2021 இல் இஸ்ரோவின் முக்கிய பணிகள் எவை?

 கடந்த ஜனவரி 31 2021 , அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இஸ்ரோ தலைவர் K.சிவன் அவர்கள் அளித்த பதில்களை பார்ப்போம்.


Embed from Getty Images

கொரோனாவுடைய தாக்குதலுக்கு பிறகு இந்த ஆண்டு 2021 இல் இஸ்ரோவின் முக்கிய பணிகள் எவையாக இருக்கும்?

பதில் : 

    எங்களுடைய முக்கிய பணியாக இருக்கபோவது, In-Space (Indian National Space Promotion and Authorization Center) என்று ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரோவின்  ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்ட அந்த அமைப்பினை திறம்பட மேலெடுத்து செல்வது தான். அது மட்டும் இல்லாமல் அதற்காக இந்தியாவில் இருக்கும் தனியார் வின்வெளி துறை நிறுவனகளை இஸ்ரோவில் இனைப்பதற்கான வின்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது முக்கிய பனியாக இருக்கும், பிறகு,

எங்களின் அடுத்த முக்கிய பனியாக இருப்பது ககன்யான், இது தொடர்பான பனிகளும் முழுவீச்சில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதன் பிறகு இருப்பது சந்திரயான் திட்டம் மற்றும் அதனை தொடர்ந்து வரும் அறிவியல் சார்ந்த சூரியனை ஆராய அனுப்ப இருக்கும் ஆதித்யா L1 மற்றும் ரேடார் இமேஜீங்க் சாட்டிலைட் RISAT-1A 

மற்றும் SSLV என்று அழைப்பட கூடிய சிறிய  ரக ராக்கெட் ஏவுகனை வாகனங்கள். 

இவைதான் எங்களின் இந்த 2021 ஆம் ஆண்டு முக்கிய பணிகளாக இருக்கும்.

ககன்யான் சம்பந்தமாக விண்வெளி வீரர்கள் பயிற்சி எந்த நிலையில் உள்ளது?

பதில்:

    தேர்ந்தேடுக்கப்பட்ட் 4  இந்திய விமானப்படையை விமானிகளும் இஸ்ரோவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்காக பயிற்சி ரஷ்யாவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்போது அவர்களுக்கு விண்வெளியின் கடும் குளிர் அதிகமாக சூழலை சமாலிப்பதற்கான எல்லா பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

அது போன்று ஒரு சில குறிப்பிட்ட பணிகளுக்கு சில பிரத்தியேக பயிற்சிகள் அளிக்கப்படும். அத்துடன் சேர்த்து ஒரு சில கோட்பாடு சம்பந்தமாக வகுப்புகளும் நடக்கும், (Generic Training and Also Some Theory classes too)

இவர்களுடைய பயிற்சி வரக்கூடிய மார்ச், ஏப்ரல் 2021 மாதங்களில் முடிவடைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

அது மட்டும் இல்லாமல் இந்தியா திரும்பிய பிறகு அவர்களுக்கு (Mission Specific Training ) பணி குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பனிகுறித்த சிறப்பு பயிற்சி எந்த மாதிரியானதாக இருக்கும்.?

பதில்:

    பணி குறித்த சிறப்பு பயிற்சிகளில் அவர்களுக்கு  (Emergency Situations) ஆபத்தான காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சிகள் பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோவின் செயற்கைகோள் பயிற்சி மற்றும் சோதனை மையத்தில் தான் நடை பெறும். 

அதோடு சேர்த்து உடல் தகுதி  பயிற்சிகளும் தொடர்ந்து நடைபெறும்.(Continuous Training for physical fitness)

ககன்யான் சோதனை ஓட்டம் எப்போது?

பதில் :

    ககன்யான் சம்பந்தமாக அனைத்து பனிகளும் , மற்றும் வடிவமைப்புகளும் (Designs are finalised ) இறுதி கட்டத்தினை அடைந்துள்ளது. இந்த வருடத்தில் ஜூலை மாத காலகட்டத்திற்குல் இஸ்ரோ 2 (Uncrewed) ஆளில்லா சோதனை ஓட்டத்தினை முடிக்கவும், இந்த வருட இறுதியில்  அதாவது டிசம்பர் 2021 ல் 3ஆம் மற்றும் இறுதி சோதனை ஓட்டமான மனிதர்களை கொண்டு ஒரு சொதனை ஓட்டமும்.

நடைபெறும் 

இவ்வாறு அவர் கூறினார்

சந்திரயான் 3 சம்பந்த பட்ட கேள்வி பதில்

Source

    

No comments