புதிய எரிமலை கண்டுபிடிக்கப்பட்டது ஐவோ வில்| jupiters moon IO got new volcano

வியாழன் கிரகத்தின் ஒரு துணைக்கோளான ஐ ஓ வில் (IO) ஜூனோ விண்கலமானது. புதிய எரிமலை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதாவது ஒரு புதிய “வெப்ப மூலம்” Heat Source . IO கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Infrared தரவுகளின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளது.

நமது பூமியில் நடக்கும் ஒரு செயல், (அதாவது எரிமலைகள் வெடித்து சிதறும் இந்த செயல், நமது பூமிக்கு அப்பால் )வேறு ஒரு கிரகத்தில் நடக்கிறது என்றால் அது IO கிரகம் தான்

இந்த கிரகம் வியாழன் கிரகத்தை சுற்றிவரும் 3ஆவது பெரிய துணை கிரகம். கலிலியன் துணை கிரகம் என அழைக்கப்படும் 4 கிரத்தில் இதுவும் ஒன்று.

தோராயமாக 3630 கிமீ விட்டம் கொண்ட இந்த கிரகம் வியாழனுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் கிரகங்களில் ஒன்று.

மேலே உள்ள படத்தில் ஐவோ கிரகத்தில் எரிமலை வெடித்து சிதறும் காட்சி ஒன்று புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படமானது. நாசா அனுப்பிய கலிலியோ விண்கலத்தின் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரகத்தில் உள்ள பல வெப்ப மூல ஆதாரங்களை ஜூனோ விண்கலம் மேப் செய்துள்ளத்து அதனை நீங்கள் கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்

இந்த கிரகத்தில் ஏற்படும் புவியியல் மாற்றங்கள் தான் இந்த எரிமலைகள் வெடிக்க காரணம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். அதுமட்டும் இல்லை இந்த புவியியல் மாற்றங்களுக்கு வியாழன் கிரகத்தின் அபரிவிதமான ஈர்ப்பு சக்தி ஒரு புறமும். அதன் மற்ற துணைகிராகமான யூரோப்பா மற்றும் கணிமேட் கிராகங்களின் ஈர்ப்பும் தான் இந்த வெடிப்புகளுக்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை வாயேஜர் 1,2 மற்றும் நியூ ஹரைசோன், காசினி, ஜூனோ, மற்றும் தரை சார்ந்த தொலைநோக்கிகள் மூலம். இந்த கிரகம் மேப் செய்யப்பட்டதில் .150 இயங்கும் எரிமலைகள் கண்டறியப்பட்டுள்ளது. கிரக ஆய்வாளர்கள் மேலும் 100 எரிமலைகள் வரும் காலத்தில் கண்டறியப்படலாம் எனவும் கூறுகிறார்கள்.

இப்போது கண்டறியப்பட்ட எரிமலையானது, ஏற்கனவே கண்டறியப்பட்ட எரிமலையிலிருந்தது 300 கிமி தூரத்தில் இருந்து கண்டறியப்பட்டது.

No comments