May 31, 2019

சூரிய கிரகணம் | Solar Eclipse Facts & Info Tamil

சூரிய கிரகனம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். அதாவது நமது நிலவான சந்திரனானது தானாகவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் நிகழ்வு.

உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும். அது என்னன்னா? நமது சந்திரனானது மாதாமாதம் தான் நமது பூமியை சுற்றிவருகிரது. அப்போ இந்தமாதிரி சூரிய கிரகணம் மாதத்திற்கு ஒரு முறை வராதா? என்பது தான் அந்த கேள்வி.!!!.???!!!

இந்த நிகழ்வானது சாதாரனமாக நிகழ்ந்து விடாது மாறாக நமது சந்திரணானது நமது பூமியை சுமார் 5முதல் 15 டிகிரி வரை சற்றி சாய்ந்த கோணத்தில் சுற்றிவருகிறது அப்படி இருக்கையில் நமக்கும் , அதாவது பூமிக்கும் , சூரியனுக்கும், மற்றும் சந்திரணுக்கும் ஒரு நேர்கோடு என்பது வருடத்தில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோதான் நடக்கும். இதனால் தான் இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. கீழே உள்ள வீடியோ வை பார்க்கவும்.

(ஒரு சில சமயங்களில் நம்மால் வருடத்தில் 5 முறை கூட பார்க்க முடியும்)

fact

வகைகள்

அனைத்து சூரிய கிரகணங்களும்

இவற்றினை நாம் மூன்று வகையாக பிரிக்கலாம்

  • Total solar Eclipse
  • Annular Solar Eclipse
  • Partial Solar Eclipse

Total Solar Eclipse (முழு சூரிய கிரகணம்)

இந்த வகை கிரகனங்கள் மிகவும் மிகவும் அரிதானவை. இனிமேல் நாம் இது போன்ற முழு சூரிய கிரகனகளை பார்த்திடாமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது. நமது நிலவானது சூரியனை விட 400 மடங்கு சிறியது ஆனால் சூரியனோ 400 மடங்கு அதிக தொலைவில் உள்ளது எனவே தற்செயலாகவே இந்த முழு கிரகணங்கள் நடந்து விடுகிறது. அந்த முழு கிரகனத்தின் போது நமக்கு சூரியன் ஒரு பிரகாசமான பகுதி மட்டும் தெரியும் , சூரியனின் எந்த பகுதியும் தெரியாது கீழுள்ள படத்தினை பார்க்கவும்

அன்னுலார் சூரிய கிரகணம்

இந்த சூரியகிரகனம் முழு சூரியகிரகனத்தினை போன்றதே ஆனால் இந்த வகை கிரகனமானது . சந்திரனின், தொலைவு சற்றி அதிகமாக இருப்பதால் , அதனால் முழுமையாக சூரியனை மறைக்க முடியாது. அதனால் பார்க்கும் போது நமக்கு சூரியனின் வெளிபகுதி வட்டம் போன்று காணப்படும். இதனை “அன்னுலார் சூரிய கிரகனம் ” என்பர்

Partial Solar eclipse

இந்த நிகழ்வின் போது நிலவு சூரியனை கடந்து செல்லும் அவ்வளவுதான். அதனால் சரியாக சூரியனை மறைக்க முடியாது. அதனால் சூரியனின் பல பகுதிகள் நமக்கு தெளிவாக தெரியும். பார்ப்பதற்கு நிலவினை போல் சூரியன் தெரியும்,

இந்த சூரிய கிரகனங்களை நம்மாள் மிகச்சரியாக கணிக்க முடியாது ஆனால் ஒரு சில காலங்களை கூற முடியும் உதாரனமாக இந்த் ஆண்டில் இந்த மாதத்தில் வரலாம். என்று. மாறாக இந்த நாள் இந்த தேதி என்று கூறிவிட முடியாது. அது போன்று யூகிக்கப்பட்ட சில கிரகன நிகழ்வுகளை தான் நீங்கள் கீழுல்ல படத்தில் பார்க்கிறீர்கள்

2022 வரை யுள்ள சூரிய கிரகன குறிப்புகள்

Video

May 16, 2019

LRO Finds the Resting Place of Beresheet | இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடத்தை படம் எடுத்த நாசாவின் விண்கலம்

இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது தான் இஸ்ரேல் நாட்டின் முதல் நிலவு விண்கலமான பெரிஷீட். ஆனால் இது நிலவில் தரையிரங்கும் நேரத்தில் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக. நிலவின் மேல் பகுதியில் மோதி அழிந்து போனது.

ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்றில்,



கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது (ஏப்ரல் 22 , 2019 )நாசாவின் லுனார் ரிகனைசர் ஆர்பிட்டர் என்ற விண்கலம் மூலமாக அந்த இஸ்ரேலிய விண்கலம் விழுந்த இடத்தினை இது புகைப்படம் எடுத்ததாக ஒரு GIF புகைப்படத்தினை வெளியிட்டு இருந்தனர்.

இந்த புகைப்படத்தினை ஏற்கனவே இதே லூனார் ரிகனைசர் ஆர்பிட்டர் 2016 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்துடம் ஒப்பிட்டு பார்க்கையில் .

இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடமானது ஒரு பள்ளத்தாக்கு போன்று காட்சியளிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். ஆனால் ஏற்கனவே எடுத்த அதாவது 2016 புகைப்படத்தில் அது போன்று ஒரு பள்ளம் (crater) இருக்காது.

உண்மையில் இந்த லூனார் ரிகனைசர் ஆரிபிட்டரானது நிலவின் மேற்பகுதியில் இருந்து 56 மைல் தொலைவில் இருந்துதான் இந்த புகைப்படத்தினை எடுத்துள்ளது. ஆகையால் இது ஒரு பெரிய பள்ளத்தாக்கு போன்று உள்ளதா அல்லது சாதாரன ஒரு சிறிய பள்ளமா என நாசாவால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

நீங்கள் இதனை ஒரு GIF Image ஆக பார்த்தால் புரியும்



Beresheet Resting place find By LRO NASA,

Ref: NASA,

May 06, 2019

YUVIKA | Young Scientist Programe Selected Candidates in Tamil Nadu | ISRO Latest News

எல்லாருக்கும் வனக்கம். இன்னைக்கு பாக்க போறது. நம்ம தமிழ் நாட்டுலேந்து தேர்ந்தெடுத்த மூன்று இளம் விஞ்சானிகள் யார் என்று தான்.

See All Students from All STATS or Union Territory Click —>> Below

State Name of the StudentParent or GuardianName of the School

Tamil Nadu

J K Aditya K C

J B Kumar

Sankara Linga Nadar HSS, Chennai

Tamil Nadu

R Nithiya Raj

Rajendiran

Govt High School, Nachampatty
Tamil Nadu B Shameera
Bakrudeen Ali
Ahmed

Bharath Montessori Matric. Hr Sec.School, Ilanji

YUVIKA


ISRO Young Scientist YUVIKA Selected Candidate from Tamil Nadu

ISRO Update —>>Link