சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி பணிக்காக எப்பொழுதும் நாசா ஒரு மூன்று பேர் கொண்ட குழுவை சர்வதேச விண்வெளி மையத்தில் அமர்த்தும்.
அந்த வகையில் , இந்த முறை முதல்முறையாக அரபு எமிரேட் ஐ சார்ந்த முதல் விண்வெளி வீரர் என்று கருதப்படும் ஹேஸ்ஸா அல் மன்சூரி Hazza Al Manzoori முதல் முறையாக சென்றுள்ளார்.
அரபு எமிரேட்டில் முதல் விண்வெளி வீரர் என்பதால் நாடே அவரைப் பாராட்டி வருகிறது. 8 நாட்கள் வரை இவர் சர்வதேச விண்வெளி மையத்தின் பணியாற்றுவார் என்று தகவல் தெரிவித்து இருந்தனர்.
இவர் தன்னோடு சேர்த்து விண்வெளிக்கு அரபு எமிரேட்டின் கொடியையும் எடுத்துச் சென்றுள்ளார் அந்தக் கொடி முழுக்க முழுக்க பட்டுத்துணியால் ஆக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனுடன் சேர்த்து புனித குர்ஆனையும், தனது குடும்ப புகைப்படம் ஒன்றையும், அத்துடன் இறுதியாக மூன்று மரங்களின் விதைகளையும் எடுத்து சென்றுள்ளார்.
இந்த விதைகளை சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் தாவரங்கள் வளர்க்கும் பகுதியில் ஒப்படைக்கப்படும்.
நேற்று இரவு 7 மணி அளவில் இந்த சோயுஸ் விண்கலம் புறப்பட்டு சென்றது. அதாவது 25 ஆம் தேதி புதன் காலை 9.57 மணி ( EDT). நமக்கு இரவு 7 மணியளவில்.
No comments:
Post a Comment