November 30, 2019

Dogon Tribe and Sirius Star Mystery | பழங்குடியினரின் வியக்க வைக்கும் விண்வெளி அறிவு - தந்திசெய்தி

மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் வாழும் டோகோன் பழங்குடியினர், சிரியஸ் பி நட்சத்திரத்தின மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.

அந்த நட்சத்திரம் தொடர்பான புரான கதைகளும் அந்த பழங்குடி மக்கள் மத்தியில் வழங்கி வருகிறது.

வானில் மிகவும் பிரகாசமான நட்சத்திரமான சிரியஸ் -ன் துணை நட்சத்திரம் தான் “சிரியஸ் பி”

ஆனால் இந்த சிரியஸ் பி நட்சத்திரமானது ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரம். அதுமட்டுமிலாது மிகவும் மங்களான நட்சத்திரம் இதனால் இது சாதாரனமாக மனித கண்களுக்கு தெரியாது.

அப்படி இருக்கையில் இந்த டொகோன் பழங்குடி மக்கள் எப்படி பல நூற்றாண்டுகளாக சிரியஸ் – பி நட்சத்திரத்தினை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.?? என்பது புதிராக இருக்கிறது.

தனது அச்சில் சுழன்று, சிரியஸ் நட்சத்திரத்தினையும் 50 வருடங்களுக்கு ஒரு முறை சுற்றிவரும் சிறிய நட்சத்திரம் தான் இந்த சிரியஸ்-பி

இந்த செய்திகளையும், அதாவது எவ்வளவு வருடங்களுக்கு ஒரு முறை “சிரியஸ் -பி” நட்சத்திரம் , சிரியஸ் நட்சத்திரத்தினை சுற்றிவருகிறது என்பதும் இந்த பழங்குடிமக்கள் அறிந்து வைத்து இருக்கின்றன.

உண்மையில் சொல்லப்போனால் 1862 ஆம் ஆண்டில் தான் நவீன வானியல் விஞ்சானிகளால் இந்த சிரியஸ் – பி நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

Sirius A & B Location

உண்மையில் ஆச்சரியமான் விஷயம் என்னவென்றால் “கண்களுக்கு கூட தெரியாத ஒரு நட்சத்திரத்தினை (சிரியஸ் -பி)பற்றியும் அதன் இயக்கங்கள் பற்றியும் எப்படி இந்த மக்கள் அறிந்திருந்தனர் என்பது தான்?”

இப்போது இது புதிர் தான்.? யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்

குறிப்பு: இந்த தகவல்களை நான் இன்றைய தினத்தந்தியின் இளைஞ்சர் மலரில் படித்தேன் (30-11-2019)

Ref : Wiki

November 27, 2019

Our Hands Are Full: ISRO Chief Speech after PSLV C47 Lunch at SDSC27th November

Rocket Launch at 27th Nov 2019

இன்று காலை இந்தியாவின் 9 ஆவது கார்டோ சாட் 3 எனப்படும் படமெடுக்கும் செயற்கைகோளை விண்ணில் ஏவிய பின் பேசிய இஸ்ரோவின் தலைவர் கே. சிவன் அவர்கள்
இன்னும் மார்ச் மாதத்திற்கும் அதாவடு 2020 மார்ச் க்கும் 13 திட்டங்கள் தொடர்ச்சியாக இருப்பதாகவும். இஸ்ரோ இன்னும் பிசியாகதான் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

K Siven Speech about Upcoming Missions of ISRO

இதனை குறிப்பிட்டு சொல்லும் போது OUR hands are full. என்று கூறி ஆரம்பித்தார். நீங்களே அதனை கேளுங்கள்.



27th November 2019 Rocket Launch @ SDSC | CartoSat 3 and 13 Nano Sat

pslv c47 xl varient launch on 2019 november cartosat


Rocket Launch 27th NOV 2019

இன்று 27.11.2019 காலை 9.28 மணியளவில் வின்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது PSLV C-47 ராக்கெட்.

CartoSat3

இந்தியாவின் இயல்நிலை படப்பிடிப்பு செயற்கைகோளினை (CartoSat-3 ஐ) வின்ணில் ஏவும் நிகழ்வும் மற்றும் அதனுடன் சேர்த்து 13 அமெரிக்காவின் சிறிய ரக செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவும் திட்டம் இன்று செயல்படுத்தப்படும்.



PSLV C47 XL Varient Parts

இந்த கார்டோ சாட் 3 ஆனது பூமியில் இருந்து சுமார் 509 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோளானது இதன் வரிசையில் உள்ள 9 ஆவது செயற்கைகோளாகும். அதாவது இதுவரை 8 கார்டோ சாட் செயற்கைகோள்கள் ஏற்கனவே நாம் விண்ணில் ஏவி உள்ளோம் இது தான் 9 ஆவது .

ராக்கெட்

முக்கிய செயற்கைகோளையும் 13 சிறிய ரக செயற்கைகோளையும் சுமந்து செல்லும் பி எஸ் எல் வின் – சி 47 ரக ராக்கெட்டின் இது எக்ஸ் எல் வகைப்பாடு ஆகும்

This is the PSLV-C47 XL Variant. இதில் அதிக பட்சமாக 6 எஞ்சின் கள் பொருத்தப்பட்டு இருக்கும். 6 Strap on Engines can be used

செயற்கைகோளை நிலைநிறுத்துதல்:

9.28 க்கு ஆரம்பித்தது முதல் 17 நிமிடங்கள் 47 வினாடிகள் கழித்து நமது கார்டோசாட் 3 செயற்கைகோள் முதலில் விண்ணில் ஏவப்படும் ,

அதனை தொடர்ந்து, மற்ற சிறிய செயற்கைகோள்கள் சுமார் முறையே 18 நிமிடங்கள் 22 வினாடிகளுக்கு ஆரம்பித்து 8 நிமிடங்கள் தொடர்ந்து நடக்கும் இறுதியாக 27 நிமிடங்கள் கழித்து கடைசி (சிறிய ) ரக செயற்க்கைகோளும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

Facts on Carto Sat 3 Launch

  • 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ நிகழ்த்தும் 5 ஆவது ராக்கெட் ஏவுதல் இதுதான்
  • சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 74 ஆவது பணி
  • இது PSLV யின் 49 ஆவது தடவை
  • இது PSLV XL இன் 21 ஆவது தடவை
  • கார்டோ சாட் 3 இன் 9 வரிசை

What is Carto Sat 3 About?



Cartosat-3 is a third generation agile advanced earth observation satellite having high resolution imaging capability.

What is the Uses of cartosat?

Cartosat-3 shall address the increasing user’s demands for large scale urban planning, rural resource and infrastructure development, coastal land and land cover etc,

What are Nano Sat Launch Together with carto Sat on 27th Nov 2019?



FLOCK-4P – Earth Observation – 12 Nos
MESHBED – Communication Testbed – 1 Nos

November 24, 2019

நாசா நிலவுக்கு திரும்பவும் போறாங்கப்பா!!!!!! ஆனா திரும்பி வர மாட்டாங்களாம்,,,,,ஆர்டிமிஸ்

நீங்கள் விண்வெளி பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விருப்பப்படுவீர்கள் என்றால் நாசாவின் ஆர்டிமிஸ் திட்டம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். அப்படின்னா என்ன???

இதற்கு முன்

60 வருடங்களுக்கு முன் இது போல் ஒரு முறை நிலவுக்கு போனாங்களாம் ஆனால் இப்போ அதைவிட அதிக தொழில் நுட்பத்தில் அமெரிகா முன்னேரியுள்ளது ஆனால் திரும்பவும் ஏன் போகவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பினர் அதுக்காக . இப்போ அதாவது 2024 ல் “ஆர்டிமிஸ்” என்ற திட்டம் போட்டு

நாங்கள் நிலவுக்கு போறோம் , ஆனால் இந்த முறை அங்கிருந்து வர மாட்டோம் என்று கூறி ஆரம்பித்துள்ளனர்.

ஆர்டிமிஸ்

மேலே சொன்னதும் ஒரு காரனம் தான் ஆனால் அவர்கள் அப்படி சொல்லவில்லை “நிலவில் காலடி எடுத்து வைக்கும் அமெரிக்காவின் முதல் பெண் மணி மற்றும் இரண்டாவது ஆண். மேலும் நிலவில் ஒரு வருடகாலம் தங்கி அந்த சூழ்நிலைக்கு பழகிய பின் அவர்கள் அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட்டு செல்லுவார்கள் ” இந்த மிஷன் பெயர்தான் ஆர்டிமிஸ்

எனக்கு அதை பற்றி எந்த கருத்தும் இல்லை “அங்கு போய் நிம்மதியாக யாரையும் பிரச்சனைகு உட்படுத்தாமல் இருந்தால் சரி”




Lunar OutPost நிலவு விண்வெளி மையம்

இந்த ஆர்டிமிஸ் திட்டத்தினை நடத்தி முடிக்க அவர்கள் போட்ட திட்டம் தான். ஒரு லூனார் அவுட் போஸ்ட் செய்வது. அதாவது நமது பூமிக்கு எப்படி ஒரு பிரத்தேக மாக விண்வெளி ஆய்வு மையம் செயல் பட்டு வருகிறதோ அதே போல் ஒரு ஆராய்ச்சி மையம் , நிலவினை சுற்றி வரவேண்டும் என்பது தான் .

ஆனால் அவுட் போஸ்ட் என்றால் சற்று பெரியதாக இருக்க வேண்டும். அதாவது பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். உன்மையில் சொல்லப்போனால் அந்த கிரகத்திற்கு நேரடியாக யாரும் செல்ல மாட்டார்கள்.

செல்ல வேண்டும் என்றால், இந்த Outpost ல் இருந்து தயாரிப்புகள் செய்தபிறகுதான் அவர்கள் கிரகத்தில் இறங்க வேண்டும்.

கிரகத்தில் ஏதாவது ஒரு பொருள் கொடுக்க வேண்டும் என்றாலும் அதனை அவர்கள் Out post இல் இருந்து தான் செய்து கொண்டு செல்லவேண்டும்.


உங்களுக்கு புரிய வில்லை என்று நினைக்கிறேன்.

பொதுவாக இதனை ஆபத்து கால உறைவிடம் என்று வைத்து கொள்ளுங்கள்.
Out post nasa jaxa roscosmos esa

பல நாடுகள்

இந்த அளவு பெரிய, அது மட்டும் இன்றி எல்லா வசதியும் கொண்ட ஒரு விண்வெளி மையத்தினை கட்டுவது ஒரு நாட்டால் முடியாது என்று நாசாவுக்கு தெரியும்.

அதனால் தான் இதில் பல நாடுகள் பங்கு சேர்த்து இருக்கிறது.
நாசா – அமெரிக்கா
ESA – ஐரோப்பா விண்வெளி மையம்
JAXA – ஜப்பானிய நிறுவனம்
ROSCOSMOS – ரஷ்யா விண்வெளி மையம்
CSA-ASC – கனடா விண்வெளி நிறுவனம்

என்று 5 நாடுகளை சார்ந்த பல விண்வெளி நிறுவனங்கள் இதில் பங்கு பெருகின்றன.

CLPS – Commercial Lunar Payload system

இந்த லூனார் அவுட்போஸ்ட் வைக்க வேண்டும் என்றால் இப்போது பல அத்தியாவசிய ஆராச்சிகளை நிலவில் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்காக நாசா ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் 9 வின்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை கூட்டு சேர்த்து இருந்தது.

அதில் அடுத்த கட்டமாக 2019 இல் ஒரு 5 நாட்களுக்கு முன், திரும்பவும் 5 அமெரிகா வின்வெளி அமைப்புகளை தேர்ந்தெடுத்து உள்ளது அவையாவன.
Blue Origin—- Blur Lander Project
Ceres Robotic——??
Space X———- Star Ship Project
Sierra Nevada Corp—-??
Tyvak nano sat System—??

Video



மேலும் தகவல்கள் தெரிஞ்சிச்சினா சொல்றேன். நீங்களும் இந்த இனையதளத்தில் ஒரு கண்ணு வச்சிகோங்க.

November 20, 2019

Want to see ISS in night sky. Today is opportunity

Sightings for

Chennai, Tamil Nadu, India via the #NASA_APP
https://spotthestation.nasa.gov/sightings/view.cfm?country=India&region=None&city=Chennai


LIVE TRACKING


W3Schools Home Page https://www.w3schools.com Free web building tutorials RSS Tutorial https://www.w3schools.com/xml/xml_rss.asp New RSS tutorial on W3Schools XML Tutorial https://www.w3schools.com/xml New XML tutorial on W3Schools

November 04, 2019

சிறிய வகை செயற்கைகோள் செய்ய பயிற்சி கொடுக்கும் இஸ்ரோ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

credits: ISRO

செயற்கைகோள் செய்ய பயிற்சி:

இஸ்ரோ தனது விண்வெளி சார்ந்த அறிவியல் அறிவினை உலகம் முழுவதும் இருக்கும் பல ஆரவமுள்ள அமைப்பிற்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் கொடுத்து வருகிறது. என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு (UNISPACE+50) அமைப்பின் 50 ஆவது ஆண்டு விழாவின் போது இஸ்ரோ ஒரு அறிவிப்பினை செய்து இருந்தது. அது என்னவென்றால், சிறியவகை செயற்கைகோள் செய்ய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்பதுதான். இது மூன்று கட்டமாக நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.

இதன் பெயர் (UNNATI) அதாவது ( UNispace Nanosatellite Assembly &Training by ISRO )

முதல் பேட்ஜ்

அதற்கு ஏற்றார்போல். இந்த ஆண்டு அதாவது ஜனவரி 2019 15 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 15 2019 வரைக்கும் முதல் பேட்ஜ் நடந்து முடிந்து விட்டது. இதில் 17 வித்தியாசமான நாடுகளை சார்ந்த 26 நபர்கள் கலந்து கொண்டு, சிறிய வகை செயறகைகோள் எப்படி செய்வது அதனை எப்படி பராமரிப்பது போன்ற பல அறிய தகவல்களை கற்றுக்கொண்டார்கள்.

credit: ISRO website

இரண்டாம் பேட்ஜ்

இதன் அடுத்த கட்டமாக 2 ஆவது பேட்ஜ் போன மாதம் அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டுல்லது. இந்த இரண்டாவது பயிற்சி திட்டமானது டிசம்பர் 15 வரை நடக்கும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 -தொகுதிகள்

நடக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் இரண்டு தொகுதிகளாக நடக்க இருக்கிறது.

  1. தியரி (theoretical coursework )
  2. செய்முறை (Hands on workshop)

தியரி:

இந்த முறையில் பங்கேற்பாளர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள், சிறிய வகை செயற்கைகோளின் அடிப்படை, மற்றும் செயற்கைகோளினை வடிவமைப்பது அதாவது டிசைன் செய்வது,ஒரு செயற்கைக்கோளின் பல்வேறு துணை அமைப்புகள், மற்றும் செயல்பாடு, உள்ளமைவு பரிணாமம் மற்றும் கடைசியாக செயற்கைகோளினை லாஞ்ச் செய்வதற்கு முன் என்னென்னவற்றை கவனிக்க வேண்டும். போன்றவை செல்லிக்கொடுக்கப்படும்.

செய்முறை:

செய்முறை பகுதியில் பங்கேற்பாளர்கள், இந்தியாவின் USRC இல் அதாவடு U S Rao Satellite Center இல் இருக்கும் சிறிய செயற்கைகோள் ஆய்வுமையத்தில், செய்முறை பயிற்சி எடுத்துகொள்வர்.

credit: ISRO, Livemint, Mars Mission Scientists

நாடுகள்:

இந்த முறை 16 நாடுகளை சார்ந்த 30 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற உள்ளனர். அவையாவன:பஹ்ரைன், பங்களாதேஷ், பெலாரஸ், பொலிவியா, புருனே தாருஸ்ஸலாம், கொலம்பியா, கென்யா, மொரீஷியஸ், நேபாளம், நைஜீரியா, பெரு, கொரியா குடியரசு, இலங்கை, தாய்லாந்து, துனிசியா மற்றும் வியட்நாம்

ஆதாரம்

https://www.isro.gov.in/update/15-oct-2019/unnati-batch-2-inaugurated