Chandrayaan 3 Latest update 2021 Jan Interview w/K.Sivan

Jan 30, 2021.


2021 இல் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள்:

அதில் சந்திரயான் 3 பற்றிய கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில்களின் அடிப்படையில் .

சந்திரயான் 3 புதிய செய்தி ஏதாவது உண்டா?:

சந்திரயான் 3 செயற்கைகோள் சம்மந்தமாக தேவையான பரிந்துரைகளை அளிக்க தேசிய அளவிளான் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.

அதில் இஸ்ரோவின் தலைசிறந்த வல்லுநர்களும், மற்றும் கல்வியாளர்களையும் இனைத்துள்ளோம்.

சந்திரயான் 3இல் இருக்கும் முக்கிய அமைப்புகளை நாங்கள் இப்போது முழு கவனத்தில் எடுத்துள்ளோம்.

எப்போது விண்ணில் ஏவப்படும்?

சந்திரயான் 3 க்கான பனிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும். எங்களால் எப்போது விண்ணில் ஏவப்படலாம் என்ற கால நேரத்தினை என்னால் சொல்ல இயலாது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இஸ்ரொவின் பனிகளில் "சந்திரயான் 3" உம் ஒன்று. 

என்று அவர் கூறினார்.

சந்திரயான் 2 Vs. சந்திரயான் 3 என்ன வித்தியாசம்:

சந்திரயான் 2 ஐ பொறுத்த வரையில். ஒரு ஆர்பிட்டரும் (Orbiter), ஒரு லேண்டரும் அதனும் ஒரு ரோவரும் இருந்தது (Lander and a rover inside the lander)

சந்திரயான் 3 இல் நாங்கள் ஏற்கனவே இருக்கும் சந்திரயான் 2 இன் ஆர்பிட்டரை பயன்படுத்திக்கொள்ளுவோம். 

அது மட்டும் இல்லாமல். லேண்டர் மட்டும் தான் சந்திரனை சென்றடையும். அதற்கு உதவும் வகையில் சிறிய அளவில் உந்து விசை அமைப்பு (Propulsion System) அமைக்கப்படும். 

அது மட்டும் இல்லாமல் சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருக்கும் தரவுகளை பதிவிறக்கம் செய்யும் வேலையும் இப்போது நடந்து வருகிறது.

தற்போது சந்திரயான் 2 இன் முதல் பகுதி தரவுகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொடுத்துள்ளோம்.

இந்த தரவுகள். அறிவியல் மற்றும் ஆராய்சி பனிக்காக பயன் படுத்தப்படும்

இவ்வாறு அவர் கூறினார்...

Source


No comments