இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது தான் இஸ்ரேல் நாட்டின் முதல் நிலவு விண்கலமான பெரிஷீட். ஆனால் இது நிலவில் தரையிரங்கும் நேரத்தில் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக. நிலவின் மேல் பகுதியில் மோதி அழிந்து போனது.
ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்றில்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது (ஏப்ரல் 22 , 2019 )நாசாவின் லுனார் ரிகனைசர் ஆர்பிட்டர் என்ற விண்கலம் மூலமாக அந்த இஸ்ரேலிய விண்கலம் விழுந்த இடத்தினை இது புகைப்படம் எடுத்ததாக ஒரு GIF புகைப்படத்தினை வெளியிட்டு இருந்தனர்.
இந்த புகைப்படத்தினை ஏற்கனவே இதே லூனார் ரிகனைசர் ஆர்பிட்டர் 2016 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்துடம் ஒப்பிட்டு பார்க்கையில் .
இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடமானது ஒரு பள்ளத்தாக்கு போன்று காட்சியளிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். ஆனால் ஏற்கனவே எடுத்த அதாவது 2016 புகைப்படத்தில் அது போன்று ஒரு பள்ளம் (crater) இருக்காது.
உண்மையில் இந்த லூனார் ரிகனைசர் ஆரிபிட்டரானது நிலவின் மேற்பகுதியில் இருந்து 56 மைல் தொலைவில் இருந்துதான் இந்த புகைப்படத்தினை எடுத்துள்ளது. ஆகையால் இது ஒரு பெரிய பள்ளத்தாக்கு போன்று உள்ளதா அல்லது சாதாரன ஒரு சிறிய பள்ளமா என நாசாவால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
நீங்கள் இதனை ஒரு GIF Image ஆக பார்த்தால் புரியும்
Ref: NASA,
No comments:
Post a Comment