Interstellar Visitor "Oumuamua" வேறு சூரிய குடும்பத்திலிருந்து வந்த ஆஸ்டிராய்டு "ஒமுவாமுவா"
Updated Article Found Here
Oumuamua Intersteller visiter 2017 discovery |
மிகவும் புதிரான , வித்தியாசமான ஒரு ஆஸ்டிராய்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுநமது சூரிய குடும்பத்தில் உருவாகி நமது சூரியனை சுற்றும் சாதாரணமான ஆஸ்டிராய்டு கிடையாது என்பதுதான் மேலும் ஆச்சரியமான விஷயம். இதன் பெயர் “ஒமுவாமுவா” என்பதுதான். அர்த்தம். புதிய விருந்தாளி.
அக்டோபர் 19 ஆம் நாள் 2017 அன்று ” பான்–ஸ்டார் 1″ எனும் ஹவாயில் உள்ள ஒரு சிறிய தொலை நோக்கியின் மூலம் இது ஒரு சிறிய லேசான புள்ளியாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சதாரன ஆஸ்டிராய்டு என நினைத்தனர். பின்னர் அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டினை மேலும் இரண்டு நாட்களுக்கு ஆராய்சி செய்தனர். ஆனால் அவர்கள் ஆராய்ச்சி செய்தது அதன் டிரஜக்டரி என்று சொல்லக்கூடிய வளைவுபாதையும் , வட்டபாதையும்
அதன் ஆய்வு முடிவுகள் தான் எல்லாரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. ஏனெனில் அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டு ஆனது நமது சூரிய குடும்பத்தில் உருவாகி நமது சூரியனை சுற்றிவரும் ஒரு சாதாரண ஆஸ்டிராய்டு கிடையாது. இது நமது சூரிய குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாமல் , வேறு ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில் இருந்து வந்த ஒரு ஆஸ்டிராய்டு என்றது. எல்லா அறிஞ்சர்களும் வாயை பிளக்க ஆரம்பித்தனர்.
அதன் பிறகு ESO வில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி கொண்டு இதனை ஆராய்ச்சி செய்து அதன் வடிவம், நிறம் போன்றவை கண்டிபிடிக்கப்பட்டது. இது அடர்ந்த சிவப்பு நிறத்தில் உள்ளதாகவும். அதன் வடிவம் இதுவரை பார்த்திடாத அளவு வித்தியாசமாக ஒரு குச்சியை போன்று இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். 400 மீட்டர் நீள்வாக்கிலும், வெறும் 40 மீட்டர் அகலமும் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. (மேலே உள்ள படத்தில் இருப்பது போன்று) இவ்வளவு நாம் நாம் எப்படி இதனை கண்டிராது விட்டோம் என பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். ஆம் இந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டு ஆனது கடந்த செப்டம்பர் மாதம் நமது சூரியனை கடந்துள்ளது. என்பது குறிப்பிடித்தக்கது.
All Electronics @ Lowest Price |
மேலும் இந்த ஆஸ்டிராய்டு மூலம் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இது பூமியை கடந்து சென்று விட்டது. இதனை நாசாவின் கிரக பாதுகாப்பு என்று சொல்லக்கூடிய “Nasa Near Earth Object” அமைப்பை சேர்ந்தவர்கள். இதனை வெளிஉலகுக்கு கொண்டு வந்தனர்.
Updated Article Found Here
Post a Comment