Covid-19 and ISRO


இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையானது நமது இந்தியாவின் பெருமை என்று கருதப்படக்கூடிய "இஸ்ரோ" விலும் பிரச்சனை செய்து வந்துள்ளது. அதாவது அங்கு இருக்கும் அறிவியல் அறிஞ்சர்களும் இப்போது வீட்டு காவலில் (Work From Home) இல் தான் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக தற்போது அடுத்த மாதம் நடக்க இருந்த Young Scientist நிகழ்ச்சியின் 11 நாள் வகுப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனை யுவிகா என்றும் அழைப்பர்.
அது மட்டும் இல்லாமல் இஸ்ரோவில் பலரும் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்வதால். இஸ்ரோவிலிருந்து இந்த ஆண்டு நடுவில் அதாவது ஏப்ரல் , மே மாதங்களில் ஏவுவதாக அறிவித்த ஆதித்யா சூரியனுக்கான விண்கலமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இந்தியாவில் இருந்து 4 Air force வீரர்கள் ரஷ்யா சென்றுள்ளனர். எதற்காக என்று நான் சொல்லி தெரிய தேவையில்லை அதுதான் இந்தியாவின் முதல் Human Space Program ககன்யான். அந்த வீரர்களின் பயிற்ச்சியும் இப்போது ரஷ்யாவில் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நாட்கள் குறைவாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள் . அதாவது இந்த ஆண்டின் இறுதியில் ககன்யானின் முதல் ஆளில்லா சோதனை ஓட்டம் நடைபெற வேண்டும். ஆனால் நமக்கு நேரம் மிகவும் குறைவாக உள்ளது .
எனினும் அவர்கள் சிறந்த முறையில் வேலை செய்து தற்போது இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயனத்திற்கு தேவையான தொழில் நுட்பங்களை பெறுவதற்காக ஒரு AO வை வெளியிட்டு உள்ளனர்.
AO - Announcement of Oppurtunity
இந்த AO வானது இந்தியாவில் உள்ள அறிவியல் நிலையங்கள், பல்கழை கழகங்கள், மற்றும் தனிநபரிடமிருந்து HSP க்கு உதவும் திட்டங்கள் மற்றும் ஐடியாக்கள் இருந்தால் கொடுங்கள் என்று ஒரு அறிக்கை விடுத்துள்ளனர்.
17 வகையான துறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  1. Radiation Hazards Characterisation and Mitigation Techniques
  2. Space Food and Related Technologies
  3. Inflatable Habitats Technology
  4. Human Robotic Interfaces
  5. Thermal Protection Systems
  6. Environmental Control And Life Support Systems
  7. Green Propulsion
  8. Advanced Materials
  9. Debris Management And Mitigation
  10. Energy Harness And Storage 
  11. In-situ 3D Manufacturing Technologies For Space
  12. Fluid Technology and Management
  13. Space Bioengineering 
  14. Bio-Astronautics
  15. Simulated Gravity Technologies
  16. Human Psychology For Long Term Missions
  17. Space Medicine And Diagnosis
  18. Any Other Relevant Technology Related To Human Space Program
இவைகளில் உங்களுக்கு ஏதேனும் ஒரு ஐடியா இருப்பின் அதனை நீங்கள் இஸ்ரோவுக்கு ஜூலை 15 2020க்கு முன்னதாக Speed Post மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் (softcopy)

Email : dhsp-ao@isro.gov.in
Address : Director, Directorate of Human Space Programme, ISRO Headquarters, Antariksh Bhavan,New BEL Road, Bangalore-560094.



No comments