Enceladus | என்ஸிலேடஸ் துனை கிரகம் | சிறு செய்திகள்

என்ஸிலேடஸ்:

இது சனிகிரகத்தின் 6வது மிக பெரிய துணைக்கோள் ஆகும்..இதன் ஒட்டுமொத்த ஆரமானது 250 கிமீ தொலைவுதான் இருக்கும். அதாவது.. 500 கி.மீ விட்டம் உடைய ஒரு சிறிய துணைக்கிரகம். ஆனால். சனிகிரகத்தின் 53 துனைக்கிரகங்களில். இது ஆறாம் இடத்தினை பிடித்துள்ளது.

பழைய செய்திகள்:

பழைய செய்திகள் என்றால்..காசினி வின்கலமானது என்ஸிலேடஸினை புகைப்படம் எடுப்பதற்கு முன்பு உள்ள நிலைமை… இந்த கிரகத்தினை முதலில் கண்டறிந்து சொன்னது “வில்லியம் ஹெர்ஸீல் ” எனும் ஒரு வின்வெளி அறிஞர் தான். இவர் 1789 ஆம் ஆண்டுகளில் இதனை அறிவித்தார். பிறகு 1980 களில் வாயோஜர் விண்கலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக  அதாவது 1981 & 1981 ஆம் ஆண்டுகளில் என்ஸிலேடஸை கடந்து சென்றன. இருப்பினும் இவற்றால் அதிக திறனுடைய புகைப்படங்களை எடுக்க முடியவில்லை. (High Resolution Images) அந்த சாதாரன புகைப்படங்களின் அடிப்படையில் என்ஸிலேடஸானது.. ஒரு மென்மையான தேற்றம் உடைய, பனிக்கட்டியால் ஆகிய ஒரு கிரகம் என கனிக்கப்பட்டது….

காசினி & ஹுஜன்ஸ்:

காஸினி மற்றும் ஹுஜன்ஸ் இந்த இரண்டும் இருண்டு விதமான செயற்கைகோள்கள்.. அதாவது காசினியானது ஆர்பிட்டர் (Orbiter) ; ஹுஜன்ஸ் ஆனது லாண்டன் (Lander) . உங்களுக்கு புரியும் படி சொல்வதென்றான். காசினி வின் கலம் சனிகிரகத்தினை சுற்றிவரும் படியும் , ஹுஜன்ஸ் ஆனது சனியின் துனைக்கிரகமான “டைட்டனில் ” தரை யிரக்கப்பட்டும் உள்ளது, இந்த காசினி விண்கலமானது. சனி கிரகத்தினை வலம்  வரும் போது என்ஸிலேடஸினை கடக்கும் தருவாய் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். என்ஸிலேடஸினை . ஒரு கடுமையான விண்கல் தாக்குதலுக்கு ஆளான ஒரு கிரகத்தினை போல் காட்டியது. மெலும் ஐஸ் அந்த கிரகத்தில் படர்ந்து இருந்ததும் தெரிய வந்தது, பின் 2009 , 2014, ஆம் ஆண்டுகளில், என்ஸிலேடஸினை கடக்கும் போது. இந்த கிரகத்தின் துருவப்பகுதியில். ஒரு சில புகை மண்டலங்களை அது படம் பிடித்தது…

கீழ் கானும் படத்தில் பார்க்கலாம்

நீராவி:

இதற்கு பின் மேற்கொண்ட ஆராய்சிகளில் இந்த கிரகத்தினை பற்றிய பல அறிய மற்றும். வியக்கத்தகு செய்திகளை நாசா மற்றும் உலக  அறிஞ்சர்கள் வெளியிட்டனர். அது என்ன வெனில். புகைபோல் மேலெலும்பும் பகுதியானது “நீராவி ” என அறிவித்தனர். மேலும் அந்த கிரகத்தில் பனி யானது வெறும் மேல்பகுதியில். ஆடைபோல் படர்ந்துள்ளது என்றும் அதற்கு கீழ் மிகப்பெரிய தண்ணீர் பகுதி உள்ளது என்றும். அதற்கு கீழ். Rocky Core  என்று சொல்லக்கூடிய பாறைப்பகுதி உள்ளது எனவும் கருத்து தெரிவித்தனர்…
விளக்கப்படம் (அமைப்பு)

இது உலகலாவிய விண்வெளி ஆய்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தின ஏற்பகுத்தியுள்ளது. அதாவது பூமியில் உள்ளது போன்ற எறிமலை அமைப்பு அந்த கிரகத்தில் உள்ளது என தெரியவருகிறது. மேலும்
அந்த கிரகத்தின்

  • உலகலாவிய பெருங்கடல் ,
  • தனித்தன்மை வாய்ந்த  வேதியல் அமைப்பு
  • கிரகத்தின் உள்கட்ட வெப்ப அமைப்பு

இவை அனைத்தும்  என்ஸிலேடஸினை ஒரு உயிர்வாழும் கிரகமாக மாற்றலாம் , ஏன் ஏதேனும் ஒரு உயிரினங்கள் அங்கு வாழ்ந்து கொண்டும் இருக்கலாம்..
இந்த கிரகத்தினை பற்றிய மேலும் விவரங்கள் . வரக்கூடிய வருடங்களில் நமக்கு கிடைக்கலாம் என தெரியவருகிறது…

No comments