செவ்வாய் கிரகத்துக்கு நாசாவால் 2020 இல் அனுப்பப்பட்ட இருக்கும் ரோவர் தான் இந்த மார்ஸ் 2020 ரோவர்.
அடுத்த வருடம் இந்த ரோவரை விண்ணில் ஏவ இருக்கிறார்கள் அதனால் இந்த ரோவர் 20/20 என்ற அளவில் எல்லா சோதனைகளிலும் வெற்றி பெறுகிறதா என சோதித்து வருகிறார்கள்.
இதன் முக்கிய சோதனையாக ரோவர் ரின் மொத்த எடையும் சமமான அளவில் பகிரப்படுகிறதா என கண்டறியும் centre of gravity சோதனை செய்யப்பட்டது.
இதில் நிமிடத்திற்கு ஒரு சுற்றுகள் என்ற வேகத்தில் சுழலக்கூடிய மேடையில் ரோவெரினை வைத்து முடிவுகள் கணக்கிடப்பட்டன.
இறுதியில் நாசாவின் JPL விஞ்ஞானிகள் ஒன்பது விதமான தனித்தனி எடை கொண்ட பொருட்களை அதில் சேர்த்தனர். ஆக மொத்தத்தில் ரோவர் ஆனது 22 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.
இதில் தனியாக சேர்க்கப்பட்ட அந்த ஒன்பது எடைகள் டங்க்ஸ்டன் இழை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த டங்க்ஸ்டன் இலைகள் மிகவும் உறுதியானது மற்றும் துரு பிடிக்காத உலோகம் என்பதை நாம் அறிந்ததுதான்.
மீண்டும் இந்த சுழலும் மேடை சோதனையானது அடுத்த வருடம் விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கு முன்பாக செய்து பார்க்கப்படும். இந்த விண்கலமானது அடுத்த வருடம் ஜூலை மாதம் விண்ணில் ஏவ திட்டமிட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
மேலும் இதுபோன்ற தகவல்களை தமிழில் அறிந்துகொள்ள தொடர்ந்து இணைந்து இருங்கள் விண்வெளி செய்திகள் தமிழ் உடன்.
Ref NASA
No comments:
Post a Comment