இன்று முதல் உங்களுக்கான ஒரு புதிய ஸ்டேடியம் தொடங்கப்பட்டுள்ளது.

எங்கு என்று கேட்கிறீர்களா?

இஸ்ரோவில் தான்.

பொதுவாக சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் அனைத்தையும் நாம் சென்னையை அடுத்துள்ள சூளூர்பேட்டை பகுதிக்கு சென்று அங்கிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் பயனம் செய்து பிறகு ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் நின்று நாம் அந்த ராக்கெட் ஏவுகணை பார்க்க முடியும்.

ஆனால் தற்போது இஸ்ரோ அறிவித்த அறிவிப்பின்படி, பொதுமக்களுக்காக பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் படியாக,

எவ்வளவு பேர் பார்க்க முடியும்? இஸ்ரோ பொதுமக்கள் ஸ்டெடியத்தில்

5,000 மக்கள் அமரும் வகையில் ஒரு ஸ்டேடியம் ஒன்றை தயாரித்துள்ளது இது முழுக்க முழுக்க ராக்கெட் ஏவுதலை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக உள்ளது என்றும் இஸ்ரோவின் தலைவர் கே சிவன் அவர்கள் கூறியுள்ளார்.

இதன் தொடக்கமாக திங்கள்கிழமை நடைபெறும் DRDO EMISAT என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்துள்ளது. #PSLVC45

5000 பொது மக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், பாதுகாப்பு கருதி 1000 ஆயிரம் பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

எப்படி பதிவு செய்து பார்ப்பது:

கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். இப்போது முடியாது ஏனென்றால். அதற்காக நேரம் முடிந்து விட்டது. அடுத்த ராக்கெட் ஏவுதல் போது பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள்.

https://www.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp

இதற்கான ட்விட்டர் பதிவை கீழே பார்க்கிறீர்கள்

March 27, 2019

சந்திராயன்-2 மற்றும் நாசாவின் retro reflector

இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணம் ஆன சந்திராயன்-2 விண்கலமானது, தன்னுடன் சேர்த்து நாசாவுக்கு சொந்தமான 2 கண்ணாடிகளை அதாவது retro reflector எந்திரத்தை தன்னோடு கொண்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திராயன்-2 விண்கலமானது ரொம்ப காலமாக விண்ணில் ஏவ போவதாக சொல்லி அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது கிடைத்த அறிவிப்பின்படி அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 11ம் தேதி (2019) அன்று, இந்த சந்திராயன்-2 விண்கலத்தை, அதாவது ரோவர் மற்றும் லேண்டர் அடங்கிய விண்கலமானது வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி செல்லும். தேதி( மாற்றப்பட்டுள்ளது.)

அப்படிச் செல்கையில் சந்திராயன் விண்கலத்தில் ஒரு retro reflector ஐயும்

இஸ்ரேலிய நிலவு விண்கலத்தின் ஒரு retro reflector ஐயும். சுமந்து செல்லும் இன்று நாசா அறிவித்துள்ளது.

இது போன்று retroreflective கள் நிலவு பூமியிலிருந்து எவ்வளவு தொலைவு தள்ளி போகிறது?,

என்று தெரிந்து கொள்வதற்கு பயன்படுகிறது என்று நாசா தரப்பில் தெரிவித்தனர்.

ஏற்கனவே இது போன்று retro reflector கருவிகள் ஐந்து நிலவில் உள்ளது. என்பது மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

March 20, 2019

நாசாவின் புதிய எக்ஸோ பிளானட் சோதனை ஆய்வகம்

நாசாவின் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பானது JPL எனப்படும். இந்த அமைப்பானது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.

இந்த ஜேபிஎல் அமைப்பானது, புது புது பரிசோதனைகளையும் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கி வருகின்றன, அதேபோல் சில நாட்களுக்கு முன்பு நாசாவினால் உருவாக்கப்பட்ட ஒரு பரிசோதனைக் கூடம் தான் “hot Jupiter exoplanet atmosphere lab”

இதன் அர்த்தம் என்னவென்றால், நமது சூரியனை தாண்டி வேறு ஒரு சூரியனை சுற்றி வரும் வியாழன் கிரகம் போல் இருக்கும் ஒரு கிரகத்தை, அதன் வளிமண்டலம் எப்படி இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டதுதான், இந்த பரிசோதனை கூடம்.

உதாரணமாக வேறு ஒரு சூரியனை சுற்றி வரும், வியாழன் போன்ற கிரகம், அந்த சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் அதனை சூடான வியாழன் கிரகம் என்று கூறுவர் இதனையே “ஹாட் ஜுபிடர்” என்று அழைக்கிறார்கள்.

நமது சூரிய குடும்பத்தை பொறுத்த வரை அது போல எந்த ஒரு கிரகமும் கிடையாது.

அதாவது சூரியனுக்கு மிக அருகில் மிகவும் பெரிய கிரகம்,

ஆனால் வேறு சில சூரியனை சுற்றிவரும் பெரிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த கிரகங்களின் வளிமண்டலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சோதனை மூலமாக அறிவதற்காக, இந்த சோதனை கூடம் அமைக்கப்பட்டது.

இந்த சோதனை கூடத்தில் ஹைட்ரஜன் மற்றும் 0.3 சதவீத கார்பன் மொனாக்ஸைடு ஆகியவற்றை ஒரு அதிக வெப்பநிலை கொண்ட “ஓவனில்” சுமார் 2000 ஃபாரன் ஹீட் அளவுக்கு அதாவது 1100 செல்சியஸ் அளவு வெப்பபடுத்தி உள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இதனுடன் அதுக சக்தி வாய்ந்த UV கதிர்வீச்சை யும் பாய்ச்சி உள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் Astrophysical Journal என்ற கட்டுரைகளில் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் நாம் அயல் கிரகங்களின் உள்ள உயிரின வாழியல் பற்றி ஒரு சில உண்மைகளை தெரிந்து கொள்ளமுடியும் என்று இதன் இணை தலைவர்Mark Swain கூறினார்.

நினைத்ததை போலவே பல தகவல்கள் ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது என்றும். இந்த தகவல்கள் வரும் காலத்தில் exoplanet ஆராய்ச்சிக்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும்,
Mark Swain கூறியுள்ளார்.

Source

March 18, 2019

Sun without sunspot in February |கரும் புள்ளிகள் இல்லாத சூரியன்

இதற்கு சோலார் மினிமம் என்று பெயர். இதேபோன்று சோலார் மேக்சிமம் என்றும் ஒரு குறிப்பிட்ட நிலை உள்ளது.

போன பிப்ரவரி மாதம் நம் சூரியனில் எந்தவித கரும்புள்ளிகள் இல்லாமல் இருந்ததை நம்மால் காண முடிந்தது.

இதுபோன்ற ஒரு நிகழ்வானது ஏற்கனவே 11 வருடங்களுக்கு முன்பு நடந்து இருந்ததை நம்மால் நினைவு படுத்த முடியும் அதே போல் இந்த முறையும் நிகழ்ந்துள்ளது.

நீங்கள் பார்க்கும் புகைப்படத்தில் இடது பக்க புகைப்படமானது 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது அதில் அதிகபட்ச கரும்புள்ளிகளை சூரியன் கொண்டு இருப்பதை நம்மால் காண முடியும் , இதை தான் மேக்ஸிமம் என்று அழைக்கின்றனர்.

அதே போன்று வலது பக்கம் இருக்கும் புகைப்படமானது போன வருடம் ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் அதில் கிட்டத்தட்ட எந்தவித கரும்புள்ளிகளும் தென்படாமல் இருப்பதை நம்மால் காண இயலும், இதன் பெயர் தான் சோலார் மினிமம்.

அதேபோன்று,

அதாவது போன வருட ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்ததைப் போன்ற நிகழ்வானது போன மாதம் பிப்ரவரி மாதம் நிகழ்ந்துள்ளது

சூரியனின் இந்த தன்மையானது அதன் உக்கிர தன்மையை குறைவாக இருப்பதை காட்டுகிறது அதாவது நீங்கள் பார்க்கும் முதல் புகைப்படத்தில் சூரியனின் வெளிப்பகுதியில் அதிகமான சூரிய காற்று வீசுவது உங்களால் காண முடியும்.

ஆனால் இரண்டாவது படத்தில் உங்களால் அதை காண இயலாது சூரியன் ஏற்படும் இதுபோன்ற மாறுதல்களை பருவ நிலை மாறுதல்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

எப்படி நம் பூமியில் காலநிலை மாறுதல்கள் இருக்கிறதோ அதே போன்று அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்றும் சூரியனும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்றும் ஒரு சிலர் கூறுகிறார்கள் ஆனால் இதுபோன்று ஏற்படும் காலங்களில் சூரியனானது மிகவும் வலிமை குறைந்ததாகவே காணப்படுவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

March 17, 2019

Magellan Cloud Details in Tamil |மெகல்லன் மேகங்கள் தமிழ்

Magellanic Clouds

முன்னுரை

மெஜெல்லன் மேகங்கள். இவை வான்வெளியில் தெற்குப் பகுதியில் நமது கண்களுக்கு புலப்படக்கூடிய இரு சுருள் வடிவ அண்டங்கள்.

இதனை nubecule magellanic என்றும் அழைப்பதுண்டு.

இதனை வித்தியாசமான சிறிய (irregular dwarf galaxy) கேலக்ஸி என்றும் கூறுவர்

இந்த கேலக்ஸி ஆனது நமது கேலக்ஸி மற்றும் ஆன்றோமிடா கேலக்ஸி அடங்கிய (Local galactic group) லோக்கல் குரூப்பில் இருக்கும் ஒரு கேலக்ஸி ஆகும்.

இதனை பெரிய மேஜில்லன் மேகம் மற்றும் சிறிய மேகம் ( large and small megallan cloud) என இரு வகையாகப் பிரிப்பார்.

மேலும் இந்த கேலக்ஸியானது நமது பால்வீதி அண்டத்தினை சுற்றி வருவதாகவும் ஒரு பிரபலமான கூற்று நிலவுகிறது.

ஆரம்பம்

இந்த பகுதியினை முதன்முதலில் 889 1st மில்லினியம் ஆண்டுகளின் போது அரபு நாட்டைச் சார்ந்த இப்னு குதைபா என்ற வானவியலாளர் தன்னுடைய புத்தகமான அல் அன்பா என்ற புத்தகத்தின் குறிப்பிட்டிருந்தார் இதுதான் முதன் முதலில் இந்த குறிப்பிட்ட பகுதியை பற்றி முதன் முதல் இடம்பெற்ற மிகவும் பழங்கால புத்தக குறிப்பாகும்.

அதன் பிறகு இலங்கையைச் சார்ந்த ஒரு வானியல் புத்தகங்களில் இதே பகுதியினை விண்வெளியில் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர் அதன் பெயர் மகாமேரு புருவதையா என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் இதுதான் இரண்டாவது குறிப்பாகும்.

இதன்பிறகு ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டுகளில் பீட்டர் மற்றோர் மற்றும் ஆண்ட்ரியா கொராலி, என்ற இத்தாலிய நாட்டு அறிஞர்களின் குறிப்பில் இது இடம் பெற்றிருந்தது.

இதன் பிறகு 1756 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நட்சத்திரங்கள் பற்றிய குறிப்பில் இந்த மெஜில்லன் மேகங்கள் பிரெஞ்ச் வானவியளாளர் களால் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து 1847ம் ஆண்டு வில்லியம் ஹெர்செல் என்பவர் நெபுலா மற்றும் கேலக்ஸி பற்றிய 400 பக்க ஆராய்ச்சி புத்தகம் ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் இந்த குறிப்பிட்ட மெக்கல்லன் மேகங்களை வகைப்படுத்தி இருந்தார்.

பண்புகள்

முன்பு குறிப்பிட்டது போலவே இந்த கேலக்ஸியில் நம்மால் வெறும் கண்களால் பார்க்க இயலும் அதுவும் தெற்கு அரைக்கோளத்தில் இருந்து

இதை பார்ப்பதற்கு பால்வெளி அண்டத்தின் ஒரு பகுதியை போன்று தெரியும்

இந்த இரண்டு கேலக்ஸி களுங்களுக்கும் இடையே உள்ள தொலைவு, அதாவது சிறிய மற்றும் பெரிய மெகல்லன் மேகங்கள் இடையே உள்ள தூரம் ஆனது 75,000 ஒளி ஆண்டுகள். என கணித்துள்ளனர்

LMC என்று அழைக்கப்படக்கூடிய பெரிய மெகல்லன் மேகங்கள் பூமியிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் (160,000) ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.

மற்றும்

SMC என்று அழைக்கப்படக்கூடிய சிறிய மேஜெல்லைன் மேகங்கள், பூமியிலிருந்து சுமார் 2 லட்சம் (2000,000) ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தாகக் கணிக்கப் பட்டுள்ளது.

இந்த இரண்டு கேலக்ஸி மேகக் கூட்டங்களும் அதன் அளவில், ஒன்றை விட ஒன்று 2மடங்கு பெரியதாக இருக்கலாம். என கூறுகின்றனர், முறையே

LMC =14000 ஒளியாண்டுகள் diameter

SMC =7000 ஒளியாண்டுகள்

Diameter

Milky way=100000 ஒளியாண்டுகள்

அதாவது அந்த குறிப்பிட்ட கேலக்ஸியை கடந்து செல்ல 14 ஆயிரம் ஒளியாண்டுகள் சிறிய கேலக்சி கடந்து செல்ல 7 ஆயிரம் ஒளியாண்டுகள் ஆகும் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக பால்வெளி அண்டத்தின் தொலைவு (ஒளியாண்டுகலில்) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கேலக்ஸி கூட்டங்களின் எடையானது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை ஏனென்றால் இந்த இரண்டு கேலக்ஸி களிலும் மையப்பகுதியில் ஒரு சிறிய குறிப்பிட்ட அளவு மேகங்கள் மட்டுமே சூரியன் களாக அதாவது நட்சத்திரங்களாக உருமாறி இருக்கலாம், மற்றவை இன்னும் டார்க் மேட்டர் ஆகவே உள்ளன. எனவே இந்த கேலக்ஸியை எவ்வளவு எடை உள்ளது என்று கணிப்பது மிகவும் கடினமாக ஒன்றாக உள்ளது.

எனினும் இப்போது சில காலங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு தோராயமான அளவீடுகளின் அடிப்படையில் நமது கேலக்ஸியில் பத்தில் ஒரு பகுதி எடையை இந்த இரண்டு கேலக்ஸி களும் கொண்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அப்படி ஒருவேளை இது பத்தில் (1/10) ஒரு பகுதி எடையை கொண்டு இருக்குமேயானால் நமது லோக்கல் கேலக்ஸி குரூப்பில் இருக்கும் 50 கேலக்ஸி களில் அதிக எடை கொண்ட காலக்ஸிகளின் நான்காம் இடத்தை பிடிக்கும் அளவு எடையை இது கொண்டிருக்கும்.

அது மட்டும் இல்லாமல் ஒரு சில வானியலாளர்கள் இந்த SMC ஆனது அதன் பெரிய Magellan மேகக்கூட்டம் LMC யை வலம் வருவதாகவும் இருக்கலாம் என கூறி உள்ளனர்.

கடந்த 2003ம் ஆண்டு அளவிடப்பட்ட Hubble விண்வெளித் தொலைநோக்கியின் அளவீடுகளின் அடிப்படையில் இந்த சிறிய Magellan cloud ஆனது சுமார் குறைந்த பட்சம் 4பில்லியன் ஆண்டுகளில் தனது முதல் சுற்றினை முடிக்கும். எனவும் கணக்கீடுகள் கண்டறியப்பட்டு உள்ளது.

குறிப்பு

Mini Magellan clouds

D.S Mathewson

V.L Ford

மற்றும் N. Viswanathan என்ற மூன்று வானியலாளர்கள் இந்த மிகச் சிறிய Magellan cloud மேகக்கூட்டம் ஆனது SMC என்று அழைக்கப்படக்கூடிய சிறிய மேகக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்து இருக்கலாம் என கருதுகின்றனர். அதுவும்

நாம் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலையில் இது SMC உடைய பின் பகுதியில் அமைந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

அப்படி அதுபோல ஒரு சிறிய Magellan கேலக்ஸி அமைந்து இருக்குமேயானால் அது சுமார் 30 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது

Facts here

March 16, 2019

செவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படத்தை வெளியிட்டது நாசா குழு

செவ்வாயில் 15 வருடங்களாக ஆராய்ச்சி பணியை மேற்கொண்டு வந்த ஆப்பர்ச்சூனிட்டி ரோவர் மூலம் எடுக்கப்பட்ட இரண்டு லட்சம் புகைப்படங்களிலிருந்து ஒரு சிலவற்றை தேர்ந்தெடுத்து இந்த 360 டிகிரி கோணம் உள்ள புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படமானது சுமார் 354 புகைப்படங்களில் கலவை அதுமட்டுமில்லாது மூன்று வித்தியாசமான நிற கலவைகளை மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பனோரமா புகைப்படமாகும் Panorama .

இந்த அனைத்து புகைப்படங்களும் ரோவெரில் உள்ள முன்பக்க panorama புகைப்படக் கருவியின் மூலம் , மே மாதம் 13ம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு வரையிலான புகைப்படங்களின் தொகுப்பு தான் நீங்கள் மேலே பார்த்த அந்த புகைப்படம்.

புகைப்படத்தின் இடது பக்க கீழ் பகுதியில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களில் நீங்கள் கருப்பு வெள்ளையை காண முடியும் ஏனென்றால் இது ரோவர் செயலிழக்கும் நாளிலிருந்து ஒரு சில நாட்கள் முன்னதாக தான் எடுக்கப்பட்டது அதனால் இதில் நிற கலவைகள் ஏற்றப்படவில்லை.

March 11, 2019

Triangulum Galaxy Details in Tamil | ட்ரையாங்குலம் அண்டவெளி

Triangular galaxy

ட்ரையாங்குலம் அண்டவெளியானது நமது பூமியிலிருந்து சுமார் 3 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சிறிய சுருள் வடிவ அண்டம் ஆகும். சிறியது என்றவுடன் நீங்கள் ஏதும் கற்பனை செய்ய வேண்டாம் நானே சொல்கிறேன். நமது பால்வழி அண்டதினை 60% அளவினை கொண்டிருக்கும். அதாவது இந்த டிறையாங்குலம் அண்டவெளியை நீங்கள் கடந்து போக நினைத்தால் உங்களுக்கு சுமார் 60,000 ஒளியாண்டுகள் தேவைப்படும்.

மற்றும் வில்லியம் ஹர்ஷெல் என்ற வானவியலாலர். தனது வானவியல் பட்டியலில் மெஸ்ஸியர் கண்டறிந்த விண்வெளி பகுதிகளை இடம் பெற வைக்க கூடாது என்று திட்ட வட்டமாக இருந்தார் ஆனால் இந்த டிறையாங்குளும் அண்டவெளி யினை மட்டும் அவர் அதில் ஒரு விதிவிலக்காக பதிவிட்டுருந்தார் அதனை அவர் HV-17 என்று அவரின் அட்டவணையில் குறிப்பிட்டு இருந்தார்.

நெபுலா பட்டியலில் இந்த டிரையாங்குலம் அண்டவெளியில் உள்ள ஒரு பகுதியையும் (H-II) அவரின் அட்டவணையில் பதிவிட்டு இருந்தார். NGC 604 an H-II region in Triangulum Galaxy

சிறிய குழப்பம்:

இந்த அண்டவெளி ஐ ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு விண்வெளியாளர் அதாவது உற்றுநோக்குபவர் பார்க்கும் போது இதனை பின் வீல் அண்டவெளியுடன் குழப்பி கொள்ள முடியும். ஆனால் pin wheel galaxy என்ற அண்ட வெளியானது வேறு மற்றும் டிரையாங்குல  அண்டவெளியானது வேறு. பின் வீல் அண்டத்தினை. M101 என்று தனியாக குறிப்பிடுவர்.

தன்மைகள்

இது நமது கேலக்ஸி யில் 60% அளவு உள்ள ஒரு பெரிய கேலக்ஸி ஆகும்.

இதில் சுமார் 40 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது ஒரு சுருள் அண்டவெளி தான் ஆனால் எல்லா சுருள் அண்டவெளி களிலும் இருப்பதைப் போன்ற (பார்) என்று அழைக்கப்படக்கூடிய கம்பி இதில் மிகவும் லேசானதாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அதாவது அதன் மையத்தில் மிகவும் மெல்லிய கம்பி போன்ற அமைப்பு அல்லது கம்பி போன்ற அமைப்பு இல்லாமை.

கம்பி சுருள் அண்டவெளி என்றால். ஆங்கிலத்தில் இதனை barred spiral galaxy என்று அழைப்பர்.
(எ :கா)A barred spiral galaxy is a spiral galaxy with a central bar-shaped structure composed of stars.