August 07, 2020

New Education Policy 2020 [APJ Abdul Kalam Vision Now Comes true]

 இளைய சமுதாய மக்களே! 

உங்கள் அனைவருக்கும் பறிட்சயமான ஒன்றை சொல்ல போகிறேன். 

அது என்னவென்றால் . "APJ அப்துல் கலாம் ஐயா அவர்களின் 2020 இல் இந்தியா வல்லரசாக மாறும் என்ற ஒரு சொல்". அல்லது. அதை பற்றி நீங்கள் கேள்விபட்டாவது இருப்பீர்கள்.

2020 இல்அது மாதிரி எந்த வித மாற்றங்களும் வரவில்லையே என்று நாம் நினைத்திறுப்போம். 

கொரோனா நோய் வந்தது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. , பலர் கஷ்டங்களின் மூழ்கியுள்ளனர். 

இருந்த போதிலும்.

இந்தியாவின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் இஸ்ரோவின் "தனியார் விண்வெளி சார்ந்த நிறுவனங்களை இஸ்ரோவின் இனைக்கும் " "IN-SPACE என்ற மிகப்பெரிய ஒரு முடிவினை எடுத்து இருக்கிறார்கள். 

இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் அதிக அளவு வளர்ச்சிபெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை, 

இதனை நான் முக்கிய நிகழ்வாகதான் பார்க்கிறேன். இந்தியாவின் வரலாற்றிலேயே.


ஆனால் இதனை விட முகவும் பெரிய நிகழ்ச்சி நடந்து இருக்கிறது 

அதுதான் 2020 இந்தியாவின் கல்விக்கொள்கை

இந்தியா பல ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

இது தான் அப்துல் கலாம் ஐயா அவர்கள் 2020இல் இந்தியா வல்லரசாக மாறும் என்று கூறியுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்,

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

கருத்துக்களை பதிவிடுங்கள்.


July 20, 2020

Hope Spacecraft Successfully Launched to Mars from Japan


Hope Spacecraft

அமீரகத்தின் செவ்வாய்க்கான விண்கலம் "ஹோப்" இன்று காலை 7 மணியளவில் , ஜப்பானின் "தனிகசிமா" (Tanegashima Space Center) விண்வெளி மையத்தில் இருந்து


H-IIA ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் அடுத்த வருடம் பிப்ரவர் மாதம் , அதாவது 2021 பிப்ரவரியில் , செவ்வாயில் தரையிரங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இது இந்த மாதம் 14 ஆம் தேதி விண்னில் ஏவ திட்டமிட்டு இருந்தனர். இருப்பினும் ஜப்பானில் நிலவிய பருவ நிலை காரனமாக 6 நாட்கள் தாமதப்படுத்தி , (20.7.2020)  இன்று . விண்ணில் ஏவியிருக்கிறார்கள்

Video:




Ref : Verge


July 07, 2020

Phobos Moon of Mars Photo Taken by Mangalyaan (MOM) ISRO Latest Update

போபோஸ் என்பது செவ்வாயின் இரண்டு நிலவுகளின் மிகவும் பெரிய நிலவு அதுமட்டும் இல்லாமல் இது செவ்வாய்க்கு மிக அருகில் உள்ளது
இதை எடுக்கும் போது மங்கள்யான் சரியாக 4200 கிமீ தொலைவில் இருந்துள்ளது. அப்படியோ செவ்வாய்கும் மங்கள்யானுக்கும் சுமார் 7200 கிமீ தொலைவு இருந்திருக்கும்.

சுமார் 6 துண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த படம் பின்பு வரைகலை வல்லுனர்களார் ஒன்று சேர்க்கப்பட்டது. பின் இதற்கு ஒரு சில வண்ணங்களையும் அவர்கள் கொடுத்துள்ளனர்.


வீடியோ:

July 03, 2020

$360 Billion Space Economy What is India's?? | ISRO Chief K. Sivan Speech on June 25th 2020 in Tamil

இஸ்ரோ தலைவரின் பேச்சு:

கடந்த 25ஆம் தேதி ஜூன் மாதம் 2020இல் இஸ்ரோவின் தலைவர். மற்றும் இந்திய விண்வெளி துறையின் தலைவருமான டாக்டர் கே. சிவன் அவர்கள், 

இஸ்ரோவின் யூடியூப் சேனலில் ஒரு நேரடி காணொலி ஒன்றை பேசியிருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருந்த சாராம்சம் என்ன என்று பார்ப்போம்.



சாராம்சம் என்ன?:

அவரின் பேச்சிலிருந்து தெரிந்து கொள்வது என்னவெனில். இந்தியாவின் விண்வெளி துறையான இஸ்ரோவானது,

தனது பனிகளையும் . வேலை செய்யும் பகுதிகளையும் விரிவு படுத்த இருக்கிறது. 

இதற்கான முதன் முயற்சிதான். இந்த மாதிரி தனியார் விண்வெளி நிறுவனங்களை இஸ்ரோவின் இனைக்கும் முயற்சி. 

இதன் மூலம் இஸ்ரோ தனது வேலைகளையும் சிறப்பாக செய்ய முடியும், அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பையும் கொடுக்க முடியும்.

உலகலாவிய விண்வெளி பொருளாதாரம்:

இந்த உலகில் ஒட்டு மொத்த விண்வெளி பொருளாதாரம் எனப்படும் Global Space Economy யானது ஒட்டு மொத்தமாக $360 பில்லியன் டாலர்கள் ஆகும்.


அதில் வெறும் 

  • 2% மட்டும் தான் ஒட்டுமொத்த ராக்கெட் ஏவுவதற்கும் செலவாகிறது
  • 5% மட்டும் தான் செயற்கைகோள் தயாரிக்க செலவாகிறது
  • இஸ்ரோவின் பங்கு வெறும் 3% (Less then <3%) மட்டும்தான்
  • மீதமுள்ள பங்குகளில் 45% த்தினை விண்வெளி தொடர்பான சேவைகள் அமைப்பு கையில் கொண்டுள்ளது. இதில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு, செல்போன் சேவைகள். விமான நேவிகேஷன் சேவைகள் போன்றைகளும் அடங்கும். அது மட்டும் இல்லாமல் இது வெறும் சொற்ப்பம்தான். 
  • மீதம் இருக்கும் 48% பங்குகளை Ground Segments எனும் துறை பெறுகிறது. ஒரு செயற்கைகோளை விண்ணில் சரியாக ஏவும் வரை அல்லது அது செயல் படும் வரை அதனை கண்கானிக்க உதவுவதே இந்த Ground Segments இல் அடங்கும்.  Telemetry and DSN etc...


 👉👉👉What are Ground Segments👈👈👈👈


திட்டம்:

இஸ்ரோ, தற்போது 45% உலக விண்வெளி பொருளாதாரத்தினை உள்ளடக்கிய. துறையான Space Based Services and Applications என்பதை கையில் எடுக்க உள்ளது.

இதற்காக நமக்கு அதிக அளவில் மனித வளம் (Man Power) மற்றும் அறிவு வளம் மற்றும் அனுபவம் தேவைப்படும்.

அந்த குறிப்பிட்ட துறையில் ஆர்வமும். அனுபவமும் கொண்டு ஏற்கனவே இயங்கிவரும். இளம் இந்திய விண்வெளி தனியார் அமைப்புகளை இஸ்ரோவுடன் இனைக்கும் பனிதான் இந்த திட்டம். 

NSIL & In-SPACe

New Space India Limited 

என்பதன் சுருக்கமே NSIL ஆகும். இந்த அமைப்பு ஏற்கனவே 2019 ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டுவிட்டது.

இதன் முக்கிய நோக்கம், வியாபார ரீதியான அனைத்து காரியங்கலையும் இனிமேல் என்.எஸ்.ஐ.எல் தான் பார்த்துக்கொள்ளும். 

இதற்கு முன்புவரை இஸ்ரோ மட்டுமே இவை அனைத்தையும் செய்து கொண்டிருந்தது. அதாவது.

வியாபார ரீதியான செயல்பாடுகள், செயற்கைகோள் உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்ற செயல்பாடுகளை தனியே கவனித்துகொண்டு இருந்தது. 

பிறகு இதில் ஒரு பகுதியை மட்டும் NSIL என்ற அமைப்பை தனியாக பிரித்து அவர்களுக்கு பொறுப்பு கொடுத்துவிட்டார்கள்.

இனிமேல் இஸ்ரோ விஞ்சானிகள் தங்களின் ஆராய்சி பனிகளை திறம்பட கவனம் செலுத்தி செய்ய முடியும்.

In-SPACe

இதே போல் இன்-ஸ்பேஸ் என்ற அமைப்பானது. இப்போது இஸ்ரோ மற்றும் இந்திய அரசாங்கம் எடுத்துள்ள புதிய திட்டமான "தனியார் விண்வெளி நிறுவனங்களை" இஸ்ரோவுடன் இனைக்கும் புதிய முயற்சிக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள ஒரு புதிய அமைப்பு.

இந்த அமைப்பின் மூலம்தான். இதன் தனி கொள்கைகளை வகுக்கப்படும். என்று கூறியுள்ளது. (Safety Policies , Security Policies  and Regulation )

அதே போல். இந்த அமைப்பு DOS இன் கீழ் தனித்து இயங்கும் என்றும் மற்றும் முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த இன்-ஸ்பேஸ் என்ற அமைப்பை உருவாக்க குறைந்தது 3 முதல் 6 மாத காலங்கள் வரை ஆகலாம். 

ஆனாலும் இஸ்ரோ தற்போது Fasttrack செயல்பாடுகளின் ஒரு சில தனியார் விண்வெளி அமைப்புகளை சேர்த்து வருகிறது. 

அதாவது In-SPACe என்ற நிறுவனம் வருவதற்கு முன்னதாகவே.

அது போன்ற ஒரு சில தனியார் இந்திய விண்வெளி நிறுவனங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

பலன்கள்:

இந்த செயல்களின் மூலமாக இந்தியாவானது பல உலகநாடுகளுக்கு. குறைந்த விலையில் அதிக விண்வெளி சம்மந்தபட்ட சேவைகளை கொடுக்க முடியும். அது மட்டும் இல்லாமல். 45% விண்வெளி சார்ந்த சேவைகளை நாம் கையில் எடுப்பதன் மூலமாக . நம்மால் அதிக வருமானம் ஈட்டமுடியும்.

என்னை பொறுத்தவரையில் இந்த முயற்சியானது. இஸ்ரோவும் இந்திய அரசாங்கமும் எடுத்த மிகப்பெரிய முயற்சி என்றுதான் கூறவேண்டும்.

மிகவும் தொலைநோக்கி பார்வையுடன் எடுக்கப்பட்ட முடுவாக நான் பார்க்கிறேன். (More Focused Decision) by Govt and ISRO, 

2020 இல் தான் நம்மால் வல்லரசு நாடாக வரமுடியவில்லை. இந்த திட்டம் சரியாக நடக்கும் பட்சத்தில் 2040 நிச்சயம் நம்மால் வல்லரசு நாடாக வர முடியும்,

அப்படி இல்லையென்றாலும் பொருளாதார ரீதியில் நம்மால் ஒரு நல்ல இடத்தில் இருக்க முடியும் .என்பது என் கருத்து உங்களுடையது என்ன?

பதிவிடுங்கள்.


👇💪💜 
மிக்க நன்றி இந்த இனையதளத்தினை பார்வையிட்டதற்கு.



ISRO Ground Segments Mauritius, PortBair, Brunei,Telemetry | ISRO's Deep Space Network in Tamil


ISRO's Ground Stations


ஒரு ராக்கெட் நாம் ஏவுகிறோம் என்று சொன்னால் அதனை நாம் சரியாக பூமியில் வட்டபாதையில் நிலைநிறுத்தும் வரை கண்கானிக்க வேண்டும்.


அது மட்டும் அல்ல சுற்றுபாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோளில் இருந்து தரவுகளை பதிவிறக்கவும் இந்த நிலையங்கள் பயன்படுத்தப்படும்.


மேலே உள்ள வரைபடம் நாம் எங்கெல்லாம் இது போன்ற நிலையங்களை வைத்து இருக்கிறோம் என காட்டுகிறது. இதில்

  • ST1 & ST2 என்பது கப்பல் மூலம் இயங்கும் தளங்கள்.
  • Goldstone, Madrid & Canberra இவைகள் நாசாவுக்கு சொந்தமான DSN (Deep Space Network) இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிக உணர்திறன் வாய்ந்த அறிவியல் தொலைத்தொடர்பு அமைப்பு
  • மொரிஷியஸ், போர்ட்பிளையர், Brunai மற்றும். Biak (Indonesia) போன்ற இடங்களில் இஸ்ரோ இதுபோன்ற கிரவுண்டு ஸ்டேஷங்கலை நிறுவியுள்ளது.
ISRO Telemetry and Tracking System around the World


ISRO Ground Segment in Mauritius



ISRO Downrange Station at Biak (Indonesia)



அதுமட்டும் இல்லாமல் நாம் வேறு கிரகங்களுக்கு விண்கலண்கலை ஏவும் போது அதிலிருந்து வரும் தகவல்கலை பெற நாசா போன்ற அமைப்பினருக்கு சொந்தமான பெரிய ரேடியோ ஆண்டனாக்கலை பயன்படுத்துகிறோம்.

இதனை இரண்டாக பிரிக்கிறார்கள் 
  1. Launch Phase
  2. Orbital Phase
மேலே பார்த்தது போல நாம் வைத்து இருப்பது அனைத்தும். ராக்கெட் ஏவும்போது கவனிக்க பயன்படும் கவனிப்பு நிலையங்கள்தான். 

ஒரு செயற்கைகோள் வின்னில் ஏவியபிறகு அதிலிருந்து வரும் தகவல்கலை பெற நாம் இன்னும் நாசா போன்ற பெரிய நிறுவங்களையே சார்ந்து இருக்கிறோம்.

Ref : ISROISRO 2

May 29, 2020

ESPRESSO Confirms the Proxima B | Habitable Planet Near Proxima centari in Tamil

பூமிக்கு அருகில் உள்ள பூமிபோன்ற கிரகம்
Proxima B Artistic Concept in Tamil

ஏற்கனவே நாம் Proxima C பற்றியும் அதன் கூடவே Proxima B பற்றியும் பார்த்து இருந்தோம்.

இப்போது நமது சூரியனுக்கு மிகவும் அருகாமையில் உள்ள "பிராக்ஸிமா செண்டாரி" நட்சத்திரத்தினை சுற்றிவரக்கூடிய முதல்  கிரகமாக 2016 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட கிரகம் தான் பிராக்ஸிமா பி.

இந்த கிரகத்தினை ரேடியல் வெலாசிட்டி என்ற முறையை பயன்படுத்தி ஆராய்சியாளர்கள் ஆகஸ்டு 2016 இல் கண்டறிந்தனர்.

இருந்த போதிலும் இந்த கிரகத்தின் பல கச்சிதமாக தகவல்கலை (Precise Data) ஆராய்சியாளர்கள் தற்போதுதான் கண்டறிந்து உள்ளனர்.

ESPRESSO & Harps

(Echelle Spectrograph for Rocky Exoplanet- and Stable Spectroscopic Observations) இதைத்தான் ESPRESSO என்று கூறுகின்றனர், இது நிறமாலை கருவிகளில் பயன்படுத்தப்படகூடிய ஒரு கருவி. இதன் மூலமாக நமக்கு மிகவும் துள்ளியமாக தகவல்களை பெற முடியும்.

Credits : Wiki


ஒளி நிறமாலையில் இந்த கருவியினை கொண்டு ரேடியல் வெலாசிட்டி முறையில் கண்டறியப்படும் கிரகத்தினை தண்மைகளை (உம்) எடை, அளவு போன்றவற்றினை பற்றி மிகவும் துள்ளிய தகவல்கள் அறிந்துகொள்ள முடியும்.

Harps

High Accuracy Radial Velocity Planet Searcher என்பதுதான் இதன் சுருக்கம் இந்த ஹார்ப்ஸ் என்பது.

இது ஒரு பிரத்தியேகமான planet-finding spectrograph (நிரல் வரைவி) இந்த கருவியானது ESO விற்கு சொந்தமான 3.6 மீட்டர் தொலை நோக்கியான LA SILLA Observatory யில் 2002 ஆம் ஆண்டு பொருத்தப்பட்டது. (இந்த லா சில்லா Observatory சிலி என்ற நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.)

Credits : ESO


மாற்றப்பட்ட தகவல்கள்


கிரகத்தின் நிறை - 1.17 பூமியின் எடைக்கு சமம் (ஏற்கனவே இதை நாம் 1.3 என்று கணித்திருந்தோம்.)

கிரகம் சூரியனை சுற்றிவர எடுக்கும் காலம்


இந்த பிராக்ஸிமா பி கிரகமானது தனது சூரியனை சுற்றிவர 11.2 பூமியின் நாட்களை எடுத்துக்கொள்ளும்.

சூரியனிடமிருந்து கிரகமிருக்கும் தொலைவு


நமது பூமி நமது சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ள்தோ அதைவிட 20 மடங்கு அருகில் உள்ளது இந்த கிரகம்.

என்னதான் இந்த கிரகம் அதன் சூரியனுக்கு மிகவும் அருகில் இருந்தாலும் நமது பூமிக்கு நம் சூரியனிடமிருந்து எவ்வளவு ஒளி மற்றும் ஆற்றல் கிடைக்கிறதோ அந்த அளவுதான் பிராக்ஸிமா செண்டாரி நட்சத்திரத்திலிருந்து இந்த கிரகத்திற்கு கிடைக்கிறது என்று தரவுகள் நமக்கு சொல்லுகின்றன.

இருந்த போதிலும் என்னதான் பிராக்சிமா செண்டாரி ஒரு குள்ள நட்சத்திரமாக இருந்தாலும். நம் சூரியனை விட எடை குறைந்ததாக இருந்தாலும்

Artistic Concept of Proxima B

அதன் அருகில் இருக்கும் இந்த பிராக்ஸிமா பி என்ற கிரகத்தில் மேலே அதிகப்படியான X Ray கதிர்களை அள்ளி தெளிக்கிறது.

அதிகப்படியான் X கதிர்கள் நமது பூமியில் , நமது சூரியனிடமிருந்து வரும் அளவினை விட 400 மடங்கு அதிக X கதிர்களை இந்த பிராக்ஸிமா பி கிரகத்திற்கு அதன் நட்சத்திரம் கொடுத்து வருகிறது.

இதனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தில் உயிரினங்கள் வருவாகி இருக்க வாய்ப்பு இருக்குமா கண்டு பிடிப்பதற்காக அந்த கிரகத்திற்கு வளிமண்டலம் இருக்குமா? என்றும் அது எந்த அளவு பலம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் ஆராய்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Ref

May 09, 2020

Analemma of the Moon | நிலவின் சாய்வான சுற்றுப்பாதை!!!

05-07-2020

An analemma is that figure-8 curve you get when you mark the position of the Sun at the same time each day for one year. But the trick to imaging an analemma of the Moon is to wait bit longer. On average the Moon returns to the same position in the sky about 50 minutes and 29 seconds later each day. So photograph the Moon 50 minutes 29 seconds later on successive days. Over one lunation or lunar month it will trace out an analemma-like curve as the Moon's actual position wanders due to its tilted and elliptical orbit. To create this composite image of a lunar analemma, astronomer Gyorgy Soponyai chose a lunar month from March 26 to April 18 with a good stretch of weather and a site close to home near Mogyorod, Hungary. Crescent lunar phases too thin and faint to capture around the New Moon are missing though. Facing southwest, the lights of Budapest are in the distance of the base image taken on March 27.

Image Copyright: Gyorgy Soponyai

April 25, 2020

Covid-19 and ISRO


இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையானது நமது இந்தியாவின் பெருமை என்று கருதப்படக்கூடிய "இஸ்ரோ" விலும் பிரச்சனை செய்து வந்துள்ளது. அதாவது அங்கு இருக்கும் அறிவியல் அறிஞ்சர்களும் இப்போது வீட்டு காவலில் (Work From Home) இல் தான் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக தற்போது அடுத்த மாதம் நடக்க இருந்த Young Scientist நிகழ்ச்சியின் 11 நாள் வகுப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனை யுவிகா என்றும் அழைப்பர்.
அது மட்டும் இல்லாமல் இஸ்ரோவில் பலரும் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்வதால். இஸ்ரோவிலிருந்து இந்த ஆண்டு நடுவில் அதாவது ஏப்ரல் , மே மாதங்களில் ஏவுவதாக அறிவித்த ஆதித்யா சூரியனுக்கான விண்கலமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இந்தியாவில் இருந்து 4 Air force வீரர்கள் ரஷ்யா சென்றுள்ளனர். எதற்காக என்று நான் சொல்லி தெரிய தேவையில்லை அதுதான் இந்தியாவின் முதல் Human Space Program ககன்யான். அந்த வீரர்களின் பயிற்ச்சியும் இப்போது ரஷ்யாவில் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நாட்கள் குறைவாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள் . அதாவது இந்த ஆண்டின் இறுதியில் ககன்யானின் முதல் ஆளில்லா சோதனை ஓட்டம் நடைபெற வேண்டும். ஆனால் நமக்கு நேரம் மிகவும் குறைவாக உள்ளது .
எனினும் அவர்கள் சிறந்த முறையில் வேலை செய்து தற்போது இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயனத்திற்கு தேவையான தொழில் நுட்பங்களை பெறுவதற்காக ஒரு AO வை வெளியிட்டு உள்ளனர்.
AO - Announcement of Oppurtunity
இந்த AO வானது இந்தியாவில் உள்ள அறிவியல் நிலையங்கள், பல்கழை கழகங்கள், மற்றும் தனிநபரிடமிருந்து HSP க்கு உதவும் திட்டங்கள் மற்றும் ஐடியாக்கள் இருந்தால் கொடுங்கள் என்று ஒரு அறிக்கை விடுத்துள்ளனர்.
17 வகையான துறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  1. Radiation Hazards Characterisation and Mitigation Techniques
  2. Space Food and Related Technologies
  3. Inflatable Habitats Technology
  4. Human Robotic Interfaces
  5. Thermal Protection Systems
  6. Environmental Control And Life Support Systems
  7. Green Propulsion
  8. Advanced Materials
  9. Debris Management And Mitigation
  10. Energy Harness And Storage 
  11. In-situ 3D Manufacturing Technologies For Space
  12. Fluid Technology and Management
  13. Space Bioengineering 
  14. Bio-Astronautics
  15. Simulated Gravity Technologies
  16. Human Psychology For Long Term Missions
  17. Space Medicine And Diagnosis
  18. Any Other Relevant Technology Related To Human Space Program
இவைகளில் உங்களுக்கு ஏதேனும் ஒரு ஐடியா இருப்பின் அதனை நீங்கள் இஸ்ரோவுக்கு ஜூலை 15 2020க்கு முன்னதாக Speed Post மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் (softcopy)

Email : dhsp-ao@isro.gov.in
Address : Director, Directorate of Human Space Programme, ISRO Headquarters, Antariksh Bhavan,New BEL Road, Bangalore-560094.



April 23, 2020

Vyomanaut – வியோமனான்ட்

Russian’s = Cosmonauts, American’s = Astronauts, Chinese = Taikonaut’s, Indians = ? The Answer is Vyomanaut

Image Credits : Gareeb Scientist youtube Channel
இது என்னவென்று யோசிக்கிறீர்களா?
உங்கள் அனைவருக்கும் விண்வெளி வீரர்கள் என்றால் ஆங்கிலத்தில் என்ன நினைவுக்கு வரும் Astronaut என்பதுதானே.
ஆம் அனைவருக்கும் அதுதான் நினைவிற்கு வரும் .
ஆனால் விண்வெளிக்கு ஒரு சில குறிப்பிட்ட நாடுகள் தான் தனது வீரர்களை அனுப்பியுள்ளது அதில் அமெரிக்காவை சார்ந்த வீரர்களுக்கு மட்டும்தான் இந்த ஆஸ்ரோனாட் (Astronauts) என்ற வார்த்தை பொருந்தும்.
ரஷ்யாவும் தான் தனது வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது அவர்களின் வீரர்களுக்கு காஸ்மோனாட் (Cosmonauts)என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று சைனாவின் வீரர்கள் விண்வெளிக்கு சென்றால் அவர்களை உலகில் டைகோனாட்” (Taikonaut’s) என்று அழைப்பர்.
அடுத்த அந்த வரிசையில் இருப்பது யார் என்று உங்களுக்கு தெரியும் தானே. வேற யாரு இந்தியர்கள்தான்.
இந்தியாவில் இருந்து வீரர் ஒருவர் விண்வெளிக்கு சென்றான் அவருக்கு என்ன பெயர் தெரியுமா?
அது தான் ” வியோமனான்ட் (Vyomanaut)
சமஸ்கிருதத்தில் வியோம் (Vyom) என்றால் விண்வெளி என்று அர்த்தம்,

April 20, 2020

நான் பார்த்த நட்சத்திரங்கள் | VLOG | Stars Through My Phone

Hi guys I just used a star tracking app to find the star pattern.

And identified pattern of stars that I saw.

April 06, 2020

"Perseverance" Mars 2020 Rover Name Contest Winner

13 வயது நிரம்பிய அலெக்ஸ் மாதர் என்ற சிறுவன் தான் வருகின்ற ஜூலை(ஆகஸ்டு) 2020 இல் செவ்வாய்க்கு அனுப்ப இருக்கும் நாசாவின் புதிய ரோவருக்கு பெயரிட்டான் என்றால் நம்ப முடிகிறதா?

கட்டுரை போட்டி

இந்த 2020 மார்ஸ் ரோவருக்கு பெயரிடுவது தொடர்பாக ஒரு ஆண்டு முன்னரே நாசா ” name the rover ” என்ற ஒரு போட்டியை நடத்தி வந்தது.
அது ஒரு “கட்டுரை போட்டி” . ஆம் பள்ளி மாணாக்கள் “நாசாவின் ரோவர்கள்” என்ற தலைப்புகளில் தங்களின் சிறிய கட்டுரையை வெளியிட வேண்டும். கட்டுரையின் தலைப்பு ரோவரின் பெயர்.
அதற்காக எழுதப்பட்ட கட்டுரை நன்றாக இருப்பின் அந்த கட்டுரையின் தலைப்பை “ரோவரின் ” பெயராக எடுத்துக்கொள்ளப்படும் என்பதுதான்.

புதிய பெயர் : Perseverance

இதுவரை பெயரில்லாமல் இருந்த 2020 மார்ஸ் ரோவர் இப்போது “Perseverance = விடாமுயற்சி” என்ற பெயரினை பெற்றுளது.



அலெக்ஸின் கட்டுரை:

அலெக்ஸ் எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதுதான். என்னவெனில், ஏற்கனவே நாம் (நாசா) செவ்வாய்க்கு அனுப்பிய ரோவர் மற்றும் லேண்டர்களின் பெயர்களை கவனியுங்கள்
Curiosity – ஆர்வம்
Insight – நுண்ணறிவு
Spirit – ஆண்மா
Opportunity – வாய்ப்பு
இவையனைத்தும் மனிதர்களின் தனித்தன்மைகளாக கருதப்படுகிறது. (இதைத்தான் நாம் ரோவர்களுக்கும் பெயராக வைத்து இருக்கிறோம்) அப்படி இருக்கையின் மனிதனின் மற்றோரு முக்கியமான பண்பாக கருதப்படுவதுதான் விடாமுயற்சி என்று கூறக்கூடிய Perseverance.
இந்த அடுத்த பண்பைதான் நாம் அடுத்த ரொவருக்கு வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் அலெக்ஸ் எழுதிய சிறிய கட்டுரையில்.

கட்டுரை பின்வருமாறு

Curiosity
Insight,
Spirit
Opportunity
if you think about it, all of these names of past mars rovers are qualities we possess as humans.
we are always curies and seek oppurtunity we have the spirit and insight to explore moon mars beyand but if rovers are to be the qualities of us as a race, we missed the most important thing: perseverance,
we as humans evolved as creatures who could learn to adapt to any situatin, no matter how harsh.
we are species of explorers and we will meet many setbacks on the way to mars.
how ever we can persevere,
we, not as a nation. But as Humans, will not give up
The human race will always persevere into the future.

-Alexander Mather
NASA Rover Naming Contest Winner

Video

February 19, 2020

ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5

ஏரியான் விண்வெளி (Arianspace) அமைப்பின் 2020 ஆம் ஆண்டிற்கான 3 வது லாஞ்ச் இன்று அதிகாலை 3.40 (19.2.2020 IST or 5.18pm EST or 2218GMT) மணியளவில் ஃப்ரன்ச் கயானாவில் உள்ள கௌரோ(kourou) என்ற இடத்திலிருந்து கிளப்பியது,
இதில் ஜப்பானுக்கு சொந்தமான தொலைதொடர்பு செயற்கைகோளும் தென் கொரியாவுக்கு சொந்தமான கடலியல் ஆராய்ச்சி செயற்கைகோளும் இருந்தது.
ஜப்பான் மற்றும் தென் நாடுகள் எப்போது நியமமாக ஏரியான் விண் குழுமத்துடம் நட்புடன் இருந்து பல செயற்கைகோள் லாஞ்ச் செய்துள்ளது. அந்த வரிசையில் இது மீண்டும் அவர்களின் நட்பை புதுபித்துள்ளது என கூறலாம்
இதனை ஏரியான் விண்குழுமத்தின் நிர்வாக துனைதலைவர்
Luce Fabreguettes கூறுகையைல், ஜப்பானுக்கு சொந்தமான JCSAT-17 மற்றும் கொரியாவின் GEO-Kompsat 2B என்ற செயற்கைகோள்களை வின்ணில் அதற்குறிய வட்டபாதையில் நிலைநிருத்தப்பட்டதை தெரிவிப்பதில் மிகவும் சிலிர்ப்படைகிறேன்” என்றார்.
” i am thrilled to announce that JCSAT-17 and GEO-Kompsat 2B have been injected as planned into their targeted orbit”
Images

JCSAT-17

JCSAT-17 என்ற செயற்கைகோளானது ஜப்பானின் SKYPerfect JSAT Operator ” என்ற அமைப்புக்கு சொந்தமானது. இது ஜப்பானுகு மேலே இருக்கும் படி “ஜியோ ஸ்டேசனரி” பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக அலைவரிசை கொண்ட செல்போன் , இண்டர்னெட் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் மேற்கொள்ளப்படும்..

GEO-Kompsat 2B

இரண்டாம் செயற்கைகோளான GEO-Kompsat 2B ஆனது தென் கொரியாவின் விண்வெளி நிறுவனமான KARI (korea aerospace research institute) க்கு சொந்தமானது.. இது பூமியின் சுற்று சூழல் மற்றும் கடம் கண்கானிப்புக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 2018 இல் இந்த கொரியா செயற்கைகோளின் மற்றொரு வகையை வின்னில் ஏவியது அதாவது GEO-Kompsat 2A நினைவிருக்கலாம்.

40 Year

இது ஏரியான் விண்வெளி குழுமத்தின் 40 ஆம ஆண்டு அதாவது 2020இல் 40வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது இந்த விண்வெளி ராக்கெட் ஏவும் நிறுவனம்.
மேலும் ஏரியான் 5 என்ற பெரிய ராக்கெட்டின் அடுத்த பரினாமமான ஏரியான் 6 ராக்கெட் மற்றும் வீகா C என்ற புதிய ரக ராக்கெட்டுகளின் ஏரியான் குழுமம் இப்போது வேலை செய்துவருகிறது.

source: Space.com

January 16, 2020

Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்



குலசேகரபட்னத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 3 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன.
குலசேகரபட்டினம் அருகில் உள்ள மாதவன் குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 ஊர்கள் தேவைப்படுவதாக கருதப்படுகிறது.
இந்த ஊர்களில் நிலம் கையகப்படுத்துவதற்காக தற்காலிகமாக திருச்செந்தூரில் அலுவலகம் அமைப்பட்டு உள்ளது.
8 பிரிவுகளை கொண்ட வருவாய்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று செயல்பட தொடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிலும், 13 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்ப்டு உள்ளது. ஒவ்வொரு குழுவும் தாசில்தார் தலைவமையில் இயங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் செயல்படுவதை கண்கானிக்க டி.ஆர்.. பனி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவர்களின் முதற்கட்ட பனியினை தூத்துக்குடி கலெக்டர்சந்தீப் நந்தூரி”” அடிக்கடி பார்வையிட்டு வருகிறார்.

நிலம்
ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பனி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் போது அதற்குறிய இழப்பீடு தொகையை அரசின் சட்டப்படி வழங்கபடும். . ஏவுதளம் அமைப்பதற்க்காக சுமார் 2300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 80% இடங்கள் பட்டா உள்ள இடங்களாகவும். மீதம் உள்ள 20 % நிலங்கள் அரசின் புரம்போக்கு நிலங்களாகவும் உள்ளன.


மக்கள் வசிக்குமிடம்

மாதவன் குறிஞ்சி என்ற இடத்தில் 27 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் தருவதோடு இழப்பீடு தொகையும் கொடுக்கப்படும். .
அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரவும் முடிவு செய்துள்ளனர்கள். என்று தூத்துக்குடி கலெக்டர்சந்தீப் நந்தூரிஅறிவித்துள்ளார்.

கையகப்படுத்துதல்

இதற்காக 2300 ஏக்கரில் 1781 ஏக்கர் இடம் மாதவன் குறிஞ்சி கிராம சுற்று வட்டாரத்தை கொண்டுள்ளது.

அங்கு 131 ஏக்கர் அரசின் புறம்போக்கு நிலங்களாக உள்ளது. படுக்கப்பத்து மற்றும் பள்ளக்குற்ச்சியில் 491 ஏக்கர் நிலமும் , திருச்செந்தூர்கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 22 ஏக்கரும் ராக்கெட் ஏவுதளத்திற்காக கையகப்படுத்தப்படும் .

குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள அமரபுரம் , அழகப்பப்புறம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்ப்ட உள்ளது.

இந்த பணியில் கிராக நிர்வாக அலுவலர்களும் இப்போது தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

அவர்கள் அந்த பகுதியில் உள்ள புராதான சின்னங்களையும், கோவில்களையும், மரங்களையும் கணக்கெடுத்து வருகிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் முடிவு பெற்றுவிடும். அதன் பிறகு, ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தொடங்கி 2 வருடங்களைல் அதுவும் முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இங்கு அமைக்கப்டும் ராகெட் ஏவுதளத்தில் SSLV (Small Satellite Launch Vehicle) என்ற சிறிய வகை ராக்கெட் ஏவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தெரிவித்தார்.

January 06, 2020

Upcoming ISRO Missions in 2020 (Video)


  1. Chandrayaan 3 This Year Last or Early Next Year 2021
  2. GAGANYAAN - This Year ISRO have to Finish the First DEMO of 3 Planned Test mission the Last one will be the Crewed Testing.
  3. Aaditya L1 - Mission for SUN by ISRO. This is Supposed to Launch by Summer of This year by this is getting Late by the LOCKDOWN of CORONA virus
  4. XPOSAT - The Upgraded version of the ASTROSAT or Part 2 of Astrosat This Year End Mission
  5. GSAT 20 - The satellite is planned to be launched by GSLV Mk III in June 2020
  6. The launch of GISAT-1 onboard GSLV-F10, planned for March 05, 2020, and this is postponed 
  7. NAVIC - Its chip System in Mobile applications will be ready and its already getting some updates by Snapdragon side

January 02, 2020

திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?


Betelgeuse

இந்த நட்சத்திரத்திற்கு தமிழ் பெயரும் உண்டு, அதன் பெயர் தான் “திருவாதிரை” நட்சத்திரம்.
இந்த நட்சத்திரம், (Orion Constellation) ஒரியான் நட்சத்திர திரள் அருகில் இருக்கும் ஒரு மிக பெரிய சிவப்பு அரக்கன் அன்று அழைக்கப்படும் நட்சத்திரம்.
பூமியில் இருந்து சுமார் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த நட்சத்திரம் சூரியனை விட சுமார் 500 முதல் 700 மடங்கு பெரியதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நம்முடைய இரவு வானில் தெரியும் 10 பிரகாசமான நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Twitter
இந்த நட்சத்திரத்தில் நமது சூரியனுக்குப் பதிலாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டால், இந்த சூரியனின் அளவு தற்போதைய வியாழன் கிரகத்துக்கு அருகில் வரை செல்லும்.


ஆராய்ச்சிகள்

நம்முடைய இரவு வானில் தெரியும் அனைத்து நட்சத்திரங்களையும் நாம் சுமார் 25 ஆண்டுகளாக பலதரப்பட்ட அறிவியல் உபகரணங்களை கொண்டு ஆராய்ச்சி செய்து வந்து கொண்டிருக்கிறோம். அப்படி ஆராய்ந்ததில் நாம் கண்டறிந்த ஒரு விஷயம் என்னவென்றால், இந்த திருவாதிரை நட்சத்திரம் ஆனது ஒரு மாறும் நட்சத்திரம் என்பது தான்.

Variable Star

ஒரு நட்சத்திரம் தனது ஒளிரும் தன்மையை மாற்றிக் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பும் இது போன்ற வேறு வேறு ஒளிரும் தன்மையை ஒரு நட்சத்திகிறம் கொண்டிருப்பின் அந்த நட்சத்திரத்தினை மாறும் நட்சத்திரம் (variable star) என்று அழைப்பர்.
இந்த திருவாதிரை நட்சத்திரமானது. 450 நாட்களுக்கு (土15 )ஒருமுறை தனது ஒளிரும் தன்மையை மாற்றி கொண்டே இருக்கும். என்ற விசயங்களை நாம் தற்போது மிகப்பெரிய அறிவியல் உபகரணங்களை வைத்து கண்டு பிடித்து இருக்கிறோம்.



Betelgeuse

திடீரென மங்கிய நட்சத்திரம்

இந்த திருவாதிரை நட்சத்திரமானது கடந்த மாதம் அதாவது டிசெபர் 8 ஆம் தேதி முதல், ஒளி குறைந்து பிரகாசம் இழந்து காணப்படுவதை. தன்னார்வ அறிவியலாளர்கள் கண்டரிந்தனர்.
Twitter
இந்த செய்தி தற்போது விண்வெளி ஆர்வளர்களிடம் வெகுவாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


சூப்பர் நோவா

ஒரு நட்சத்திரம் தனது வாழ்நாளை முடிக்கும் போது மிக பெரிய அளவில் வெடித்து சிதறும் இதனை சூப்பர் நோவா வெடிப்பு என்பர்.
இந்த மாதிரியான நிகழ்வுகள் பிரபஞ்சத்தில் நிகழலும் ஆற்றல் மிக்க நிகழ்வுகளில் ஒன்றாக கருகப்படுகிறது.




இது போன்று வெடித்து சிதறும் நட்சத்திறம் அதன் பிரம்பாண்டமான ஆற்றலின் காரணமாக சாதாரண புள்ளியாக தெரியும் நட்சத்திரம், மிகவும் பிரகாசமான ஆற்றல் வடிவமாக நமக்கு தெரியும்.
இதனை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமானதாக இருக்கும் இந்த நிகழ்வை 1600 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பழங்கால மக்கள் நேரடியாக பார்த்து இருக்கிறார்கள்.
ஆனால் நாம் வாழும் இந்த காலகட்டத்தில் இது போன்ற நிகழ்வு நடக்கும் போது நாம் அதிலிருந்து பல விண்வெளி புதிர்களை வெளிக்கொணர முடியும்.

உண்மையில் வெடிக்க போகுதா?

அது பற்றி உண்மையில் யாருக்கும் தெரியாது. ஆனால் நம்மை பொறுத்த வரையில் , ஒரு சில சமயங்களில் புயல் வரும் முன் ஒரு நிசப்தத்தினை உணரமுடியும்.
இது போன்ற பல நிகல்விகள் நம் வாழ்நாளில் ஏற்பட்டு இருக்கும்.
அது போலவே இந்த திருவாதிரை (betelgeuae) நட்சத்திரமானது . ஒளி மங்கி இருப்பது அது வெடிக்கும் நிகழ்வுக்கான ஒரு முன் நிகழும் நிகழ்வு என்று அனைத்து வானியல் வல்லுனர்களும் . நம்புகிறார்கள்.

முன் கூட்டியே ஏற்பாடுகள்

இந்த நிகழ்வு மிகவும் அரிதான நிகழ்வு. ஆதலால், பூமியில் உள்ள “நியூட்ரினோ” கண்டறியும் அபிசேர்வேட்டரி கள் இப்போது முழு வேகத்தில் இயக்கப்படுகிறது.
அதாவது, எந்த நட்சத்திடம் சூப்பர் நோவா வாக வெடித்தாலும் அதன் மொத்த ஆற்றலில் 99% த் தினை அது “நுயூட்ரினோ” வாக வெளியேற்றும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
அப்படி அந்த அளவு நியூட்ரினோ வெளிப்படுமாயின் அது ஒளியின் வேகத்தினை விட அதிக வேகத்தில் பயணிக்கும் என்று எதுர்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு நிகழ்வு நடக்குமாயின் நம்மால் இந்த நட்சத்திரம் வெடித்து சிதறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஒரு எச்சரிக்கை கிடைக்கப்படும்.
இதன் மூலம் நம்மாள் அந்த நட்சத்திரத்தில் பிரகாசம் நம்மை அடைவதர்கு சில மணி நேரம் முன்பிருந்தே அதை கண்காணிக்க முடியும்.
இதை பற்றிய தங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி