Seven Minutes of Terror Come for Perseverance Rover | 7 நிமிட போராட்டத்திற்கு தயாராகும் நாசா
இன்னும் 3 தினங்கள் தான் உள்ளது.
நாசாவின் விடாமுயற்சி (Perseverance Rover) ரோவர் செவ்வாயில் தரையிரங்க நிர்னயித்த கால கட்டத்தினை நெருங்கிவருகிறது.
நாசாவின் கணக்கு படி பிப்ரவரி 18 2021 இல் தரையிரங்கும். இதை நாம் சாதாரணமாக கூறிவிடுகிறோம்.
ஆனால் ஒரு விண்கலத்தினை வேறு ஒரு கிரகத்தில் தரையிரக்குவது எவ்வளவு கடினம் என்பது அங்கு இருக்கும் விண்வெளி அறிவியலாலர்களுக்கு தான் தெரியும் .
அதிக பொறுப்பு :
அதுவும் முக்கியமாக இந்த ரோவர்தான் இதுவரை நாசா தரையிரக்கிய ரோவர்களிலேயே மிகவும் அதிக எடியுடையது மற்றும் இதுவரை இல்லாத அளவு அதிக தொழில் நுட்ப சக்தி
பெற்றது.
இதன் மொத்த செலவு 2.7 பில்லியன் டாலர் அதாவது 19,600 கோடி இந்திய ரூபாய் மதிப்பு.
இதன் மொத்த எடை : 1025 kilo gram
கீழிரங்கும் நிகழ்வு:
பெரும்பாலும் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிரங்குவதை நம்மால் பார்வையிடதான் முடியுமே தவிர . எந்த உதவியையும் செய்ய இயலாது.
இது முழுக்க முழுக்க தனித்து இயங்கும். (Descend will be Autonomous)
இதனை 7 நிமிட போராட்டம் என்று நாம் பெயர் வைத்து இருக்கிறோம்.
அதாவது செவ்வாயில் மெல்லிய வளிமண்டலத்தில் இருந்து, தரைப்பகுதிக்கு கீழிரங்கும் போது ஒரு வித ரேடியோ சிக்னலை அனுப்பும் . அந்த ரோவர்.
அந்த தகவல் நம்மை வந்து அடைவதற்குள் அங்கு ரோவர் தரையிரங்கியே இருக்கலாம்.
Circuit | Distance | Delay Time |
---|---|---|
Earth-Moon | 384,000 km | 1.3 s |
Earth-Mars | 55 - 378 million km | 3 - 21 minutes |
Earth-Jupiter | 590 - 970 million km | 33 - 53 minutes |
Earth-Pluto | ~5800 million km | 5 hours |
நீங்கள் நினைக்கலாம் , ஆனால் நாம் சந்திரயான் 2 விக்ரம் ரோவரை தரையிரக்கிய போது நேரடியாக காண்பது போல் அல்லவா இருந்தது.
செவ்வாய்க்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம்.?
இது பொதுவாக செவ்வாய் - பூமி எங்கு இருக்கின்றது என்பதை பொருத்து மாறுபடும்.
கண்டுபிடிப்புகள்:
இந்த ரோவர் மிகவும் அதிக தொழில் நுட்பங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது . இவை அனைத்தும் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்துள்ளனவா? என்பதை பற்றிய ஆராய்சிக்காகவே இருக்கும்.
அதோடு சேர்த்து ingenuity என்ற ஒரு சிறிய ஹெலி காப்டரும் (Mars Helicopter)செவ்வாயில் வலம் வரும்.
பார்க்கலாம் எப்படி இருக்க போகிறது.
இது சரியாக நடந்து முடிக்கப்பட்டது என்ற பட்சத்தில் நமக்கு செவ்வாய் கிரகம் பற்றிய பல அரிய மற்றும் இதுவரை கிடைத்திடாத தகவல்கள் கிடைக்கும்.
காத்திருப்போம்.
Mars 2020 Rover name Contest Winning Essay
Post a Comment