முடிவுக்கு வரும் டான் விண்கலம் | Dusk for Dawn - Space Craft to CERES

“DAWN” அதிகாலைப்பொழுது எனப்பொருள் படும் இந்த விண்கலமானது நமது புவியின் அருகில் இருக்கும் ஒரு சிறிய கிரகத்தினை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. அதன் பெயர் தான் “சிரிஸ்” அது மட்டும் இல்லாமல் இதன் முதல் இலக்கு “வாஸ்டோ” என்ற ஒரு சிறிய ஆஸ்டிராய்டுதான். அதாவது இரண்டு இலக்குகளை ஆராய இது அனுப்பப்பட்டது.

 

ஆரம்பம்:

இதன் ஆரம்ப லாஞ்ச் : செப்டம்பர் 27 , 2007
இலக்குகள் : வாஸ்டோ, சிரிஸ்
நோக்கம் : சூரிய குடும்பம் எப்படி உருவானது என ஆராய

பிரயான வரலாறு:

2007 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இது, 2011 ஆம் ஆண்டு வாஸ்டோ என்ற சிறிய கிரகத்தினை (இதனை Prototype planet என்றும் கூறுவர்) அதாவது “மெயின் ஆஸ்டிராய்டு பெல்ட்” பகுதியில் இவை இரண்டும் தான் சிரிஸ் உம் வாஸ்டோவும் தான் மிகவும் எடை அதிகமான பெரிய பொருள்கள்.) ஆராய்ச்சி செய்தது. பிறகு 14 மாத ஆராய்ச்சிக்கு பின் இது 2012 ஆம் ஆண்டு அதன் அடுத்த இலக்கான சிரிஸ் ஐ நோக்கி திரும்பியது. சுமார் 2 1/2 வருடங்கள் கழித்து அதன் மற்றொரு இலக்கான சிரிஸ் ஐ இது 2015 ல் எட்டியது அதிலிருந்து இது வரை “சிரிஸ்” சிறிய கிரகத்தினைதான் இது ஆராய்ச்சி செய்து வருகிறது.

பிரகாசமான பகுதிகள்:

சிரிஸ் கிரகத்தில் இருக்கும் பிரகாச மான பகுதிகள் என்ன என்ற ஆராய்ச்சியில் டான் விண்கலம் ஈடுபட்டது, இதுவரை டான் விண்கலத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட பிரகாசமான புள்ளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பகுதிப்பொருட்கள் தான் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. “சோடியக் கார்போனேட் ” என்ற உப்பு பொருளை கண்டறிந்தனர். இந்த சோடியம் கார்போனெட் சூரிய குடும்பத்தில் சாதாரணமாக பார்த்துவிட முடியாது, நமது சூரிய குடும்பத்திலேயே 3 கிரகங்களில் தான் இந்த சோடியக் கார்போனெட் கிடைக்கிறது. அது சனி கிரகத்தின் ஒரு துனைக்கிரகமான “என்ஸிலேடஸ்” மற்றும் பூமியில் உள்ள ஒரு சில ஏரிகளில் இந்த கலவை (சோடியம் கார்பொனெட்) கிடைக்கிறது. எனவேதான் சிரிஸ் சிறிய கிரகமானது ஒரு உருவாகிக்கொண்டிருக்கும் கிரகம் என பல ஆராச்சியாளர்களால். நம்பப்படுகிறது.

முடிவு:

ஆரம்பத்தில் 8 வருடங்கள் இருக்கும் என டான் விண்கலத்தினை கணித்து இருந்தனர். ஆனால் அதன் ஐஒன் எஞ்சினின் சிறப்பான செயல் திறனின் காரனமாக 3 வருடங்கள் கூடுதலாக பனியாற்றியது இந்த டான் விண்கலம் மொத்தம் 11 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த விண்கலம் சிரிஸ் கிரகத்தினை வட்டமடித்து வருகிறது. இப்போது அதன் எரிபொருள் தீரும் தருவாயில் உள்ளது. ஒரு வேளை இது தீர்ந்து விட்டால் பிறகு டான் விண்கலத்தால் பூமியினை தொடர்பு கொள்ள முடியாமல் போகும்.
 

–>Source2
–>Source3
–>Multimedia of Both

Download Our App

More Posts to Read on:-



No comments