"Perseverance" Mars 2020 Rover Name Contest Winner

13 வயது நிரம்பிய அலெக்ஸ் மாதர் என்ற சிறுவன் தான் வருகின்ற ஜூலை(ஆகஸ்டு) 2020 இல் செவ்வாய்க்கு அனுப்ப இருக்கும் நாசாவின் புதிய ரோவருக்கு பெயரிட்டான் என்றால் நம்ப முடிகிறதா?

கட்டுரை போட்டி

இந்த 2020 மார்ஸ் ரோவருக்கு பெயரிடுவது தொடர்பாக ஒரு ஆண்டு முன்னரே நாசா ” name the rover ” என்ற ஒரு போட்டியை நடத்தி வந்தது.
அது ஒரு “கட்டுரை போட்டி” . ஆம் பள்ளி மாணாக்கள் “நாசாவின் ரோவர்கள்” என்ற தலைப்புகளில் தங்களின் சிறிய கட்டுரையை வெளியிட வேண்டும். கட்டுரையின் தலைப்பு ரோவரின் பெயர்.
அதற்காக எழுதப்பட்ட கட்டுரை நன்றாக இருப்பின் அந்த கட்டுரையின் தலைப்பை “ரோவரின் ” பெயராக எடுத்துக்கொள்ளப்படும் என்பதுதான்.

புதிய பெயர் : Perseverance

இதுவரை பெயரில்லாமல் இருந்த 2020 மார்ஸ் ரோவர் இப்போது “Perseverance = விடாமுயற்சி” என்ற பெயரினை பெற்றுளது.



அலெக்ஸின் கட்டுரை:

அலெக்ஸ் எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதுதான். என்னவெனில், ஏற்கனவே நாம் (நாசா) செவ்வாய்க்கு அனுப்பிய ரோவர் மற்றும் லேண்டர்களின் பெயர்களை கவனியுங்கள்
Curiosity – ஆர்வம்
Insight – நுண்ணறிவு
Spirit – ஆண்மா
Opportunity – வாய்ப்பு
இவையனைத்தும் மனிதர்களின் தனித்தன்மைகளாக கருதப்படுகிறது. (இதைத்தான் நாம் ரோவர்களுக்கும் பெயராக வைத்து இருக்கிறோம்) அப்படி இருக்கையின் மனிதனின் மற்றோரு முக்கியமான பண்பாக கருதப்படுவதுதான் விடாமுயற்சி என்று கூறக்கூடிய Perseverance.
இந்த அடுத்த பண்பைதான் நாம் அடுத்த ரொவருக்கு வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் அலெக்ஸ் எழுதிய சிறிய கட்டுரையில்.

கட்டுரை பின்வருமாறு

Curiosity
Insight,
Spirit
Opportunity
if you think about it, all of these names of past mars rovers are qualities we possess as humans.
we are always curies and seek oppurtunity we have the spirit and insight to explore moon mars beyand but if rovers are to be the qualities of us as a race, we missed the most important thing: perseverance,
we as humans evolved as creatures who could learn to adapt to any situatin, no matter how harsh.
we are species of explorers and we will meet many setbacks on the way to mars.
how ever we can persevere,
we, not as a nation. But as Humans, will not give up
The human race will always persevere into the future.

-Alexander Mather
NASA Rover Naming Contest Winner

Video

No comments