January 27, 2019

Interesting facts about the Kalam sat version 2| கலாம் செயற்கைக்கோள் இரண்டாவது பகுதி ஒரு சில ஆச்சரியமூட்டும் செய்திகள்

24 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11 மணி 30 நிமிடங்களுக்கு இஸ்ரோ பிஎஸ்எல்வி சி 44 வகை ராக்கெட்டின் மற்றொரு வகையான DL வகை ராக்கெட் கொண்டு இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. அது அனைவரும் தெரிந்த விஷயம் தான். அதில் ஒன்று இந்தியா பாதுகாப்பு துறையினரால் அனுப்பப்பட்டது, இது 740 கிலோ எடையுடைய மற்றொன்று கலாம் செயற்கைக்கோள் இரண்டாம் பகுதி என்று பெயரிடப்பட்டது(kalam sat v 2) இது சிறுவர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள், இதன் மொத்த எடையானது 1.2 கிலோ கிராம் இதைப் பற்றிய ஒரு சில ஆச்சரியமூட்டும் செய்திகளைப் பார்ப்போம்

1. இந்த செயற்கை கோளானது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற தனியார் அமைப்பை சேர்ந்த சிறுவர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

2. சுமார் பத்து சென்டிமீட்டர் நீள அகலம் உடைய இந்த செயற்கைகோள் வெறும் 1.2 கிலோ கிராம் தான் இருக்கும் உங்கள் உள்ளங்கையில் பத்தி விடும் அளவிற்கு மிகவும் சிறிய செயற்கைக்கோள் தான் இது

3. இந்த செயற்கைக்கோளை உருவாக்குவதற்கு சுமார் 12 லட்சங்கள் ஆகியுள்ளன ஆனால் இதை விண்ணில் அனுப்புவதற்கு இஸ்ரோ ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

4,இதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்க 6 ஆண்டுகள் தேவைப் பட்டாலும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவை சேர்ந்த சிறுவர்கள் இந்த செயற்கைக்கோளை ஆறு நாட்களில் உருவாக்கியிருக்கிறார்கள்

5. இதை Ham Radio என்ற தொழில் சாரா குழந்தைகளுக்கான ஒரு ரேடியோ அலைவரிசை உதவிக்காக இதன் சேவைகள் பயன்படுத்தப்படும். என்று கூறியுள்ளனர்.

January 25, 2019

இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது இஸ்ரோ | இரண்டு செயற்கைக்கோள்களை ஏற்றி பறந்தது பிஎஸ்எல்வி சி 44 வகை ராக்கெட்

2019 ஆம் ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது இஸ்ரோ.

January 24 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில் பிஎஸ்எல்வி சி 44 ராக்கெட்டில் புதிய வகை வரவான DL வகை ராக்கெட் மூலம் இந்திய பாதுகாப்புத்துறையின் செயற்கைக்கோளான மைக்ரோ சாட் R, என்ற 740 கிலோ எடையுள்ள செயற்கை கோளையும் மற்றும் சிறுவர்கள் செய்த கலாம் சாட்டிலைட் என்ற சிறிய வகை 10 சென்டி மீட்டர் அளவுடைய செயற்கைக் கோளையும் விண்ணில் ஏவியது.

இந்தியாவின் பாதுகாப்பு வளர்ச்சி துறையான drdo ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இமேஜிங் imageing செயற்கைக்கோள். Microsat R. இது பூமியில் இருந்து 277.2 km உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

முதன் முதலாக ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஒரு செயற்கைக்கோள் 277 கிலோமீட்டர் என்ற மிக குறைந்த உயரத்தில் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் கூறினார், அதுமட்டுமில்லாமல் அவர் கூறுகையில் கலாம் செயற்கைக்கோள் ஐ வடிவமைத்த சிறுவர்களுக்கும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.

முதன்முதலாக 277 கிலோ மீட்டர் உயரத்தில் தனது முக்கிய 740 கிலோ எடை உடைய மைக்ரோசாட் R, என்ற செயற்கைகோளை நிலை நிறுத்திய பின்னர், திரும்பவும் அது உயிரூட்டப்பட்டு மீண்டும் 450 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்று அங்கிருந்த சிறிய வகை கலாம் செயற்கைக்கோளை அது விண்ணில் நிறுவியது.

January 23, 2019

Sombrero Galaxy Tamil facts

சம்ப்ரீரோ கேலக்ஸி

ஆனது பூமியில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரு கேலக்ஸி ஆகும் இதனை நாம் Barred Spiral Galaxy  என்று அழைப்போம் Barred Spiral என்றாள் அந்த கேலக்ஸியின் மையத்தில் கோடு போன்று அமைப்பு இருப்பதை குறிக்கும். உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் கீழே உள்ள படங்களை பாருங்கள்.

இந்த சம்ப்ரீரோ கேலக்ஸி ஆனது அதன் மையத்தில் ஒரு பிரகாசமான கருவையும் மிகப்பெரிய மைய கருந்துளையும் கொண்டுள்ளது.

அந்த கேலக்ஸியில் காணப்படும் கருந்துளையானது நாம் இதுவரைக்கும் கண்டுபிடிப்பதிலேயே அதிக எடையுள்ள சூப்பர் மேசிவ் கருந்துளையாகும்.

அதனைச் சுற்றி இருக்கும் கருப்பு நிற தூசு பட்டையானது ஒரு வளையத்தை போன்று செயல்பட்டு இருக்கிறது .

அந்த கருப்பு நிற பட்டையில் காற்று, தூசுகள் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளால் நிறைந்து இருப்பதை கண்டறிந்துள்ளோம் .

இது போன்று இருக்கும் அனைத்து  காலக்ஸிகளும் புதிதாக நட்சத்திரங்களை தோற்றுவிக்கும் ஒரு வகையில் உள்ளவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தன்மைகள்

வேறு பெயர்கள் : M104 (NGC 4594)
வகை :  சுருள் கேலக்ஸி
விட்டம் :  50 ஆயிரம் ஒளி ஆண்டுகள்
தொலைவு : 29  மில்லியன் ஒளியாண்டுகள்
எடை :  800 பில்லியன் சூரியனின் எடைக்கு சமம்
விண்மீன் திரள் :  விர்கோ

உண்மைகள்

இந்த கேலக்ஸி ஆனது விர்கோ சூப்பர் கிளஸ்டரில் இருந்து விலகி செல்லும் கேலக்ஸி களில் ஒன்றாக உள்ளது

இந்த கேலக்ஸியில் மையத்தில் அதிகமாக சுமார் 2000  குலோபுலர் கிளஸ்டர்கள் (Globular Clusters) அதாவது (கொத்தாக இருக்கும் சூரியன்கள்) இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது அதுவும் அதன் மையத்தில் மட்டுமே

இந்த கேலக்ஸியில் நாம் கண்டுபிடித்த கருந்துளையானது இதுவரை நாம் கண்டுபிடித்த கருந்துளைகளிலேயே மிகவும் அதிக எடை உடையது என நம்பப்படுகிறது கிட்டத்தட்ட பில்லியன்களுக்கு சூரியங்களுக்கு சமமானதாக இருக்கலாம்.

இந்த கேலக்ஸி ஆனது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் விண்வெளி மற்றும் வானவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் எளிதாக தெரியும் ஒரு கேலக்ஸி ஆகும் இது  விற்கோ மற்றும் கோர்வஸ் என்ற விண்மீன் தொகுப்பிற்கு இடையே பூமியின் வசந்த காலத்திலும் மற்றும் கோடை காலத்திற்கு முந்தைய காலத்திலும் எளிமையாக  பார்க்க முடிந்த ஒரு கேலக்சி ஆகும்.

இந்த கேலக்ஸியின் ஒரு பகுதியை தான் நாம்  இதுவரை கண்டுபிடித்திருக்கிறோம் ஏனென்றால் நாம் பூமியிலிருந்து பார்க்கும் கோனம் அப்படி

வேறு கேலக்ஸி பற்றி விவரங்களுக்கு யூடியூபில் சொல்லவும்.

January 22, 2019

ISRO Going to Make Humonaid for GAGANYAAN |


இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் 2022-ல் விண்ணுக்கு இந்தியர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதில் முதல் படியாக 3 முன்னோட்டங்கள் செய்து பார்க்க வேண்டும். என்றும் இஸ்ரோ தெரிவித்தது. 

அதில் முதல் இரண்டு முன்னோட்டங்கள் ஆளில்லா விண்கலங்களை கொண்டு சோதிக்கப்படும் என்றும், மூன்றாவது முன்னோட்டம் (அதாவது பரிசோதனை) மனிதர்கள்  வைத்து பரிசோதிக்கப்படும் எனவும் கூறியது.

தற்போது வந்த செய்தியின் அடிப்படையில் இஸ்ரோவானது முதல் இரண்டு பரிசோதனைகளுக்கு ரோபோவை பயன்படுத்தி இருப்பதாக கூறியுள்ளனர்.
ranchi ஐ அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வரும் பொறியாளர் ஒருவர் அவரின் பெயர் ரஞ்சித் ஸ்ரீவஸ்தவா.  இவர் உருவாக்கிய பெண் போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு இயந்திர மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது அதாவது humanoid ரோபோ.

முதலில் செய்ய இருக்கும் இரண்டு பரிசோதனைகளுக்கு இந்த humano ரோபோ  பயன்படுத்தப்படுத்துவதற்காக இந்த பொறியாளரை இஸ்ரோ அணுகியுள்ளது. இஸ்ரோவின் அறிவியலாளர்கள் இருவர் Tirtha Pratim Das and Raghu N ஆகியோர்
 இந்த பொறியாளரை அணுகி அந்த humour நாயுடு ரோபோவிடம் ஒரு சில கேள்விகளை கேட்டுள்ளனர் நான்கு மணி நேரம் இந்த ரோபோவை பரிசோதித்து பார்த்த பின்னர் அவர்கள்,  இந்த ரோபோவின் கண்டுபிடிப்பாளர் ரஞ்சித் ஸ்ரீவஸ்தவா அணுகி நீங்கள் இன்னும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்த ரோபோவை முன்னேற்ற வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர். அதுமட்டுமல்லாது
அவர்கள்  பரிசோதித்த ஹுமனாய்டு  ரோபோவின் முடிவுகளை இஸ்ரோவில் உள்ள உயர்மட்டக் குழுவில் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் அவர்கள்  ரஞ்சித் ஸ்ரீவஸ்தவா இடம் கூறியுள்ளனர்.
அதன்பிறகு அந்த இரண்டு இஸ்ரோ அறிவியலாளர்களும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் இந்த ரோபோவை மேலும் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறி விட்டுச் சென்றுள்ளதாக ரஞ்சித் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
அப்படி ஒருவேளை இவருடைய ரோபோ தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இவர் பத்து மாத காலங்களுக்குள் அந்த இரு அறிவியலாளர்களும் சொன்ன பிரிவுகளின் அடிப்படையில் வேலை செய்ய வேண்டி இருக்கும்
Source

kuiper Belt Facts in Tamil | கைப்பர் பெல்ட் தமிழ்

கைப்பர் – எட்வர்த்

கைப்பர் பெல்ட், இதனை ஒரு சில சமயங்களில் கைபர்-எட்ஜ் வொர்த் பெல்ட் (kuiper-Edgeworth Belt) என்றும் அழைப்பதுண்டு

ஜெரால்டு கைப்பர் என்பவர்தான் முதன் முதலில் நமது சூரியக்குடும்பத்தில் பிற்பகுதியில் ஒரு தட்டு போன்ற இடத்தில் பலதரப்பட்ட வானியல் பொருட்கள் இருப்பதனை ஒரு கோட்பாடாக உலகுக்கு சொன்னவர். அதேபோன்று Kenneth Edgeworth என்பவர்தான் முதன் முதலில் இந்த நெப்டியூனுக்கு பிறகு இருக்கக்கூடிய பொருட்கள் ஆரம்பகாலத்தில்  அதாவது சூரியன் உருவான காலத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து சொன்னவர்

இந்த கைப்பர் பெல்ட் ஆனது நமது சூரிய குடும்பத்திலிருந்து கிட்டத்தட்ட 20 வானியல் அலகுகள் தூரம் என்ற அளவிற்கு மிகவும் பெரியதாக காட்டுகின்றன

இதில்தான் நாம் ஒன்பதாவது கிரகம் என்று நினைக்கும் புளூட்டோ உள்ளது அது மட்டுமில்லாமல் புளூட்டோவை போன்றே அளவு கொண்ட ஹொவ்மே , மேக்மேக் ,போன்ற சிறிய கிரகங்களும் இங்குதான் உள்ளன.

kuiper belt in tamil details
kuiper belt in tamil details

இருக்கும் இடம்:

கைப்பர் பெல்ட் பகுதியானது நெப்டியூன் கிரகத்திலிருந்து அதாவது 30 வானியல் அலகு முதல் 55 வானியல் அலகு வரை நீண்டு இருக்கக்கூடிய ஒரு பகுதியாகும் இதில் முக்கியமான  வானியல் பொருட்கள் இருக்கும் இடம் 40 முதல் 48 வானியல் அலகு என்று கணிக்கப்படுகிறது

உண்மைகள்

  1. கைப்பர் பெல்ட் பகுதியில் பனியால் ஆன வானியல் பொருட்கள்  சிறிய அளவு முதல் சுமார் 100 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பொருட்கள் வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது
  2. இங்கு இருக்கும் ஒவ்வொரு வானியல் பொருட்களும் சூரியனை சுற்றி வர சுமார் 200  ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவாக எடுத்துக் கொள்கின்றன
  3. இந்த கைபர் பகுதியில் ஒரு ட்ரில்லியன்  வால்மீன்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது
  4. கைபர் பகுதியில் மிகப்பெரிய அளவினை கொண்டிருக்கும் சிறு கிரகங்கள் உள்ளன அவை புளூட்டோ, மேக் மேக்,  ஹவ்மே, வருனா,
  5. இந்த கைப்பர் பெல்ட் பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக நாம் அனுப்பிய விண்கலம் “நியூ ஹரைசோன்”  2015ஆம் ஆண்டு இதனை அனுப்பினோம்
  6. விண்வெளி யாளர்கள் ஹபிள் தொலைநோக்கியின் மூலமாக நமது சூரிய குடும்பத்தில் காணப்படும் கைப்பர் பெல்ட் பொருட்களை போன்று அருகில் இருக்கக்கூடிய ஒரு சில நட்சத்திரங்களுக்கும் இதுபோன்ற பொருட்கள் இருப்பதை கண்டறிந்து உள்ளனர்
  7. உதாரணம் HD 138664 in the constellation Lupus, and HD 53143 in the constellation Carina

http://simbad.u-strasbg.fr/simbad/sim-id?Ident=HD+138664

Asteroid Belt Facts in Tamil | ஆஸ்டிராய்டு பட்டை தமிழ் விவரம்

முன்னுரை:

asteroid பட்டை அல்லது விண்கல் பட்டை.  இந்த பகுதியானது பொதுவாக விண்கற்கள், தூசு, மற்றும் விண்வெளி குப்பைகள் உள்ள ஒரு பகுதியை குறிக்கும்.  இவை அனைத்தும் நமது சூரியனை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வருகின்றன. சரியாக புரியும்படி சொல்லப்போனால் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதான் இந்த விண்கல் பட்டை ஆகும்.இந்த விண்கல் பட்டையானது ஒரு வானியல் அலகு(1 Astromonical Unit Thick) அளவிற்கு மிகவும் தடிமனான ஒரு பகுதியாகும்

உண்மைகள்

Asteroid Belt Facts in Tamil
  • இது சூரியனில் இருந்து 2.2 வானியல் அலகுகள் தொலைவில் உள்ளது.
  • இந்த பட்டையில் சிரஸ் மற்றும் வாஸ்டா என்ற இரு ஆஸ்டிராய்டுகள் உள்ளன அவை தற்ப்போது சிறு கிரகங்களாக மாற்றப்பட்டுள்ளன்.
  • சிரஸ் மற்றும் வாஸ்டா என்ற இந்த இரண்டு ஆஸ்டிராய்டு மட்டுமே அந்த ஒட்டு மொத்த விண்கல் பட்டையில் 50 % எடையினை பெற்றிருக்கின்றன.
  • அங்கிருக்கும் அனைத்து விண்கற்களையும் ஒன்று சேர்த்தால் அது ஒரு நிலவின் அளவுக்கு பெரிய கிரகத்தினை உண்டாக்கும் என்ற மற்றொரு கூற்றும் இருக்கிறது.
  • இவைகள் தண்னைத்தானே சுற்றிக்கொள்ளும் மற்றும் சூரியனையும் சுற்றிவரும்.
  • இவற்றில் வளிமண்டலம் கிடையாது
  • இதுவரை 7000 க்கும் மேற்பட்ட விண்கற்களை இந்த பட்டையில் நாம் அறிந்து உள்ளோம்.
  • லட்சக்கணக்கான ஆஸ்டிராய்டுகள் இந்த விண்கல் பட்டையில் காணப்படலாம் என கருதப்படுகிறது.
  • ஏதேனும் ஒரு கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசையின் காரணமாக இவை இடம் மாறலாம்.
  • இந்த ஆஸ்டிராய்டு பட்டையினை நாம் முக்கிய பட்டை என்று கூறுவோம் (Main Belt) ஏனென்றால் இதே போல் ஒரு சில பகுதியில் உள்ள லெக்ராஞ்சியாஸ் மற்றும் சென்டாரஸ் (
     Lagrangians and Centaurs. )ஆஸ்டிராய்டுகளை வேறுபடுத்துவதற்காக.

Milky Way Galaxy |பால்வழி அண்டம் ஒரு சில செய்திகள்

முன்னுரை

பிரபஞ்சத்தில், பால்வழி அண்டம் தான் நாமிருக்கும் சூரிய குடும்பம் உள்ள ஒரு வீடாகும் இந்த பால்வெளி அண்டம் ஆனது அதன் வடிவம் பற்றி பல்வேறு வகையான குழப்பங்களும் மாற்றுக் கருத்துகளும் இருந்து வந்தாலும், நமது பால்வழி அண்டம் ஆனது ஒருவித சுருள் வடிவ அண்டங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.  என்னதான் நாம் விண்வெளி ஆராய்ச்சி செய்தாலும் ஒரு முட்டையில் ஓட்டிற்குள் இருந்துகொண்டு வெளிப்பகுதியை நம்மால் பார்க்க இயலாது. என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எனினும் நாம் ஆராய்ச்சி செய்யும் அண்டவெளியில் பல்வேறு அண்டங்கள் spiral என்று அழைக்கப்படக்கூடிய சுருள் வடிவிலேயே காணப்படுகின்றன இதனால் நமது  நமது பால்வழி அண்டமும் சுருள் வடிவில் இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன இப்போது அது பற்றிய ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம்கன்

கணக்கீடுகள் (தண்மைகள்)

வகை :சுருள் வடிவ அண்டம் spiral galaxy
 விட்டம் :1,00,000-1,80,000 ஒளியாண்டுகள்
 நாம் இருக்கும் இடத்தில் இருந்து  
மையம் :  27 ஆயிரம் ஒளியாண்டுகள்
 எடை :  800-1500 மில்லியன் சூரியனின் எடை
 வயது :  13.6 பில்லியன் ஆண்டுகள்
 நட்சத்திரங்களின் எண்ணிக்கை :  100 -400 பில்லியன்
 விண்மீன் தொகுப்பு :  sagittarius

நமது பால்வழி அண்டம் பற்றிய உண்மைகள்:

  • நமது பால்வழி அண்டம் ஆனது பெருவெடிப்பின் போது உருவான அண்டம் கிடையாது மாறாக இது அதற்கு பின்னால் ஏற்பட்ட காலகட்டத்தில் தொடர்ச்சியான மாற்றங்களாலும் உருவாகியிருக்கலாம் என  நம்பப்படுகிறது. நமது பால்வெளி அண்டத்தில் காணப்படும் மிகவும் பழமையான நட்சத்திரங்கள் அந்த நேரத்தில் உருவானவையாக இருக்கலாம் ஆனால் பெரு வெடிப்பின்போது உருவானவை அல்ல
  • வேறு சில அண்டங்களை உட்கொண்டு நமது பால்வெளி அண்டம் ஆனது வளர்ந்து இருக்கலாம் என்றும் கருத்து நிலவுகிறது அப்படி இருக்கையில் இப்போது நமது கேலக்ஸி ஆனது Sagittarius Dwarf Spheroidal  என்ற அண்ட வெளியில் இருக்கும் நட்சத்திரங்களை ஆட்கொண்டு வருகிறது என்று நம்பப்படுகிறது
  • நமது பால்வெளி அண்டம் ஆனது இந்த விண்வெளியில் சுமார் வினாடிக்கு 152 கிலோமீட்டர்  என்ற வேகத்தில் நகர்ந்து வருவதையும் கண்டறிந்து உள்ளனர். அதாவது வேகமாக சென்று கொண்டிருக்கிறது
  • நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் சூப்பர் மேசிவ் கருந்துளை ஒன்று இருக்கிறது இதன் பெயர் சஜிட்டாரியஸ் A* ஸ்டார்
  • நமது அண்ட வெளியில் இருக்கும் சூப்பர் மேன் black hole in எடையானது 4.3 மில்லியன் சூரியனின் எடைக்கு சமம்
  • நமது அண்ட வெளியில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கற்களும் தூசுகளும் அண்டத்தில் இருக்கும் மையப்புள்ளியான கருந்துளையை நோக்கி சுமார் வினாடிக்கு 220 கிலோமீட்டர் என்ற வேகத்தில்  சுற்றி வருகின்றன என்பதையும் கண்டறிந்து உள்ளனர்
  • நமது பால்வெளி அண்டம் ஆனது நம் அருகிலிருக்கும் ஆண்ட்ரோமிடா அண்ட வெளியுடன்  இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் மோத இருக்கிறது என்பதையும் விண்வெளி அவர்கள் கண்டறிந்துள்ளனர்

Read More

January 20, 2019

Ceres Dwarf Planet in Tamil | "சிரஸ்" கிரகம் தமிழ் விவரம்

Ceres with Tamil Details

Ceres Dwarf Planet facts -9

  • சீரீஸ் , என்ற இந்த சிறிய கிரகமானது 296 மைல் ஆரம் கொண்ட ஒரு சிறிய கிரகமாகும் அதாவது 476 கிலோ மீட்டர்  ஆரம்கொண்ட ஒரு கிரகம்
  • இந்த சிறிய கிரகமானது தண்ணைத்தானே சுற்றிக்கொள்ள ஒன்பது மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும் அதாவது நாலரை மணி நேரம் பகல் பொழுதும் நாலரை மணி நேரம் இரவு பொழுது என்று வைத்துக் கொள்ளலாம்.
  • இந்த கிரகத்தில் வருடம் என்பது 1682 பூமியின் நாட்களுக்கு சமமானது அதாவது இந்த கிரகம் 4.6 பூமியின் வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை வலம் வருகிறது
  • 2006ஆம் ஆண்டு வரை இதனை ஒரு ஆஸ்டிராய்டு என்ற வகையில் வைத்திருந்த அறிவியலாளர்கள், அதன்பிறகு இதன் அளவினை வைத்து இது அஸ்டிராய்ட் கிடையாது இது ஒரு  சிறிய கிரகம் என்று வகைப்படுத்தி இருந்தனர்
  • இந்த சிறிய கிரகத்திற்கு வளிமண்டலம் இருப்பதாக கண்டு பிடிக்கப் படவில்லை ஆனால் ஆங்காங்கே அல்லது மிகவும் அரியதாக ஒருசில நீராவி துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
  • இந்த சிறிய கிரகத்தை சுற்றி வரக் கூடிய எந்த கிரகங்களையும் இதுவரை அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை
  • மிகப்பெரிய கிரகங்களுக்கு இருப்பதை போன்ற வளையங்கள் இந்த  சிறிய கிரகத்தில் காணப்படுவது இல்லை
  • இந்த சிறிய கிரகத்தினை முதன்முதலாக டான் என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கலமானது அதனை  2015ஆம் ஆண்டில் சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் அந்த கிரகத்தின் மேற்பகுதியில் எப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது என்பதையும் ஆராய்ச்சி செய்தது இந்த டான்(Dawn) விண்கலம்.
  • ரோமானிய  கடவுளின் பெயரான சீரீஸ்  என்று பெயரிடப்பட்டுள்ளது இது தானிய கடவுள் மற்றும் அறுவடை கடவுளுள் சமமானதாகும்.The word cereal comes from the same name.

தோற்றம்

Giuseppe Piazzi என்ற அறிவியலாலர் இதனை 1801 ஆம் ஆண்டு கண்டறிந்தார். இந்த கிரகம் தான் முதன் முதலில் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரே கிரகமாகும் அது மட்டுமில்லாமல் main asteroid belt என்று அழைக்கப்படும் அஸ்டிராய்ட் கூட்டத்தில் காணப்படக்கூடிய ஒரே கிரகமும் இந்த கிரகம் தான்.

ஆரம்பத்தில் பல ஆண்டுகளுக்கு இந்த சிறிய கிரகமானது ஒரு விண்கல் ஆகவே கருதப்பட்டது. ஆனால் 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் இந்த விண்கல்லானது இதன் மிகப் பெரிய அளவினை பொறுத்து அது மட்டுமில்லாமல் இதன் அதிகமான எடையும் கருத்தில் கொண்டு இதனை அறிவியலாளர்கள் சிறிய கிரகங்கள் அதாவது Dwarf Planets என்ற வரிசையில் சேர்த்தனர்.  Main Asteroid Belt என்ற பகுதியில் உள்ள மொத்த எடையிலும் இந்த சிறிய கிரகம் மட்டுமே 25 சதவீத எடையை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அளவு மற்றும் தொலைவு:

296 மைல் ஆரம் கொண்ட இந்த கிரகமானது பூமியுடன் ஒப்பிடும் பொழுது 1/13%  சதவீதம் என்று கூறுகிறார்கள். அதாவது சீறீஸ் போன்று 13 கிரகங்களை ஒன்று சேர்த்தால் நமது பூமியின் அளவை அது வந்து விடும் என்பதுதான்.

அதேபோன்று இந்த கிரகமானது சூரியனிடமிருந்து 257 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது அதாவது 413 மில்லியன் கிலோமீட்டர் அல்லது 2.8 வானியல் அலகுகள்.

நமது பூமியில் எப்படி சூரியனின் ஒளி வந்து சேர எட்டு நிமிடங்கள் எடுக்கிறதோ அதே போல இந்த கிரகத்தில் சூரிய ஒளி வந்து சேர 22 நிமிடங்கள் எடுக்கின்றன

கணக்குகள்

சீரீஸ் கிரகமானது 1682 பூமியின் நாட்களை எடுத்துக்கொள்ளும் அதாவது 4.6 பூமியின் ஆண்டுகள் எடுக்கும். ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு 9 மணி நேரங்களுக்கும் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ளும்.  இதுதான் பகல் பொழுது குறைந்த நேரங்கள் கொண்ட கிரகங்களில் முதன்மையான கிரகம் நமது சூரிய குடும்பத்திலேயே!!!!

இந்த சீரிஸ் கிரகமானது சூரியனை சுற்றி வரும் கோணத்தில் வெறும் 4 டிகிரி சாய்வாக உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆரம்பம்:

இந்த சீரிஸ் கிரகத்தினை ஆராய்ச்சியாளர்கள் embryonic planet  என்று கூறுவர். இந்த கிரகமானது நமது சூரியன் உருவான காலத்திலிருந்தே அதாவது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த கிரகம் வளர்ந்துவரும் அல்லது உருவாகிக்கொண்டிருக்கும் கிரகமாக கருதப்படுகிறது.

கிரகம்:

இந்த சீரிஸ் கிரகமானது தலைப்பகுதி இருக்கக்கூடிய அதாவது Rocky Core கொண்ட கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது முதலில் காணப்படுதல் வெள்ளி பூமி செவ்வாய் போன்ற கிரகங்களை போன்று இந்த கிரகத்திலும்  தரைப் பகுதி காணப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் அதேபோல இந்த கிரகத்தின் எடையானது மிகவும் குறைவானதாகும் காணப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் இதனை பற்றி கூறும் பொழுது இந்த கிரகம் ஒரு திடமான மையப்பகுதியை பெற்றிருக்கும் என்றும். இந்த கிரகத்தில் தண்ணீர் 25 சதவீதம் அளவிற்கு இருக்கலாம் என்பதும் கருதுகிறார்கள்.

அப்படி ஒருவேளை 25% தண்ணீர் இருப்பது அதாவது உறைந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டால் பூமியை விட அதிகமான தண்ணீர் இருக்கும் கிரகம் என்று இந்த கிரகத்தில் தான் சொல்ல முடியும்.

நாம் இந்த கிரகத்தை பற்றி கேள்விப்பட்டது போலவே இதன் மேற்பகுதி ஆனது மிகவும் பாறைகளாலான பகுதி அதுமட்டுமில்லாமல் ஆங்காங்கே உப்பு வைப்பு. அதாவது Salt Deposit. இருக்கிறது என்றும் கண்டறிந்து உள்ளனர்.

மேற்பரப்பு:

இந்த கிரகத்தின் மேற்பரப்பானது எண்ணற்ற சிறிய மற்றும் புதிதாக உருவான. கிரேட்டர்களை (craters) கொண்டுள்ளது. இதனை நாம் எரிமாய்வாய் என்று கூறுவோம். ஆனால் அதேசமயத்தின் டான் விண்கலத்தின் தரவுகளின் அடிப்படையில் எந்த எரிமலை பள்ளங்களும் 280 கிலோ மீட்டர் என்ற அளவைவிட பெரியவை கிடையாது.

இதன்மூலம் இந்தச் சீரீஸ் கிரகமானது அதன் வாழ்நாளில் அதாவது 4.5 பில்லியன் ஆண்டுகளில் பலவிதமான விண்கல் மோதல்களை சந்தித்திருக்கும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த கிரகத்தில் எப்போதும் நிழல் இருக்கக்கூடிய ஒரு சில வித்தியாசமான எரிமலைகளும் அல்லது பள்ளத்தாக்குகளும் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அப்படி இருக்கும் பட்சத்தில் எப்போதும் நிழல் இருந்தால் அதன் கீழ் அதிகமான உறைந்த தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்

வளிமண்டலம்:

சேரீஸ் கிரகத்தில் வளிமண்டலம் மிகவும் சிறிய அளவில் உள்ளது மேலும் இந்த வளிமண்டலத்தில் உள்ள காற்று என்பது நீராவியாகவே இருக்கலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன .

January 19, 2019

ISRO New "Young Scientist Programme | இஸ்ரோ இளம் விஞ்சானிகள்

Young Scientists
100 Kids 1 Satellite

ISRO Young Scientist Programe is going to Select 100 Students from All Over India. 3 Students from Each State. – Dr. Sivan Said

இளம் விஞ்சானிகள்: (ISRO Young Scientist)

இஸ்ரோவானது நமது இளம் பிள்ளைகளை விஞ்சானிகளாக மாற்ற “இளம் விஞ்சானிகள்” என்ற ஒரு திட்டத்தினை வகுத்துள்ளது

எத்தனை பேர் இளம் விஞ்சானிகளில் பங்கு பெற முடியும்(How Many kids ISRO Select for Young Scientist)

மாநிலத்திற்கு 3 பேன் என்ற விகிதத்தில். 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள். அனைத்திலும் சேர்த்து 100 பேர் என்ற திட்டத்தினை இஸ்ரோ வகுத்துல்ளது.

இளம் விஞ்சானிகள் இஸ்ரோவில் என்ன செய்வார்கள்(What Young Scientist do in ISRO)

இளம் விஞ்சானிகளாக தேர்ந்தெடுக்கபடுபவர்கள். அறிவியல் மற்றும் அது சம்மந்த மான பேராசிரியர்களின் உறைகள் Lecture வழங்கப்படுவார்கள். பிறகு இஸ்ரோவின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்களை பார்வையிட அனுமதி வழங்கப்படுவார்கள். பிறகு அவர்களுக்கு சிறிய வகை செயற்கைகோள் எப்படி இயங்குகிறது மற்றும் எப்படி செய்ய வேண்டும் என்றும் கற்றுத்தரப்படும்.

(young Scientists Satellite)இளம் விஞ்சானிகள் செயற்கைகோள்

இளம் விஞ்சானிகள் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார்கள் செய்யும் செயற்க்கைகோள். சற்று நல்லதாக தெரிந்தால் அதனை வின்ணில் அனுப்பவும் இஸ்ரோ தயாராக உள்ளது.

Twitter about “ISRO Young Scientist”

OTD Jan 18, 2002 | On this day in space history|ஜெமினி தொலைநோக்கிகள்

2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி ஜெமினி தொலைநோக்கிகளில், இரண்டாவது தொலைநோக்கியான வடக்கு திசையில் சிலி என்ற நாட்டில் இது நிறுவப்பட்டது.

ஏற்கனவே ஜெமினி அப்சர்வேட்டரிகள வரிசையில் ஒன்று தெற்கு பக்கம் உள்ள ஹவாய் தீவில செயல்பட்டு வந்தது. மற்றொன்று வடக்கு திசையில் சிலி நாட்டிலும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 1998ஆம் ஆண்டு இது முதன்முதலில் கட்டப்பட்டாலும் 2002 ஆம் ஆண்டு தான் இது அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது இதன் மூலம் நெபுலா மற்றும் கேலக்சிகள் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன

Blood Moon | Lunar Eclipse |How to watch online|சந்திர கிரகணத்தை எப்படி ஆன்லைனில் பார்ப்பது

வருகின்ற 21 ஆம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்பதை நாம் அறிந்ததே, ஆனால் வரக்கூடிய கிரகணமானது ஒரு மிகவும் பிரத்தியேகமான ஒரு செயல் என்பதால் அது மட்டுமில்லாமல் அது ஒரு சிகப்பு நிறமாக காட்சி அளிக்கும் ஒரு அதிசய நிகழ்வாக இருப்பதினால் இதனை ஆன்லைனில் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஒருவேளை அமெரிக்காவில் இருக்கக்கூடிய மக்களுக்கு மேகமூட்டம் காரணமாக இது தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்பது போன்ற கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டு இந்த ஆன்லைன் சேவை தயாரிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு விருப்பம் என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்

Virtual Telescope’s WebTV

www.slooh.com/shows/situation-room

யூடியூப்

January 17, 2019

Moon Plants | Chang'e 4 Update|சந்திரனில் முளைகட்டிய பயிர்கள்

சாங்கி 4 விண்கலம் சைனா அனுப்பியது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இது ஜனவரி மாதம் மூன்றாம் தேதி நிலவின் புறப்பகுதியில் தரையிறங்கியதும் அனைவரும் அறிந்த ஒன்றே,

ஆனால் இந்த விண்கலத்தில் பூமியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பருத்தி, உருளை விதைகள் அங்கு முளைகட்டி இருக்கின்றன அதாவது சந்திரனில் உள்ள சாங்கி 4 லேண்டனில் இந்த தாவரங்கள் சிறிய அளவில் மூளை கட்டி வர ஆரம்பித்துள்ளன கீழே உள்ள படத்தை பார்க்கவும்





உலகமே உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது நானும்தான்.

மேலே உள்ள முதல் படத்தில் சற்று அதிகமாக வளர்ந்து இருப்பது உங்களுக்கு தெரியவரும், கீழே உள்ள படத்தில் அதே போன்ற இடத்தில் சற்று குறைந்த அளவில் முளை கட்டி இருப்பதை பார்க்க முடியும். மேலே உள்ள படமானது பூமியில் உள்ள சாந்தி 4 விண்கலத்தை அதாவது சந்திரன் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை செயற்கையாக உருவாக்கி அந்த சூழ்நிலையில் தாவரங்கள் எந்த அளவு வளருகின்றன? என சரிபார்த்து இருக்கின்றனர்.

இரண்டாவது படம் லேண்டர் ரில் இருக்கும் விதைகள் சிறிய அளவில் முளைகட்டிய. படம் . நீங்களே பாருங்கள்…

EP.12 | Hubble Camera bug |Tamil podcast

Hubble Space Telescope has in new problem with its camera and it is fixed with new software update.

January 16, 2019

கேமரா பிரச்சனை யில் சிக்கிய ஹப்புள் தொலைநோக்கி

ஹப்புள் தொலைநோக்கி , நாசா தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட தொலைநோக்கியானது உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் பலவிதமான விண்வெளி பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளவும் புகைப்படங்களை எடுக்கவும் இது மிகவும் உறுதுணையாக இருந்தது.

Hubble Telescope Camara Fail
ISSUE

அதுமட்டுமில்லாமல் இந்த தொலைநோக்கியில், ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய பலமுறை விண்வெளி ஆய்வாளர்கள் இதனை சரிசெய்ய வேண்டி இருந்தது அதவும்  நேரடியாக சென்று.

இதேபோல சில காலங்களுக்கு முன்பு ஏற்பட்ட தன் நிலை நிறுத்தி(GyroScope)  பழுதுபட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூமியில் விண்வெளி பொறியாளர்களின் உதவியுடன் இது சரி செய்யப்பட்டது.

இந்த மாதம் 8 ஆம் தேதி  ஹபிள் தொலைநோக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தொலைநோக்கியில் உள்ள பெரிய பரப்பு  கேமரா அதாவது wide field (3) கேமராவானது செயல் இழந்தது. இதன் காரணத்தை நாசா அறிவித்தது.அதாவது இந்த கேமராவுக்கு  வரும் மின்னழுத்த அமைப்பு சற்று மாறி இருக்கிறது. (voltage not Stable). இதனால் கேமராவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த கேமராவின் அனைத்து சேவைகளையும் அதிலுள்ள தற்காப்பு அமைப்பு  தற்காலிகமாக நிறுத்தியது. இதனைக் சரி செய்வதற்காக நாசா அதனுள் ஒரு மென்பொருளை அதனுள் செலுத்தியது. இதன் மூலம் வரக்கூடிய மின்னழுத்தத்தின் அளவு சரியானது என்று அந்த தற்காப்பு இயந்திரம் புரிந்து கொள்ளும்படியாக. (software update). இன்னும் ஒரு வாரத்திற்குள் இது மேலும் செயல்பட்டு நிலைமைக்கு வரும் என்று கூறியிருந்தார் இன்னும் ஒரு சில தினங்களில் அதாவது இந்த வார இறுதியில் ஹப்புள் தொலைநோக்கியின் இந்த மூன்றாவது கேமரா செயல்படும் என எதிர்பார்க்கலாம்

2009 ஆம் ஆண்டு சர்வீஸ் சர்வீஸ் மெஷின் பொருத்தப்பட்டுள்ள கேமரா நம்பர் 3 நம்பர்

January 15, 2019

Weird Asteroid Turned to Comet | திடீரென வால்மீனாக மாறிய விண்கல்

செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதான் ஆஸ்டிராய்டு பெல்டு என்று சொல்லப்படக்கூடிய விண்கல் பட்டை. இந்த இடத்தில் அதிகமாக ஆஸ்டிராய்டுகள் நமது சூரியனை சுற்றிவருகின்றன.

ஆஸ்டெரொய்ட் 6478 கௌல்ட்(Asteroid (6478)Gault, என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்டிராய்டு. இது 30 வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த விண்கல்லானது கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பிலிருந்து இது ஒரு வால்மீனை போன்று செயல்பட்டு வருகிறது என்று. வானியல் அறிஞ்சர்கள் கண்டறிந்து உள்ளனர்.

asteroid show comet property
asteroid show comet property

சுமார் 3 கி.மீட்டர் அகலம் கொண்ட இந்த மிகப்பெரிய விண்கல்லில் இருந்து பிரியும் கல் துகள்கள் அல்லது தூசிகள் 400,000 கி.மீட்டர் தூரம் வரையில் பரவி இருப்பதை, தொலைநோக்கி வானியலாலர்கள் சிலர் கண்டறிந்துள்ளனர்.

இந்த விண்கல்லின் வித்தியாசமான இச்செயலானது , அந்த விண்கல் பட்டையில் உள்ள ஏதேனும் ஒரு பொருள் மோதியிருப்பதால் நிகழ்ந்திருக்கலாம். என்று விஞ்சானிகள் கருதுகின்றன.

எப்படி இருந்தாலும் சரி, இந்த விண்கல்லில் இருந்து வெளிப்படும் தூசியானது சுமார் 4000,000 கி.மீட்டர் தொலைவு வரையில் இருக்கிறது. இது நமது பூமியில் இருந்து நிலவு இருக்கும் தூரத்திற்கு சமமானதாகும். இந்த விஷயம் தான் ஆராய்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Source

காகண்யான் எங்களுக்கு 2021 இல் | இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கே சிவன் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது காகன்யான் மிஷன் 2021ல் எங்களுக்கு வருகிறது. என்று கூறினார்.

அவர் கூறிய ஒரு சில கேள்வி பதில்கள் உங்களுக்காக.

கேள்வி: மத்திய அரசாங்கம் கொடுத்த 10 ஆயிரம் கோடி ரூபாயில், ககன்யான் திட்டத்திற்காக வரக்கூடிய வேலைகள் என்னென்ன?

பதில்: காகன்யான் திட்டத்தில் முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கக்கூடிய, வீரர்கள் விண்ணுக்கு அழைத்துச் செல்லும் பெட்டகத்தை( crew modules) அதன் அமைப்பு மற்றும் வடிவம் சார்ந்த விமர்சனத்தை கொடுப்பதற்காக இஸ்ரோவில் உள்ள அனைத்து துறைகளிலும் இருக்கும் சிறந்த 24 அறிவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக அமைத்து உள்ளோம். இவர்கள் தரும் அறிக் கையை வைத்து மேலும் கன்யான் மிஷன் எப்படி இருக்கும் என்பது அமைக்கப்படும் இந்த விஷயங்கள் தான் இப்போது இருக்கும் திட்டங்கள்.

கேள்வி :நீங்கள் ஏற்கனவே வகுத்த 14 ஆயிரம் கோடி என்ற திட்டத்தை மத்திய அரசு மறுத்து 10,000 கோடி தான் வழங்கியுள்ளது . அப்படி இருக்கும்போது உங்கள் பட்ஜெட்டில் ஏதாவது குறை இருக்குமா?

பதில்: நாங்கள் இந்த காகன்யாண் கமிஷனுக்காக ஒரு சில தேவையில்லாத செயல்பாடுகளை குறைத்துள்ளோம் தேவையில்லாத கருவிகளையும் உபயோகிக்காமல் இருக்க முயற்சி செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் இந்த செய்தி அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்னதாகவே இதற்கான பல இக்கட்டான உபகரண சோதனைகளை நாங்கள் ஏற்கனவே மேற்கொண்டு விட்டோம். இதனால், எங்களால் 10,000 கோடி ரூபாயில் நிச்சயமாக கமிஷனை நல்லபடியாக நடத்த முடியும்.

கேள்வி :விண்வெளி வீரர்கள் விண்வெளியில் என்ன செய்வார்கள் ஏழு நாட்கள்?

பதில்: இந்தியா முழுவதும் உள்ள ஆராய்ச்சித் துறைகளிலும் மற்றும் முன்னேற்ற துறைகளிலும் சேர்ந்து 40க்கும் மேற்பட்ட சோதனை முயற்சிகள் செய்யுமாறு வலியுறுத்தல்கள் எங்களுக்கு வந்த வண்ணம் உள்ளன பிற்காலத்தில் அதில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து நாங்கள் அந்த செயல்முறையை எங்கள் வீரர்களை விண்வெளியில் செயல்படுத்த வைப்போம்.

கேள்வி: gaganyaan குழுவில் பெண்களுக்கு இடம் உண்டா?

பதில்: பெண்களை விண்வெளியை காண இந்த செயல்பாட்டில் வைக்கவேண்டும் என்பது எங்களுக்கும் விருப்பம் தான், ஆனால் பயிற்சி மற்றும் தேர்வு முறையானது மிகவும் கடுமையாக இருக்கும். இதனால் அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விண்ணில் பறப்பார்கள்.

கேள்வி : ககன்யான்
க்காக சோதனை ஓட்டங்கள் எத்தனை உள்ளன?

பதில்: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்கு எட்டு மாதங்கள் முன்னதாகவே நாங்கள் கன்யான் மிஷனை சோதனை மூலம் செய்து முடிக்க இருக்கிறோம். அதாவது 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், குழுவினர் யாரும் இல்லாமல் ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதற்கு அடுத்து, 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதேபோல் குழுவினர் யாரும் இல்லாமல் ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதற்குப் பிறகு 2021 டிசம்பர் மாதம் அதாவது பிரதமர் சொன்ன கெடுவிற்கு 8 மாதங்கள் முன்னதாக தேர்வு செய்யப்பட்ட குழுவுடன் சேர்ந்து ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்படும். இவ்வாறு மூன்று சோதனை ஓட்டங்கள் உள்ளன.

கேள்வி: சைனா விண்ணுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி பல ஆண்டுகள் கழித்து இந்திய அனுப்புவது உங்களுக்கு எப்படி இருக்கிறது?

பதில்: இதில் சொல்வதற்கு ஏதுமில்லை நாம் சீனாவுடன் எந்தவித போட்டியிலும் இல்லை. நம்முடைய நோக்கம் இந்திய நாட்டிற்கு தேவையான பல முக்கியமான செயல்களை செய்வது தான் .

(We are not in a race with China.

ISRO has to provide weather forecasting a better navigational system and more good for Indian people)

January 14, 2019

EP.11 | Gaganyaan It's Mission 2021| Tamil podcast

ISRO chief Dr k Sivan has interview some of the questions asked by the journalist the source link will be below here

January 13, 2019

EP. 10.1/2 | Kepler Planet | Tamil Podcast



in this podcast I am talking about accomplice most weird and great habitable planets are exoplanets or any different kind of planets article link will be below here

மிகவும் அரிதான சூரிய கிரகனம் இந்த வருடம் வருகிறது.

கிரணங்களின் வகைகள்

நான் போன முறை  கொடுத்த செய்தியில், இந்த வருடத்தின் விண்வெளி நிகழ்வுகள் பலவற்றை சொல்லி இருந்தேன் ஆனால், அதில் முக்கியமான மற்றும் மிகவும் அரிதான நிகழ்ச்சியான சூரிய கிரகணம் பற்றி சொல்லவில்லை.

இந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ஆம் நாள். இந்த அன்னுலார்(Annular)சூரிய கிரகணம் வர இருக்கிறது.

எப்போதுமே சூரிய கிரகணங்கள் மிகவும் அரிதான ஒரு விஷயம். அது மட்டுமில்லாமல் இதில் மூன்று வகைகள் உள்ளன முதல் வகை முழு சூரிய கிரகணம் அதாவது சூரியனை முழுவதுமாக நிலவானது முறைக்கும்.

அதற்கு அடுத்து,  சரிவர மறைக்காமல் இருக்கும் நிகழ்ச்சி, இதனை partial solar eclipse என்பார்கள்,  

மூன்றாம் முறை  சூரியனை மறைக்கும் ஆனால்  சூரியனின் வெளிவட்டப் பகுதி நமக்கு தெரியும். இதை தான் அன்னுலார் என்பார்கள். இது போன்ற ஒரு நிகழ்வுதான் வரும் டிசம்பர் மாதம் வர இருக்கிறது.

ஏன் மிகவும் அரிதான நிகழ்ச்சி

இந்த சூரிய கிரகணங்கள் வருவது மிகவும் அரிது ஏனென்றால் நமது பூமியானது சுற்றக்கூடிய தளத்திற்கும், சந்திரனானது பூமியை சுற்றும் தளத்திற்கும், சற்று வேறுபாடுகள் உள்ளன சரியாக சொல்லவேண்டும் என்றால் 15 டிகிரி சாய்வாக ஒரு தளத்தில் நமது  நிலவானது பூமியை சுற்றி வருகிறது. கீழே உள்ள படத்தை பார்க்கவும் .

இதுபோன்ற சுற்றக்கூடிய காலங்களில் வருடத்தில் இரண்டு முறை மட்டுமே சூரியன்-சந்திரன்-பூமி போன்றவை சரியான நேர்கோட்டில் வரும். இந்த நிகழ்வு தான் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது

வரக்கூடிய காலங்களில், முழுமையாக சூரியனை மறைக்கும் நிகழ்ச்சியை யாரும் பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள் அறிவியலாலர்கள்  ஏனென்றால் நமது நிலவானது வருடத்திற்கு 3 சென்டி மீட்டர் என்ற தூரத்தில் விலகிச் சென்று கொண்டே இருக்கிறது.

விலகி செல்வதன் காரணமாக நம்மால் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது எப்போதுமே இந்த அண்ணலார் சூரிய கிரகணங்கள் மட்டுமே நமக்கு தெரியவரும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்

உங்களுக்கு ஒரு கால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தால் அது முழு சூரிய கிரகணத்தை நீங்கள் கண்டிப்பாக பாருங்கள் ஏனென்றால் முன் காலத்தில் தான் அது மிகவும் ஒரு ஆபத்தான விஷயமாக கருதப்பட்டது ஆனால் இந்த காலத்தில் இது ஒரு வானியல் நிகழ்வு என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் இது ஒரு அரிதான நிகழ்வு இன்னும் பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முழு சுகத்தை பார்ப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஏனென்றால் முழு சூரிய கிரகணம் நிகழாது

மேலும் படிக்க

January 12, 2019

2019 இந்த வருடத்தின் நடக்க இருக்கும் விண்வெளி நிகழ்வுகள் சில

இந்த வருடத்தின் ஒரு சில முக்கிய விண்வெளி நிகழ்வுகள் பற்றி பார்ப்போம்:

ஜனவர் 21: (முழு சந்திர கிரகனம்)

வருகின்ற ஜனவர் 21 ஆம் தேதி நமது பூமியின் நிழலானது நிலவின் மீது முழுமையாக படும் அப்போது இதனை முழு சந்திர கிரகனம் என்று அழைப்பர். இந்த சந்திர கிரகணமானது சுமார் 1 மணி நேரம் 2 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வினை இந்தியாவில் காணமுடியாது இது மேற்கு ஐரோப்பா ஆப்ரிக்கா, வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் மட்டுமே தெரியும். நிலவு சூரியனின் தொடர்பை இழப்பதால் சிறிது சிவந்த நிறத்தில் தெரியும் இதனை “பிளட் மூன்” என்றும் கூறுவர்.மேலும் இந்த நிகழ்வானது பெரிஜி என்ற ஒரு மிகவும் குறுகித தூரத்தில் அமைவதால் நமது கண்களுக்கு இது மிகவும் பெரியதாக தெரியும் இதனை “சூப்பர் மூன்” என்றும் கூறுவர். இது போன்று இந்த வருடம் 3 நிகழ்வுகள் வர உள்ளது.

சூப்பர் மூன் : ஜனவரி 21 , பிப்ரவரி 19, மார்ச் 21

இந்த சூப்பர் மூன் என்ற நிகழ்வானது ஒரு முழு நிலவு மிகவும் அருகில் இருக்கும் படி தோன்றும் இதனை சூப்பர் மூன் என்பார்கள் இந்த தருனங்களில் நிலவு நம் கண்களுக்கு 15-30% பெரியதாக தோன்றும்.

செவ்வால்- யுரேனஸ் அருகில் அமைவது.: பிப்ரவரி 13

இது ஒரு அறிய வானியல் நிகழ்வு. அதாவது நீங்கள் விண்ணில் நிலவினை பார்க்கும் போது அதனருகில் உங்களுக்கு யுரேனஸ் கிரகம் தெரியும். பக்கத்துல பக்கத்துல இருக்குறது போல் தெரியும். முடிந்தால் நீங்கள் உங்கள் காலண்டரில் குறித்துக்கொள்ளுங்கள்.

புதன் கிரகம் சூரியனை கடக்கும் நிகழ்வு: நவம்பர் 11

இதனை “மெரிகுரி டிரான்சிட்” என்று அழைப்பர். இந்த 21 ஆம் நூற்றாண்டில் மொத்தமே 14 முறைதான் இந்த டிரான்சில் நடப்பதை நம்மால் பார்க்க முடியும் அதில் இது ஒன்று இந்த நிகழ்வும் நவம்பர் 11 ஆம் நாள் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வு கிட்டதட்ட 4 மணிநேரம் 29 நிமிடங்கள் நமக்கு தொலைநோக்கிமூலம் பார்த்தால் தெரியும்,

ஜமினாய்டு விண்வீழ் பொழிவு: 12-16 December

இந்த நிகழ்வு 3200 பாந்தான்(3200 Phaethon) என்ற ஒரு விண்கல் நமது கிரகத்திற்கு அருகில் கடப்பதால் உண்டாகும் சிறிய சிறிய கற்கள் நமது வளிமண்டலத்தில் விழும் அது பார்ப்பதற்கு அழகான ஒரு நிகழ்வாக தெரியும். இந்த விண்கல்லானது 3 கி.மீ அகலம் உடையது என்றும். ஒவ்வொரு 3.3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது சூரியனை சுற்றி வருகிறது என்றும் கண்டறிந்துள்ளனர். மேலும் விண்வீழ் பொழிவின் போது மணிக்கு சுமார் 100 கற்கள் என்ற வீதத்தில் விழும் என்றும் கூறுகிறார்கள்.

January 11, 2019

EP.9 Podcast| Jade Rabbit-2 Wakes up from Standby mode

the Jade rabbit 2 Rover is on standby for the past 3 days for extreme weather in farside of the Moon. which is more than 200 degree Celsius, so the precautions , the Jade rabbit 2 Aka Changi 4 Rover is in the standby mode and today it wakes up from the standby mode. Tamil Post

பூமி மாதிரி வித்தியாசமான கெப்ளர் கிரகங்கள்- பகுதி 2

நாம் போன பதிவில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலமாக கண்டு பிடிக்கப்பட்ட எக்ஸோ பிளானட்கள் கெப்ளர்-10பி, கெப்ளர்-16பி, கெப்ளர்-20இ, பற்றி பார்த்து இருப்போம் இப்போது அதற்கு அடுத்து உள்ள மூன்று கிரகங்களை பார்ப்போம்.

கெப்ளர்-22b (முதல் ஹாபிடபுள் கிரகம்)

உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஹாபிடபுள் கிரகம் என்பது. அதாவது ஒரு கிரகத்தில் இருக்கும் தண்ணீர் அதீத வெப்பத்தின் காரனமாக ஆவியும் ஆகாமல் அல்லது தொலைவில் அமைவதின் காரணமாக உறைந்தும் போகாமல் சூரியனினிடமிருந்து சரியான தொலைவில் அமைந்து தண்ணீரை திரவநிலையில் வைக்கும் தொலைவினையே “ஹாபிடபுள் சோன்” பகுதி என்று அழைப்பார்கள் அப்படி கண்டறியப்பட்ட முதல் வேற்று கிரகம் தான் இந்த கெப்ளர்-22b . இதனை அறிவியலாலர்கள் 2011 டிசம்பர் மாதம் கண்டறிந்து உலகுக்கு சொன்னனர். அது மட்டும் இல்லாமல் இந்த கிரகம் பூமியை போலவே 2.4 மடங்கு பெரிய கிரகம் என்றும் இது நமது சூரியனைபோன்ற ஒரு நட்சத்திரத்தினை சுற்றி வருகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்

கெப்ளர்-37b(மிகவும் சிறிய வேற்றுகிரகம்)

இந்த கிரகம் தான் நாம் கண்டறிந்த வேற்று சூரியனை சுற்றிவரும் கிரகங்களிலேயே மிகவும் சிறிய கிரகம். இதனை அறிவியலாலர்கள் பிப்ரவரி 2013 ஆம் ஆண்டு கண்டு பிடித்து உலகுக்கு சொன்னனர். இந்த கிரகமானது தனது நட்சத்திரத்தினை சுமார் 13 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது என்றும். இந்த கிரகத்தின் வெப்பநிலை 400 டிகிரி செல்சியல் எனவும் கூறினர். இது தான் சிறிய கிரகமாயிற்றே எவ்வளவு சிறியது என்று தெரியுமா? இது நமது நிலவினை விட சற்றி பெரியது.

கெப்ளர் -62e & f ( நீர் உயிரினங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கும் கிரகம்)

இப்போது நாம் கெப்ளர் 62 என்ற பெயரிடப்பட்ட சூரியனை சுற்றிவரும், முறையே நான் காவது மற்றும் ஐந்தாம் கிரகமான கெப்ளர்-62e கெப்ளர்-62f என்ற இரண்டு கிரகங்களை பார்க்க இருக்கிறோம். இந்த 62இ என்ற கிரகமானது நமது பூமியை போன்று 1.6xமடங்கு பெரிய கிரகம என்றும். 62எஃப் என்ற கிரகமானது நமது பூமியை போன்று 1.4x மடங்கு பெரிய கிரகம் என்றும் கருதப்படுகிறது. இவை இரண்டுமே சுமார் 1200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன

சரி அடுத்த விண்வெளி பற்றிய செய்திகளுடன் நான் உங்களை அடுத்த முறை சந்திக்கிறேன். நன்றி


January 10, 2019

கெப்ளர் தொலைநோக்கி கண்டறிந்த வித்தியாசமான 7 எக்ஸோ கிரகங்கள்

ஆரம்பம்:

மார்ச் 2009 ஆண்டு பூமிமாதிரி அளவில் ஒத்த கிரகங்களை கண்டறியும் முயற்சியில் விண்ணில் அனுப்பப்பட்டதுதான் இந்த கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி திட்டம். 1 வருடத்திற்கு மட்டுமே திட்ட மிட்டு இந்த தொலைநோக்கி அனுப்பப்பட்டது. ஆனால் இதன் அதீத திறமையாள் இது 9 வருடங்கள் வின்ணில் நின்று நம் மனதிலு நீங்கா இடம் பிடித்தது.

கைரோ கருவி பழுது:

சில மாதங்களுக்கு முன் மிகவும் பிரபல் தொலைநோக்கியான “ஹப்புள்” மற்றும் “சந்திரா” தொலைநோக்கிகள் சந்தித்த அதே “சமநிலைபடுத்தும் சாதனம் ” பழுதினை கெப்ளரும் சந்தித்தது, 2013 ஆம் ஆண்டு, ஆம் கெப்ளர் தொலைநோக்கியில் இருந்த 4 கைரோஸ்கோப்பில் 2 ஆவது செயலிலந்தது. அதன் பிறகு என்ன ஆகுமே என பலரும் பயந்த நிலையில். மீத மிருந்த 2 சமநிலைப்படுத்தும் கருவிகளின் உதவியேடு இது. 2018 வரை நீடித்து இருந்தது.

இலக்கு:

இந்த கெப்ளர் தொலைநோக்கியானது “சிக்னஸ்” “Cygnus Constellation” விண்மீன் திரள் பகுதியில் ஒரு சிறிய பகுதியை மட்டும் பார்க்குமாரு நிறுத்தப்பட்டது. இதில் தான் இந்த சிறிய பரப்பில் தான் இந்த தொலைநோக்கி சுமார் 1,50,000 மேற்பட்ட நட்சத்திரங்களை கண்டறிந்தது. மேலும் அதனை சுற்றிவரும் பூமிமாதிரி கிரகங்களையும் கண்டறிந்தது.

Kepler-10b

இந்த கிரகம் தான் முதன் முதலில் கண்டறியப்பட்ட முதல் பாறைபகுதி கொண்ட கிரகம். அதாவது “ராக்கி கோர்” இதனை அறிவியலாலர்கள் கெப்ளரின் தகவளின் அடிப்படையில் ஜனவரி 2011 ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இது மிகுந்த வெப்பமான கிரகம் என்றும். மேலும் இது பூமியை போல 1.4 மடங்கு பெரிய கிரகமாகவும் இருக்கிறது. இந்த கெப்ளர்-10பி என்ற கிரகமானது சுமார் 560 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

kepler-16b

இதனை முதல் கார்டூர் கிரகம் என்று கூறுவார்கள்.முதன் முதலில் தனது வானத்தில் 2 நட்சத்திரங்களை கொண்ட ஒரு கிரகம் இது தான். அதாவது நீங்கள் அந்த கிரகத்திலிருந்து வானத்தினை பார்க்கும் போது 2 நட்சத்திரங்கள் உங்களுக்கு தெரியும். மேலும் இது ஒரு வாயு அரக்கன். இந்த கிரகம் செப்டம்பர் 2011 ஆம் ஆண்டு கண்டரியப்பட்டது.

kepler-20e

இந்த கிரகம் தான் நமது சூரியகுடும்பத்திற்கு அப்பால் நமக்கு கிடைத்த சிறிய கிரகம் அதாவது பூமியை விட சிறிய கிரகம். இது நமது பூமியின் அளவில் 0.87 சதவீதம் மட்டும் தான் உள்ளது. இதன் அருகில் இன்னொரு கிரகமும் இருக்கு அதுவும் கிட்டதட்ட பூமியில் அளவில் 1.03 மடங்கு இருக்கும். (பெரியது). இவை இரண்டுமே டிசம்பர் 2011 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

மேலும் 4 கிரகங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

3 நாள் லீவுக்கு பிறகு வேலை செய்ய ஆரம்பிக்கும் சாங்கி விண்கலம்

Changi 4 Going for a
“Noon Nap”

சைனா நிலவின் பின் பகுதிக்கு அனுப்பிய சாங்கி-4 விண்கலம் பற்றி நீங்கள் அறிந்த விஷயம் தான். இந்த விண்கலத்தில் இருக்கும் “ரோவர்” இதற்கென ஒரு தனி பெயரை வைத்து இருக்கிறார்கள் இந்த சைனாவின் விண்வெளியாளர்கள் அது தான் ” யுடூ-2″ என்பதுதான். அதாவது “ஜேட் ராபிட்” என்று பொருள் படும் படியாக பெயர் வைத்துள்ளனர்.

இந்த விண்கலத்தில் இருந்து அதாவது “லேண்டரின்” இருந்து “யுடு-2” வெளியேரும் காட்சியை , லேண்டரில் உள்ள காமிரா புகைப்படம் எடுத்துள்ளது. அது மட்டுமில்லாது. இந்த “யுடூ-2” ரோவர் , விண்கலம் நிலவின் பின்பகுதியில் தரையிரங்கி , சுமார் 12 மணிநேரங்கள் கழித்து தாண் வெளியே வந்ததாம்.

மேலும் இது :”வாண்கார்மெர்” பள்ளத்தாக்கினுள். சரியாக.177.6 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும்.45.5 டிகிரி தெற்கு திசையிலும், ஜனவரி 3 ஆம் தேதி, தரையிரங்கியுள்ளது என சைனா கூறியுள்ளது.

 177.6 degrees east longitude and 45.5 degrees south ல் தரையிரங்கியுள்ளது.

சுமார் ஒரு வாரம் சுற்றிவந்த பிறகு இந்த யுடூ-2 ரோவரானது ஒரு குட்டி தூக்கம் போட போகுதுன்னு சொன்னாங்க. அது எதுக்குன்னு கேட்ட. ரோவர் இருக்கும் பக்கமானது சூரியனை நோக்கி திரும்பும் காரணத்தினால். அங்கு சுமார் 200 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரிக்க கூடும் என்றும் அதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்காக. இந்த ரோவர் “ஹைபர்நேஷன் ” என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. என்று சைனா அறிவித்தது.

அது மட்டுமில்லாமல் இந்த ரோவர் திரும்பவும் ஜனவரி 10 ஆம் தேதி பெய்ஜிங்க் நேரப்படி இது திரும்பவும் தனது பழைய நிலைக்கு திரும்பும் எனவும் சைனா அறிவித்து இருந்தது.

PodCast

January 09, 2019

HD21749b | டெஸ் செயற்கைகோள் கண்டறிந்த 8 ஆவது கிரகம் | Tamil Details

TESS – Transiting Exoplanet Survey Satellite



NASA

டெஸ்:

இந்த செயற்கைகோளானது , கெப்ளர் தொலைநோக்கி கைவிடப்பட்டதின் பிறகு பிரத்யேகமாக பூமிமாதிரி இருக்கும் கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்டது. கெப்ளரினை போலவே இதன் தரவுகளும் பொதுமக்களின் பார்வைக்காக இனைய தளத்தின் கொடுக்கப்படுகின்றன. இது வரைக்கும் இந்த டெஸ் செயற்கைகோள் 8 கிரகங்களை கண்டறிந்து இருக்கிறது. இந்த HD21749b என்பது இதன் எட்டாவது கண்டு பிடிப்பு என கூறப்படுகிறது.

Tess Telescope

HD21749b

இந்த கிரகமானது 2 வெவ்வேறு பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இந்த கிரகம் நமது பூமியைப்போன்று கிட்ட தட்ட 3 மடங்கு அதிக அளவுடையது அதாவது 3 மடங்கு அதிக ஆரம் உடையது அதே போல் இது பூமியை போன்று 23 மடங்கு அதிக எடையுடையது எனவும் இதன் ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இது பற்றி குழுத்தலைவர் டயானா டிராகோமிர் என்பவர் கூறுகையில் இவர் மெசசசிசெட் பல்கழைக்கழகத்தில் ஒரு ஆராய்சியாளராக உள்ளார். இவர் கூறுகையில் இந்த கிரத்தில் நமது பூமியில் இருப்பது போன்று பாறைப்பகுதி இல்லை என்றும் . ஒரு விதமாக காற்று நிறைந்த கிரகம் என்றும் கூறினார். உதாரனமாக நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் நெப்டியூன் கிரகத்தினை போன்று.

மற்ற தண்மைகள்:

இந்த கிரகம் அதன் நட்சத்திரமான HD21749 என்பதில் இருந்து சுமார் 0.2 வானியல் அலகு (கிட்ட தட்ட 18 மில்லியன் மைல் )தூரத்தில் இருக்கிறது என்றும் இதன் வெளிப்புற வெப்பநிலையானது சுமார் 150 டிகிரி செல்சியஸ் என்றும். இந்த கிரகத்தில் சற்றி அதிக அடற்த்தி உடைய தண்ணீர் மூலக்கூறுகளால் ஆகியிருக்கலாம் என்வும், இந்த கிரகத்தின் சற்றி அதிக அடர்த்தி உடைய வளிமண்டலம் இருக்கிறது எனவும் ஆராய்சியாளர் டயானா அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

நட்சத்திரம்

அது மட்டும் இல்லாமல் இந்த நட்சத்திரமானது அதாவது (HD21749) நமது சூரியனை போன்று பிரகாசம் கொண்ட சூரியன் எனவும். இது பூமியில் இருந்து சுமார் 54 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள மிகவும் மங்களான ரெடிகுளம் என்ற விண்மீன் தொகுப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.