Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்



குலசேகரபட்னத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 3 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன.
குலசேகரபட்டினம் அருகில் உள்ள மாதவன் குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 ஊர்கள் தேவைப்படுவதாக கருதப்படுகிறது.
இந்த ஊர்களில் நிலம் கையகப்படுத்துவதற்காக தற்காலிகமாக திருச்செந்தூரில் அலுவலகம் அமைப்பட்டு உள்ளது.
8 பிரிவுகளை கொண்ட வருவாய்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று செயல்பட தொடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிலும், 13 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்ப்டு உள்ளது. ஒவ்வொரு குழுவும் தாசில்தார் தலைவமையில் இயங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் செயல்படுவதை கண்கானிக்க டி.ஆர்.. பனி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவர்களின் முதற்கட்ட பனியினை தூத்துக்குடி கலெக்டர்சந்தீப் நந்தூரி”” அடிக்கடி பார்வையிட்டு வருகிறார்.

நிலம்
ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பனி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் போது அதற்குறிய இழப்பீடு தொகையை அரசின் சட்டப்படி வழங்கபடும். . ஏவுதளம் அமைப்பதற்க்காக சுமார் 2300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 80% இடங்கள் பட்டா உள்ள இடங்களாகவும். மீதம் உள்ள 20 % நிலங்கள் அரசின் புரம்போக்கு நிலங்களாகவும் உள்ளன.


மக்கள் வசிக்குமிடம்

மாதவன் குறிஞ்சி என்ற இடத்தில் 27 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் தருவதோடு இழப்பீடு தொகையும் கொடுக்கப்படும். .
அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரவும் முடிவு செய்துள்ளனர்கள். என்று தூத்துக்குடி கலெக்டர்சந்தீப் நந்தூரிஅறிவித்துள்ளார்.

கையகப்படுத்துதல்

இதற்காக 2300 ஏக்கரில் 1781 ஏக்கர் இடம் மாதவன் குறிஞ்சி கிராம சுற்று வட்டாரத்தை கொண்டுள்ளது.

அங்கு 131 ஏக்கர் அரசின் புறம்போக்கு நிலங்களாக உள்ளது. படுக்கப்பத்து மற்றும் பள்ளக்குற்ச்சியில் 491 ஏக்கர் நிலமும் , திருச்செந்தூர்கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 22 ஏக்கரும் ராக்கெட் ஏவுதளத்திற்காக கையகப்படுத்தப்படும் .

குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள அமரபுரம் , அழகப்பப்புறம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்ப்ட உள்ளது.

இந்த பணியில் கிராக நிர்வாக அலுவலர்களும் இப்போது தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

அவர்கள் அந்த பகுதியில் உள்ள புராதான சின்னங்களையும், கோவில்களையும், மரங்களையும் கணக்கெடுத்து வருகிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் முடிவு பெற்றுவிடும். அதன் பிறகு, ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தொடங்கி 2 வருடங்களைல் அதுவும் முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இங்கு அமைக்கப்டும் ராகெட் ஏவுதளத்தில் SSLV (Small Satellite Launch Vehicle) என்ற சிறிய வகை ராக்கெட் ஏவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தெரிவித்தார்.

No comments