May 12, 2017

Green Moon Conspiracies | விண்வெளி பற்றிய தவறான கருத்துகள் - 1

பச்சை நிற நிலவு உண்மையா??

கடந்த  2016 ஆம் ஆண்டு . நமது நிலவானது பச்சை  நிறத்திற்கு மாறும் என்றும். இது எதனால் என்றால்? , நமது சூரிய குடும்பத்தில் அதிகமான கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருவதால். இது போன்று ஒரு ஆச்சரியமூட்டும் ஒரு பச்சை நிறத்தினை தரும், என்றும் கூறப்பட்டது.  மேலும் இது 1596 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்படும் நிகழ்வு என்றும் கூறப்பட்டது….

–Advertisement–

உண்மையில் நமது பச்சை நிறத்திற்கு மாறியதே கிடையாது எனபது தான் உண்மை. இது சந்திர கிரகன நேரங்களில் , சிகப்பு நிறமாக வேண்டுமானால். மாறுமே தவிர பச்சை நிறத்திற்கு மாறியது கிடையாது.

மேலும் ஒரு சில சூரிய அஸ்தமன நேரங்களில். சூரிய ஒளியானது நமது வளிமண்டலத்தின் பிரதிபளிப்பால்  சந்திரனை சிவப்பு நிறமாக தெரிய வைக்கும்.

பச்சை நிலவு என ஒரு தவறான கருத்து நிலவியது. மேலும் இது போன்று பல தவரான கருத்துகள் பற்றி வரும் பகுதிகளில் கானலாம்!!!

May 05, 2017

வியாழன் கிரகத்தின் முதல் ஆய்வு முடிவு மற்றும் ஆச்சரியமான தகவல்கள்

போன வாரம் , நடந்த யுரோப்பிய  புவியறிவியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் (Annual  European Geosciences Union)ல் உள்ள உறுப்பினர்களால் முதல் முதலில் “ஜுனோ ” ( Juno spacecraft ) ஆய்வு முடிவுகள் குறித்து பேசப்பட்டன.
அதில் இதுவரை நாம் கற்பனை செய்திடாத அளவுக்கு அதன் உள் கட்டமைபு இருப்பதாக நமக்கு தெரியவருகிறது..
இதனைப்பற்றி கூறிய ஜூனோவின் பனி முதன்மை விசாரனையாளர்
ஸ்காட் போல்டன் இது பற்றி கூறுகையில்

“நம் மாதிரிகள் எதிர்பார்த்ததை விட ஜுபிடர் முழுவதும் உள்ளே வேலை செய்கிறது”

“The whole inside of Jupiter is just working differently than our models expected,” said mission principal investigator Scott Bolton of the Southwest Research Institute in Taxas

அம்மோனியா:

வியாழன் கிரகத்தில் உள்ள மேகங்கள் அம்மோனியாவா ஆனவை என நாம் முன்னவே அறிந்தது தான். ஆனால் இப்போதைய தரவுகளின் அடிப்படையில்.  வியாழன் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிகளில் நாம் எதிர்ப்பார்த்ததை விட அளவுக்கு அதிகமான அம்மோனியா அடர்ந்து கானப்படுவது மிகுந்த ஆச்சரியத்தினை அளிப்பதாக கூறியுள்ளனர்..
அடர்ந்து கானப்படும் அம்மோனியாவனது 300 கி.மீ அளவுக்கு கீழே செல்வதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன
மேலும் ஒரு சில இடங்களில் அம்மோனியா அளவு குறைந்தும் காணப்படுகிறது

காந்த புலம்:

வியாழனின் காந்த புலமானது நாம் எதிர்பார்த்தை விட மிகவும் வலிமைவாய்ந்ததாகவும், மிகவும் ஒழுங்கற்ற தன்மையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது… இதற்கு வியாழன் கிரகத்தில் உலோக  ஹைட்ரஜன் அடுக்கு இருக்கலாம் என கருத்து எழுந்துள்ளது..

இதற்கு கருத்து தெரிவிக்கையில் நாசாவை சார்ந்த ஜாக் கன்னர்னி என்பவர்,  வியாழன் கிரகத்தின் காந்த அளவானது நாம் எதிர்பார்த்தை விட அதிகம் இருக்கலாம் என்றும் அது 8-9 காஸ் (Gauss) காஸ் என்பது காந்த புலத்தினை அளவிட பயன்படும் ஒரு அலகு.
[பூமியின் காந்த புலமானது  (0.25 to 0.65 gauss).காஸ் ஆகும்.  வியாழனில் காந்த புலம் 5 காஸ் (Gauss ) இருக்கலாம் என கருத்து நிலவியது. ஆனால் இப்போது ஜுனோவின் தரவுகளால் அது 8-9 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது…]



[அம்மோனியா பற்றிய ஒரு சில கருத்துகளை தவிர்த்து இருக்கிறேன் அதை பற்றி படிக்க Link]

May 02, 2017

Ingredients for Life? in Europa | யுரோப்பாவில் வாழ்வியல் ஆதாரம்?

யுரோப்பா என்பது ஒரு துனைக்கிரகம்,!! எதனுடையது என்றால். ?? ஒரு மிகப்பெரிய காற்று கோளமான வியாழன் கிரகத்தின் ஒரு துனைக்கிரகம்..
இதற்கு வேறு ஒரு பெயரும் உண்டு, அது என்ன வெனில்.?

கலிலியோ நிலவுகள்.!!!!!  ஜோவியன் நிலவுகள் (Jovian moons, ) & (Galilean satellites )

ஆம், இந்த துனைக்கிரகமானது 1610 ஆம் ஆண்டுகளிலே கலிலியோ கலிலி யால் கண்டு பிடிக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து மூன்று துனைக்கிரகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன..இதனால் தான் “நிலவுகள்”

இங்கு நாம் பார்க்க இருப்பது. இதன் வாழ்வியல் தன்மைகள் பற்றிதான். ஆமாம் இந்த கிரகத்தினை ஆராய்ச்சி செய்ய நாசாவும் ., ESA வும் தனித்தனியே விண்கலன் களை கட்ட ஆரம்பித்துள்ளனர்…அப்படி என்ன அங்கு இருக்கிறது என பார்ப்போம்….!!!

வரலாறு:

இதுவரை இரண்டு விண்கலங்கள் தந்த தரவுகளின் அடிப்படையில் தான் அனைத்தும் அனுமானிக்கப்படுகிறது… முதலில் சென்ற வாயோஜர் விண்கலம் தான் 1970களில் இந்த கிரகத்தினை ஃபலை பை (FlyBy) செய்து, அதாவது அதன் பக்கமாக பறந்து அதன் புகைப்படங்களை எடுத்து.
பின் 1995-2003 வாக்கில் அனுப்பிய கலிலியோ மிஷனானது ( Galileo mission)
இதைப்பற்றிய பல அரிய புகைப்படங்களையும் மற்றும் பல முறை அந்த துனைக்கிரகதின் மேல் பறந்தும் (made numerous flybys of Europa) அதைப்பற்றிய அனைத்து தகவல் களையும் சேகரித்தது..

அதன் வாயிலாகதான் அந்த கிரகத்தின் மேல் அடுக்கானது பனியால் படர்ந்துள்ளது என தெரியவந்தது. மேலும் அந்த பனி மேலடுக்கில் பல தரப்பட்ட சேதங்கள் இருப்பதும் தெரியவந்தது,. பிறகு தான் 2013 ஆண்டு, இந்த கிரகத்தினை ஹுப்புள் விண்வெளி தொலைநோக்கி வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.அதன் பின் தான் , சனிகிரகத்தின் என்ஸிலேடஸ்  துணைக் கிரகத்தில் இருப்பது போன்று புகைத்திரள்களை வெளிவிடும் ஓட்டை போன்ற பகுதி இருப்பது தெரியவந்துள்ளது. இது விண்வெளி ஆராய்சியாளர்களை மிகந்த ஆச்சரியத்தில் உட்படுத்தியுள்ளது…

உலகலாவிய கடல்:

விண்வெளி ஆராய்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது புகைதிரள் ஓட்டைகள் மட்டுமல்ல, அதன் பனியோடுகளுக்கு கீழ் உள்ள உலகலாவிய உப்புதன்னீர் கடல் என கண்டுபிடிக்கப்பட்டதுதான். 
அதன் ஆதாரம்:
1995-2003 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட கலிலியோ மிஷின் மூலமாக ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது அது என்ன வென்றால், நமது பூமியைபோன்றெ ஒரு காந்த ஓட்டப்பகுதியானது வியாழன் கிரத்திலும் உள்ளன.. ஆனால் அந்த காந்த மண்டலமானது யுரோப்பாவின் அருகினில் மட்டும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறது.
இதற்கு காரணம் என்ன வென்று ஆராய்கையில் அது, யுரோப்பாவின்  இருக்கும் ஒரு சிறப்பு வகை காந்த புலம் என தெரியவந்துள்ளது..  அந்த சிறப்பு காந்த புலத்திற்கான   காரணம் என்ன என்று அறிஞ்சர்களின் கருத்துப்படி பார்ப்போமேயானால். அது “சில மின்மயமாக்கும் திரவத்தினால்” ஆக்கப்பட்டிருக்கலாம்……………….
மேலும் அது அந்த யுரோப்பா துனைக்கிரகத்தின் பனிமேலேடுகளுக்கு கீழ் இருக்கலாம் என கருதுகின்றனர்…
மேலும் அதுதான் உப்பு தண்ணீர் என்றும் அது அந்த பனிமேலோடுகளுக்கு கீழ் ஒரு கடலாக இருக்கலாம் என. அறிஞ்சர்கள் கருதுகின்றன.

எனர்ஜி(ஆற்றல்)

நமது கிரகத்தினை போல் அல்லாது யுரோப்பாவானது சூரியனை விட்டும் பல மடங்கு தூரத்தில் உள்ளது… பிறகு எப்படி இந்த கிரகத்தில் உயிர் வாழ்விற்கான (LIFE BUILDING BLOCK) இருக்க முடியும் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு தான் இந்த பதில், 
யுரோப்பாவானது  , வியாழன் கிரகத்தினை 3.5 நாட்களில் முழுவதும் சுற்றிவிடும் மேலும் இது வியாழன் கிரகத்தில் ஈர்ப்பு விசையினால் பூட்டப்பட்டுள்ளது… யுரோப்பாவின் அரைக்கோளம் தான் எப்பொதும் வியாழன் கிரத்தினை நோக்கி இருக்கும் படி, இந்த கிரகம் அமையப்பட்டுள்ளது மேலும், இதன் வட்டபாதையானது சற்று நீள்வட்ட பாதை என்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையானது . யுரோப்பாவின் பகுதிகளை சற்று இழுத்தும் , சாதாரனமாகவும் (மாவு பிசைவது)  விடுவது போல் ஆக்குகிறது…
புரியவில்லை எனில் வீடியோவினை பார்க்கவும்
இந்த மாதிரி யுரோப்பாவானது 30 மீட்டர் வரை விரிவாகக்கூடும். இதுவே அதன் ஆற்றலான வெப்ப சக்திக்கு அடித்தளமாக அமையும் என அறிவியலாவர்கள் கருதுகிறார்கள்… அதாவது அந்தகிரகத்தின் உப்பு தன்னீரினை  திரவநிலையில் வைத்து இருப்பதற்கு அந்த வெப்ப ஆற்றலே போதும் என கூறுகின்றன, அதனால். அங்கு உயிர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கலாம் என கருத்து நிலவுகிறது வின்வெளி அறிஞ்சர்கள் மத்தியில்..

Joint Mission to Europa The Ocean World | யுரோப்பாவிற்கு விண்கலன்

கடல்களின் உலகம் எனப்படும் யுரோப்பாவிற்கு, நாசாவும் , இ . என். ஏ [ESA] வும் இனைந்து ஒரு லேண்டர் (Lander and Orbiter) மற்றும் ஆர்பிட்டர் அனுப்பு வேண்டும். என கருத்து தெரிவித்துள்ளார் (Astrophysics ) வான வெளி இயர்பியல் ப்ரொஃபெசர்(Professor) , மைக்கில் பிளாங்க் (Michel Blanc)

(France)  ஃபிரான்ஸ்  நாட்டின் கிரக அறிவியல் மற்றும் விண்பொள்திக ஆராய்சி மையத்தில் பனிபுரியும் மைக்கெல் பிளாங்க் (Toulouse) என்பவர், யுரோப்பியன் ஜியோ சயின்ஸ் யூனியன் மீட்டிங்கில் இதனை ஏப்ரல் 24 அன்று தெரிவித்தார்…

இதற்கு “ஜாயின்ட் யுரோப்பா மிஷன் ” என பெயரிட்டுள்ளார். (Joint Europa Mission)இது 2020 ஆம் ஆண்டு இடையில் வின்னில் ஏவப்படலாம் என தெரிகிறது..

விண்கலம் அனுப்பு 6 ஆண்டுகள் கழித்து தான் , இறங்க வேண்டிய கிரத்தினை அடையும் என தெரிந்து…..  இந்த யுரோப்பா துனைகிரகத்தில் வாழ்க்கை க்கான பல விஷயங்கள் இருப்பதனால். இந்த “ஜாயின்ட் யுரோப்பா மிஷன் ” கன்டிப்பாக ஏவலாம் என கருத்து தெரிவித்துள்ளார்…

[யுரோப்பா என்பது வியாழன் கிரகத்தின் ஒரு துனைக்கோள்]