Gaaganyaan Update: Before 2023 there is no Manned Mission | 2023 க்கு முன் மனித விண்வெளி பயனம் கிடையாது மத்திய அமைச்சர்

 ககன்யான் திட்டம் புதிய செய்தி: 

சிவன் இஸ்ரோ தலைவர் Gaganyaan Delay by upto 2023 ISRO Head K.Sivan Interview 2021  Latest


மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் புதிய திருப்பம்.

2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பிரச்சனையால் இஸ்ரோவின் அனைத்து திட்டங்களின் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் மாதத்தில் முதல் ஆளில்லா சோதனை ஓட்டம் நடைபெறும். இதில் ஹுமனாய்டு ரோபோ பயன்படுத்தப்படும். 

(அந்த ஹுமனாய்டு ரோபோவானது வருகின்ற அக்டோபர் மாதர் தயாராகும் )

2022 - 2023 ஆம் ஆண்டுக்குள் மற்றும் ஒரு  ஆளில்லா விண்கலம் சோதனை ஓட்டம் நடைபெறும் அதற்கு அடுத்து தான் அதாவது 2023 க்கு பிறகுதான் முதன் முதலில் ஒரு சோதனை ஓட்டம் மனிதர்களை வைத்து நடைபெறும் 

First Unmanned mission is planned in December 2021. Second unmanned flight is planned in 2022-23, followed by human spaceflight demonstration,"

-Union minister of state for space Jitendra Singh

தயாரிப்புகள்:

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயனத்திற்காக GSLV mk III இன் புதிய மாற்றியமைக்கப்பட்ட முன் பகுதி தயாராகிக்கொண்டிருக்கிறது (modified top portion of GSLV Mk3) 
இது முழுக்க முழுக்க "குழு தொகுதி" (Crew Module) மற்றும் "குழுவின் தப்பிக்கும் அமைப்பின்" (Crew Escape system )சரியாக பொருந்தப்படுவதற்காகவே பிரத்தியேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது .
இதனை அவர்கள் Human Rated GSLV Mk 3 என்று அழைக்கின்றனர்.
காகன்யான் விண்வெளியாளர்கள் சிறப்பு உடை


புதிய பட்ஜெட்:

    ஓவ்வொரு வருடமும் இஸ்ரோவுக்கு என்று புதிய பட்ஜெட் கொடுக்கப்படும். அந்த வகையில் 2020-2021 ஆம் ஆண்டிற்காக இஸ்ரோவுக்கென்று சுமார் 900 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இஸ்ரோ இதுவரை 328 வெளி நாட்டு செயற்கைகோள்களை வின்ணில் ஏவியுள்ளது. அதன் மூலம் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களும் 189 மில்லியன் யூரோக்களும் வருவாய் ஈட்டியுள்ளது.

அடுத்த புதிய முயற்சிகள்:

நீங்க என்ன நினைக்குறீங்க , ஒரு முறை மட்டுமே இந்தியரை விண்வெளிக்கு அனுப்புவாங்க. அதோடு அதைபற்றி பேச மாட்டாங்ன்னு நினைக்கிறீங்களா?

அப்படி இல்லை இஸ்ரோவுக்கு ககன்யான் மட்டுமே தனிப்பட்ட திட்டம் கிடையாது . 

அதை தாண்டி "விண்வெளியில் இந்திய மனிதர்களை தங்க வைக்கும்" (Sustained human presence in space by ISRO) ஒரு மிகப்பெரிய திட்டத்தினையும் கையில் எடுத்து இருக்கிறார்கள். அதற்கான கொள்கைகள் இப்போது அமைக்கப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக செயற்கைகோள்களில்  (Electronic Propulsion ) மின்னனு உந்து விசை பயன்படுத்தப்போவதாக கூறி வருகின்றனர். அதுவும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.

இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய மூன்று தொழில் நுட்பங்களை சோதனையாக பயன்படுத்த இருக்கின்றனர்.

  • travelling wave tube amplifier (used on communication satellite to improve the data speed)
  • our own atomic clock
  • oru own Electronic Propulsion system
அதையும் தாண்டி:
ககன்யான் திட்டத்தினை தாண்டி, இந்த வருடம் SSLV என்று அழைக்கப்படும் சிறிய ரக செயற்கைகோள் ஏவுகனையை சோதனை ஓட்டம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.


No comments