ஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment
சரி இப்போது மிதப்பதை அதாவது பறந்து மிதப்பதை சப்தத்தினை வைத்து எப்படி செய்வது என பார்ப்போம்,
CHLADNI PLATE
கிளாட்னி தட்டு என்ற ஒரு வகை தட்டினை அதிர்வடைய செய்யும் போது , அதன் மீது இருக்கும் சிறிய வகை லேசான பொருளை அது மேலே தூக்கி போடும். உதாரனத்திற்கு அதில் நீங்கள் “SALT” உப்பு துகள்களை போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்,அந்த தட்டின் மீது இருக்கும் உப்பு துகளை அது மேலே தூக்கி போடும் , அதனை பறக்க வைக்கும் ,……….
உண்மையில் அது அப்படி செய்வதில்லை அதைவிட அதிகமாக ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு செயலை செய்கிறது.
VIDEO
அதாவது அந்த உப்பு துகள்கள் ஒரு வரிசையில் ஒருங்கினைவதை அது காட்டுகிறது. இது எதனால் ஏற்படுகிறது.
அறிவியல்
ஒலி அலைகள் அதிர்வடைகின்றன. அதன் மூலம் இந்த வித்தியாசமான உருவங்கள் (Pattern)ஏற்படுகின்றன.வேறுபாடுகள்
ஆனால் நீங்கள் மேலே பார்த்த அந்த Pattern மட்டும் வருவது கிடையாது , நீங்கள் ஒலி அலைகளை அதிகரிக்கும் போது அதன் உருவத்தில் அதிகமான மாற்றங்கள் ஏற்படும்,இன்னும் வித்தியாசமான உருவங்கள்
இது போன்ற பல உருவங்கள் உங்களுக்கு தோன்றும்,.உண்மையில் ஒலி என்பது அலைகள் நீங்கள் கத்தினாலோ அல்லது கைதட்டினாலோ அதிலிருந்து ஒலி அலைகள் வெளியேரும்,வெளியேரிய ஒலி அலைகள் உங்கள் காதில் உள்ள சவ்வினை அதிர்வடைய செய்வதால் நீங்கள் சப்தத்தினை உனர்கிறீர்கள்,அது இசையாக இருக்கலாம். அல்லது கூச்சலாக இருக்கலாம்,
Post a Comment