April 24, 2019

First Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம்உணரப்பட்டது

ஏப்ரல் 6, 2019 அன்று இன்சைட் லேண்டரின் உள்ள
Seis செய்ஸ்மோ மீட்டரில் பதிவான தரவுகளின் அடிப்படையில் செவ்வாய்கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் லேசான அதிர்வளைகளை அந்த கருவி கண்டறிந்து உள்ளது.


டிசம்பர் 19, 2018 அன்று நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய்கிரகத்தில் தரையிரங்கியது.


 அந்த நாள் முதல் இந்த குறிப்பிட்ட நிகழ்விற்காகத்த்தான் அறிவியலாலர்கள் காத்து இருந்தனர் என்று கூறலாம். 


அந்த அளவுக்கு முக்கியமான நிகழ்வான, “செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் ஒரு சில அதிர்வுகளை” Seis செய்ஸ்மோ மீட்டர் கருவி கண்டறிந்து இருக்கிறது.

ஃப்ரான்ஸ் நாட்டில் விண்வெளி அமைப்பான CNES யில் உள்ள சீஸ்மோமீட்டரின்
principal investigator ஆன  Philippe Lognonné என்பவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறினார்

நாசா லேண்டரினை கவனித்து வந்தாலும் இந்த பிரான்ஸ் நாட்டில் உள்ள CNES அமைப்புதான் அந்த குறிப்பிட்ட சீஸ்மோமீட்டர் சார்ந்த நிகழ்வுகளை ஆராய்ந்து வருகிறது.



Mars Quake Tamil details. and Graph of Mars Quake | 7th April 2019

இதனை அவர்கள் ஒரு வித ஒலி (Audio) வாக வெளியிட்டிருந்தனர். பார்க்க

இந்த கானொலியில் நீங்கள் கேட்ட சப்தமானது சீஸ்மோமீட்டர் கருவியில் உள்ள நில அதிர்வு மானியின் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஒலிகளாகும். இதில் முதலில் நீங்கள் கேட்கும் ஒலியானது செவ்வாய்கிரகத்தில் உள்ள காற்றினால் உண்டானது என கூறுகிறார்கள். கடைசியில் கேட்ட ஒலியானது , லேண்டரின் உள்ள இயந்திர கை அசையும் போது அந்த கருவி பதிவிட்ட சப்த அளவு , இதற்கு இடையில் உள்ள அதிர்வுகளானது, புது விதமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இது அதிர்வுகலை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒலி பதிவுகள் என்பதால் ,

மேற்படி பார்த்த நடுவில் உள்ள சப்தமானது நிலத்தில் அடியில் ஏற்பட்ட அதிர்வுகள் தான் என பிராண்ஸ் நாட்டு விண்வெளி நிறுவனமான CNES உறுதி கொடுத்துள்ளது.

இவ்வகையான அதிர்வுகளை பூமியில் ஏற்படும் , நிலநடுக்கங்கலோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் பூமியில் அடிப்பகுதியில் பட நில தட்டுகளை கொண்டு உள்ளது அந்த அளவு நில தட்டுகள் செவ்வாய் கிரகத்தில் இல்லை, ஆகையால். உண்மையில் அந்த அதிர்வுகள் எல்லாம், செவ்வாயில் ஏற்பட்ட நில நடுக்கம் தானா என பல பேர் கேள்விககளையும் எழுப்பியுள்ளனர்.

இதற்காகவே இந்த விண்வெளி அமைப்பானது இதனை ஒரு உத்தேசமாக உறுதிபடுத்தியுள்ளது. “The tentatively confirmed signal”

பூமியை தாண்டி ஏதேனும் ஒரு கிரகத்தில் சீஸ்மோமீட்டரினை வைத்து அதன் நில மாறுபாடுகளை அளவிட வேண்டும் என்று இப்போது இல்லை 1970 ஆம் ஆண்டுகளிலேயே , நாசாவின் “வைக்கிங்” விண்கலமானது ஒரு சீஸ்மோமீட்டரினை கொண்டு சென்றது . ஆனால் அவை லேண்டர் தரையிரங்கிய பிறகுதான், தாமதமாக நிலப்பகுதியை வந்து அடைந்தன, அதுவும் லேண்டர் மீது “பொத்” என்று விழுந்து , வீணாய் போனது. எந்த ஒரு உருப்படியான தகவல்களையும் அந்த சீஸ்மோமீட்டர் கருவி சேகரிக்கவில்லை.


அப்போல்லோ மிஷன் பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை, அதிலும் சீஸ்மோமீடர் கருவி, விண்வெளியாளர்களால், தரையில் வைக்கப்பட்டது. அதிலிருந்து ஒரு சில தகவல்கலையும், அவர்கள் சேகரித்தனர்

இந்த இன்சைட் லேண்டரில் உள்ள சீஸ்மேமீட்டர் கருவியானது. செவ்வாய்கிரக நில அமைப்பை கண்டறிவதில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் என்று JPL இல் உள்ள நில அறிவியலாலர் Bruce Banerdt என்பவர் கூறியுள்ளார்.

Ref – Space.com

April 23, 2019

Oort Cloud in Tamil | ஓர்ட் மேகங்கள் - விளக்கம்

ஆரம்பம்

ஓர்ட் மேகங்கள், இது பொதுவாக வால்நட்சத்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது மட்டுமில்லாமல் , இந்த “ஓர்ட் மேகங்கள்” ஒரு கற்பனையாகவே இருந்து வருகிறது. அதாவது , இதை பற்றிய முழுமையான தகவல்கள் நமக்கு இன்னும் கிடைக்க வில்லை.

இது என்னவென்று சொல்கிறேன். அப்போது நீங்களே இதனை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.

நான் ஏற்கனவே சொன்னது போல இது வெறும் “வால் நட்சத்திரங்களுக்கு ” மட்டுமே பொருந்தும், மற்ற கிரகங்களுக்கோ அல்லது குள்ள கிரகங்களுக்கோ பொருந்தாது,

கோட்பாடு

சரி விஷயத்திற்கு வருவோம், சூரியனை நீண்ட நாள் சுற்றிவரும் வால் நட்சத்திரங்களை லாங்க் டெம் காமிட் என்பர் (Long Term Comet) இது போன்ற வால் நட்சத்திரங்கள் ஒரு சாதாரன மனிதனில் வாழ்நாளில் திரும்பவும் வராது. (ஏனென்றால் இது சூரியனை சுற்றிவரும் காலம் மிகவும் அதிகம் என்பது தான்) உதாரனமாக 100 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றிவரும் ஒரு வால் நட்சத்திரத்தினை முழுமையாக ஆராய்சி செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் இதனை ஆராய்சி செய்த ஆராய்சியாளர் இறந்து போயிருக்க கூடும்.

மேலும் இது போன்று லாங்க் டெர்ம் காமிட் கள் (Long Term Comet) கள் சூரியனை நெருங்கும் அந்த தருனத்தில் மட்டுமே நம்மால் தரவுகளை சேகரிக்க முடியும் , அதன் பிறகு அது எங்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

ஜான் ஓர்ட்

இதனை பற்றிய ஆராய்சிகளை மேற்கொண்ட வானவியல் அறிஞர் தான் ஜான் ஓர்ட் என்பவர், இவரின் ஆராய்சியில் முடிவிலேயே, ஓர்ட் மேகங்கள் என்ற ஒரு கோட்பாடு வெளிவந்தது, இதில் சூரியனை சுற்றி கோளவடிவத்தில் ஒரு பகுதி இருக்கலாம் , என்றும். அது கைப்பர் பெல்ட் பகுதியில் இருந்து மிகவும் நீண்ட தொலைவில் இருக்கலாம் என்றும் கருத்துகளை பதிவிட்டார், இவரின் கோட்பாட்டின் காரனமாக தான் இந்த ஓர்ட் மேகங்கள் என்ற பகுதியை நாம் படிக்கிறோம்.

தற்போது ஆராய்சி

பிற்காலத்தின் நாசா தனது ‘வைஸ்” “WISE” விண்கலத்தின் இன்ஃப்ராரெட் அலைவரிசையில் நமது வானவெளியை ஆராய்சி செய்தனர். அப்போது இந்த தொலைதூர வால் நட்சத்திரங்களை (Long Term Comets) பற்றிய அதிக செய்திகள் வெளிவந்தன.

  • தொலைநூர வால் நட்சத்திரங்கள் குறைந்தது 1கிமீட்டர் அகலம் கொண்டதாக இருகின்றன
  • சாதாரன வால்நட்சத்திரங்களை காட்டிலும் 7 மடங்கு அதிக சுற்றுகாலத்தினை கொண்டிருந்தன
  • இவை அனைத்தும் வியாழன் குடும்ப வால்மீன்களை காட்டிலும் 2 மடங்கு பெரியதாக உள்ளதாகவும் (அளவில்) கண்டறிந்து உள்ளனர்

உண்மைகள் (Facts)

  • ஓர்ட் மேகப்பகுதி வெறும் கணிப்புதான். இதனை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை
  • இந்த ஓர்ட் மேகங்கள் சூரியனிடமிருந்து 1000AU – 1,00,000 AU வரை நீண்டு இருக்கலாம்
  • இப்பகுதியில் இருக்கும் வால் நட்சத்திரங்கள் சுமார் 200 வருடங்கள் எடுத்துக்கொள்ளும் சூரியனை ஒரு முறை சுற்றிவர
  • ஓர்ட் மேகப்பகுதியில் 1 டிரில்லியனுக்கும் அதிகமான வால் மீண்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் இருக்கலாம்,’
  • இதுவரை ஓர்ட் பகுதியில் இருக்கும் பொருட்களுக்கும் , துனைகோள்கள் இருப்பதை நாம் கண்டறியவில்லை
  • ஓர்ட் பகுதியில் இருக்கும் வானியல் பெருட்களை டிரான்ஸ் நெப்டியூனியன் பொருட்கள் என்றும் கூறுவர், இதே பெயர், கைப்பர் பெல்ட் பகுதிக்கும் பொருந்தும்,

முடிந்தவரை விவரங்களை கொடுத்திருக்கிறேன். வேண்டுமென்றால் கமெட் செய்யுங்கள்

Space News TAmil

April 22, 2019

Parker Solar probe Complete its Second Close Approach to Sun | இரண்டாவது சுற்றை முடித்தது பார்க்கர் சூரியனுக்கான விண்கலம்

இந்த மாதம் (ஏப்ரல் 2019) கடந்த 4 ஆம் தேதி , நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் ஆனது இரண்டாவது தடவையாக சூரியனை மிகவும் குறுகிய தொலைவில் கடந்தது. அந்த நேரத்தின் இது சுமார் மணிக்கு 213,200 மைல் என்ற வேகத்தில் கடந்து சென்றுள்ளது.

இந்த நிகழ்வை விஞ்சானிகள் , Solar encounter Phase என்று அழைக்கின்றனர். கடந்த மார்ச் கடைசியில் ஆரம்பித்த இந்த நிகழ்வு 11 நாட்கள் கழித்து ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்துள்ளது,.

Laurel ல் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆராய்சி கூடத்தில் மூலம் இந்த விண்கலத்தினை டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (DSN – Deep Space Network) மூலமாக இதனை தொடர்பு கொண்டு ஆராய்சி செய்து வந்துள்ளனர்

அதாவது இந்த நிகழ்வு (சூரியனை மிகவும் அருகில் கடக்கும்) அந்த தருனத்திற்கு 4 மனி நேரத்திற்கு முன்பும். அதன் நிகழ்வுக்கு 4 மனி நேரம் பிறகும் அந்த விண்கலத்தின் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. என கண்கானித்து உள்ளனர்.

Parker Probe இன் மிஷன் ஆபரேசன் மேனேஜர் நிக்காலௌஸ் பிங்கி கூறுகையில் இது போன்ற (Closest Approach) சூரியனின் மிகவும் அருகில் இருக்கும் சமயத்தில் விண்கலத்தினை தொடர்புகொள்ள முடிந்தது மிகவும் அரிதான மற்றும் நல்ல விஷயமாகும். அதே போல் நாங்கள் அதன் அறிவியல் தகவல்களையும்(Scientific Datas) எதிர்பார்த்து இருக்கிறோம் என்று கூறினார்

இந்த விண்கலத்தில் பதிவான அறிவியல் தகவல்கள் அனைத்தும் வரும் வாரங்களில் நமக்கு கிடைக்க பெரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்,

விண்கலமானது சூரியனிடமிருந்து 0.25 AU (23,250,000) தொலைவில் இருப்பதையே இவர்கள் மிகவும் குறுகிய தொலைவு என்று அழைக்கின்றனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதமே இந்த விண்கலமானது. ஏற்கனவே சூரியனுக்கு அமெரிக்கா-ஜெர்மன் விஞ்சானிகளால் அனுப்பப்பட்ட ஹீலியோஸ் -2 விண்கலத்தின் மிகவும் குறுகிய தொலைவான 26.55 மில்லியன் மைல் என்ற தொலைவினை கடந்து சாதனை செய்துள்ளது.

அதுமட்டு மில்லாமல் இந்த பார்க்கர் விண்கலமானது 2024 ஆம் ஆண்டுகளில் மிகவும் குறுகிய தொலைவான 3.83 மில்லியன் மைல் என்ற சாதனையயும் செய்யும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Ref :- john Hopkins Applied Physics Lab

April 21, 2019

Lyrid Meteor Shower |லைரிட் விண்வீல் பொழிவு |ஏப்ரல் 2019

லைரிட் விண்வீல் பொழிவானது, சாதாரணமாக ஏப்ரல் மாதங்களில் 21,22,23, தேதிகளில் லைரா நட்சத்திர திறளில் காணப்படும் விண்வீல் பொழிவாகும்.

அதாவது அதாவது இந்த வின்வீழ் பொழிவானது Lyra நட்சத்திர மண்டலத்தில், அதன் மிகவும் பிரகாசமான நட்சத்திரமான Alpha Lyrae (Vega) அருகில் நிகழும் வின்வீல் பொழிவு ஆகும்.

இந்த நிகழ்வு C/1861 G1 (Thatcher) என்ற வால் நட்சத்திரத்தின், தூசிகள் மற்றும் விண்கற்கள் மூலம் நடைபெறும் நிகழ்வாகும்,

இந்தக் குறிப்பிட்ட வால் நட்சத்திரம் ஆனது நமது சூரியனை சுமார் 410 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது என்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர்.

இது 1861 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி A. E. Thatcher என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது,

அதுமட்டுமில்லாமல் இந்த வால்நட்சத்திரம் ஆனது அதே ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி, பூமியிலிருந்து வெறும் 0.335 AU தொலைவில் கடந்து சென்றதை Carl Wilhelm Baeker என்பவர் கண்டறிந்து உள்ளார்.

இந்த விண்ணில் பொலிவினை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் வருகின்ற 22 அல்லது 23 ஆம் தேதி லைலா நட்சத்திர மண்டலத்தில் பார்க்கும் போது உங்களால் இந்த வின்விழ் பொழிவினை பார்த்து ரசிக்க முடியும்.

பொதுவாக நடு இரவுக்கு பிறகு நீங்கள் இதனை பார்க்கலாம். அதிக பட்சமாக, மணிக்கு 20 meteor பொழிவை நீங்கள் பார்க்கலாம்.

Ref :wiki, planiterium

April 15, 2019

Israel will make beresheet 2.0 after failed moon landing | ஸ்பேஸ் ஐஎல் மூலம் மீண்டும் பெரேஷீட்2 தயாரிக்கப்படும்.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டின் நிலவிற்கான லெண்டர் ஒன்று நிலவில் தரையிரங்கும் போது ஒரு சில தொலைதொடர்பு கோளாறுகளால், மற்றும் தொழில் நுட்ப கோளாறுகளால், நிலவில் தரைப்பகுதியில் மோதி அழிந்தது.

இதனை தொடர்ந்து வெளியான டுவிட்டர் பதிவில்

We’re going to actually build a new halalit — a new spacecraft

என்று ஸ்பேஸ் ஐஎல் இன் தலைவர் மோரில் காண் கூறியுள்ளார். இது டுவிட்டரில் வெளியாகியுள்ளது தவிர இதன் வேலை எப்போது ஆரம்பிக்கப்படும், எப்போது அனுப்ப திட்டம் இருக்கிறது போன்ற எந்த செய்திகளையும் வெளியிடவில்லை.

மேலும் இந்த பழைய பெரேஷீட் விண்கலமானது கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் இது ஏப்ரல் 4 ஆம் தேதி நிலவின் வட்ட பாதையில் சுற்றிவர ஆரம்பித்தது . என்பது குறிப்பிட தக்க விஷயம்.

April 13, 2019

Another planet might found near Proxima Centauri star |பிராக்சிமாசென்டாரி நட்சத்திரத்திற்கு அருகில் மற்றும் ஒரு கிரகம் இருக்க வாய்ப்புள்ளது



பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் அதுவும் மிகவும் மங்கிய நட்சத்திரம்தான், புரோக்சிமா செண்டாரி, என்று அழைக்கப்படக்கூடிய ஒரு சிகப்பு குள்ள நட்சத்திரம், faint red dwarf.
ஏற்கனவே இந்த நட்சத்திரத்தின் அருகில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு கிரகம் சுற்றி வருவதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர் அதுமட்டுமில்லாமல், அந்த கிரகமானது பூமியை போன்று 1.3 மடங்கு பெரியது என்றும் தரைப்பகுதி கடினமான பாறைகளால் ஆனது என்றும், அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் (அதாவது அந்த கிரகமானது அந்த நட்சத்திரத்தில் இருந்து தண்ணீர் இருக்கக்கூடிய பகுதியிலேயே அமைந்துள்ளது என்றும் habitable zone) தெளிவான ஆதாரங்கள் கண்டுபிடித்ததாக கூறினார்கள்.




மேலும் மேலும் இந்தக் கிரகத்தின் பெயர் proxima b என்று அழைக்கப்பட்டது. இதுதான் பூமிக்கு மிக அருகில் உள்ள exoplanet என்றும் கருதப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் proxima centari நட்சத்திரத்தை சுற்றி வரக்கூடிய மற்றொரு கிரகம் இருக்க வாய்ப்புள்ளது என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
அதன் பெயர் பிராக்சிமா சி. (Proxima c) எனவும் வைத்துள்ளனர்.
Mario Damasso, of the University of Turin in Italy இவர் தெற்கு ஐரோப்பிய observatory யில் உள்ள ” லா சில்லா” தொலைநோக்கியின் உதவியுடன் இந்த பிராக்சிமா சென்டரி நட்சத்திரத்தினை ஆராய்ந்த ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையில் . இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அந்தத் தரவுகள் ஆனது High Accuracy Radial velocity Planet Searcher என்ற ஒரு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்த தொலைநோக்கியின் தரவுகள் ஆகும்.
இதே போன்ற தொழில் நுட்பம் கொண்ட தொலைநோக்கியைக் கொண்டு ஆராய்ந்த ஆராய்ச்சி முடிவுகளைக் அடிப்படையாக கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் தான் பிராக்சிமா b.
Proxima centary நட்சத்திரத்தின் ஈர்ப்பு அலைகளை ஆராய்ச்சி செய்ததில் அதன் ஈர்ப்பு விசையில் ஒரு மிக சிறிய மாற்றங்கள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது போன்ற ஈர்ப்பு அலைவரிசை மாற்றங்களை ஒரு கிரகத்தினால் ஏற்படும் மாற்றங்கள் போன்று இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே இது மற்றுமொரு கிரகமாக இருக்கலாம் என்று கருத்துக்கள் பரவியுள்ளன.
இந்த Proxima c கிரகமானது அந்த நட்சத்திரத்தில் இருந்து 1.5 வானியல் அலகுகள் தொலைவில் இருக்கலாம் என்றும், பூமியை போன்று ஆறு மடங்கு எடை அதிகமாக இருக்கலாம், என்றும் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
இந்த மங்கிய நட்சத்திரத்தின் ஈர்ப்பும் மிகவும் குறைவாக உள்ளது அதே போன்று இந்த கிரகமும் 1.5 வானியல் அலகுகள் தொலைவில் உள்ளது. இந்த அளவு தொலைவில் இருப்பதால். இந்த கிரகமானது பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு சற்று கடினமானதாக இருப்பதாக. அந்த ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர், அது மட்டுமில்லாமல் இந்த பிராக்சிமா C கிரகமானது , -300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை மட்டும் பெற்றிருக்கும் என்றும் இந்த ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆராய்சியாளர்கள் வெளியிட்ட ஆராய்சி முடிவுகளை மற்ற அறிவியல் குழுவினரும் பரிசீலனை செய்து வருகின்றனர். அப்படி இது ஊர்ஜிதப்படுத்தப்படுமேயானால். இந்த கிரகத்தினை “காயா” தொலைநோக்கி கொண்டு ஆராச்சி செய்யப்படும் என்றும் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

அப்படி இந்த கிரகத்தினை அதி நவீன விண்வெளி தொலைநோக்கிகள் கொண்டு ஆராயும் போது இன்னும் சில ஆண்டுகளின் நாம் பூமியை அடுத்த ஒரு பூமிபோன்ற எக்ஸோ கிரகத்தின் புகைப்படத்தை பார்க்க வாய்ப்புகள் கிடைக்கும்.(இதுவரை நாம் எக்ஸோ கிரகங்களின் புகைப்படத்தினை பார்த்தது கிடையாது).

வானியல் ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் காரனமாக, கடந்த 10 ஆம் நாள் அதாவது 2019 ஏப்ரல் 10 ஆம் நாள் தான் , நாம் முதன் முதலில் ஒரு கருந்துளையின் :”ஈவன்ட் ஹரைசோனை” படம் பிடித்துள்ளோம்.

அது M87 என்ற கேலக்ஸிக்கு சொந்த மானது. 

நாம் நம்முடைய பால்வழி அண்டத்தின் மத்தியில் இருக்கும் ” கருந்துளையியன் ” புகைப்படம் எடுக்கும் போது இந்த ஆராச்சி மிகவும் உச்சத்தினை அடையும் அப்போது அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்க தொடங்குவர்..

April 12, 2019

EP.15. Israel Moon Lander Crash Landed in Moon | இஸ்ரேலின் நிலவு விண்கலமானது நிலவில் மோதி அழிந்தது


இஸ்ரேலின் நிலவு விண்கலமானது, நிலவில் தரையிறங்கும்போது என்ஜின் பழுது காரணமாக நிலவில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் இந்த செயல்பாடானது, தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.


Podcast:


Event Horizon's Black hole photo after 7 month Observations

2017 முதல் நாம் இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம் என்று சொன்னாலும் மிகையாகாது.

2017 ஆம் ஆண்டு அபிசேர்வேஷன் செய்யப்பட்டு வெளிவந்த கருந்துலையின் புகைப்படமானது. அவ்வளவு கச்சிதமாக இல்லை.

ஆதலால் இவண்ட் ஹாரிசோன் தொலைநோக்கி மூலமாக திரும்பவும் இந்த முயற்சியை எடுக்க போவதாக . 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்தது அந்த குழு.

அதன் பிறகு 2019 ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் மாலை நேரத்தில்.

கருந்துளையின் புகைப்படத்தை வெளியிட்டது. இவண்ட் ஹாரிசோன் குழு.

அதை தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள்.

இது ரேடியோ தொலைநோக்கிகள் மூலமாக ஆய்வுகள் செய்யப்பட்டு. பிறகு கணிணி உதவியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாகும்.