March 26, 2023

ISRO Launch 26th March 2023 with oneweb UK (LEO Operators)

இஸ்ரோ இன்று (26 மார்ச் 2023)காலை 9 மணியளவில் SLV3 வகை ஏவுகலன் மூலம், UK வின் oneweb நிறுவனத்தின் 36 தொலைதொடர்பு செயற்கைகோள்களை 450 கிலோமீட்டர் உயரத்தில் விண்ணில் செலுத்தியுள்ளது.

இதனை Low earth orbit or (LEO) என்பர்.
மொத்த செயற்கைகோள்களின் மொத்த எடை 5805 கிலோ.
NSIL (new space India limited) மூலம் oneweb நிறுவனமானது 76 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது . அதில் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி ஏற்கனவே 36 oneweb நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை இஸ்ரோ ஏவியுள்ளது . இப்போது நடந்த இந்த  நிகழ்வின் மூலம் அனைத்து 76 செயற்கைகோள்களையும். சிறப்பாக விண்ணில் ஏவி முடித்துள்ளனர்.

March 24, 2023

Prelude to Supernova | சூப்பர் நோவா நிகழ்வுக்கு முன்னாள் எப்படி இருக்கும்

WR 124 என்று அழைக்கப்படும் நட்சத்திரம் சூப்பர் நோவா என்று சொல்லும் வெடித்து சிதறும் நிகழ்வை அடைய இருக்கிறது.(😂 May be அது ஏற்கனவே அடைந்து இருக்கலாம் 😂)
இந்த நிகழ்விற்கு முன்னாள் பலவிதமான தூசுக்களையும் வாயுக்களையும் இது வெளியேற்றுகிறது.
இதன் விளைவாக வாயு மற்றும் தூசியின் ஒளிவட்டம் ஏற்படுகின்றது.
இந்த நிகழ்வினை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி யின் அகச்சிவப்பு அலைவரிசை கருவியின் மூலம் கண்டறிந்துள்ளது.
விளக்கம்:
இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 15000 ஒளியாண்டு கள் தொலைவில் உள்ள sagitta சஜிட்டா என்னும் நட்சத்திர தொகுப்பில் உள்ளது.
இதன் பெயர் Wolf Rayet 124 . இதனை சுருக்கி WR 124 என்கின்றனர்.
இது சுமாராக நமது சூரியனை போன்று 30 மடங்கு அதிக நிறையுடையதாக கருதப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இது வரைக்கும் இது 10 சூரியன்கள் அளவிற்கான வாயுக்களையும், தூசியையும் வெளியேற்றியது.
வெளியேறிய தூசிக்கள் மற்றும் வாயு குளிர்ந்து இருப்பதால். 
வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு அலைவரிசை கருவியில் இது ஒளிர்ந்து காணப்பட்டது.
இது போன்ற நிகழ்வுகள் விண்வெளி அறிவியல்லாளர்களுக்கு அதிகப்படியான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளன.

நன்றி