சிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது.


1992 ஆம் ஆண்டு முதன்முதலாக பூமி போன்ற கிரகங்கள் கண்டு பிடிக்க ஆரம்பித்தோம். இன்றுவரை (நமது சூரிய குடும்பக் இல்லாத )வேறு ஒரு நட்சத்திரத்தின் கிரகங்களை கண்டு பிடித்து கொண்டுதான் இருக்கிறோம்.
இதில் பெரிய ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்? நாம் கண்டறிந்தது அனைத்தும் பூமியை விட 1.5 மடங்கு அல்லது அதற்கு பெரிய அளவில் உள்ள கிரகங்களை தான். இது போன்ற கிரகங்களை விட பூமியின் அளவுக்கு ஒத்த கிரகங்களை ஆராய்ச்சி செய்தால் தான். நம் அடுத்த குடியேறும் கிரகம் பற்றி யோசிக்க முடியும்.

GJ1252 Red Dwarf

நமது பூமி போன்ற 1.2 மடங்கு இருக்கும் ஒரு கிரகம் தான் இந்த gj1252b என்ற கிரகம்.
இதன் மேலும் சிறப்பு என்ன தெரியுமா? இந்த கிரகம் சுற்றி வரும் நட்சத்திரம் GJ1252 ஆனது ஒரு சிவப்பு குள்ள கிரகம்.
அதனால் என்ன பயன் என்ற கேட்கிறீர்களா? இருக்கு. நான் மேலே சொன்னதுபோல சாதாரணமாக நாம் பூமியின் அளவினை விட பெரிய கிரகங்களை தான் கண்டரிகிரோம்.
இதற்கான காரணம். அந்த நட்சத்திரமான து . மிக பிரகாசமாக இருப்பதால் பூமியில் அளவில் உள்ள கிரகங்களை நம்மால் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால் இந்த GJ1252 என்ற சூரியன். ஒரு (Red Dwarf) சிவப்பு குள்ள நட்சத்திரமாக இருப்பதால் . இத்த கிரகம் பற்றிய பல தகவல்களை நம்மால் கண்டறிய முடியும். ஏனெனில் இதன் ஒளி மிகவும் மங்கியதாக இருக்கிறது.

கிரகம் GJ1252b

இந்த புதிய கிரகத்திற்கு பெயர்தான் GJ1252b என்பது. இந்த கிரகமானது. அதன் நட்சத்திரத்தின் மிகவும் அருகில் சுற்றி வருகிறது. எவ்வளவு அருகில் என்றால்? இந்த கிரகம் ஒரு முறை அதன் நட்சத்திரத்தை சுற்றிவர பூமியின் கணக்கு படி வெறும் 12.4 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
அதாவது அந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது 12.4 மணி நேரம்தான்
இந்த கிரகத்தின் எடையானது நமது பூமியின் எடையை போல் இரண்டு மடங்கு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த தரவுகள் அனைத்தும் TESS விண்வெளி தொலைநோக்கி மூலம். கண்டறியப்பட்டுள்ளது . அது மட்டும் இல்லாமல் இந்த கிராகமானது பூமியில் இருந்து 66.5 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.
நம்மால் இந்த தொலைவில் இருக்கும் ஒரு சிவப்பு குள்ள சூரியனை எளிதாக ஆராய முடியும். அதே போன்று அதன் கிரகத்தையும்.

Rocky exoplanets

இந்த கிரகமானது ஒரு Rocky surface கொண்ட கிரகமாக இருப்பதில் அதிக வாய்ப்புகள் உள்ளன ஏனென்றால்,
இது பூமியின் அளவிற்கு மிகவும் ஒத்து இருப்பதுதான்.இதுபோன்று பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் மிகவும் சொற்பமாகவே நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
  • Pi Mensae c – 60 Light Years away
  • LHS 3844b. – 49 light years
  • TOI-270b. – 73. Light years
  • Teegarden b & c. -12.5 Light Years
  • Gliese b , c, d – 12 light years
  • Recently GJ1252b – 66.5 light years
மேலே குறிப்பிட்டுள்ள கிரகங்களில் இப்போது குறிப்பிட்ட GJ1252b என்ற கிரகம் மட்டும்தான் ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தின் ஐ மிகவும் அருகில் சுற்றி வருகிறது.
இதனால் நமக்கு,  சிறிய வகை கிரகங்கள் பற்றிய போதுமான தகவல்கள் வரக்கூடிய காலங்களில் அதிகமான அளவு கிடைக்கப்படும். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உங்களின் மேலான கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்
Space news tamil

No comments