Indian Space Telescope "AstroSat" Found a Earliest Galaxy in Hubble Deep Field

AstroSat: Indian Space Telescope

இந்தியாவின் முதல் பல் அலைதிறன் கொண்ட விண்வெளி செயற்கைகோளான "AstroSAT" ஆனது முதன் முதலாக பிரபஞ்சத்தில் மிகவும் தூரத்தில் உள்ள அதாவது

 இந்த பிரபஞ்சத்தில் ஆரம்ப காலத்தில் உருவான கேலக்ஸி ஒன்றை "தீவிர புரஊதா கதிரை" கொண்டு கண்டறிந்து உள்ளது..

 இந்த செய்தி இஸ்ரோ இனைய தளத்தில் ஆகஸ்டு 27 ,2020 இல் பதிவேற்றப்பட்டுள்ளது. ( ISRO Link)

ஆனால் இந்த செயலானது 2016 ஆம் ஆண்டிலேயே துவங்கப்பட்டுள்ளது. அதாவது ஹப்புள் Deep Field கு அடங்கிய ஒரு பகுதியை, சுமாராக 28 மனிநேரங்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள்.

 UV light எங்காவது வெளிப்படுகிறதா என்று பார்க்க.

 இது நடந்தது அக்டோபர் 2016 இல், 

பிறகு கிடைக்க பெற்ற தீவிர புற ஊதா கதிர்கள் , ஒரு பழமையான கேலக்ஸிக்கு சொந்தமானது தான் என்பதை உறுதிபடுத்த அவர்களுக்கு 4 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.

இந்த கதிர் பூமியில் இருந்து சுமார் 9.1 பில்லியன் ஒளியாண்டுகள் தூரம் உள்ள AUDFs01 என்ற கேலக்ஸியில் இருந்து வந்துள்ளது. (அது மட்டும் இல்லாமல் இது தான் முதல் முறை ஒரு கேலக்ஸியை தீவிர புற ஊதா கதிரினை கொண்டு கண்டுபிடிப்பது.)  

( this is the first time a galaxy has been observed in the extreme ultraviolet light) - weather.com


இந்த கண்டுபிடிப்பினை உலகலாவிய விண்வெளியாளர்கள் அடங்கிய குழு கண்டறிந்து உள்ளது. தலைவராக Dr. Kanak Saha என்பவர் உள்ளார் இவர் பூனேயில் உள்ள வானியல் மற்றும் வானியற்பியலுக்கான பல்கலைக்கழக மையத்தில் உள்ளவர்.

இது பற்றிய விவரமான அறிக்கை Nature Astronomy என்ற இடையதளத்தில் வெளியாகியும் உள்ளது. (Read on : Nature.com)



இவர்கள் ஆராய்ந்த இந்த AUDFs01 என்ற கேலக்ஸியானது "Hubble extreme deep field" உள்ள ஒரு பகுதியாகும்.


இந்த சாதனைக்கு காரணம் அஸ்ட்ரோ சாட் இல் உள்ள UVIT kகருவியாகும். 

ஏனெனில் இதில் , background noise என்று சொல்லப்படும் ஒரு விஷயம் சற்று குறைவாகவே உள்ளது. 

ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியை காட்டிலும் இதில் மிகவும் குறைவு என்பதாலே இந்த அளவு இதனால் வேலை செய்ய முடிந்தது என்று Dr.Saha அவர்கள் கூறியுள்ளார்கள்.

Article Reference:

https://www.outlookindia.com/website/story/india-news-indias-astrosat-discovers-one-of-the-earliest-galaxies-in-extreme-uv-light/359256

https://weather.com/en-IN/india/space/news/2020-08-26-indias-astrosat-discovers-an-ancient-galaxy

https://www.isro.gov.in/indias-astrosat-discovers-one-of-earliest-galaxies-extreme-ultraviolet-light-and-marks-major


No comments