Lunar reconnaissance Orbiter aka LRO என்று அழைக்கப்படக்கூடிய நாசாவின் விண்கலம் நிலவின் மேற்பகுதியில் சுற்றிவந்து கொண்டு இருக்கிறது. இந்த விண்கலம் வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி விக்ரம் தரையிரங்கிய பகுதிக்கு மேலாக பறந்து செல்லும் என்றும், அப்போது விக்ரம் தரையிரங்கிய இடத்தினை புகைப்படம் எடுத்து அனுப்பும் படி திட்டமிடப்பட்டுள்ளது
இந்த விண்கலம் ஏற்கனவே அப்போல்லோ விண்கலம் தரையிரங்கிய இடம், அதாவது மனிதர்கள் நிலவில் கால்பதித்த இடம் மற்றும் மற்றும் பல்வேறு நிலவில் உள்ள இடங்களை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியிருகிறது.
அதில் ஒன்று தான். சைனாவின் “சாங்கி3, மற்றும் 4 ” ரோவர்கள் தரையிரங்கிய இடம் மற்றும்
இஸ்ரேலின் பெரிஷீட் என்ற லேண்டர் நிலவில் விழுந்து நொருங்கியது . அந்த இடத்தையும் இந்த LRO விண்கலம் சிறப்பாக படம் பிடித்து அனுப்பியிருந்தது உலக மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விண்கலம்!!!
அந்த வகையில் சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து இறங்கிய விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை இந்த விண்கலம் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி கடந்து செல்லும். அப்போது விக்ரம் இருக்கும் இடத்தினை புகைப்படம் எடுக்க கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரியும் நமது சந்திரயான் 2 விண்கலத்தில் 0.32 மீட்டர் தெளிவு கொண்ட ஒரு கேமரா உள்ளது இது அந்த LRO விண்கலத்தினை காட்டிலும் மிகவும் சிறப்பான , தரமான கேமிரா என்று.
Ref First Post
No comments:
Post a Comment